Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 8

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல் …

பகுதி 10

காலையிலேயே பரபரப்பாய் கிளம்பி வந்து வரவேற்பறையில் அமர்ந்த செழியனை, ஏதோ உலகத்தின் எட்டாம் அதிசயம் போல பார்த்த படியே கிச்சனிலிருந்து வந்த சந்திரா, அவனருகே அமர்ந்து,
"செழியன், என்னடா எப்பவும் நா சுப்ரபாதம் பாடி முடுச்சா கூட, வேணாடா வெறுப்பா பெட்டுல இருந்து எழுந்து வர்றவன், இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா, அதும் டிப்டாப்பா ட்ரஸ் வேற பண்ணிட்டு ரெடியாகி வந்திருக்க?! ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா?" என்றவர், மேலும், "ச்ச, ச்ச, அப்படி மீட்டிங்கே இருந்தாலும், அதுக்கும் லேட்டா போயி தானே உனக்கு பழக்கம்!" என அவனை பற்றி நன்கு தெரிந்தும், அவனை சீண்டும் வண்ணம் கேட்டிட, அவரின் கேலி புரிந்து, அவரை முறைத்தபடியே,

"மூன், வேணாம். காலைல நல்ல மூடுல இருக்கேன். வீணா வந்து அதுல குத்து டேன்ஸ் ஆடிட்டு போயிடாத" என்று சொல்லி முடிக்கவும்,

நச்சென்று தலையில் ஒரு கொட்டை பரிசாய் வழங்கியவர், "என்ன பார்த்தா எப்படி இருக்கு? வர வர உனக்கா வாய் ஓவரா போச்சு!" என கண்ணை உருட்டி மிரட்டலாய் கேட்க, (அவங்கள பொருத்த வரை அதாங்க மிரட்டல் லுக்) அவரின் அந்த ரியாக்க்ஷனில் வந்த சிரிப்போடு,
"மூன், காமெடி செய்யாம போய் டிபன் எடுத்து வை. நா சீக்கிரமா போகனும்" என அவரின் முறைப்பை காமெடி சீனாக்கி, குப்பை கூடையில் தூக்கி போட்டு, அடுத்த விசயத்திற்கு தாவினான் சந்திராவின் புதல்வன்.

தனது கோபத்தை கிண்டல் செய்த செழியன் மீதான கடுப்பில், "நா கோவமா இருக்கேன். அதனால எதுவும் கிடையாது போடா" என்று சந்திராவும் முறுக்கிக்கொண்டு சென்றவர், "அப்பாடா! நல்லவேளை செழியா, இன்னைக்கு நீ நல்ல சோறு திங்கலாம். கோப பட்டு முடிஞ்சதும் நல்லா நீ சமச்சத நீயே கொட்டிக்கோ மூன், பாய்!" என்ற மகனின் வார்த்தையில், மேலும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றார்.

அதனால், அவர் அவனை அடிக்க கை ஓங்கும் முன்பே, ஒரே ஓட்டமாய் ஓடி, தனது காரை எடுத்துக்கொண்டு பறந்திருந்தான் செழியன்.

அவன் நேராய் செல்லும் இடமும், நோக்கமும் புரிந்ததால், அவன் சாப்பிடாமல் சென்றதை பற்றிய யோசனையை விடுத்து, அவர் எப்போதும் போலவே தனது வேலையை கவனிக்க சென்றார்.

***************

ஹரிஹரன் தான் எடுத்த முடிவின் படி, அன்றே இதழினியை சந்திக்க நினைத்தவன், கண்ணாடி முன் நின்று தனது உடையை சரி பார்த்த படியே, "இதழினி, உன்னை இப்ப காலைலயே பார்த்து எல்லாமே பேசிடனுமின்னு மனசு சொல்லுது.. பட், ஒரு முக்கியமான ஃபைல் வேற, நா சைன் பண்ணி கொடுத்தே ஆகணும். இல்லாட்டி என்னோட மேலதிகாரி அவ்வளவு தான், பேசியே சாவடிப்பாரூ.

ஹூம்..! விடு எப்படியும் காலைல அவசர அவசரமா பேசறத விட, ஈவினிங் கொஞ்சம் பொறுமையா, நிதானமா பேசலாம், சரியா?!" என்று தனக்கு தானே, இதழினி எதிரில் இருப்பதாக எண்ணி பேசியவன், அதே சிந்தனையோடும், மகிழ்ச்சியோடும் தனது அலுவலகம் நோக்கி சென்றான்.

