Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 11

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 11

நடந்ததை கேள்விப்பட்டதில் இருந்து பாதர் ஆப்ரஹாம் மனம் மேலும் கவலை கொள்ள ஆரம்பித்தது.

தான் இருக்கும் வரையிலும் கனலியை கவனித்துக் கொள்ள முடியும், அவருக்குப்பின் கனலிக்கு என்ன நடக்குமோ என்ற எண்ணமே அவரை வதைக்க ஆரம்பித்தது.

அவருக்கு ஏற்கனவே ஒரு முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இருந்தது, இந்த நிலையில் தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் கனலி பொறுப்பை ஏற்க யாரும் முன் வரப்போவதில்லை என்ற உண்மையும், பிணம் தின்னி கழுகுகளாக மாறிய உறவுகள் அவளை நிம்மதியாக வாழ விடாது என்ற உண்மையும் அவர் உடல்நிலை மேலும் மோசமடைய செய்தது.

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதுபோல ஃபாதர் ஆபிரகாம் இறைவனிடம் சரண் அடைந்தார்.

வழக்கம் பாேல இரவு ஜெபம் முடிந்து எழுந்தவர் கண்களில் பட்டது விஸ்வஜித் தன்னிடம் தந்து விட்டு சென்ற அந்த சிறு பெட்டி.

அதை எடுத்துப் பார்த்த அவரின் விழிகளில் முதலில் பட்டது அவன் அவன் தற்போது இருக்கும் அமெரிக்க முகவரி.

தங்கள் கருணை இல்லத்திற்கு உதவும் நபரொருவர் தற்பொழுது விஷ்வா இருக்கும் இடத்தின் அருகிலேயே இருப்பது அவருக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.

உடனே அவரை தொடர்புகொண்டு விஸ்வா பற்றி விசாரிக்க கூற அவரும் விசாரித்து கூறியதில் கிடைத்த தகவல் அனைத்தும் திருப்தியாகவே இருந்தது.

மேலும் நாட்களை வீணடிக்க விரும்பாத ஆபிரஹாம் உடனே அவரை தொடர்பு கொண்டார்.

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பல வண்ண விளக்குகளால் அந்த பப் இரவு நேரத்திலும் உயிர்புடன் ஒளிர்ந்து கொண்டு இருக்க, அங்கு இருந்த பலரும் தங்கள் துணையுடன் நடனம் ஆடிக்கொண்டும், தங்களுக்குப் பிடித்த மதுவை ருசித்துப் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

கையில் ஒரு குவலையுடன் நடனமாடிக் கொண்டிருந்த விஸ்வாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த்.

தன் ஆட்டத்தை ஒருவழியாக முடித்துக்கொண்டு நண்பனின் அருகில் வந்து அமர்ந்த விஷ்வா

"என்னடா மச்சான் என்ன ஆச்சு? ஒய் ஃபீலிங். எதுக்குடா இப்படி உட்கார்ந்து இருக்க."

"நான் எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கேன்னு உனக்கு தெரியாதா. என்ன நினைச்சுகிட்டு இருக்க உன்னோட மனசுல."

"இவ்வளவு நடந்த பிறகும் என் மனசுல என்ன இருக்குன்னு உனக்கு எப்படிடா சந்தேகம் வரலாம். என்னோட மனசுல என்னோட கனலி மட்டும்தான் இருக்கா." என்றவனின் வார்த்தைகளில் தடுமாற்றம் இருந்தாலும் குரலில் அத்தனை உறுதி இருந்தது.

"டேய் குடிகார புத்தியோடு தான் பேசுறியா. ஆர் யூ கிரேசி ரெண்டு தடவை பார்த்த ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்லுறது உனக்கு காமெடி தெரியலையா."

"ப்ளீஸ் டா இந்த விஷயத்துல நான் யார்கிட்டயும் என்னை ஜஸ்ட்டிஃபை பண்ண விரும்பல. ஐ லவ் கனலி தட்ஸ் ஆல்."

