Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 25

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 25



பைல் சைன் பண்ணிட்டியா வாசு என்று சொல்லி உள்ளே நுழைந்தான் மனோ ,ம் முடிச்சிட்டேன்.

மித்ரா வந்துட்டாள வாசு,

வந்துருப்பா , என்னடா இவ்வளவு சோகமா சொல்லற.

உனக்கு என்னடா தெரியும் என் பிலிங்க்ஸ்

ஆமாம் அங்க ஓண்ணுமே நடக்கல, இதுக்கே உனக்கு பிலிங்க்ஸ்..

ஏன் நடக்கல எல்லாம் நடந்துச்சு.

ம்ம் சொல்லி வெட்கப்பட்டு சிரித்தான் வாசு.

டேய் மச்சான் என்னடா வெட்கம் எல்லாம் படற, அதான் தங்கச்சி கோபப்படுது. எப்படா

அது அன்னிக்கு பர்த்டே வந்துச்சில்ல.

ஆறு மாசத்துக்கு முன்னாடிதான பர்த்டே வந்தது. பார்ட்டி கூட வச்சியே.

இப்ப வந்ததுடா பிப்டின் டேஸ் முன்னாடி, அதான்டா சிலுக்கு போட்ட பிட்டு , அப்பதான்டா ஃபர்ஸ்ட் நைட் நடந்தது.

அடப்பாவி பர்த்டே கூட பொய்யா-மனோ.

டேய் இரண்டு நாள்தான் நடந்துச்சு, அதுக்குள் சண்ட போட்டு போயிட்டா , இந்த நிமிஷம் நான் அவள வெறுக்கிறேன்.ஆனா அடுத்த நிமிஷம் நான் லவ் பண்ணறேன். ஐ மிஸ் ஹர் சோ மச்.

மச்சான் நீ ஏன் இப்படி லூஸ் மாதிரி பேசற இப்பதான்டா புரியுது. ருசி கண்ட பூணை என்ன பண்னும்.

ஆமாண்டா மனோ, சாப்பிட புடிக்கல ஆனா பசிக்குது, தூக்க வர மாட்டது மித்ரா ஞாபகமே இருக்கு, இதுக்கு பெயரு லவ் சிம்டம்ஸ்ஸா.

நீ என்ன சின்ன பையனாடா , லவ் எல்லாம் முடிஞ்சிடிச்சு உனக்கு , இது வேற,

என்னடா இது ஏதாவது நோயா.

இதுக்கு பேரு பசலை நோய்,

என்னது பசலை

ஆமான்டா தமிழ்ல படிக்கல, அதுக்குதான்டா தமிழ் மொழி பாடமா எடுக்கனும் , நீ தான் ஹிந்தி எடுத்த.

அப்படின்னா என்ன சொல்லுடா.

தலைவி தலைவனை பிரிந்து வாடும்போது அவங்க ஓருத்தரை ஓருத்தர் நினைச்சு வாழ்வாங்க ,அப்பதான் சாப்பிடாம,தூங்காம மெலிச்சிடுவாங்க அதை தான் பசலை நோயினு எங்க தமிழ் டீச்சர் சொன்னாங்கடா. எங்க கிளாஸே தூங்காம கவனிப்போம்.

டேய் இந்த பசலை நோய்க்கு டிரிட்மண்ட் என்ன.

ஊடலும், கூடலும் தான்டா.

அப்படின்னா, சண்டை போட்டு பிறகு ஓண்ணா சேரது.

அப்ப அது பண்ணா போயிடும்மா இந்த நோய்,

அந்த மேட்டர்லே இரு,

ரொம்ப ரிஸ்க்டா, நான்தான் பார்க்க மாட்டேன் சொல்லிட்டேனே அவகிட்ட.

டேய் மனோ , இந்த நோய் அவளுக்கும் இருக்குமில்ல.

யெஸ் அப்கோர்ஸ்

அப்ப நாம்ம போய் மித்ராவை பார்க்கலாம்டா- வாசு

நீ போய் பாரு நான் வரல,மொரைக்காதே புருஷன்தான் தனியா போனுமா தமிழ் வரலாறு சொல்லுது.

மித்ரா அவள் வீட்டுக்குள் நுழைத்தாள்,மணி ஓடி வந்தது. சின்னா மணி என்னடா இவ்வளவு பெரிசா இருக்கான் பயமா இருக்கு.

அக்கா அவன எப்படி கொஞ்சுவ நீ, அத பார்த்து டென்ஷனாயி உன் புருஷன் அசால்டா எட்டி உதைப்பான் மணிய.

