Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

Advertisement

💖💖💖

பிரகாஷ் - செருப்படி

அதுவும் சாணியில முக்கி எடுத்த செருப்பு

இனி சாலா ஒங்கூட கிடையாது.

ஒன்னோட நிம்மதியான வாழ்க்கையை குடும்பத்தை நீயே அழிச்சிட்ட.

இனியாவது திருந்தப் பாரு.

திரும்பவும் ஷாலினி கை வெட்டி கிட்டா கர்ப்பமா இருக்கான்னு அவ பக்கம் போன. ...... பிறகு ஆத்தர் கூட ஒன்ன காப்பாத்த முடியாது.

இனியாச்சும் ஒழுங்கா இருந்தா ஒன்னோட பிள்ளைகளுக்கு அப்பாவாக மட்டும் இருக்கலாம் . இல்லனா பிள்ளைகளும் ஒன்ன விட்டு போயிடுவாங்க.

ஏன்னா இப்ப நீயே ஒண்ணும் இல்லாத நாயி.

ஒன்னோட இருந்தா ஒண்ணும் கிடைக்காது.


ஒன்னோட பாசம் நேசம் எல்லாம் வேசம் னு அவங்களுக்கும் தெரியும் .

ஒன்னோட பிள்ளைங்க தானே. ஒங்கிட்ட இருக்க சுயநலம் தான அவங்க கிட்டயும் இருக்கும்.
ஒன்னிய மாதிரியே அம்மாவுக்கு இருக்கா இல்லையான்னு பாக்காம சாப்பிட்டு இருந்தவங்க தான.
அதனால ஒன்னிய தூக்கிப் போடவும் தயங்க மாட்டாங்க .

ஒன்னோட கம்பேர் பண்ணும் போது சாலா உயிரா அவங்கள பாத்துப்பாங்க.
அதுக்காகவாச்சும் சாலா கூட போயிடுவாங்க.

திரும்பவும் சந்தனம் ஜவ்வாது பூசிக்கிட்டு ஷாலினின்ற சாக்கடையில முங்கீறாத


சாலா - பிரகாஷ் க்கு குடுத்த பதில்👌👌👌
ஒவ்வொரு வார்த்தையும் நச்சுன்னு இருந்தது.🤝🤝

"இலவசமா குடுத்தா அன்புக்கும் மதிப்பில்லை"- சத்தியமான உண்மை


அடேய் பிரகாஷ்
"பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

சாலா ஒரு ஃபீனிக்ஸ் டா
 
Last edited:
சூப்பராக இருந்தது இந்த எபி, இலவசமாக கொடுக்கிற அன்புக்கு கூட மதிப்பு கிடையாது. உண்மை உண்மை. இதெல்லாம் பெரும்பாலான குடும்பத்தலைவிகள் இன்னைக்கு அனுபவிக்கிறது. அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறதுதான். நம்மோட உணர்வுகள் கூட நம்மோட வாழ்க்கைத்துணைக்கு நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் வணக்கங்கள். அப்படித்தான் இருக்கனும். ஒருவனுக்கு ஒருத்திங்கிறது கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பாத்தறதுக்காக மட்டும் கிடையாது. ஒருவனுக்கு ஒருத்திங்கிறது நம்மோட உடல்நலம், மனநலம், வாரிசுகளோட வளம் எல்லாத்துக்குமே ரொம்பவே அவசியம். ஒருத்தரை மீறிய அதிகமான நபர்களோட (ஒருத்தர் உயிருடன் இருக்கும்போதே மற்றவருடன் தொடர்பு கொள்வது) உடல்ரீதியா தொடர்பு கொள்றவுங்க மனசளவுல கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். உடல்ரீதியாகவே அது பல பாதிப்புகளையும் தரும். இது அறிவியல் ரீதியாக உண்மைதான். நம்ம உடம்புங்கிறது செய்ற அதிகபட்ச வேலை கலவி கொள்வது. அது பல பேரோட இருந்தால் இந்த உடம்பு என்னத்துக்கு ஆகும். இதுல திருட்டு மாங்காய்க்குதான் ருதி. அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி முழுப் பொண்டாட்டி இப்படி பல வார்த்தைஜாலங்கள் உலவுது. இதெல்லாம் எப்படித்தான் உருவாக்குவாங்களோ. பெண்களுக்கு எல்லாம் கணவரைத் தவிர வேறு யாரையும் இந்த நோக்குல பார்க்குறது சாமி குத்தம்னு சொல்லி வளர்க்குறாங்க. யப்பா என்ன ஓரவஞ்சனை. நானும் சக மனுஷிதான், நானும் பல பேரோ லிவ் இன்ல இருப்பேன். இப்படி கிறுக்குத்தனமாக பெண்ணியம் பேசாம, பெண்ணியம்னா தைர்யம், சுயசார்பு, ஒழுக்கம் அப்படிங்கிறத நாம புரிஞ்சுக்கனும்.
 
ஒவ்வொரு பொண்ணும் அனுபவிக்கற பேச நினைக்கிற
வார்த்தைகள் சாலா சொன்னது
அருமையா‌ன பதிவு ஆராதனா
சாலா இனி தான் நிறைய
தன்னம்பிக்கையோடு இருக்கனும்

பிரகாஷ் பத்தி இனி
நினைக்க கூட வேண்டாம்
 
சாலா பேசறது நேரில் அப்படியே கண்ணு முன்னாடி நடக்கற மாதிரி feel. Ultimate rebuttal from சாலா. குறிப்பாக தேன் நக்கி அடைமொழி பிரகாஷ்குக்கு பக்காவா பொருந்துது.

இவனுக்கு மட்டும் ரோஷம்ன்னு ஒன்னு இருந்தா தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கணும். இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அதனால ஷாலினியைவே கழுத்துல கையிறா சுத்திக்கட்டும். மிச்ச வேலையை அவளே சிறப்பா செய்வா.

பெரிய epi தான். ஆனாலும் final decision சாலா சொல்ல அங்க அந்த வீட்டுல மத்த எல்லாரோட reaction என்னன்னு தெரியாததுல ஒரு incomplete feel எனக்கு.
குறிப்பாக அஜய் and அஞ்சு.
 
Last edited:
சாலா பேசறது நேரில் அப்படியே கண்ணு முன்னாடி நடக்கற மாதிரி feel. Ultimate rebuttal from சாலா. குறிப்பாக தேன் நக்கி அடைமொழி பிரகாஷ்குக்கு பக்காவா பொருந்துது.

இவனுக்கு மட்டும் ரோஷம்ன்னு ஒன்னு இருந்தா தூக்கு மாட்டிக்கிட்டு தொங்கணும். இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அதனால ஷாலினியைவே கழுத்துல கையிறா சுத்திக்கட்டும். மிச்ச வேலையை அவளே சிறப்பா செய்வா.

பெரிய epi தான். ஆனாலும் final decision சாலா சொல்ல அங்க அந்த வீட்டுல மத்த எல்லாரோட reaction என்னன்னு தெரியாததுல ஒரு incomplete feel எனக்கு.
குறிப்பாக அஜய் and அஞ்சு.
Ajay Anju appa venum endraal Shalini Prakash kooda irukatum.then only they know about Amma s love n affection.
 
Top