Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

நீங்க கேட்பது போல இப்படி ஒரு கேள்வியை கேட்கக்கூடிய பெண் தான் நானும். அதே சமயம் அதை செயல்படுத்தும் பெண்களை விமர்சிக்கும் கூட்டத்தில் ஒருத்தியா நான் நிச்சயம் இருக்க மாட்டேன்.
சாலா மாதிரி நடுத்தர வயதில் துணிவு தேவைப்படுவது வாழ்க்கையை எதிர்கொள்ள மட்டுமில்லை. விமர்சனங்களை எதிர்த்துகொள்ளவும் தான். தன் முடிவுகள் குழந்தைகளை பாதிக்குமோன்னு ஒரு அச்சம். இங்க சாலா துணிச்சலா முடிவுகளை எடுத்து தன் வாழ்க்கைப்பயணம் எப்படி இருக்கணும்ன்னு தெளிவா தான் செயல்படறா. ஆனால் அவளோட பாசமான மனசு அம்மாவா துளி கூட தன்னோட idealness குறையக்கூடாதுன்னு நினைக்கத் தூண்டுது. அது அவளோட செயல்களில் தயக்கத்தை தடுமாற்றத்தை கொடுக்குது. பிள்ளைகள் தன் பக்க நியாயத்தை புரிந்து கொள்ளவிட்டாலும் அவங்களோட மனசுக்கு நெல் முனையளவு ஏமாற்றத்தைக் கூட தன் செயல்கள் கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறா. அதை முறியடிக்கனும். கொஞ்சம் கசப்பான மருந்தை புகட்ட தான் வேணும்.

அஜயோ அஞ்சுவோ நாளைக்கு தங்களோட வாழ்க்கைநலனை தான் பார்க்க முடியும். அவங்களோட வாழ்க்கை வேற தான் தனி தான். அப்ப பிரகாஷோட பணம் தேவைப்பட்டாலும் அவனால கிடைக்கும் support தேவைப்படாது. அன்னிக்கு அவன் unwanted element -ஆ இருப்பான் இவங்களோட personal life-la. ஆனால் அப்பவும் சாலா இவன்கூட வாழவேண்டி இருக்கும்.

So இதை இப்பவே தான் சாத்தியப்படுத்தனும். ஒன்னு யோசிங்க, நம்ம கொள்ளுப்பாட்டி காலத்தில் சாத்தியமில்லாத எத்தனை விஷயங்கள் இன்னிக்கி சாத்தியமாகி இருக்கு. அப்படி தான் இதுவும். இப்படிப்பட்ட மாற்றங்களை தவறாக விமர்சிக்கும் கூட்டத்தின் விழுக்காடு கண்டிப்பாக குறைந்து கொண்டு தான் இருக்கு.

ஷாலினிக்கு அமைந்த மாதிரி சாலாக்கு பெத்தவங்க அமையலை. அது தான் அவளோட பெரிய போராட்டம். அவ போராட்டம் இப்ப அவ குழந்தைகளிடமும் தொடரும். அதுல அவ ஜெயிக்கணும். ஜெய்ச்சுட்டான்னா இது நடைமுறையில் சாத்தியம் தான்.
Correct
 
Devi eppo than nalla mudivu eduthueruga. Prakash, manimaran avaga panna thappuku etho konjamavathu panishment eruthu. but etha kumaran thappa innum realises pannala . Enna poruthavaraikum chitra romba selfish person avala mattum than devi 15 years kastam pada Karanam .
 
Excellent writing.

வக்கீல் வீராவோட வாய்மொழி அப்படியே ஏதோ கீதோபதேசம் மாதிரி இருந்தது.

தேவியோட தெளிவு அருமை. அவளுக்கு இனிமேலாவது வாழ்க்கையில் அவ மனம் விரும்பும் நிம்மதி கிடைக்கணும்.

பொறுக்கி குமரன். இவனையெல்லாம் சாப்பாட்டுல விஷம் வெச்சு கொன்னுடனும். அவன் தேவி கிட்ட நடந்துகிட்ட முறையையும் போதையில் அவள் மீது சுமத்திய பழிகளையும் அப்படியே சித்ரா கிட்ட சொல்லி (இன்னும் ரெண்டு extra bits போட்டு ) அவளை விட்டே இவன் சோலியை முடிக்கணும். ஹும் ஆனால் சித்ராகிட்ட அந்த தெளிவெல்லாம் எதிர்பார்ப்பது வீண்.

