Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 7

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 7

இரவு ஒன்பது மணி இருக்கும். மெதுவாக டைனிங் டேபிளை நோக்கி நடை போட்டாள் சக்தி. அந்நேரத்திற்கு மஹாராஜாவின் குடும்பத்தினர் உண்டு உறங்கவே சென்றிருப்பார்கள். ஆகையாலே இந்த நேரத்தையே தனது இரவு உணவிற்கான நேரமாக மாற்றிக் கொண்டாள்‌ சக்தி.

சமையல் அறைக்கு சென்று பார்த்தாள். யாரின் தலையும் தென்படவே இல்லை. ஆகையால், தனக்கு தேவையானவற்றை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து உணவு மேசையில் அமர்ந்தாள் சக்தி. காதில் ப்ளூடூத்தும், ஒரு கையில் அலைபேசியும், மறு கையில் உணவுமாக உண்டுக் கொண்டிருந்தாள்‌ சக்தி.

சாப்பிட்டுக் கொண்டே இருந்தவளுக்கு திடீரென விக்கல் எடுக்க, சுற்றி தண்ணீர் இருக்கிறதா என தேடிப் பார்த்தாள். தண்ணீர் எடுத்த வர மறந்துவிட்டதை எண்ணி, தலையில் அடித்துக் கொண்டு நாற்காலியை தள்ளி விட்டு அவள் எழ, ஒரு கரம் அவள் முன்னே தண்ணீர் நிரம்பிய குவளையை நீட்டியது.

தண்ணீரை கொடுப்பது யார் என பார்த்தவளுக்கு, விக்கல் உடனடியாக நின்று போனது. ஆம் இராஜாதித்யனே தான்! அவன் தான் இரவு உடையில், கையில் நீர் குவளையோடு நின்றிருந்தான்.

“குடி சக்தி…” என்று இராஜாதித்யன் சொல்ல, எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் சக்தி.

“என்ன இவ்வளவு லேட்டா சாப்பிடற? முன்னாடியே எல்லார் கூடவும் சேர்ந்து சாப்பிட்டு இருக்கலாமே?” என்றபடியே, அவளுக்கு அருகில் தானும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் அவளையும் அமரும் படி சைகை செய்தான்.

இனி எங்கனம் அவள் தொண்டை குழிக்குள் உணவு இறங்க?

“வேலை இப்ப தான்ங்க ராஜா முடிஞ்சிது.” பொய் சொன்னாள். முகத்திலே தெரிந்தது.

“உன் வேலைலாம் எப்படி போகுது சக்தி? எதுனா உதவி வேணும்னா சொல்லு… செய்யறேன்.” என்று அவள் பொய் சொல்கிறாள் என்று தெரிந்தும், அவள் போக்கிலே போனான் இராஜாதித்யன்.

“இ… வேணும்னா சொல்லறேங்க ராஜா…” என்று முதலில் மறுக்க வாயெடுத்தவள், அவன் முகம் பார்த்துவிட்டு, வாக்கியத்தை மாற்றிக் கொண்டாள்.

“நாம தனியா இருக்கும் போது கூட நீ என்னை ராஜான்னு கூப்பிடனும்னு அவசியம் இல்லை சக்தி. மாமான்னே கூப்பிடு…” என்று அவன் இயல்பாய் சொன்னான்.

போன விக்கல் அவளுக்கு திரும்பி விட்டது.

“தண்ணிய குடி…” மீண்டும் அவனே தண்ணீரை எடுத்து தர, வாங்கிக் கொண்டாள் சக்தி.

பெயருக்கென அவள் தண்ணீரை அருந்த, தண்ணீர் செல்லும் வழியெங்கும் அவன் கண்களும் பயணித்தது. ஒரு நொடி உள்ளுணர்வு அவளை எச்சரித்து. ஆனால், அவள் பார்க்கும் முன்பே, தனது பார்வையை மாற்றிக் கொண்டான் இராஜாதித்யன்.

“இதோட நான் உனக்கு இரண்டு டைம் சொல்லிட்டேன் சக்தி. ஆனா நீ பதிலே சொல்ல காணோம்.” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி, அவளிடம் கேட்டான் இராஜாதித்யன்.

தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொண்டது போல இருந்தது சக்தி. அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அசௌகர்யமாக இருந்தது அவளுக்கு. அதுவும் இப்பொழுது, உள்ளுணர்வு எதுவோ சொல்லியது போல் இருந்த பின்பு அசௌகர்யத்திற்கா பஞ்சம்?!

அவனிடம் இருந்தா இந்த வகையான உணர்வு தோன்றியது அவளுக்கு? வாய்ப்பிருக்காது! இரவு நேரம் தனியாய் ஒரு ஆணோடு அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால், உள்ளுணர்வு எச்சரிக்கிறது என்று எண்ணி அதை புறம் தள்ளினாள் சக்தி.

“உங்களை அப்படி கூப்பிடற உரிமை எனக்கு இல்லை.” தட்டை ஒரு விரலால் அலைந்துக் கொண்டே சொன்னாள் சக்தி.

“நான் உன் அத்தை பையன் சக்தி.” அவளையே வைத்த கண் வாங்காது பார்த்தபடி சொன்னான் இராஜாதித்யன்.

“நீங்க இருக்க உயரம் வேற. நான் இருக்க இடம் வேற. நமக்குள்ள உறவு முறைக்கெல்லாம் சாத்தியமே இல்லை.” தயங்கி தயங்கியேனும் சொல்லியே விட்டாள்.

அவளது கையை தனது கைக்குள் எடுத்து வைத்தான் இராஜாதித்யன். அவனின் பரந்த சொரசொரப்பான கைகளுக்குள், குட்டியாய் பஞ்சு போன்று மென்மையாக இருந்தது அவளின் கைவிரல்கள்.

அவளின் விரல்களை பார்த்தவாறே பெருமூச்சொன்றை விட்டவன், “எல்லாத்துக்குமே மனசு தான் காரணம் சக்தி. நாம மனசு வைக்கிறதுல தான் எல்லாமே இருக்கு.” என்று சொன்னவன்,

“குட் நைட்.” என்றவாறு கிளம்பி விட்டான்.

இராஜாதித்யன் கிளம்பியதும் தான் அவளால் ஒழுங்காகவே மூச்சு விட முடிந்தது. உடல் வெளிப்படையாகவே நடுங்கியது‌. நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்.

வரவேற்பறையில் இருந்த பழைய கால மணிகூண்டில் இருந்து சத்தம் வரவே, சுயம் திரும்பினாள் சக்தி. சாப்பிட்ட தட்டையும் இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு, படுக்கைக்கு அவள் செல்லும் பொழுது மணி 12.10.

கண்களை மூடினால் தூக்கம் வரவே மாட்டேன் என்றது அவளுக்கு‌. எழுந்து அப்படியே பால்கனி இருக்கும் பக்கம் சென்றாள்.

இரவு, மிதமான குளிர், யாருமற்ற தனிமை, எதிரே இருந்த தோட்டத்தில் இருந்து வந்த கலவையான மலர்களின் வாசனை எல்லாம் சேர்ந்து அவளை சிறிது சமன்படுத்தியது. அதற்கு மேலும் தூங்காமலே இருந்தால், அடுத்த நாள் வேலைகளை சரிவர கவனிக்க முடியாது என்று நினைத்தவள், தன்‌ அறைக்கு சென்று வலுக்கட்டாயமாய் உறங்கினாள்.

துவாவும், பூர்ணாவும் இன்றோடு இந்தியா சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர்களது பெற்றோரோடு செல்லம் கொஞ்சி, நண்பர்களோடு நேரம் செலவழித்து என அவர்களது நேரம் இறக்கை கட்டி பறந்தது. ஆனால், சக்திக்கோ எந்நேரமும் அரண்மனை வாசமே!

“பூரி என்ன பண்ணுற?” தனிமை தாங்காது பூர்ணாவிற்கு அழைத்தாள் சக்தி.

“ப்ரெண்ட்ஸ் வந்துருக்காங்க. அவங்க கூட வெளிய போக ரெடி ஆகிட்டு இருக்கேன்.”

“ஓஓஓ… சரி சரி.‌..” சக்தியின் குரல் இறங்கி ஒலித்தது.

