கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதைக்களம் எதிர்பாராத பல திருப்புமுனைகளுடன் நகர்ந்து விறுவிறுப்புடனும், சுவாரஸ்யத்துடனும் மனதை கவர்ந்தது





.
தேவசேனாபதி :
எதையும் சிந்தித்து பொறுமையாக இலக்கை அடையும் வெறியும் விவேகமும் நிறைந்த நல்ல ஆண் மகன். தன் லட்சியத்தை அடைய தடையாக இருந்த அற்பர்களை மண்ணைக்கவ்வ வைத்து வெற்றி வாகை சூடி காவல்துறையில் தன்னை நம்பிக்கை நட்சத்திரமாக்கி மிளிர்ந்தான். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து உடைந்து போனாலும் தன்னை போற்றி வளர்த்த அன்னை தந்தையருக்கு உண்மையான மைந்தனாய் தன் நிலையில் இருந்து மாறாது அவர்களையும் அரவணைத்து நின்ற இவனது பாங்கு அழகு.
ஐரிஸ் மயூரி:
தன்னை சுற்றியுள்ள புதிரான வாழ்க்கையையும் தனிமையும் வெறுத்து உண்மையான அன்புக்காக ஏங்கி தவித்த அழகு நங்கை. தாய், தந்தை பற்றின உண்மையான விடயங்களை அறிந்த பின் இவள் தவித்து துடித்த நிகழ்வுகள் மனதில் வலியை கொடுத்தது 
.அனைத்திற்கும் மேலாக தன் ஒரே நம்பிக்கையான தாத்தாவும் பொய்த்து போனதை அறிந்து கதறியவை எல்லாம் கொடுமை. அழகு, கல்வி, செல்வச்செழிப்பு என அனைத்தும் இருந்தாலும் உறவுகள் அனைவரும் பொய்த்து இவளை நிற்கதியாக்கினர்.
தேவசேனா
தேவா
மழலையாய் தன்னை நாடி வந்த தேவதை மீது உருவான நேசத்தை விருஷமாய் இதயத்தில் வளர செய்து மங்கையாய் அகம் உணர்ந்து உயிர் உருகி தன் கரம் சேர்ந்தவளுடன் உயிரின் அழத்தில் சேர்த்தனைத்து எல்லையில்லா காதலுடன் சிறப்புடன் வாழ்வது அழகு 



.












மயூரி
தன் மீது உயிர் நேசத்தை செலுத்தி தான் ஏங்கி தவித்த அன்பையும், பாதுகாப்பையும் கொடுத்து தன் அனைத்து ரகசியங்கள் அறிந்தும் மேலும் உயிர் காதலை செலுத்தும் தன்னவனின் உயிர் சுவாசத்தில் நிறைந்து தீரா காதலுடன் வாழ்வது அழகு 




.
இருவரும் என்றும் இதே உயிர் காதலுடன் தங்கள் அன்பு முத்துக்கள் மூவருடன் வாசம் நிறைந்த மலர்களாய் மணம் வீச வாழ்த்துக்கள் 





.












கந்தசாமி -பவுனு உண்மையில் போற்றக்கூடிய நடமாடும் தெய்வங்கள்
. தங்கள் துயரை துடைக்க வந்த பிள்ளையை அனைத்திலும் முன்னிறுத்தி மாறாத பாசத்தை கொடுத்து வளர்த்து இன்று சமூகத்தில் உயர்ந்த பண்புள்ள மனிதனாய் தலை மகனாய் உயர்த்தி வாழவைத்து மனதை நெகிழவைத்தனர்.
கோசலை : தம் மக்களை அனைத்து வழியிலும் வழிநடத்தி உறுதுணையாக இருந்து முதியவராய் தன் கடமையை அழகாக நிறைவேற்றினார் 
.
ஒஸ்கர் :உண்மையில் என்ன சொல்ல இவரது பிம்பம் பொய் பிம்பமாய் மாறியபோது உண்மையில் ஜீரணிக்க இயலவில்லை 



.தன் மகளுக்காக அனைத்து செயல்களையும் பார்த்து பார்த்து செய்த இவர் தன்னையே நம்பி வாழும் ஜீவனை ஜீவனின்றி கதற வைத்த போது இவர் மீது மரியாதை முற்றிலும் குறைந்துவிட்டது. உயிர் மூச்சு அடங்கும் சமயத்தில் மனம் வருந்தி இவர் கலங்கினாலும் ஏனோ மனது அனுதாபங்கள் கொள்ளவில்லை.
கனகம் :எவ்வளவு வஞ்சகம், சூழ்ச்சி., அனைத்து சூனியக்கார வேலையும் செய்து தன் நலனை மட்டுமே விரும்பி செய்த பாதக செயல்கள் அனைத்திற்கும் பிரதி பலனாய் விதி நல்ல மக்களையும் கொடுக்கவில்லை, மருமகன்களையும் கொடுக்கவில்லை






.
கார்த்திகா :



.
பிரபு : நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையில்லாத காட்டெருமை 

.
மிராண்டா: ஒன்றும் சொல்வதற்கு இல்லை.... குறைந்த பட்ச மனிதாபிமானம் கூடவா பெற்றெடுத்த பெண் மீது இருக்காது 

, தன் நலத்தை மட்டுமே கொண்ட சுயநலம் மிக்க இவர் மயூரி வாழ்க்கையை பணயம் வைக்க துணிவது எல்லாம் இவர் மீது வெறுப்பின் உச்ச நிலையை கொடுத்தது.
ராஜப்பன் :கொடூரத்தின் உச்சம்.

ராஜேந்திரன் :பட்டும், கெட்டும் திருந்திய மகா பிரபு
.
தெய்வானை :



ராஜலக்ஷ்மி -முத்துவேல்
ராஜலக்ஷ்மி மறுவாழ்வில் வரமானவர் முத்துவேல் 
வீரய்யா:மனிதம் உணர்ந்து வாழும் மனிதர். 



பூஜா -வினோத் 


சக்தி -மோனிகா 


பூர்விகா, ராகவி 



.
தேவசேனாபதி தன் தந்தைக்கு நிகழ்ந்த அநீதிக்கு தக்க நடவடிக்கை எடுத்து நீதியை பெற்ற நிகழ்வுகள் 

.
எழுத்தாளர் அவர்களே : நீங்கள் அங்கங்கே தூக்கிட்டு வந்து போட்ட குண்டு மழையில் இருந்து தெளிவதற்குள் கதையே முடிந்து விட்டது... 


ஆனால் கதையின் நிறைவு மகிழ்ச்சியை கொடுத்தது

.
@oviya silaye போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி 








.
Last edited: