அவன் அவனுக்கு பிடிச்ச தொழிலை செய்யுறான் இதுல இவங்க குடும்பத்துக்கு என்ன கௌரவ குறைச்சல் வீட்டு டைனிங் டேபிள்ல இவனுக்கு மட்டுமே இடம் இல்லை புருஷனுக்கு பயந்து தான் சின்ன மகனுக்கு சாப்பாடு கொடுப்பாங்களாம்
வசந்தன் அவன் என்னோவோ ஒண்ணுமே இல்லாம சும்மா இருக்குற மாதிரி பேசறீங்க ஏதோ ஒரு வேலை இருக்கு அயதுவும் சொந்தமா அப்புறம் என்ன... கால நேரம்.கூடி வந்தா நல்லா வருவான்...
யோவ் வசந்தன், என்ன பெரிய தொழிலதிபர்ன்னு கிண்டல் பண்றீங்க... பெருசோ சிறுசோ யார்கிட்டேயும் கை நீட்டாம, சொந்த கால்ல நிக்குறானே.. அதுக்கே அவனை பாராட்டலாம்...
டேய் சந்திரா, இப்ப எதுக்கு உனக்காக வெயில்ல கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு சோறு கொண்டு வந்த பிள்ளைக்கிட்ட கோவத்தை காட்டுற... இந்தாம்மா நந்தினி, சட்டு புட்டுன்னு மாமனுக்கு சோத்தை எடுத்து ஊட்டி விடு...