தேவிக்கு கிடைச்ச மாதிரி (கிடைச்சிடும் தானே?) சாலாக்கும் விமோச்சனம் கிடைக்காதா? அவ குழந்தைகள் பத்தி பேசவே பிடிக்கலை.
இதுங்கல்லாம் internet பார்க்கறப்ப மட்டும் தான் வயசுக்கு மீறிய வளர்ச்சியோட இருக்கும். மத்தபடி ஒன்னும் புரியாத பச்சை மண்ணுங்க மாதிரி தான் நடந்துக்குங்க. இதுகளும் சொகுசு வாழ்க்கை பழகிய சுயநலவாதிகள் தான். பிரகாசுக்கு பிறந்ததுங்கன்னு நிரூபிக்குதுங்க.

சாலா ஏன் தேவியோட வீட்டுல இருக்கக்கூடாது? சோறு தானே தேவை. சமயக்கார அம்மா தயவுல போட்டு தொலைச்சுட்டா போச்சு. மத்தபடி கண்ணுக்கு கண்ணா பார்த்து வளர்க்க தான் திருந்தி வந்த அப்பா கூடவே இருக்காறே. பக்கத்து தெரு தானே. ஏதாவது அவசரம் என்றால் வந்து போக முடியுமே. தங்களோட சந்தோஷத்திற்கு அம்மா தான் எப்பவுமே விலை கொடுக்கணும் என்று நினைக்கும் மக்களுக்கும் ஒரு கொட்டு வைக்க தான் வேணும்.

ஏதோ crime novel படிக்கற மாதிரி இருக்கு. சாலாக்கு இது தான் விதியா எப்படியாவது ஒரு நிரந்தரமான நேர்மறை மாற்றம் அவ வாழ்க்கையில் வராதான்னு ஒரு குடைச்சல் மனதுக்குள் வருது. (கதை படித்து முடித்த பின்னரும் இதே எண்ணம் தான் ஓடுது )
அது அப்படி இல்லை. எவ்வளவு மோசமான அப்பா அம்மா வாக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து இருந்தால் தான் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள். அது பிள்ளைகளின் சைக்காலஜி.
 
அது அப்படி இல்லை. எவ்வளவு மோசமான அப்பா அம்மா வாக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து இருந்தால் தான் பிள்ளைகள் பாதுகாப்பாக உணர்வார்கள். அது பிள்ளைகளின் சைக்காலஜி.
I agree. குழந்தைகளோட psycology அப்படி தான் இருக்கும். ஆனால் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலா வாழ்நாள் முழுவதும் மௌனக்கண்ணீர் வடிச்சுட்டு இருக்கணுமா?
அவ பிரகாஷை divorce செய்தாளோ /பிரிந்து தனி வீடு போனதாலோ குடும்ப அமைப்பு சிதறிடுச்சு என்று அம்மா மேல பழி சுமத்தக்கூடாது. அப்பா ஒழுக்கம் தவறிட்டார். நம்மளை பத்தி நினைக்கலை அதனால நம்ம குடும்பமா ஒன்னா இருக்க முடியலை. அம்மாவால இப்படிப்பட்ட நிலையிலும் அப்பா கூட சேர்ந்து இருக்க முடியாதுன்னு புரிந்து கொள்ளும் அளவுக்கு அஞ்சுக்கு வயசு இருக்கோ இல்லையோ அஜய்க்கு இருக்கு. இன்னிக்கு அவங்க இருவருக்கும் விவாகரத்தானா கூட அஜய் மேஜர் ஆகி இருப்பான். So அவனோட முடிவை அவனே எடுக்க முடியும்.
ஒன்னும் தெரியாத குழந்தை இல்லை அவன். பெத்தவங்க தப்பு செஞ்சா அது பிள்ளைங்க தலையில தான் விடியும். சாலா தன்னாளான அளவுக்கு குழந்தைகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க தான் செய்யறா. இதுக்கு மேலும் அவளோட idealness exploit பண்ணக்கூடாது என்னும் maturity கண்டிப்பா அஜய் கிட்ட இருக்கணும். He should understand the true prakash hiding behind the mask of affection and pampering.

அவன் சொன்னா ஓரளவுக்கு அஞ்சுவும் புரிந்து இருப்பா. Though not whole heartedly
 
Top