மித்ரா மணிய தடவி விட்டாள், மாட்டியிருந்த ஊஞ்சலை பார்த்தாள்,அழகான வேலைபாடு செய்யப்பட்டிருந்தது. வாசு அவள் மடியில் படுத்திருந்தை நினைத்திருந்தாள் , பெட் ரும் செல்ல விரும்பவில்லை. சாப்பிட்டுவிட்டு தூங்க ரூமிற்கு சென்றாள்.

ரூமை திறந்தவுடன் வாசுவின் வாசனை, கம்போர்டை திறந்து பார்த்தாள் , வாசுவின் டிரஸ், மித்ராவின் உடைகள் ஒரு பக்கம் அழகாக அடுக்கப்பட்டிருந்தது. எல்லாம் விலை உயர்ந்த ஆடைகள். வாசுவின் டிரஸை தடவி பார்த்தாள்.

பெட்டில் படுத்தாள், தலையனையை தடவி வாசு என்று அழுதாள்.

மணி 11 மித்ராவை பார்க்க வந்தான், ஏ மணி எப்படிடா இருக்க, மணி அவன்மீது ஏறி நின்னது.மாமா சீக்கீரம் வா அக்கா எழுந்திடபோறா.

வரேன்டா,

மாமா என்று கட்டிக்கொண்டான். அக்கா சாப்பிட்டாளடா,

ம்ம் நீங்க, இல்ல பசிக்கல ,நீ தூங்கு நான் ஜன்னல் வழியா பார்த்துட்டு போறேன்.

ஜன்னலை லைட்டா திறந்தான், வாசு சட்டையை பார்த்து பேசிக்கொண்டிருந்தாள் மித்ரா. வாசு எனக்கு ஏன்டா கண் ஆபரேஷன் பண்ணி வச்ச, குருடா இருக்க சொல்ல உன்னோட சந்தோஷமா இருந்தேனே. அவன் சட்டை மேல் படுத்து அழுதாள். கண்னை முடினால் தேன்மிட்டாயின்னு கூப்பிடுற மாதிரி இருக்குடா. தலையனை அடியிலிருந்து வாசுவின் அர்ணாகயிறு எடுத்தாள்.

அடிப்பாவி நீ தான் வச்சிருக்கீயா கேடி.

செயினில் முத்தமிட்டால், வாசு என் மனசு உன்ன ஏத்துக்க மாட்டுங்குதே ,வாழவே பிடிக்கலை . நீ கொடுத்த முத்ததின் ஈரம் கூட காயல, உன்ன வேணா சொல்லிட்டேன் இல்ல , நான் பாவி உன்கூட வாழ கொடுத்து வைக்கவில்லை.

உள்ளே சென்று அவளை அனைத்துக் கொள்ள தோன்றியது , மனத்தில் ஒரு மகிழ்ச்சி என்னை வெறுக்கல , எனக்கு வந்ததுபோல உனக்கும் பசலை நோய் கூடனா சரியா போயிடும்டி அழாதேடி என்ற தனக்குள் சொல்லிக்கொண்டான் வாசு.

அடுத்த நாள் காலையில் மித்ரா எழுந்து தோட்டத்திலுள்ள ஜிம்மின் அருகில் உட்கார்ந்தாள். அக்கா இந்தா காபி ,காபியை மித்ராவிடம் கொடுத்தான் சின்னா. இப்ப சொல்லுடா என்ன நடந்ததுன்னு..

ஆக்ஸிடன்ட் ஆன அப்போ கால்ல பிராக்சர் , வாசுதான் என்னை பார்த்துப்பான், வாசு மாமான்னு கூப்பிடுவேன். அவன் கூட பெட்டூல படுத்துப்பேன். அவனுக்கு நான்னா ரொம்ப புடிக்கும். சின்னான்னு ஆசையா கூப்பிடுவான்க்கா.

நாங்க எல்லாம் மும்பாயில இருந்தோம், மூனு வருஷம் முன்னாடி நான் உன்ன பார்க்கனும் அடம்பிடிச்சேன், பார்வதியம்மா இங்க பிடிக்கல நாங்க சென்னையில பாட்டிக்கூட இருக்க போறோம் வாசுகிட்ட சொன்னாங்க. இங்க நம்ம ஆபிஸ் இருக்குதால பாரும்மாவ ஆபிஸ பார்த்துக்க அனுப்பிச்சான். என்னை இங்க தெரிஞ்ச கான்வென்ட்ல சேர்த்தாரு. பாரும்மா வேலைக்கு இங்க சேர்ந்தாங்க, நான் கடைப்பையனா சேர்ந்தேன்.
 
Top