Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 3

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 3

சக்திக்கு முன்னரே பூங்காவில் வந்து அமர்ந்திருந்தான் ஆதிரையன். அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு இன்னமும் தள்ளி அமர்ந்திருந்தான். அவன் அவளை பார்த்தாலே ஒழிய, அவள் அவனை பார்க்கவில்லை. படிப்பிற்கு தேவையான குறிப்பெடுக்கும் வேளையிலும், அவளை குறிப்பெடுக்க தவறவில்லை அவனின் கண்கள்.

மாநிறத்திற்கும் மேலிருக்கும் நிறம், அதீத அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும், அழகின் ஏதோ ஒரு வரையறைக்குள் அடங்கும் முகம், எப்பொழுதாவது இவனை சலனப்படுத்தி செல்லும். ஆனாலும் இருவருக்கும் இடையே நிகழும் பனிப்போர் அதை உணர விடாது தடை செய்துவிடும்.

நேரம் செல்ல செல்ல அவள் கிளம்பும் வழியைக் காணவில்லை. பொறுத்திருந்து பார்த்துவிட்டு அவனே வந்து, அவள் தவத்தை கலைத்தான். என்ன நினைத்திருப்பாள் என்று இப்பொழுது தோன்றினாலும், செய்துவிட்டதை மாற்றவா முடியும்? இருந்தாலும் தன்னுடைய ஈகோவை விட்டுத் தராமல் முடிந்தவரை சமாளித்தான்‌.

சக்திக்கு அவனோடு பேசுவதற்கு அதற்கு மேல் எதுவுமில்லை. ஆகையால் அவள் அமைதியாகவே வந்தாள். அவளது விடுதி வரை அவனும் உடன் வந்தான். எதற்கு வருகிறான் என அவளுக்கு புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டே வந்தாள்.

'இவன்கிட்ட இப்போ சொல்லிட்டு உள்ள போகனுமா?' என அவளுக்குத் தோன்ற, தயங்கி நின்றாள் சக்தி. அவனுக்கு அப்படியெல்லாம் இல்லை போலும், சென்றுவிட்டான்.

"ச்சை...இவனுக்காக போய் நின்னேனே… என்னை சொல்லனும்…" வாய்விட்டே முணகியவள், விடுதிக்குள் செல்ல, அவள் பார்க்காத சமயம் அவளை திரும்பி பார்த்தவன், கீற்று புன்னகையுடன் தன் வழியில் சென்றான்.

அறைக்குள் நுழைந்ததுமே அவளது போன் அடிக்க ஆரம்பித்தது. க்ளையன்ட் காலாக இருக்கப் போகிறதென்று எண்ணி வேகமாய் ஓடி வந்து போனை எடுத்தவளின் அப்படியே முகம் சுருங்கி விட்டது; திரையில் அவளின் அத்தை சுந்தரேஷ்வரியின் பெயர் மின்னியது.

"ஹலோ…" பயந்து பயந்து காதிற்கு அழைப்பை கொடுத்தாள் சக்தி.

"போனை எடுக்கறதுக்கு இவ்வளவு நேரமா?" அவள் பயந்தது போலவே அதட்டலாய் வந்தது சுந்தரேஷ்வரியின் குரல்.

"வெளிய போய் இருந்தேன் அத்தை… இப்ப தான் ரூம்க்குள்ள வந்தேன். வந்த உடனே உங்க காலை தான் அட்டென்ட் பண்ணுறேன்." பதட்டமாய் இவள் சொல்ல,

"வெளியவா? யார் கூட போன?" கூர்மையானது அந்த புறம் குரல்.

"யார் கூடவும் இல்ல அத்தை. லைப்ரரி வரை போய் இருந்தேன். நெஞ்சம் நோட்ஸ் எடுக்கனும். அதான்…" இவள் இழுக்க,

"எவன் கூட வேணும்னாலும் சுத்திட்டு வந்து, என்கிட்ட லைப்ரரி போறேன்னு சொன்னா நான் நம்பனுமா?" சுந்தரேஷ்வரி விஷத்தை கக்கினார்.