“துவாக்கு கால் பண்ணேன். எடுக்கவே மாட்டேங்குறான்.” குறைபட்டாள் சக்தி.

“உன் மேல செம்ம கோபத்துல இருக்கான் சக்தி. கடைசி நாள் அன்னைக்கு கேம்பஸ் புல்லா உன்னை தேடி எப்படி அலைஞ்சான் தெரியுமா? கிளம்பறப்போ கூட, லாஸ்ட் மினிட்டாச்சும் நீ வருவியா வருவியான்னு பாத்துட்டே இருந்தான். நீ வரலைன்னதும் செம்மையா அப்செட் ஆகிட்டான்‌.” என்று பூர்ணா சொன்னதும், குற்ற உணர்வு வந்து ஒட்டிக் கொண்டது சக்திக்கு.

“இல்லை பூரி. அரண்மனையை விட்டு நான் காலடி எடுத்து வச்சாலே ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க. கூடவே நிறைய பாடிகார்ட்ஸ் வருவாங்க. தேவையில்லாத சீன் கிரியேட் ஆவும்னு தான் நான் வரலை‌.”

“என்னமோ போ… உலகத்துல நீங்க ஒருத்தவங்க தான் ஏதோ ராஜ வம்சம் போல சீன் போடுறீங்கப்பா…!” என்று பூர்ணா அலுத்துக் கொள்ள, களுக்கென்று சிரித்தாள் சக்தி.

“சக்தி உன்னை தவிர நம்ம பேட்ஜ்ல எல்லாரும் சர்டிபிகேட் வாங்கியாச்சாம். உன்னை சீக்கிரம் வந்து வாங்கிக்க சொன்னாங்க.” என்றாள் பூர்ணா.

“என்கிட்ட யாரும் சொல்லல…?”

“நீ தான்‌ யாருகிட்டையும் பேச மாட்டியே…”

“பூரி இந்தியா போனதும் வாய் நீளது…”

“மெய் ஆப்னே தேஷ் மே ஹூன் இசேலியே ஆப்னே இச்சாஷி போலோங்கே…”

“தமிழ்… தமிழ்ல பேசு…”

“தமிழ் தெரியாது போடி.” என்று அழைப்பை துண்டித்தாள் பூர்ணா.

சக்தியின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.

இன்று இராஜாதித்யன் வீட்டில் இல்லை. அலுவல் காரணமாக ஏதோ ஒரு நாட்டிற்கு சென்று உள்ளான்; வருவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் என்பது வரை சக்திக்கு தெரியும். ஆகையால், அவன் வருவதற்குள், வெளியே சென்று சான்றிதழ்களை வாங்கி வந்துவிடலாம் என்று எண்ணி கிளம்பினாள் சக்தி.

மெரூன் நிற குர்த்தியும் ஜீனும் அணிந்து, மொத்த முடியையும் போனிடெயிலுக்குள் அடக்கியதோடு ரெடியாகிவிட்டாள் சக்தி. எப்பொழுதும் போல, ஒரு தோள்ப்பை. அதில் தேவையான சில பொருட்கள்.

உற்சாகமான மனநிலையோடு கிளம்பினாள் என்பதை விட, மனம் ஒரு நிலையாய் இருந்தது‌‌. வானிலையும் இதமாய் இருக்கவே, அதை இரசித்துக் கொண்டே அரண்மனையை விட்டு வெளியே வந்தாள் சக்தி. வாயில் கதவு முதல் இரண்டு தெரு வரை யாருமே அவளை தடுக்கவில்லை; கேள்வியும் கேட்கவில்லை. சந்தேகத்துடனே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே வந்தாள் சக்தி.

அவள் சந்தேகம் உறுதி என்பது போல மூன்றாவது திருப்பத்தில் ஒரு ஆள், அவள் வருகையை எதிர்பார்த்தபடி, ஸ்கூட்டருடன் நின்றிருந்தார்.

சக்தி அருகில் வந்த உடன், “மேடம்…” என்று அழைத்த அந்த நபர், “மஹாராஜா உங்களை இந்த ஸ்கூட்டில போக சொன்னாரு.” என்றபடி ஸ்கூட்டியை நகர்த்திக் கொண்டே வந்தார்.

