Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் -அத்தியாயம்-7

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே


அத்தியாயம் - 7


சுபி கவின், வருகிறானா என்று கூட பார்க்காமல் அவள் மட்டும் விடுவிடுவென்று நடந்து வீட்டிற்கு வந்து விட்டாள்.


நேரே வீட்டிற்கு வந்தவள், ஹாலில் அமர்ந்திருந்த நவீனையும், நீரஜாவையும் கவனிக்காமல் கிச்சனுக்குள் நுழைந்தாள்.


அம்மா என்று அழைத்தவள், அங்கு காஃபி போட்டுக் கொண்டிருந்த பார்வதியின் தோளில் சாய்ந்தாள், மா நானும் அத்தானும் நைட்டே ஆர்த்திகாவுக்கு முடியவில்லை என்று கிளம்பி வந்துட்டோம் என்றவள் …


ஏதோ கேட்க வந்த பார்வதியை பேச விடாமல் , மா எனக்கு இரண்டு நாளாக சரியாக தூங்காதது ரொம்பவே டயர்டாக இருக்கு நான் போய் தூங்கேறேன் மா, அப்புறமா எல்லாம் சொல்லுறேன் என்றவள், பார்வதி போட்டு வைத்திருந்த காஃபியை பார்த்தவள் இது யாருக்கு மா என கேள்வி கேட்டு விட்டு பதிலை எதிர்பார்க்காமல் நான் எடுத்துக்கிறேன், நீ வேற போட்டுக்கோ மா

என்று விட்டு மாடிக்கு காஃபி கப்புடன் சென்றுவிட்டாள்..


அவள் சென்ற அடுத்த நொடி, உள்ளே நுழைந்த கவினும் யாரையும் கவனிக்காமல் அத்தை என்று கூறி கொண்டே கிச்சனுக்குள் நுழைய முயல… அதற்குள் வேகமாக சென்று நவீன் அவனைத் தடுத்தான்.


என்னடா இங்கு நடக்குது… இப்போ தான் சுபி வந்தா, இங்கு உட்கார்ந்து இருந்த எங்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல், அவள் பாட்டுக்கு கிட்சனுக்கு சென்றாள். பிறகு மாடிக்கு சென்று விட்டாள்.


இப்போ என்னவென்றால் நீயும் அதையே பண்ணுற என நவீன் வினவ….


அது ஒன்னும் இல்லை நவீன்… ஆர்த்திகா வீட்டுக்கு பிருந்தாவ கூட்டிட்டு போனோம். அவ மெடிசின் எல்லாம் கொடுத்தாள், பிறகு கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தோம். கதவு திறக்க ஆள் இல்லாமல் பீச்சுக்கு சென்றோம். அங்கு ஒரு சின்ன பிரச்சினை என நடந்த அனைத்தையும் கூறினான்.


அங்கு இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பார்வதி, என் பொண்ணுக்கு என்றைக்கு தான் விடிவு காலம் பிறக்கும் எனத் தெரியவில்லை என்று

புலம்பிக் கொண்டே தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.


ஏம்மா இப்படி ஏதாவது புலம்பிக் கொண்டே இருக்கிற… அவள் மீண்டு வருவா மா….

நீ அழுது உன் உடம்பை கெடுத்துக்காத மா, என நீரஜா சமாதானம் செய்ய...


போடி, நீங்கள் ஆசைப்பட்டதெல்லாம் செய்து கொடுக்கும் போது, நீங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை நாங்கள் அமைத்து தரமாட்டோமா, எங்கள் மேல் நம்பிக்கை இல்லையா, நீங்கள் செய்த தவறால் இப்போ எவ்வளவு பிரச்சினை பார்த்தியா சுபிக்கு என பார்வதி வருத்தப்பட….


ஏதோ கூற வந்த நீரஜாவை, கண்களால் வேண்டாம் என்று தடுத்து விட்டு, கவின் அத்தை என்று அழைத்தவன் , பழைய விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்…

சுபிக்கு பிடிக்காது, என்று கூறி விட்டு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.


மாமா எங்க அத்தை, வாக்கிங் போயிட்டு வந்துட்டாரா? என நவின் பேச்சை மாற்ற….


இப்போ வரும் நேரம் தான், நீங்கள் பேசிட்டு இருங்க நான். காஃபி போட்டுக் கொண்டு வரேன். உங்களுக்கு போட்ட காஃபியை தான் அவ தூக்கிக் கொண்டு போய் விட்டாள், என்ன பொண்ணோ என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள் பார்வதி.