"அத்தை…" இவள் கத்த,

"எவ்வளவு கொழுப்பு இருந்தா, இந்த நாட்டோட மகாராஜாவோட அம்மாவையே எதிர்த்து பேசுவ?" எதிர் பக்கம் எகிற, சக்திக்கு அடங்கிப்போவதை தவிர வேறு வழி இல்லை.

"நான் எதிர்த்து பேசல அத்தை…" என்று சொல்லி பார்த்தாள் சக்தி.

"ஓஹோ பொய் வேற சொல்ல ஆரம்பிச்சிட்டியா?" என்று சுந்தரேஷ்வரி அதட்ட,

"நான் பொய் சொல்லல அத்தை. நிஜமா நான் சொல்லறேன்." என்று அயர்ந்து போன குரலில் சொன்னாள் சக்தி.

"இதை நேர்ல வந்து சொல்லு… உன்‌ மூஞ்சை பாத்துட்டு நம்புறதா வேண்டாமானு நானே முடிவு பண்ணிக்கறேன்." என்று முடித்தார் சுந்தரேஷ்வரி.

தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டாள். தந்தையின் நினைவோடு, சிவகாமி சப்தத்தில் அளவளாவிய பொழுது கிடைத்த நிம்மதி, சுந்தரேஷ்வரியின் பேச்சில் எங்கோ தொலைந்து போனது.

சிறு வயதில் இருந்தே சுந்தரேஷ்வரிக்கு சக்தியை பிடிக்காது. எப்பொழுதுமே அதட்டலாய் தான் அவரின் குரல் இவளிடம் ஒலிக்கும். எப்பொழுதுமே இல்லையே… தாயும் தந்தையும் இறந்த பிறகு தானே இத்தனை பேச்சுகள்! நினைத்து பார்த்தாலே மனதின் பாரம் ஏறிக் கொண்டே போனது‌.

ஆதிரையனும் இவளும் சேர்ந்து வந்த தகவல் தான் அத்தைக்கு போய் இருக்கும். அதனால் தான் இந்த பேச்சு. ஊகிப்பது அவ்வளவு ஒன்றும் பெரிய காரியமாய் தோன்றவில்லை சக்திக்கு. நிச்சயம் வெளியில் போனால் நிம்மதி கிடைக்காது. மாறாக வில்லங்கம் ஏதேனும் வந்தாலும் வரலாம்‌. சிறு வயதில் இருந்தே பழக்கப்படுத்திக் கொண்டதன் விளைவாய் தலைவலியோடே படுத்து விட்டாள்.

இராஜாதித்யன் தன் டேபிளில் இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தான்‌. ஆதிரையனும் சக்தியும் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களை கவனமாய் ஆராய்ந்துக் கொண்டிருந்தான். அவளது முகபாவனைகளை நுட்பமாக பார்த்தான். அது எப்பொழுதும் போலதான் இருந்தது. பிடித்தவர்கள் உடன் இருக்கும் மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. இது அவன் மூளையை எட்டிய பின்னே வெகுவாக நிம்மதி அடைந்தான் இராஜாதித்யன்.

"சார் அந்த பையனை ஏதாச்சும் பண்ணிடலாமா?" எப்பொழுதுமே அவன் உடன் இருக்கும், அவனது பர்சனல் செக்ரட்டரி விவேக் கேட்டான். இராஜாதித்யன் எள் என்று சொல்லும் முன்னே எண்ணெயாய் நிற்பான்.

"வேண்டாம். போட்டோஸ்ல எதுவும் ஸ்பெஷலா தெரியல… சோ லீவ் இட்." என்றான் இராஜாதித்யன்.