சக்தி எதுவும் பதில் பேசும் முன்பே, “நான் வர்றேங்க மேடம்.” என்று சொல்லி விட்டு அந்த ஆள் ஓடி மறைந்தார்.

என்ன நடந்தது என்று விளங்கிக் கொள்ளவே சக்திக்கு சில விநாடிகள் பிடித்தது. சொல்லி வைத்தது போல, யாரிடமோ இருந்து அழைப்பு வந்தது சக்திக்கு.

அலைபேசியை எடுத்து பார்த்தாள் சக்தி. ஏதோ வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. முதலில் யாரென்று தெரியாது புருவங்கள் சுருங்கினாலும், மூளைக்கு உண்மை உரைத்த நொடியில், அவளின் கண்கள் இரண்டும் அகலமாக விரிந்தன. அதிர்ச்சியில் வாயில் கையை வைத்தவாறே இரண்டடி பின்னோக்கி நகர்ந்தாள் சக்தி.

சக்தியின் மூளை நடந்தவற்றையெல்லாம் கிரகித்துக் கொள்ளும் முன்பே, அழைப்பு நின்று போயிருக்க, அப்பொழுது தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. அதற்கு அற்ப ஆயுள் கூட இல்லை. மீண்டும் அதே எண்ணில் இருந்தே அழைப்பு வந்தது‌. இம்முறையும் எடுக்காமல் விடுவது சரியல்ல என்று தோன்றவே, அழைப்பை ஏற்றாள் சக்தி.

“ஹலோ சக்தி… பிசியா?” இராஜாதித்யனின் குரல்.

இவள் என்னவென்று பதில் சொல்லுவாள்? அவனை விடவா இவள் வேலை பளுவாய் இருந்துவிட போகிறாள்.

“இ.. ம்ஹும்… இல்லைங்க ராஜா.”

“மாமான்னு கூப்பிடு சக்தி.”

“...”

“ஸ்கூட்டி உனக்கு தான். உனக்கு கார் பிடிக்கலைன்னு சொன்னல. அதான் ஸ்கூட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன். இது அம்மாக்கு தெரியாது. இங்க பக்கத்துலையே பார்க் பண்ண இடம் ஏற்பாடு பண்ணிட்டேன். இனிமே அம்மாக்கு பயப்படாம, நீ ஸ்கூட்டியை ஓட்டு.”

“வே… வேணாமே…” தயக்கமாய் சொன்னாள் சக்தி.

“நான் டீனேஜ்ல இருந்தப்போ மாமா எனக்கு பைக் வாங்கி குடுத்தாரு. நான் உனக்கு இப்ப வாங்கி தர்றேன். சிம்பிள் சக்தி. பெருசா எதையும் யோசிக்காத. பாதுகாப்புக்காக ஆளுங்களை போட்டுருக்கேன். கிட்ட வந்துலாம் உன்னை டிஷ்டர்ப் பண்ண மாட்டாங்க. தூரமா நின்னே புல் புரொடக்ஷன் குடுப்பாங்க‌. அதை வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத. என்னோட குடும்பத்தை பாதுகாக்கிறது என்னோட கடமை. சரி சக்தி ரொம்ப நேரமாகிடுச்சு. நான் அப்பறம் பேசறேன்.” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

குடும்பம், கடமை என்று அவன் சொல்ல, ஒரு நொடி, அவளின் அலைபேசியை கைநழுவவிட்டு பிடித்தாள்.
 
Super 😍
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இவனெதுக்கு சக்திய பயமுறுத்தற மாதிரியே பண்ணறான்.
இப்ப தான் சக்திக்கு ரொம்ப கண்காணிக்கப் படற ஃபீலிங் அதிகமா தோணுது போல.

சாப்பாடே சரியா சாப்பிட முடியலை.இதுல இவனோட பார்வையும் ராங்கா போகுது. இதைய இந்த ராணி பாத்தா அவ்வளவுதான்.
 
அடேய் ராசா🙄பிள்ளை சாப்பிடும் நேரம் தெரிஞ்சிக்கிட்டு தான வந்த அப்புறம் என்ன அக்கறையா விசாரிக்கிற ஏன் இவ்வளவு லேட்டா சாப்பிடுற சக்தினு😏😏😏
 
Top