Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

Advertisement

Surrogacy-க்கு பாண்டியம்மா ஏன் ஒத்துக்கணும்? இவங்களையா சுமக்க சொல்லப்போறாங்க?
இந்த பொம்பளை ரூபத்துல இருக்குற தீயசக்தி கிட்ட யாராவது கேட்டுருக்கலாம்?
----"அது என்னன்னா முன் பின் தெரியாதவங்க வீட்டு திண்ணையில உட்கார மாட்டீங்க சரி, ஆனால் யாரு வீட்டு படுக்கையிலயோ போய் படுத்து வேறொரு பொண்ணோட உறவாடிட்டு வர புருஷனுங்களை மட்டும் வீட்டுக்குள்ள சேர்த்து, அவங்களோட ரோஷமே இல்லாமல் குடும்பம் நடத்துறீங்களே / நடத்த சொல்லி நியாயம் பேசறீங்களே அதெப்படின்னு...? "-நல்லா கேட்ருக்கலாம்.

நியாயத்தை பேசி கேள்வி கேட்ட பெத்த பொண்ணுங்களையும் எப்படி விஷமா வார்த்தையை பேசி விரட்டி இருக்காங்க? சை! இவங்கல்லாம் பொம்பளையா? வீட்டு தலைவிங்கிற முகமூடி அணிந்த விஷச்செடி. இத்தனைக்கும் துணை போன முத்தையாவும் இவங்க பையன் குமரனும் பாண்டியம்மாவை விட மோசமான பிறவிகள்.

தேவி -சித்ராக்கு எல்லாம் யார் side சரி யார் side தப்புன்னு சொல்லவே ஒன்னும் இல்லை. ஏன்னா முழுக்க முழுக்க தப்பான ஒரு செயல் செய்ய முடி எடுத்த ரெண்டு பேருமே அவஸ்தை படறாங்க. வழக்கம் போல கேடு கேட்ட குமரன் குளிர் காயரான். அந்த விஷச்செடி வழக்கம் போல விஷத்தை கக்குது அவ்வளவு தான்.

டேய் பிரகாஷ், அடுத்தது pshyciatrist treatment -ஆ டா?
நீ நல்லவன்னு காமிக்க ஊருக்கு முன்ன scene போட்டது போக இப்ப உனக்கு உனக்கே போட்டுக்க தான் இந்த consultation -நடத்துடா நடத்து.

ஆனால் ஒன்னை miss பண்ணிட்ட டா நீ, பாண்டியம்மாக்கு மட்டும் உன்னோட ஆசை கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுருந்தா, சாலாக்கு ஒரு தங்கச்சிய ready பண்ணி அதுக்கு 12 வயசோ 13 வயசோ அதாவது பூப்படைந்து இருந்தா போதும்ன்னு முடிவு பண்ணி உனக்கே இப்ப கட்டி குடுத்துருப்பாங்க. ஏன்னா அவங்க கணக்கு படி பத்து வாசல் போகலாம் ஆம்பளை. நீ உன் வீட்டை தாண்டி ஒரு வாசல் தானே மிதிச்ச, so அவங்க சந்தோஷமா சாலா தங்கைய உனக்கே கட்டி வெச்சுருப்பாங்க. நீயும் எப்படி நல்லவன்னு மத்தவங்களை நம்ப வெக்கறதுன்னு இப்படி மண்டை பிச்சுகிட்டு அலைய வேண்டி இருக்காது.
 
Top