"விவேக் சக்திக்கிட்ட இந்த வாரம் கையெழுத்து வாங்க வேண்டிய பைல்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிடுங்க…" என்று கட்டளைகளை பிறப்பிக்க, மகாராஜா இட்ட கட்டளையை நிறைவேற்ற புறப்பட்டான் விவேக்‌.

விவேக்கின் மீது அலாதி நம்பிக்கை உண்டு. இராஜாதித்யன் எப்பொழுது தன் ஆட்டத்தை ஆரம்பித்தானே அப்பொழுதிலிருந்து உடன் இருக்கிறான். எத்தனை முறை சந்தேகப்பட்டு, விவேக்கிற்கென ஒற்று வைத்தாலும் ஏமாந்து போவது என்னவோ இராஜாதித்யன் தான்! ஆகையாலே அவன் மீது நம்பிக்கை ஜாஸ்தி இராஜாதித்யனுக்கு! இன்னமும் சொல்லப் போனால் அவன் தங்கையை கட்டி தரக் கூட நினைத்துள்ளான்.

இராஜாதித்யனின் தங்கை பொற்செல்வி. வட்டமான அழகிய முகம், குழி விழும் கன்னம், நீண்ட கூந்தல் என பாந்தமான அழகோடு இருப்பாள். விவேக் போன்றொரு நல்லவன் தன் தங்கைக்கு கிடைக்க மாட்டானென்று தான் இராஜாதித்யனை அவனையே தன் தங்கையின் கணவனாக நினைத்துள்ளான். மேலும் இவனை தன் வீட்டு மருமகனாக்கிக் கொள்ளுவதில் இன்னொரு வசதியும் இருக்கின்றது.

விவேக் இடம் கொடுத்தால் கூட நெருங்கி வர மாட்டான். அவன் எல்லையிலே நின்று கொள்ள வேண்டும் என்று நினைப்பவன். அத்தோடு இராஜாதித்யனின் பல இரகசியங்களை அறிந்தவன்; திறமையானவன்; நம்பிக்கையானவனும் கூட. இப்படியானவனுக்கு தன் தங்கையை திருமணம் செய்து தருவதன் மூலம் இவனது இரகசியங்களும் காக்கப்படும், அதே சமயம் சொத்து பிரியும் என்ற கவலையும் வேண்டாம். இப்படி பலவாறாக யோசித்து தான் விவேக்கை தன் தங்ககைக்கு மணவாளனாக்க முடிவு செய்திருந்தான் இராஜாதித்யன்.

சக்தி பற்றிய விசயங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் இராஜாதித்யன்.

அடுத்த நாள் விடியலில் தலைவலி இன்னும் தீராமலே சோர்ந்தே இருந்தாள் சக்தி. அப்படியே கல்லூரிக்கும் கிளம்பி போனாள்.

"என்னாச்சு சக்தி ஏன் உம்முனே இருக்க?" துவாரகேஷ் கேட்டான்.

"ஒன்னுமில்லை…" என்றாள் சக்தி.

"ஒன்னுமில்லைனா அப்ப ஏதோ இருக்கு… கரெக்ட் தானே துவா?" என்று சக்தியிடம் ஆரம்பித்து, துவாரகேஷிடம் முடித்தாள் பூர்ணா.

"என் அத்தை நேத்து கால் பண்ணினாங்க… இன்னைக்கு வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க…" என்றாள் சக்தி. முடிந்த மட்டும் குரலிலும் முகத்திலும், எந்த உணர்ச்சிகளையும் அவள் காட்டவில்லை.

சக்திக்கு அரண்மனைக்கு செல்ல விருப்பமே இல்லையென்பதை, அவளின் முகத்தை வைத்தே கண்டுக் கொண்டனர் பூர்ணாவும் துவாரகேஷூம். இது போல் நடப்பது இதுவொன்றும் முதல்முறை அல்ல என்பதால் இருவருக்கும் சக்தியின் மனநிலை புரிந்தது. அவள் அரண்மனையை பற்றியோ அல்லது அங்கிருப்பவர்களின் குணாதிசயம் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள். வெறுமனே தகவல் தெரிவிக்கும் தொனி மட்டும் சக்தியின் பேச்சில் இருக்கும்.

சட்டென்று அந்த கல்லூரி வளாகமே பரபரப்பாகிற்று; காரணம் அரண்மனையில் இருந்து, ஆடம்பர காரொன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய, கோட் சூட் போட்ட பணியாளர்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தனர்.

நண்பர்களுடன் சற்று முன் நடந்த வகுப்பை பற்றி உரையாடிக் கொண்டே வந்தாள் சக்தி. அவளின் முன்னே கோட் சூட் போட்டவர்கள் வந்து நிற்கவும், அவளின் நடை நின்றது.

ஒரு பார்வையிலே அவர்கள் யாரென்று சக்தி புரிந்துக் கொண்டாள். ஆயினும் அவர்கள் தன்னைக் காண வந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தவள், அவர்களை சுற்றிக் கொண்டு செல்ல முற்பட,

"மேம், உங்களை அரண்மனைக்கு அழைச்சிட்டு வர சொல்லி உத்தரவு வந்திருக்கு." என்றான் அந்த பணியாளர்களில் ஒருவன்.

முதலில் அவன் சொன்னதை நம்பாமல், தனக்குப் பின்னே யாரேனும் இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள் சக்தி. அங்கு யாரும் இல்லை.

"நான்… நானா?" என்று சந்தேகமாய், தன்னைத் தானே கைக் காட்டி கேட்டாள் சக்தி.

"உங்களை தான் மேடம்." என்று வந்தவன் பணிவுடன் சொன்னான்.

சக்தி அப்பொழுதும் நம்பாமல், திரும்பி தன் தோழி பூர்ணாவை பார்த்தாள்.

"அவங்க உன்னை நான் சொல்லறாங்க. சுத்தி இருக்க எல்லாரும் உன்னை நான் பாக்குறாங்க… பேசமா அமைதியா அவங்க கூட போய்டு..." என்று அவர்களுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான் துவாரகேஷ்.

நண்பனின் பேச்சை கேட்டவள், சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். ஆங்காங்கே நின்றுக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் அவளை தான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். துவாரகேஷ் சொன்னது அப்பொழுது தான் அவளுக்கு மண்டைக்குள் உரைத்தது. உடனே, "போலாம்…" என்று ஒற்றை வார்த்தை சொல்லி தலையை மட்டும் அசைத்தாள்.

"இந்த பக்கமா வாங்க மேம்." என்றவன், சக்தியை முன்னே விட்டு, அவன் பின்னே நடக்க, அனிச்சையாய் அவளுக்கு கூச்சமாய் இருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் மொத்தமும் அவளைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு அவளுக்கு. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் தலையைக் குனிந்துக் கொண்டே கார் வரை சென்றாள். காரில் ஏறப் போகும் சமயம் தான் அவளின் கண்ணில் ஆதிரையன் விழுந்தான்.

ஒரு கையில் சிவகாமியின் சபதம் இருக்க, மற்றொரு கை பேன்ட் பாக்கெட்டினுள் இருந்தது. ஏளனமாய் உதட்டில் ஒரு சிரிப்பு. 'நீ இப்படி தானே?' என்பது போல் இருந்தது அந்த சிரிப்பு. ஏனோ லேசாய் கண்கள் கலங்கிவிட்டது இவளுக்கு.

செல்லும் வழியெல்லாம் யோசைனையூடாக நேரம் கழிந்தது அவளுக்கு.

'சுந்தரேஷ்வரி காரை அனுப்பியிருப்பாரா?' என்று ஒரு நொடி நினைத்தவளின் மனம், அடுத்த நொடியே, 'வாய்ப்பே இல்லை!' என்று சொன்னது.