"ஓகே நீ கனலிய லவ் பண்ற பட் அந்த பொண்ணு உன்ன இன்னும் லவ் பண்ணல.
அந்த ஃபாதர் உனக்கு கால் பண்ணதுல இருந்து தலை கால் புரியாம நீ ஆடிக்கிட்டு இருக்கிற.
ஒருவேளை அந்த பொண்ணுக்கு உன்ன பிடிக்கலனா என்ன பண்ணுவ."

"என்ன பொருத்த வரைக்கும் அந்த பாதர் ஒரு கேட் பாஸ் மாதிரிதான், அது கிடைச்சிருச்சு.
அவளை எப்படி லவ் பண்ண வைக்கணும்னு எனக்கு தெரியும்."

"அதுக்காக நீ உன்னுடைய படிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு போக போறேன்னு சொல்றத என்னால ஏத்துக்க முடியாது மச்சான்."

"இந்த படிப்பை என்னால எப்ப வேணாலும் படிக்க முடியும். அப்படியே படிக்க முடியலைன்னா கூட நான் வருத்தப்பட போவது கிடையாது.
பட் கனலி அப்படி இல்லை ஒன்ஸ் அவள நா மிஸ் பண்ணிட்டா லைப் லாங் நான் பீல் பண்ண வேண்டியதா இருக்கும்."

"இது உனக்கே பைத்தியக்காரத்தனமாக தோணலையா."

"எனக்கு இப்போ தோன்றது எல்லாம் என்னுடைய கனலி. அவளுக்காக என்கிட்ட இருக்கிற எல்லாத்தையுமே சாக்ரிஃபைஸ் பண்ண நான் ரெடியா இருக்கேன்."

"ஓகே விஷ்வா இதுதான் உன்னுடைய முடிவுன்ன நான் அதை மாற்ற விரும்பல. பட் நீ எடுக்கிற எந்த ஒரு முடிவாக இருந்தாலும் கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சிட்டு எடு.

இப்போ நீ போயி கனலிய பார்த்துட்டு வா. அதுக்கு அப்புறமா வந்து உன்னுடைய படிப்பை பத்தி யோசிக்கலாம்.
ஒருவேளை கனலி ஓகே சொல்லிட்டா நீ கொஞ்ச நாள் போனிலேயே உன்னுடைய காதல் செடியை நல்ல தண்ணி ஊத்தி வளர்க்கலாம்.

ஆர் கனலியை இங்க கூட்டிகிட்டு வா அமெரிக்காவுல அவளை படிக்க வைக்கிற அளவுக்கு உன்கிட்ட வசதி இருக்கு."

"ஓகே டா நாளைக்கு இந்தியா கிளம்புகிறேன் என்னுடைய கனலியை மீட் பண்ணிடு உனக்கு கால் பண்றேன்."

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

"ப்ளீஸ் டா என்கிட்ட ஒரே ஒரு தடவ அந்த குடுடா." என்று கனலி கெஞ்சிக் கொண்டே இருக்க, அவள் அருகில் நின்ற அந்தச் மூன்று வயது சிறுவனும்

"உனக்கு தரமாட்டேன் போ." என்று கனலிக்கு முதுகு காட்டி நின்று கொண்டு கோவமாக பேச கனலி அவன் முன் சென்று மண்டியிட்டு நின்று

"ப்ளீஸ் நீ இந்த கனலி புஜ்ஜு குட்டி தான. ஒரே ஒரு தடவை அத கொடுடா. நான் பாத்துட்டு பத்திரமா உடனே தந்து விடுவேன்." என்று கெஞ்ச அவனும் சற்றும் மனம் இரங்காமல்

"போன தடவ இப்படித்தான் சொல்லி என்கிட்ட இருந்து டோரிமான் பென்சில் வாங்கிட்டு போன. ஆனால் திருப்பி தரவே இல்ல." என்று அவன் ஞாபக சக்தியை நிரூபிக்க, கனலி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கே அமர்ந்து கொண்டாள்.

"கனலி." என்று பாதர் தன்னை அழைக்கும் குரலில் நிமிர்ந்து

"என்ன அபி எதுக்காக என்ன கூப்பிட்ட."

