Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

திருமதி. சித்ரா வெங்கடேசன் அவர்கள் எழுதிய "இதய வாசியே!"

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

நாயகனின் திருமண வைபவங்கள்; அங்கு தற்செயலாக வருகை தருவது, அவன் ஒரு தலையாய் காதலித்த பெண்; அதுவும் கணவனை இழந்த நிலையில், எனத் தொடங்கும் கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் ஆத்தர் பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் வைத்து சுத்தி வளைக்கவில்லை.

“மணமகளாய் உன்னைப் பார்த்தப் பின்னும், உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி” என்ற ரீதியில் சக்திவாசனும்;

சொல்லாலும் செயலாலும் உன்னைக் காயப்படுத்தியவரை போதும் என்று தன் தவறை உணர்ந்த நிலையில் சிவமித்ராவும்;

திருமணப் பந்தத்தில் இணைவதை முதல் சில அத்தியாங்களிலேயே சொல்லிவிடுகிறார்.

கதையின் ஹைலைட் என்னவென்றால், கரிசனத்தால் இணைந்த இவர்களிடையே மெல்ல மெல்ல மலர்ந்த புரிதல் தான்.

ஒவ்வொரு காட்சியும் உணர்ப்பூர்வமாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. என் மனத்தைக் கவர்ந்த காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

‘அன்று என் நிறத்தையும் உத்தியோகத்தையும் குறையாகச் சொன்ன பெண், இன்று என்னை மணக்க ஒத்துக்கொண்டது எப்படி?’ எனக் காரணம் புரியாமல் தடுமாறும் நாயகன், தாழ்வு மனப்பான்மை வளர்த்துக்கொண்டு, அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளிக்கும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருந்தது.

பரிதாபம் பார்த்துத்தான் தன்னை சக்திவாசன் மணந்து இருக்கிறான் என்ற அனுமானங்களில் ஊசலாடும் சிவமித்ராவின் உணர்வு போராட்டங்களும் மிக எதார்த்தமாக இருந்தது.

“உன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல என் தகுதிகளை உயர்த்திட்டேன்னு நினைக்குறேன். ஆனால் சில விஷயங்கள் மாற்ற முடியாது!” எனத் தன் நிறத்தைப் பற்றி மடை திறந்த வெள்ளமாய், தேக்கி வைத்த மனக்குமுறல்களை சக்தி கொட்டிய இடம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது ஆத்தரே.

வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவப் பாடத்தில், பக்குவமடைந்து விட்டேன் என்று அவள் வெட்கமின்றி ஒப்புக்கொண்டதும் அதற்கு இணையாக அழகாக இருந்தது.

முன்பே நிச்சயம் செய்த திருமணம் நிச்சயித்தபடி நடந்திருந்தால், இத்தனை காதலும் புரிதலும் வந்திருக்குமா அல்லது கடமைக்காக வாழ்ந்திருப்போமா என்று இருவரும் அலசி ஆராய்ந்த காட்சி மிக மிக நேர்த்தியாக இருந்தது.

இளம்பெண்களுக்கே உண்டான எதிர்பார்ப்புகளை சிவமித்ரா மூலம் நேர்மறையாகச் சொன்னது சூப்பரோ சூப்பர். அழகும், ஆடம்பரமும் நிரந்தரமில்லை என்றும் அவள் மூலமாகவே வெகு இயல்பாகக் கதையை நகர்த்திய உங்கள் பாங்கு அசத்தல்.

தவறுகளை உணர்ந்தவர்கள், அவற்றை பகிரங்கமாய் ஒத்துக்கொள்ள தனி தைரியம் வேண்டும். அதை சிவமித்ராவின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்தேன். குறிப்பாக, விமானத்தில் அழைத்துச் சென்ற சக்தியிடம் அவள் மனம்திறந்து பேசிய இடம் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காத ஒருவரோடு மறுமணமான நிலையில், அவள் மனம் என்னப் பாடுப்படும் என்று யோசித்து, நிதானமும் பொறுமையும் கடைப்பிடித்த சக்திவாசனின் குணம் உயர்ந்தது.

தன் மனமாற்றத்தை உணர்த்துகிறேன் என்ற பெயரில், ஏட்டிக்குப் போட்டி பேசி வம்பு வளர்த்து, பிறகு சாரி சொல்லி உருகிய சிவமித்ராவின் காட்சிகள் அனைத்தும் ரசனையாக இருந்தது.

தனிமையில் சிக்கிய மனைவிக்கு அடை ஊட்டியது, திரையரங்கத்தில் மொக்கையான படம் ஓட்டியது, சிம்லாவில் சிங்கிலாகத் திரிந்தது என சக்தியின் கண்ணியத்திற்கு அளவே இல்லை ஆத்தரே.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லைன்னு, சக்தி தந்தை பேச்சைத் தட்டாத பிள்ளை என்று அவன் திருமணம் அன்றே புரிந்துவிட்டது. அதுக்காக ஹனிமூன் போகுறதுக்கு கூட, அப்பா சொல்லிப் புரியவைக்குற அளவுக்குப் பச்சைப் பிள்ளையா இருப்பான்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.

ஓவர் சமத்து காதலுக்கு ஆகாது என்று உங்க ஹீரோவிடம் சொல்லிவையுங்கள்.