சுபியின் செய்கையை நினைத்து மூவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது…


ஓய், என்ன உன் தங்கை, என் காஃபியை எடுத்துக் கொண்டு போய் விட்டாள், என்று சொன்னால் உனக்கு இவ்வளவு சந்தோஷமா…. இது தான் வீட்டு மாப்பிள்ளையை கவனிக்கிற அழகா என கவின் கிண்டலடிக்க…


ச்சே, ச்சே உங்களுக்கு போட்ட காஃபி என்று சுபிக்கு தெரியாதுங்க, தெரிஞ்சா அவள் எடுத்துட்டு எல்லாம் போகமாட்டா, என நீரஜா கூறிக் கொண்டே இருக்கும் போதே, கவினும், நவீனும் அவளை சந்தேகமாக பார்க்க….


நீரஜாவோ மீண்டும் தொடர்ந்தாள், உங்களுக்கு என்று தெரிந்தால் அவளே ஸ்பெஷலா காஃபில மிளகாய்த்தூள் கலந்து எடுத்து வந்து கொடுத்துருப்பா, என்று கூறியவள் நவீனின் முகம் போன போக்கை பார்த்து கலகலவென சிரித்தவள்….

நான் போய் அம்மாவுக்கு உதவி செய்கிறேன் என்று விட்டு கிச்சனுக்கு ஓடி விட்டாள்.


கவினோ அடக்க முடியாமல் நகைக்க…

என்ன தம்பி என்னை பார்த்து ரொம்ப சிரிக்கிறீங்க, சிரிங்க, சிரிங்க எத்தனை நாள் என்று பார்ப்போம், என்றவன்.


காலம் பூரா அடிமையாக இருக்க அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க போற, அப்போ உன்னை சுபி வச்சு செய்யப் போறா, நான் பார்க்கத்தானே போறேன், அந்த சுபியின் ஆட்டத்தை என்று கூறி கவினை கலாய்க்க…


சுபியின் ஆட்டத்தைப் பார்க்கத்தான் நான் காத்துக் கொண்டிருக்கேன். நீ போய் உன் வேலையை பாருடா அண்ணா என்றவன், தொடர்ந்து அவளை எப்படி சமாளிக்கணும் என்று எனக்கு தெரியும் என்று கவின் கூற..


எப்படி சமாளிப்படா தம்பி, காலில் விழுந்தா, இல்லை தோப்புக்கரணம் போட்டா என்று நவீன் கவினை வாறா….


டேய் அண்ணா, நீ இப்படி தான் சமாளிக்கிறியா, என அவன் போட்ட பந்தை அவனுக்கே திருப்பி விட்டு நக்கலாக சிரித்தான் கவின்.



இவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும்போதே, ஈஸ்வரனும் வந்து விட்டார்.


என்னப்பா, என்ன ஜோக் என்று சொன்னால், நானும் உங்கள் ஜோதியில் ஐக்கியம் ஆவேனே, என ஈஸ்வரன் வினவ….


ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா, என இருவரும் பதறிக்கொண்டு கூறினர். சும்மா பேசிக்கொண்டிருந்தோம் மாமா, என நவீன் கூறினான். பின்னே அவரது இளைய மகளை தான் கிண்டல் செய்து கொண்டிருந்தோம் என்று சொன்னால் அவ்வளவு தான்….

இருவர் காதிலும் ரத்தம் வரவைத்து விட்டு தான் விடுவார். தங்கை மகன்கள் என்று இருவர் மேலும் ரொம்ப பிரியம்…. ஆனால்

சின்ன மகள் என்றால் ரொம்ப ஸ்பெஷல் , அப்புறம் இவர்களை சும்மா விட மாட்டார். அதான் இவர்கள் பேச்சை மாற்ற முயற்சித்தனர். இவர்களை காப்பாற்றவென பார்வதியும், ஒரு வழியாக காஃபி ட்ரேயுடன் வந்தார்.

நீரஜா, ப்ரட் டோஸ்ட் செய்து எடுத்து வந்தாள்.

கவினிடம் ஒரு ப்ளேட்டை கொடுத்தவள், இரவு கண் விழித்தது பசிக்கும் இதை இப்போ லைட்டா சாப்பிடுங்க, பிறகு குளிச்சிட்டு டிபன் சாப்பிடலாம் என்றவள், மற்றவர்களுக்கும் எடுத்து கொடுத்தாள்…


கொஞ்சம் நேரம் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு மூவரும் வீட்டிற்கு கிளம்ப, எத்தனிக்க பார்வதியும், ஈஸ்வரனும் சாப்பிட வற்புறுத்த…. கவினும், நவினும் மறுத்து விட்டனர். அம்மாகிட்டே நாங்கள் வந்துட்டோம் என்று சொல்லிட்டோம், அவங்க சாப்பிடாமல் காத்திருப்பாங்க…. நாங்கள் கிளம்புறோம் அத்தை, மாமா எனக் கூறியவர்கள்… சுபியிடமும் கூறிவிடுமாறு சொல்லிவிட்டு, நீரஜாவையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.



************************

இவர்கள் கார் உள்ளே நுழையும் போதே, தீப்தியின் கீச்சுக் குரல் வெளியே வரை கேட்டது.