"நான் கூப்பிட்டது இருக்கட்டும் நீ ஜோசப் கிட்ட என்ன கேட்டுகிட்டு இருந்த." என்று கேட்க அவளோ

"ஜாே இருக்கானே அவன் ரொம்ப மோசம், அவனோட புஜ்ஜீ ஈரைசர் ஒரே ஒரு தடவை தா பாத்துட்டு தரேன்னு தான் சொன்னேன். ஆனா அவ என் கிட்ட தர மாட்டேன்னு சொல்றான்." என்று 18 வயது யுவதி குழந்தைத்தனமாக 3 வயது சிறுவனை பற்றி புகார் செய்ய, அதை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட அபி

"கனலி நீ போன தடவை அவன்கிட்ட வாங்குன டோரிமான் பென்சில் பத்திரமா அவன்கிட்ட நீ திருப்பிக் கொடுத்திருந்தா, இப்போ நீ கேட்ட புஜ்ஜீ ஈரைசர் அவன் உன்கிட்ட தந்திருப்பான்." என்று இம்முறை ஆப்ரஹாம் அவரின் புத்திக்கூர்மையை நிரூபிக்க

"அபி...." என்று சிணுங்கிய கனலில்

"அவனுக்கு மட்டும் அழகழகா ஸ்பைடர்மேன் பென்சில், புஜ்ஜி ஈரைசர் வாங்கிக் கொடுக்கிறாங்க. நீங்க எதுக்கு எனக்கு மட்டும் அப்படி வாங்கி கொடுக்க மாட்டீங்க." என்ற அவள் கேள்விக்கு

"அதுக்கு நீ சின்ன குழந்தையா இருந்திருக்கணும். நான் உன்ன குட்டிமான்னு கூப்பிட்டா நீ ஒன்னும் குழந்தையாக மாட்ட.

நீ வளர்ந்திட்ட கனலி அதை கொஞ்சம் புரிஞ்சிடுச்சுகாே." என்று கூற அதை காதில் வாங்கிக் கொள்ளாமல்

"உன்னால ஜோ ஓடிட்டான், இப்போ எனக்கு அவன் வைத்திருந்த அதே மாதிரி புஜ்ஜி ஈரைசர் வேணும்." என்று அடம்பிடிக்க

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா அடக்க முடியாமல் சிரித்து விட்டான். அவன் சிரிப்பு சத்தத்திலேயே நிமிர்ந்து பார்த்த கனலி, தன் நாக்கை கடித்துக்கொண்டு ஃபாதர் ஆபிரகாமை முறைத்தாள்.ஆனால் அவரோ அதை கண்டுகொள்ளாமல்

"இவருக்கு உன்கிட்ட எதுவும் பேசணுமா, பேசிட்டு என்ன என்னுடைய ரூம்ல வந்து மீட் பண்ணுங்க." என்று கூறிவிட்டு நிற்காமல் சென்றுவிட, கனலி விஷ்வாவை பார்க்காமல் கார்டனில் இருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்தது அமர்ந்துகொண்டான். அவன் தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று கனலி காத்திருக்க அவனோ எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

நேரம் செல்ல செல்ல தன் பொறுமையை முற்றிலும் இழந்த கனலி அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட அவள் கையை பிடித்து தடுத்த விஷ்வா

"நீ என்ன விட்டு போகா முடியாது, நான் அதுக்கு அனுமதிக்க மாட்டேன்."

"நான் ஒன்னும் உன்ன விட்டுப் போகல, நீதான் என்னை விட்டு போயிட்ட. மறுபடி எதுக்காக வந்த."

கனலி தான் சொல்லாமல் சென்றதற்காக கோபப்படுகிறாள் என்ற உணர்வே அவனுக்கு நிம்மதியை தர,

"நீ என்னை தேடினியா கனலி." தன்னை கண்டு காெண்டானாே என்ற அச்சத்தில் அவசரமாக

"நான் எதுக்காக உன்னை தேட போறேன்."