அந்த விஷயத்தில் மாமியார் மருமகள் கூட்டணி அசத்தலாக இருந்தது. இலைமறை காயாய் தங்கள் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் முன்வைத்த இருவரின் புரிதல் அருமை.

கண்ணப்ப வாத்தியார் குணத்தில் உயர்ந்தவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கணவனாக, தந்தையாக, மாமனாராக, ஆசிரியராக என எல்லா நேரங்களிலும் அன்பும் அக்கறையும் நிறைந்த மனிதர்.

சிவமித்ராவின் நிலை தெரிந்தும் அவளை மருமகளாக்கிக் கொள்ள நினைத்த அவர் நோக்கம் உயர்ந்தது என்றாலும், மகன் மனைவியிடம் தன் எண்ணத்தைச் சொல்லவில்லையே என நெருடலாக இருந்தது. ஆனால் திருமணம் நடந்த பிறகு, அவர் தன் மனைவியிடம் தந்த விளக்கம் எத்தனை அழகு.

இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் தேவிகா அவர்கள் தான். மகனின் இல்லற வாழ்க்கைப் பற்றி பல கனவுகளுடன் காத்திருந்த தாயின் உள்ளம், அவன் திருமணம் ஒன்றுக்கு இரண்டுமுறை தடைப்பட்டப்போதே துடிதுடித்துப் போனது என்றால், சிவமித்ரா தான் தன் மருமகள் என்று கடைசி நிமிடத்தில் அறிந்தபோது அவருக்கு உண்டான மனப்போராட்டங்கள்...அப்பப்பா, சொல்ல வார்த்தை இல்லை!!!

மகனின் விருப்பத்திற்கும், கணவரின் வேண்டுகோளுக்கும் இணங்கி, அத்தனை மனவுளைச்சலிலும், மருமகளை நல்லவிதமாக நடத்திய அவர் குணம் வாரே வாவ். கனவிலும் மருமகளின் கடந்த காலத்தைக் குறிப்பிட்டுப் பேசாத அவர் உயர்ந்த குணம் யாருக்கும் வராது.

சக்தியும் மித்ராவும் தான் இந்தக் கதையின் நாயகன் நாயகி என்றாலும், புரிதல், காதல், நேசம் என்று வரும்போது, கண்ணப்பன்-தேவிகா தம்பதியர் அவர்களை விட ஒருபடி மேல் என்று தான் சொல்லத் தோன்றும்.

அவர்கள் காட்டிய நல்வழியைப் பின்பற்றியதனால் தான் இளஞ்ஜோடிகளின் மனக்கசப்புகள் சீக்கிரம் நீங்கியது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

நடந்து முடிந்ததை மறப்போம்;

தவறுகளை மன்னிப்போம்;

இனி வரும் காலத்தை மகிழ்ச்சியில் கடப்போம்;

என்ற புரிதலே நல்லதொரு இல்லறத்தின் ரகசியம் எனச் சொல்லும் விதமாக, வெகு எதார்த்தமான குடும்பக் கதை தந்த ஆத்தருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
மிகவும் அழகான விமர்சனம்..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.

ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் ரசனையில் மிகவும் அழகாக கூறியிருக்கிறீர்கள் தோழி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

சக்திவாசன் காதல் ஓவர் சமத்துக் காதல்தான் நமக்கு கூட பொறாமையா இருக்கு இல்ல😄😄😄😄...
 
எழுதின நானே இவ்வளவு உள்வாங்கி எழுதினேனா தெரியல, ஆனா அத்தனை அழகா கதையை உள்வாங்கி ரசிச்சு படிச்சிருக்கீங்கன்னு உங்கள் பின்னூட்டமே சொல்கிறது. அழகான பின்னூட்டம்😍😍 நன்றிகள் பல❤❤
 
நன்றிகள் பல நட்பே! ஆமாம் பா! ஆனாலும் ரொம்ப நல்லவனா இருக்கான். Light ta பொறாமையா தான் இருக்கு😁😁😁😁
 
அருமையான விமர்சனம் சிஸ்❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 சூப்பரா சொல்லியிருக்கீங்க.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழ்ந்து வாசிச்சு இருக்கீங்க..🥰🥰🥰
நன்றிகள் பல நட்பே🤩🤩
அருமையான ரிவ்யூ சிஸ் ♥️♥️
நன்றிகள் பல நட்பே😍😍
எப்பொழுதும் போல அழகான விமர்சனம்
நன்றிகள் பல சித்ராமா.🤩🤩
 
எழுதின நானே இவ்வளவு உள்வாங்கி எழுதினேனா தெரியல, ஆனா அத்தனை அழகா கதையை உள்வாங்கி ரசிச்சு படிச்சிருக்கீங்கன்னு உங்கள் பின்னூட்டமே சொல்கிறது. அழகான பின்னூட்டம்😍😍 நன்றிகள் பல❤❤
“நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்கமுடியாது” மாதிரி, உங்க எழுத்தின் அழகு உங்களுக்குத் தெரியல ஆத்தரே😇😇

Yes dear… ரொம்ப ரசித்துப் படித்த கதை. 😍😍😍😍 நிறைவான கதை தந்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்😍😍
 
Top