என் பாலையின் குளிர் நிலவு நீ ... 33 (final)

Advertisement

நல்ல நிறைவு.

சம்யு baby நிஜமாவே ரியானுக்கு lucky charm தான்.
வெங்கிக்கு சொல்லவே வேண்டாம்.
"நீ வந்தா மட்டும் போதும் (என் வாழ்வில்)"-ங்கிற நிலையில தான் இருக்கான் ஏற்கனவே.

சந்தீப் and மலர்விழி அப்படிப்பட்ட அப்பாவுக்கு மகனாவும் மருமகளாகவும் இருந்தாலும் நல்ல மனசோட ரத்த உறவுக்கான உண்மையான பாசத்தோட ரியானை தாங்கினது தான் ரொம்ப சிறப்பு.

ஆனாலும் இனியா ரியான் and முகுந்த் பெயர்களை north indian பெயர்கள்ன்னு சொல்லி ஒரு secondary feel காமிச்சது ஏத்துக்க முடியலை. ரியான் என்னும் மனுஷன் அவன் அம்மாவோட அடையாளங்கள் கலாச்சாரம் இதையெல்லாம் தன் வரை மட்டுமில்லாமல் தன் சந்திதிகளுக்கும் கடத்தும் உணர்வோடு இருக்கணும் தானே. அவன் ஒரு inter-cultural
life-partners-க்கு பொறந்தவன் தானே. அப்போ அதை மதிப்போட பார்க்கற பக்குவம் இனியாவுக்கு இருக்கணும்.

ராஜா மாதிரி அப்பாவுக்கே இவ்வளவு முக்கியத்துவம் இவ வாழ்க்கையில் இருக்கும் போது அவனோட அன்பான அக்கறையான அம்மாவோட அடையாளங்கள் எப்படி மதிப்புல குறையும்.

பெண்களே பெண்களோட அடையாளங்களை கடத்துவதில் அக்கறை காட்டாமல் இருப்பது தான் sad reality.
மிக்க நன்றி சகோ.. தொடர்ந்து உங்க கருத்துக்களை அழகா பகிர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு..🙏🙏🙏

சம்யுக்தா ங்கற கேரக்டர் சுத்தி தான் கதையே மூவ் ஆகுது.. சோ இந்த கதையோட லக்கி ச்சார்மும் சம்யுக்தா தான்.. அவ துணையா கிடைக்க போற வெங்கி நீ மட்டும் போதுமுன்னு சொல்லாம வேற என்ன சொல்வான்...

சந்தீப் நிஜமாவே பாசமான அண்ணன் தான்.

இனியாவோட தாட் அவன் வடநாட்டு ஸ்டைல் பேரால இல்ல சகோ.. அதை சுறுக்கி கொஞ்ச முடியலன்னு.. அதோட அவனோட செலக்ஷன் கண்டிப்பா அவனோட அம்மா ஸ்டைல்ல இருக்குமுன்னு எதிர்பார்த்தா அவன் அழகான தமிழ் பேர் சொல்லவும் தான் இவ்வளவு அழகா தமிழ்ல செலக்ட் பண்ணறீங்கன்னு கேட்கறா..

ரியானோட இப்போதைய செலக்ஷன் பார்க்கறவ அப்ப முகுந்த் ன்னு எப்படி வச்சான்னு நினைப்பா தானே..

அதோட அவன் பிறந்தது அங்கே.. ஆனா அவன் வளர்ப்பு.. வாழ்வு எல்லாமே அவனோட தமிழ் கலாச்சாரத்தை கொண்டு தான்.. இல்லைன்னா அவன் பிருந்தாவை ஏன் கல்யாணம் பண்ணனும்.

அங்கே அவனோட அம்மா தேர்ந்தெடுத்திருக்க மாட்டாங்களா..

உண்மையா சொல்லனுமுன்னா என் மகன் பேர் வடநாட்டுல பேமஸ்.. அவனுக்கு வச்சதுமே இதை என்கிட்ட கேட்காத ஆளில்லை.. பேர் வைக்கறதுல எந்த பாகுபாடும் கிடையாது தானே சகோ.. அதை அவங்க எடுத்துக்கற விதத்துல இருக்குன்னு நினைக்கிறேன்..

அழகான கருத்து பகிர்விக்கு மீண்டும் நன்றி.. 🥰🥰🥰
 
Lovely story congrats ma
அழகான குடும்பம் நிறைவான வாழ்க்கை
சம்யுவின் குறும்பை மறக்க முடியாது நல்ல ஜோடி வெங்கி.
ரியான் இனியாள் பட்ட துயரமெல்லாம் மறக்க கிடைத்த காதலான ஜோடி.
வெண்பா முகுந்த் அழகு. சூப்பர்மா :love: :love: :love: :love: :love:
மிக்க நன்றி சிஸ்.. ஒவ்வொரு பதிவுக்கும் உங்க கருத்தை மறக்காம சொல்லி ஊக்கபடுத்தியதற்கு.. 💖💖💖🙏
 
சம்யுக்தா வெங்கிக்கு தனியா எழும் ஐடியா இருக்கு சிஸ்.. பட் அது உடனடியா கிடையாது. கொஞ்சம் எழுதி வச்சிருக்கேன்..😃 பட் அது முழுசா முடுச்சிட்டா தான் போடறதா இல்லையான்னு முடிவே பண்ணனும்.🙄 கதை எனக்கு முதல்ல பிடிக்கனும் .. இங்கே அதான் பெரிய சிக்கலே.. என்னை சேட்டிஸ்ஃபை பண்ணலன்னா அதை போட மாட்டேன்.😔😔😔

கதையை படித்து உங்க கருத்தை அழகா சொல்லி ஊக்கப்படுத்தியதற்கு நான் தான் நன்றி சொல்லனும் சிஸ்..

தேங்க்ஸ் ஏ லாட்..❣️❣️❣️❣️
சம்யு கதையை கண்டிப்பாக கொடுங்க. 💞💞💞💞💞
 

Advertisement

Advertisement

Back
Top