'அத்தை நிச்சயம் கார் அனுப்பியிருக்க மாட்டார்கள். அவருக்கு தன்னைப் பற்றி வெளியில் சொல்வதே பிடிக்காது. அப்படியிருக்க பகீரங்கமாய் இவள் எனக்கு உறவினள் என அனைவருக்கும் தெரிவிப்பது போல், அவர் கார் அனுப்பியிருக்க மாட்டார். அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள்? அவர்களுக்கு இப்படி ஒருத்தி உயிரோடு உள்ளாள் என்பதே நினைவில் கிடையாதே! பின்பு யாராக இருக்கும்?'

என்ன யோசித்தும் விடை கிடைக்கவில்லை. அவள் யோசனைகள் முடியும் முன்பே அவளின் கார் பயணம் முடிவடைந்தது.

கார் கதவை அவள் திறக்க முயற்சிப்பதற்குள், எங்கிருந்தோ வந்த ஒரு ஆள், கார் கதவினை அவளுக்காக திறந்து விட்டான். இது புதிதாக இருந்தது அவளுக்கு. கொஞ்சம் அசௌகர்யமாகவும் இருந்தது.

காரில் இருந்து இறங்கியவள் அரண்மனையின் முன்னே நின்று பார்த்தாள். சொந்த வீட்டிலேயே அகதியாய் தொலைந்துப் போகும் சாபத்துடன் பிறந்தவர்களின் பட்டியலில், இவளின் பெயர் முதன்மையானதாக இருக்கும் என்று எண்ணியவளின் மனம் கசந்து போனது.
 
Awesome ud ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Thanks Doli 😍😍😍

ஹீரோயின்னா நாலு அடி வாங்கத்தானே செய்யனும் டோலி 😌😌
ஹீரோயின் தானே வாங்கட்டும், வாங்கட்டும் 🫣🫣🫣🫣

நான் ஹீரோ ஹார்மி டியர் அதனால நியாயமா தான் இருப்பேன், அதான் அவ அடி வாங்கும் போது வலிக்குது 🥺.
 
ஆதிரையன் தான் ஹீரோ போல 🤔 🧐 🤔 🤔 🤔
ராஜா வில்லன் மாதிரி தெரியுது 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐
விவேக் உண்மையில் விசுவாசமாக இருக்கானா இல்லை அரண்மனையில் நடப்பதை வேவு பார்க்க வந்திருக்கானா 🤔🤔🤔🤔🤔🤔ராஜா கொலைய பத்தி தெரிஞ்சுக்க வந்திருப்பானோ 🧐🧐🧐🧐🧐🧐

சக்தி பத்தி எல்லோருக்கும் தெரியணும் என்று கார் அனுப்பி இருக்கானோ 🤗 🤗 🤗 🤗 🤗

ஆதி இப்படி அவ பார்க்கும் போது முறைச்சிட்டு பார்க்காத போது சிரிச்சா எப்படி கரெக்ட் பண்ண முடியும் 😝 😝 😝 😝 😝 😝 😝 😝 😝

அத்தை ஓவரா பேசுது 🥶 🥶 🥶 🥶 ஒரு நாள் வாய் இல்லாமல் செய்யணும் 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 🤭 🤭
 
Last edited:
ஹீரோயின் தானே வாங்கட்டும், வாங்கட்டும் 🫣🫣🫣🫣

நான் ஹீரோ ஹார்மி டியர் அதனால நியாயமா தான் இருப்பேன், அதான் அவ அடி வாங்கும் போது வலிக்குது 🥺.
பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது இதுதானோ ☹️☹️☹️☹️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
சுந்தரேஷ்வரி.... நீங்க இன்னாள் ராஜாவோட அம்மா என்றால் 😤😤😤 சக்தி முன்னாள் ராஜாவோட மகள் 😖😖😡😡
அத்தையின் ஆட்டம்...👇👇👇👇

IMG_20240529_134438.jpg
 
Top