"அப்படியா மேடம், நீங்க என்ன தேடல்லனா எதுக்காக இப்போ என்மேல கோபப்படுறீங்க."

"உங்கமேல கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு." என்று கேட்டு மறுபடியும் பழைய இடத்திலேயே அமர்ந்து கொள்ள அவனும் அவள் முன் வந்து நின்று

"இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கா சில மாதத்துக்கு முன்னாடி உன்கிட்ட இந்த இடத்துல வச்சு தான் என்னுடைய காதலை சொன்னேன்."

"ஏன்... அது ரொம்ப தப்புனு சார் இப்போ ஃபீல் பண்றீங்களா." என்று கனலி வெட்டுக் என்று பேச நெடும் மூச்சு எடுத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்ட விஷ்வா

"நீயும் நானும் மீட் பண்றது இதுதான் மூன்றாவது முறை அப்படி இருந்தும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு நல்ல புரிதல் இருக்குனு நான் நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து என்னுடைய கேரக்டர் என்னன்னு அதிகமா புரிஞ்சு வச்சிருக்க ஒரே நபர் நீ மட்டுமா தான் இருப்பேன்.

அப்படி இருக்கும் பொழுது உன்னை நான் மிஸ் பண்ண விரும்பல. பார்த்த உடனே எனக்கு ஒன்னு பிடிச்சிருச்சு.

பேசிப் பார்க்கும் பொழுது, உன் கூட வாழனும்னு தோணுச்சு." அவன் வார்த்தை களின் வசிகரத்தில் மயங்கிய மனதை கட்டுப்படுத்திக்காெண்டு,

"அப்படி என்கூட வாழனும்னு ஆசை பட்ட ஒருத்தர் எதுக்காக அடுத்தநாளே காணாம போனாங்கன்னு உங்களுக்கு தெரியுமா சார்." என்று கேட்க அவள் குரலில் ஏக்கம் இருப்பதுபோலவே விஷ்வாவிற்கு தோன்றியது.

"எனக்கு அப்போ வேற எந்த வழியும் தெரியல. உன்னை உயிருக்கு மேலா பாசம் காட்டி வளர்த்த ஒருத்தர் என் முன்னாடி கலங்கி நின்னு கேட்கும்பொழுது என்னால அவர் கிட்ட சண்டை போட முடியல.

நான் உன்கிட்ட இருந்து விலகி நிற்க முடிவு பண்ணுனேனே தவிர உன்னைவிட்டு போகணும்னு நினைக்கவே இல்லை.

உன்ன விட்டு விலகி நின்ன இந்த சில மாதத்திலேயே எனக்கு புரிஞ்ச ஒரே விஷயம் நீ இல்லாமல் ஐ காண்ட் லீட் மை லைஃப்."

"நீங்க பேசறது ரொம்ப சினிமாட்டிக்க இருக்கு. என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்." என்று கேட்க அவள் முகத்தை கையில் ஏந்திய விஷ்வா

"எனக்கு உன்ன தெரியும் வேற எதுவும் தெரியாது, தெரியவும் வேண்டாம்.

உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்த போது உன்னுடைய கலங்கிய அந்தக் கண்கள் மட்டும்தான் எனக்கு தெரிஞ்சுச்சு. அதுல நான் சிரிப்பை பார்க்கணும்னு நினைச்சேன்.

நீ என்ன விட்டு மறைந்து போனதும் கண்டு பிடிக்கணும்னு எனக்கு தோணுச்சு.

உன்கிட்ட பேசும்பொழுது நீ என்னை எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கேன் நினைக்கும்பொழுது நான் எப்படி ஃபீல் பண்ணேன்னு என்னால உன்கிட்ட சொல்ல முடியல.

எதுவாயிருந்தாலும் ஐ நீட் யூ மை லைஃப். என்னுடைய காதலை பற்றி நான் தெரிஞ்சுக்க எனக்கு இந்த பிரேக் தேவைப்பட்டுச்சு."