என்றும் இல்லா திருநாளாய், அவனின் மென்மையான பேச்சும், சிறு இதழ் சிரிப்பும், பார்த்து அந்த அலுவகத்தில் இருக்கும், ப்யூன் முதல் அவனின் உயரதிகாரிகள் வரை, வித்தியாசமாய் பார்ப்பது தெரிந்தும், கண்டு கொள்ளாது, 'இதழினியை தனியே சந்திப்பது, மாலை எப்படி பேசுவது, எதை பேசி அவளிடம் சம்மதம் வாங்குவது?!' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு மற்றவர் பார்வை ஒரு பொருட்டாகவே இல்லை. ஆசையோடும் ஆவலாகவும் காத்திருந்த அந்த தருணத்தில் அவனுக்கு கிடைக்க போவது இதழினியின் சம்மதமா? அல்லது மறுப்பா?

***********

இதழினி, அலுவலகத்தை அடைந்ததும் எதிர்பட்ட சந்துரு, "குட் மார்னிங், இதழினி. நேத்து பொண்ணு பார்க்க வந்தது என்னாச்சு?" என ஆர்வக்கோளாரில் கேட்டு வைக்க,

"சந்துரு, இந்த விசயம் வெளிய யாருக்குமே தெரியாதே, உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது?!" என தன்னையே, குறுகுறுவென பார்த்து கேட்ட, இதழினியின் பதிலில் தான், அவசரப்பட்டு தான் உளறியது சந்துருவுக்கு புரிய,

'சந்துரு, இப்படியாடா, உங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு, நீயே காட்டி கொடுப்ப, எதையாவது சொல்லி சமாளிடா' என தனது மனதுள் பேசியவன், வெளியே, 'ஹீ.. ஹீ…' என அசட்டு சிரிப்பை சிந்தினான், சமாளிக்கும் பொருட்டு.
இதுவரை இப்படியான சிறு செயலையும், தன்னிடம் காட்டாத சந்துரு, இப்போது காட்டும் புது முகத்தில் சற்று குழம்பித்தான் போனாள், இதழினி.

அவளின் குழப்பத்தை தனக்கு சாதகமாய் மாற்ற நினைத்த சந்துரு, "அது வந்து இதழினி, எனக்கு நைட் ஒரு கனவு வந்துச்சா, அதுல உன்னைய பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இருந்துச்சு. அது கனவு மாதிரி இல்லாம நேருல நடந்த மாதிரியே ஒரு ஃபீல்!!!

அதே நினைப்புல வந்தேனா, அதான் சட்டுன்னு அப்படி கேட்டுட்டேன். ஆனா, நீயும் அப்படி நடந்துச்சு சொல்ற பாரேன், என்ன ஒரு அதிசயம்!" என கிராமத்து கிழவியர், போல கையை முகவாயில் வைத்து அதிசயம் போல பாவலா காட்டி பேசியவன் பேச்சில், இருக்கும் இடமும், சூழலும் மறந்து பலமாய் சிரித்தாள் இதழினி.
 
Last edited:
தனது அழகான முத்துப்பல் வரிசை தெரிய, அவளின் மென்மையான குரலில் வெளிப்பட்ட சிரிப்பு கவிதையாய், அங்கு ஒரு ஓரமாய் நின்றிருந்த செழியனின் விழியிலும், செவியுயிலும் விழ, பொக்கிஷமாய் அதை தனது மனமெனும் பெட்டகத்தில் சேர்த்துக்கொண்டான் பாதுகாப்பாய்...

"சந்துரு, என்னாச்சு இன்னைக்கு இப்படி எல்லாம் செய்றீங்க.?!" என சிரிப்புக்கு இடையே இதழினி கேட்க..
அவன் மனசாட்சியோ, 'எல்லாம் விதி.. எங்கே, எப்படி, இருக்க வேண்டிய நா, இப்படி வந்து உனக்கு முன்னாடி, வித்தை காட்டற குரங்கு மாதிரி நிக்க வச்சிருக்கான் ஒரு பாவி. அவன் மட்டும் என் கையில இப்ப சிக்கினான்னு வையீ' என எண்ணெய் சட்டியிலிட்ட கடுகாய் மனதுள் பொரிந்தாலும், வெளியே அதே கோல்கேட் புன்னகையை தந்து,