உள்ளே இவர்கள் நுழைந்தவுடன், தீப்தி ஓடி வந்து ஹாய் மச்சான்ஸ் , நல்லா என்ஜாய் பண்ணீங்களா, என்னை உங்க ப்ரண்டோடு துரத்தி விட்டு நல்லா ஜாலியாக இருக்கலாம் என்று நினைச்சிங்களா, கடவுள் இருக்காரு குமாரு என்று கூறி விட்டு கவின் தோளில் தொங்கினாள். கவினோ தலையில் குட்டு ஒன்று வைத்தான் . லூசு மாதிரி பிகேவ் பண்ணாதடா என்றவன் , நீரஜா எங்கே என்று தேடினான்…. அவள் வேறு இதைக் கேட்டு வருத்தப்படுவாள் என்று பார்க்க… அவளோ இவளைப் பார்த்தவுடன் வா என்றவள், பிறகு தன் அத்தையை தேடி உள்ளே சென்று விட்டாள்...



அவள் அங்கு இல்லை என்றவுடன் அப்பாடா தப்பிச்சோம் என்று இருவரும் பெருமூச்சு விட்டு கொண்டனர்.

நவீன் அத்தான் பயந்தா ஏதாவது லாஜிக் இருக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க என கவினைப் பார்த்து கேட்டவள். அப்புறம் நான் லூசா, நீங்கள் தான் அத்தான் லூசு அந்த அரைவேக்காட்டோடு, என்னை கோர்த்து விட்டுட்டு

நான் பட்ட பாடு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.


இதில் இந்த சுபி வேற, விஷால் லூசோட சேர்த்து வைத்து பேசி காமெடி பண்ணது தெரியுமா என்றாள்.


கவினும், நவினும் அப்போ அரைவேக்காடு, லூசு என்று சொன்னதெல்லாம் விஷாலையா என வினவ …

ஆமாம் , அதுல டவுட் வேற வருதா உங்களுக்கு என்றவள்….

உங்க கிட்ட சண்டை போட தான், காலேஜை கட் அடித்துவிட்டு வந்தேன் கவின் அத்தான்…


பார்ட்டிக்கு வர மாட்டேன் என்றவளை வலுக்கட்டாயமாக வரச் சொல்லி விட்டு, இப்படி தான் அனுப்புவாங்களா, என சண்டையிட்டாள்.


அது இல்லை தீப்ஸ், நீ வந்தால் தான் சுபி, கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பா அதான் வரச்சொன்னேன்.


நீ ஹாஸ்டலுக்கு நைட் போகவில்லை என்றால் வீட்டுக்கு மெசேஜ் போய்டும். அத்தை, மாமா என்னை தான் கேள்வி கேட்பாங்க அதனால் தான் அவனோட அனுப்பினேன். அவன் ரொம்ப நல்லவன் டா , என்றான் கவின். நீங்கள் தான் மெச்சிக்கனும் என முணுமுணுத்தாள் தீப்தி.


இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட , அங்கிருந்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


முதல் நபர் நவீன்… மனதிற்குள் அடப்பாவி என நினைத்துக் கொண்டான். என்னமோ, எதிர்பாராமல் சந்தித்த மாதிரி இருவரும் எப்படி நடித்துக் கொண்டனர். அதிலும் அந்த தீப்தி எப்படி என் கிட்ட இருந்து விவரம் தெரிந்த மாதிரி காண்பித்து என்னை டென்ஷனாக்கினாள்,என மனதிற்குள் அவளை திட்டிக் கொண்டிருந்தான்.


அடுத்த நபர் நீரஜா, கவினுக்கு சுபி மேல் இவ்வளவு ப்ரியமா, இது நாள் வரை கவின் வெளியே காண்பித்ததே இல்லையே என மனதிற்குள் சிலாகித்துக் கொண்டாள்.


அடுத்த நபரோ விஷால், நான் என்ன அப்படி ஒரு காமெடி பீஸா…. என் இமேஜ்ஜே டேமஜ் இப்படி பண்ணுறீங்களே மா , என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சோகமாக தலையில் கை

வைத்து கொண்டான்.


பேசிக்கொண்டு இருந்த தீப்தியும், கவினும் நிமிர சுற்றி இருந்த மூவரையும் பார்த்து அவர்களும் அதிர்ந்து நின்றனர்.


பத்மா உள்ளே இருந்து வெளியே வந்தாள்.

சாப்பிட கூப்பிட்டு வா, என்று அனுப்பிய அந்த பொண்ணையும் காணும், அந்த தடியன்களை காணும், வீட்டிற்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது…

எங்கேயாவது அம்மா என்று தேடி வருதுங்களா, என புலம்பிக் கொண்டே வந்தவள்…


அங்கே அதிர்ந்து நின்ற ஐவரையும் பார்த்தவள், என்ன நடக்கிறது இங்கே என்று சத்தம் போட அனைவரும் அசைந்தனர்…




தொடரும்…...
 
Last edited:
Top