சிறு வயதிலிருந்து பார்வையால் ஒருவரை எடை பாேட முடிந்த கனலிக்கு விஸ்வா கூறும் வார்த்தைகளின் உண்மையை மனது ஏற்றாலும், மூளை ஏற்க மறுத்தது.

"ப்ளீஸ் விஷ்வா I don't think this will not be workout."

"ஏன்னு காரணத்தை தெரிஞ்சுக்கலாமா."

"உனக்கு என்ன பத்தி என்ன தெரியும், நான் உன்னுடைய வாழ்க்கையில் வந்தா நல்லா இருக்கும்ன்னு நீ முடிவு பண்ண அதுபடியே எல்லாம் நடக்காது.

நான் உன்னுடைய வாழ்க்கையில் வந்த உன்னோட வாழ்க்கை நல்லா இருக்காது."

கனலி தன்னுடைய குடும்பம் பற்றி அனைத்தையும் கூறிவிட்டு

"அவங்க எல்லாரும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. ஒருவேளை நீ பணக்காரன்னு தெரிஞ்சு நம்மளுடைய காதலுக்கு அவங்க சம்மதம் தெரிவித்தாலும், ரத்தத்தை உறிஞ்சுற அட்டை பூச்சி மாதிரி உன் மேலயும் ஒட்டி உன்ன உறிய ஆரம்பிச்சிடுவாங்க.

பாதர் ஆபிரகாம் என்னுடைய வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறார். அதுக்காக உன்னுடைய வாழ்க்கையில் நிம்மதியை இழந்துடாத."

கனலி பேச்சில் வாய்விட்டு சிரித்த விஷ்வா

"கனலி நான் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லட்டா, போன நிமிஷம் வரைக்கும் எனக்கு உன்ன பத்தி எதுவும் தெரியாது. இப்போ இந்த நிமிஷத்துல இருந்து உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு கிட்ட ஒருத்தன் நான் மட்டும்தான்." என்று கூற 'லூசாடா நீ' என்று கனலி பார்த்து வைத்தாள்


"நீ பாக்குற மாதிரி நான் லூசு இல்ல. இந்த உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கு. எனக்கு என்ன பத்தி நல்லா புரிஞ்சுகிட்டேன் ஒரு நீ வேணும்.

நீ என் மனச மட்டும் இல்லாம நியாபகம், மூளையையும் சேர்த்து திருடிட்ட. உன்ன மீட் பண்ண நெக்ஸ் செக்கண்ட்ல இருந்து நான் உன்ன பத்தி மட்டும் தான் நினைக்கிறேன்.

உனக்காக என் மூளை அதிகமா வேளை செய்யுது. அதுவே உன்ன நினைச்ச என் மூளை வேலை செய்யாம ப்ளேங் ஆகிடுது. கலா ரசிகனா இருந்த நான் இப்பாே காதல் ரசிகனா மாறிட்டேன்.

உன்னுடைய வாழ்க்கை தேவை நான் தான், அதே மாதிரி உனக்கு என்ன தேவையோ அதை என்னால மட்டும் தான் உனக்கு தர முடியும்."

கனலி தன் மனது முடிவெடுத்த பின்னும்

"அப்படி எனக்கு என்ன தேவை இருக்குன்னு நீ நினைக்கிற."

"சிரிப்பு..... சிரிப்பு மட்டும் தான் உன்னுடைய தேவை." என்று வார்த்தை ஒவ்வொன்றிற்கும் அழுத்தம் கொடுத்து விஷ்வா கூற, ஆச்சர்யத்துடன் பார்த்தாள் கனலி.

அவள் பார்வையில் இந்த ஆச்சரியத்தை கவனித்த விஷ்வா

"இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஒருவேளை உன்னை சார்ந்தவங்க யாராவது ஒருத்தர் உன்னை புரிஞ்சு நடந்துக்கிட்டு இருந்தா உன்ன பத்தி நல்லா தெரிஞ்சு இருப்பாங்க.