"வேண்டுதல் இதழினி" என்றதும், அவளின் சிரிப்பு மேலும் வலுக்க,

"அம்மா தாயே, போதும் இதுக்கும் மேல தாங்காது. போம்மா, போயி வேலைய பாரு" என, அவளிடம் எதையும் சொல்ல முடியா கடுப்பில், தனது இரு கரத்தையும் தலைக்கு மேல் வைத்து கும்பிட்டவன், அவளை அவளின் இடத்திற்கு செல்லுமாறு சைகை செய்ய, அவளோ புன்னகையோடு விடை பெற்று தனது இருக்கைக்கு சென்றாள் அவளின் பணியை தொடர…

சென்ற இதழினிக்கு, நேற்றிய சிந்தனையின் பயனாய், சந்துருக்கு தன் மனதில் இருக்கும் இடத்தின் தன்மை உணர்ந்ததாலோ, என்னவோ இவ்வளவு இயல்பாய் அவனிடம் பேசவும், சிரிக்கவும் முடிந்தது..

முந்தைய சந்துரு மீதான ஈர்ப்பு பற்றிய குழப்பத்தோடு வந்திருந்தால், அவன் கேட்ட கேள்வியை, தனக்கு சாதகமாய் மாற்றி மனதால் தடுமாறி போயிருப்பாள்.

சந்துரு சொன்னது போல, இதழினி அவளின் இருக்கைக்கு சென்ற நொடி, சந்துரு, தனது முதுகில் விழுந்த அடியில், "அய்யோ..!!" என அலறியவன் வாயை, பாதிலேயே அடைத்து, இழுத்து மறைவான இடத்திற்கு வந்த செழியன்,

"ஏன்டா, நைட் போன ஸ்விட் ஆப் பண்ணி வச்ச?!" என கேட்டு மேலும் ரெண்டு போட,

"வேணாம், செழியா இதுக்கு மேல ஒரு அடி விழுந்தாலும், அப்புறம் நா என்ன செய்வேன் தெரியுமா?!" என கோபமாக கேட்க,

அதை விட கோபமாய், தனது ஸ்லீவை மடக்கிய படியே, "என்னடா செய்வ?" என தன்னை நெருங்கிய செழியனை நோக்கி.. சட்டென தனது முகபாவத்தை மாற்றி, வடிவேல் பாணியில், "அழுதுடுவேன் மச்சான், அழுதுடுவேன். அங்க உன் ஆளு முன்னாடி, லூசு மாதிரி பிகேவ் பண்ணிட்டு வந்திருக்கேன். இப்ப உன்னோட ரவுண்டுன்னு .. டின்னு கட்டற. மீ பாவம்டா. ப்ளீஸ்" என அழாத குறையாய் கெஞ்சும் நண்பனின் தோளில் கை போட போக...

'மீண்டும் அடிக்க தான் வருகிறானோ!' என நினைத்த சந்துரு, சட்டென விலகிட நினைத்தான். அவனின் நோக்கம் புரிந்தவன் மறுகரத்தால், அவனை இழுத்து, அவனின் தோளில் கை போட்ட படியே,

"நீ போன ஆப் பண்ணி வச்சதால கொல காண்டுல, உன்னை உண்டு இல்லைன்னு பண்ணலாமுன்னு தான் மச்சி வந்தேன். ஆனா பாரு, நீ செஞ்ச கோனாங்கி தனமான வேலையால, என் ஆளு சும்மா தேவதை மாதிரி அழகா சிரிச்சு.. என்னோட கோப மூட, அப்படியே ரொமான்டிக் மூடா மாத்திட்டா, அதனால பொழச்சு போன்னு விடறேன்." என்ற செழியனின் வார்த்தையில் ..

'என்னது..! ரொமான்டிக் மூடா.. அச்சோ அது அதவிட டேன்ஜர் ஆச்சே!' என நினைக்கும் முன்பே, சந்துரு அவனின் கன்னத்தில் உணர்ந்த ஈரம், நடந்ததை கூற பதறி போய், அவனிடமிருந்து விலகி பத்தடி தூரம் தள்ளி நின்றான் சந்துரு எச்சரிக்கையாக…

செழியன் வந்ததன் நோக்கம் நிறைவேறுமா? இதமான மனநிலையில் இப்போது இருக்கும் இதழினிக்கு இந்த நாளின் முடிவில் எல்லாமே சரியாய் இருக்குமா?
 
Last edited:
Top