Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 9

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல் …

பகுதி 9

சந்துருவின் செயலில் சிரிப்பு வந்தாலும், தான் செய்த செயலை யாராவது பார்த்திருந்தால், தன்னை, 'அவனா நீ..!' என நினைப்பார்களே, என்ற பயம் தோன்ற, அப்போது தான் சுற்றுபுரத்தையே ஆராய்ந்தான்.

"சப்பா, நல்ல வேளை, அந்த லூச,. மறைவா தள்ளிட்டு வந்ததும் நல்லதா போச்சு.. இல்ல மானம் கப்பலில்ல, ப்ளைட் பிடிச்சு பறந்திருக்கும், அதுவும் நம்மாளு முன்னாடியே" என்ற அவனின் வார்த்தையை கேட்ட மனசாட்சியோ, 'நீயே முடிவு பண்ணக்கூடாது செழியா, இன்னும் அந்த பொண்ணு கண்பார்ம் பண்ணல, நீ தான் அவ ஆளுன்னு!' என்றிட, மனசாட்சியை கொன்று மனதுள்ளேயே புதைத்து விட்டு, "இப்படியே அடக்கமா இரு" என்று கூறி, வந்த வேலையை பார்க்க சென்றான்.

சந்துரு தனது கேபினிலுள் வந்ததும், 'ச்ச, கொஞ்ச நேரத்துல இப்படி வேர்க்க வச்சிட்டானே, இவன' என்று மனதில் வந்த கெட்டவார்த்தையால் அர்ச்சித்துக்கொண்டே, ஏ சி யின் அளவை கூட்டி விட்டு, தனது இருக்கையில் அமரும் போது, சரியாக செழியன் உள்ளே வர, நடந்த நிகழ்வின் தாக்கத்தால்,
"டேய் செழியா, எதுவானாலும் நாலு அடி தள்ளியே இருந்து பேசு" என்றான் உசாராக..

அவனின் எச்சரிக்கையான நடவடிக்கையில், மேலும் அவனை சீண்டும் எண்ணம் கொண்ட செழியனோ, "சந்துரு, உன்ன கிஸ் பண்ற வரை எதுவுமே தோணலடா. ஆனா இப்போ… இப்போ...." என்று இழுக்க,
அதிர்ந்து அவனை பார்த்த படியே, சந்துரு, "இப்போ.." என எச்சில் முழுங்கியபடி திக்கி திணறி கேட்க,

அவனின் அருகே நெருக்கமாக வருவது போல, வந்த செழியனின் நடவடிக்கைக்கு, வில்லனிடம் சிக்கும் ஹீரோயின் போல, ரியாக்க்ஷன் காட்டும் சந்துருவை பார்க்க, பார்க்க, அடக்கமுடியாது சிரிப்பு வந்தாலும், அதை தன் வாயுள் கஷ்டப்பட்டு அடக்கி, வெளியே வேறு மாதிரி பார்வை காட்ட, "டேய் வேணாம்டா. இது தப்புடா" என அலறினான் அப்பாவியாய் சந்துருவும்…

"அடச்சீ.. வாய மூடு. கிஸ் பண்ணது ரொம்ப கேவலமா இருந்துச்சுன்னு சொல்ல வந்தா, என்னமோ கற்ப புடுங்க வந்த வில்லன பாத்த மாதிரி லுக்கு. கோவலமா இருக்கு.." என வெளிப்படையாகவே தலையிலடித்து கொண்ட செழியனை, பார்த்து

"ஹீ.ஹீ." என அசடு வலிந்து கொண்டே, பெருமூச்சோடு, "நா கூட தப்பா நினச்சிட்டேன்டா உன்ன. சாரி.." என சொன்னவனை முறைத்துபடியே,
"சரி, அதெல்லாம் விடு. நேத்து நா என்ன சொன்னேன். நீ என்ன பண்ணி வச்சிருக்க. அதோட போன் வேற ஸ்விட்சு ஆப், முதல்ல எனக்கு பதில சொல்லு, நேத்திருந்து எவ்வளவு டென்ஷன்ல இருக்கேன். நீ ஜாலியா இருக்கே. உன்னையெல்லாம்.." என கழுத்தை நெரிப்பவன் போல கைகளை கொண்டு வரவும்,
சந்துரு டேபிளில் இருக்கும் இன்டர்காம் அலரவும் சரியாக இருந்தது.

*************

ஹரிஹரனுக்கு அவனின் வேலை, அவன் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே அனைத்தும் முடிந்து விட, 'வேலை தான் முடுஞ்சிடுச்சே, இப்பவே போய் இதழினிய பார்த்து பேசிட்டா என்ன?' எனத்தோன்றியது.
எண்ணத்தில் தோன்றியதை உடனே செயல் படுத்தும் விதமாக, மதியம் லீவ் எழுதி கொடுத்தவன், தனது வாகனத்தில், 'மதி கார்மெண்ட்ஸ்' நோக்கி பறந்தான்.

அதை அடைந்து, அங்கே இருந்தவரிடம் இதழினி பற்றி கேட்க,"இதழினி அக்கவுண்ட்ஸ் டிப்பர்ட்மெண்ட்ல இருப்பாங்க. நீங்க ரிஷப்ஷன்ல சொன்னா, அவங்க கீழ வருவாங்க. அதோ அது தான் வெயிடிங் ரூம். நீங்க இன்பார்ம் பண்ணிட்டு அங்க போங்க" என்றதும், தகவல் சொன்னவருக்கு நன்றியை கூறியவன், நேராக ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் விரைந்தான்.

அந்த பெண்ணும் இன்முகமாய் 'என்ன வேண்டும்?' என கேட்க, "இங்க வொர்க் பண்ற இதழினியை பார்க்கணும்" என்றதும், அவனை பார்த்தவள், நேற்று சந்துரு தந்திருந்த ஆர்டரின் பேரில், இதழினிக்கு தகவல் அனுப்பாமல், நேராக சந்துருவின் அறைக்கு அழைப்பு விடுத்தாள்.

சந்துருவுடன் அடிதடியில் ஈடுபட்டிருந்த செழியன், வந்த அழைப்பை எடுக்க, அவனிடம் தகவலை சொன்னதும், சந்துருவை ஒரு பார்வை பார்த்தவன், "அவரோட புல் டீட்டெயில். அதோட இதழினிய மீட் பண்ண காரணம், கேளுங்க" என்று கூற,

தொடர்பை துண்டிக்காமலேயே, "சார் உங்க பேர்? நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? அவங்களுக்கு நீங்க என்ன உறவு அப்படின்னு சொன்னா, நல்லா இருக்கும். ஏன்னா, இந்த ஃபாமில் நாங்க பில் பண்ணனும்" என ஏதோ காரணத்தை காட்ட,

சில இடங்களில் நடக்கும் நடைமுறை வழக்கம் தானே இது, என்பதால், "நா ஹரிஹரன். இதழினியோட பியான்சே" எனக்கூற,

மறுபுறம் இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த செழியனின் நிலையை சொல்லவும் வேண்டுமா..!!!
 
ஹாய் ப்ரண்ட்ஸ்,

சாரி. பையனுக்கு எக்ஜாம், சோ சொன்ன மாதிரி யூடி கொடுக்க முடியல. ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. யூடியும் கொஞ்சம் சின்னது தான். லீவ் விட்டதும் எல்லாம் கரெக்ட்டா கொடுத்திடுறேன்.

போன யூடிக்கு விருப்பத்தையும், கருத்தையும் சொன்ன எல்லாருக்கும் நன்றி.
 
Top