சின்ன வயசுல இருந்து நீ எல்லாரையும் சிரிக்க வச்சுக்கிட்டு இருக்கிற, அதுக்கு காரணம் உனக்கு சோகம் கண்ணீர் வருத்தம் இந்த மாதிரி எதுவுமே பிடிக்காது.

உனக்கு மனசு விட்டு சிரிக்கனும்னு ஆசை. அதற்கான சூழ்நிலை உனக்கு எப்பவுமே கிடைக்கல. ஐ வில் மேக் யூ ஹேப்பி." கண்களில் காதல் பொங்க கூறும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்த கனலி

"நீ சொல்வதையெல்லாம் நம்ப முடிஞ்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்."

"நான் சொல்றத நம்புறதில் உனக்கு என்ன தயக்கம்."

"என்ன பெத்த என்னுடைய அம்மா, என் கூட பிறந்தவங்களுக்கு இல்லாத அக்கறை உனக்கு ஏன் என்மேல வரணும். அவங்களே சூழ்நிலை வரும்பொழுது என்ன பத்தி யோசிக்காம முடிவு எடுக்கும் பொழுது, எத வச்சு நான் உன்ன நம்ப முடியும்."

"கனலி நீ ஒன்னும் முட்டாளில்லை, ஒருத்தர ஒரு தடவை பார்த்தாலே அவங்க யாரு எப்படிப்பட்டவங்கன்னு உன்னால சொல்ல முடியும். அப்படியிருந்தும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா." என்று கேட்க

"உங்கள் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கலாம், ஆனா எனக்கு என் மேல நம்பிக்கை இல்ல. ஏன்னா எனக்கு உங்கள் மேல காதல் வரல.

என்கிட்ட first-time லவ் ப்ரொபோஸ் பண்ண ஆளு நீங்க தான். அப்படி இருக்கும் பொழுது ஒரு சின்ன சலனம் எனக்கு உங்க மேல இருக்குது. அத சாெல்ல எனக்கு கூச்சமா இல்ல.

அந்த சலனம் மட்டும் வாழ்க்கைக்கு போதாது, அதுமட்டுமில்லாமல் நான் எங்க வீட்டுல பார்த்த கல்யாணத்த மாப்பிள்ளையை வேண்டாம்னு சொல்லிட்டு வந்து இருக்கிறேன்.

சாே நான் எடுக்க முடியல ஏதாவது தப்பு நடந்தா அதற்கான முழு பொறுப்பும் நான்தான் எத்துக்கணும். சோ ஐ ஹவ் டூ திங்."

"ஓகே கனலி டேக் யுவர் ஓன் டைம் அதுவரைக்கும் நான் என்ன பண்ணனும்னு நீ எதிர்பார்க்கிற."

"தெரியல..." என்று உண்மையில் குழப்பமான மனநிலையில் கூற,

"உனக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு நல்லா தெரியும்." என்று அவளிடம் நெருங்கி வந்த விஷ்வா மேலும் அவளை நெருங்கி வர, அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவளின் இதழ்கள் அவன் இதழ்களால் சிறை செய்யப்பட்டு இருந்தது.

நெடுநேரம் கழித்து அவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்த விஷ்வா அவள் கண்களை பார்த்து

"என்கிட்ட மட்டும் தான் உன்னால இப்படி அமைதியா இருக்க முடியும்."

அதன் பிறகு கனலி, விஸ்வா வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது என்று கூறவேண்டும்.

அமெரிக்கா கிளம்ப மாட்டேன் என்று அடம்பிடித்த விஷ்வாவை கனலி கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள். அதில் ஆனந்திற்கு மிகுந்த மகிழ்ச்சி.

படிப்பு ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

எந்த நம்பிக்கையில் தான் அவனை இந்த அளவு காதலிக்கிறோம் என்று கனலி அறியவில்லை.

அதேபோல எதனால் தான் அவள் மீது இந்த அளவு பைத்தியமாக காதலை வைத்திருக்கின்றேன் என்று விஷ்வாவும் அறியவில்லை. அந்த அளவு இருவரின் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது.
 
Last edited:
Top