Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 18

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
ஹலோ ப்ரெண்ட்ஸ்
படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
முடிஞ்ச அடுத்த அப்டேட் நாளைக்கு தான் தருவேன்.
சைலண்ட் ரீடர்ஸ் அண்ட் லைக் மட்டும் காெடுக்கும் வாசகர்களே மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

மீ வெய்டிங்.


கண் விழித்தேன் உன் நினைவில்
--செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 18


கனலி இத்தனை நாள் தன் மனதில் இருந்த பாரங்கள் அனைத்தையும் தாயின் காலடியில் இறக்கி வைத்துவிட்டு, பதிலுக்காக தன் தாயின் முகத்தை பார்த்து காத்திருந்தாள்.

வெகுநேரம் மௌனமாகவே அமர்ந்து இருந்த திலகவதி நீண்ட யோசனைக்குப் பின்பு

"கனலி யாருக்கும் தெரியாமல் உனக்கு தாலி கட்டுனவரை முறைப்படி அவங்க பெத்தவங்களாேட வந்து உன்ன அழைச்சுட்டு போக சொல்லு."

வருடக்கணக்கில் தீர்வு கிடைக்காமல் அல்லாடிய கனலி இன்று ஒரே நிமிடத்தில் தாயிடம் இருந்து தனக்கு சாதகமாக கிடைத்த தீர்வில் சந்தாேஷ வானில் சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்தாள்.

"அம்மா நீ இது எனக்காக எடுத்த முடிவா"

மகளைப் பார்த்து பேச்சு பெருமூச்சு விட்ட திலகவதி

"இது எனக்காக என்னுடைய மன திருப்திக்காக எடுத்த முடிவு. இவ்வளவு நாளா நான் ரொம்ப சுயநலவாதியாக இருந்திருக்கிறேன் இல்லையா கனலி.

எத்தனையோ நாள் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கணும்னு நான் நினைச்சிருக்கேன். ஆனால் உன்னுடைய சந்தோஷமே என்னாலதான் அழிந்துவிட்டது தெரியாம இருந்திட்டேன். இனியாவது நீ சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்."

திலகவதி அவ்விடம் விட்டு சென்ற பின்பு, தன் அண்ணியின் புறம் திரும்பிய கனலி கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்துவிட்டு புன்னகை முகமாக

"இவ்வளவு நாள் எப்படித்தான் உங்களாள அம்மாகிட்ட அழுது நடிக்க முடியுதாே ஒரு நாளுக்கே இப்படி கண்ண கட்டுதே."

இவ்வளவு நேரம் நடப்பதையெல்லாம் இழுத்துவைத்த பாெறுமையுடன் பார்துக்காெண்டு இருந்த பூஜா

"நீ இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் நடிப்புன்னு நான் அத்தை கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா?"

"என்ன நடக்கும்......
அத தெரிஞ்சுக்க அவ்வளவு ஆசையா இருந்துச்சுன்னா போய் அம்மா கிட்ட சொல்லுங்க.. இப்ப அவங்க என்னுடைய அம்மாவா இருக்கிறாங்க. நீங்க எது சொன்னாலும் இனி என்னுடைய அம்மா யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க.

இவ்வளவு நேரத்தில் உங்கள பத்தி நான் ஒரு வார்த்தை கூட தப்பா எதுவும் சொல்லல, அது ஒன்னு போதும் அவங்க எனக்கு சாதகமா பேச. இனி நீங்க அமைதியா இருந்தா இந்த வீட்டிலேயும் இடம இருக்கும். அதேசமயம் என்னுடைய கம்பெனிலையும் இடம் இருக்கும்.

அத விட்டுட்டு நீங்கதான் பெருசுன்னு நிரூபிக்க நினைச்சா சின்னதா கூட இருக்க முடியாமல் போய்விடும்."

கனலி பேசுவதையெல்லாம் கேட்ட பூஜாவிற்கு அவளை முறைத்துப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

ஒற்றை பெண்ணாக வளர்ந்த பூஜா தான் வைத்ததே சட்டம் அனைவரும் அதையே செய்ய வேண்டும் என்று வளர்ந்தவள்.
தன்னை காதலிப்பதாக கூறிய கார்த்திக்கும் தன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடக்க அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்.

திருமணம் முடிந்து கார்த்திக் வீட்டிற்கு வந்த பூஜாவால் அவளுக்கே உரியதாக நினைத்த வீட்டில் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சொத்து முழுவதும் தன் கணவனுக்கே உரியது என்று இறுமாந்து இருந்த பூஜாவிற்கு அவை அனைத்தும் கனலி பெயரில் இருப்பது அவள் கோபத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்தது.

எப்படியாவது அவளிடம் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு, அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவள் வஞ்சக மனதில் திட்டங்கள் பல தோன்றியது.

அதில் ஒரு திட்டமாக தன் பேச்சை கேட்டு நடக்கும் ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பது தன் பேச்சு சாமர்த்தியம் மூலம் கார்த்திக்கையும் திலகவதியும் வழிக்கு கொண்டு வந்தாள்.

ஆனால் அவள் எதிர்பாராத ஒன்று கனலி தன்னைவிட சாமர்த்தியசாலியாக இருந்தது. திருமணம் நின்றது ஒருபுறம் என்றால் மறுபுறம் ஊர்மக்கள் முன்னிலையில் சொத்துக்கள் அனைத்தும் இரு குடும்ப வாரிசுகளுக்கும் பொதுவானது என்று கனலி பேசி விட்டுச் சென்றது.

மீண்டும் கனலியை வீழ்த்த வழி தேடி கொண்டு இருக்க கனலி அதன் பிறகு தன் அண்ணன் குடும்பம் இருக்கும் நேரங்களில் பிறந்த ஊருக்கு வருவதே இல்லை.

உறவினர் திருமணத்திற்கு பெ ங்களுர் சென்று தந்தையின் மூலம் கனலி காதலை தெரிந்துகொண்ட பூஜா மேற்கொண்டு விபரம் சேகரிக்க கிடைத்த தகவல் வேப்பங்காயாக கசந்தது.
அமெரிக்காவில் படித்தவன்
பரம்பரை பணக்காரன்
ஆர்கே குரூப் ஆஃப் கம்பெனியின் சரி பாதி உரிமையாளன் என திருமண சந்தையில் முன்னிலையில் இருப்பவன் ஒருவன் கனலி காதலனாக இருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அவனது வாழ்க்கையை அழித்து தன் காலடியில் விழ வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த பூஜாவிற்கு கனலி அவள் காதலனுடன் தனியே வீட்டில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவல் பிரச்சனையை பெரிதாக்க சாதகமாக அமைந்தது.

பூஜாவை பொறுத்தவரையில் அவள் திட்டத்தினால் கனலி தன் காதலனை பிரிந்து வந்து விட்டாள், இன்றளவும் அவன் நினைவால் வேறு திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு இருக்க,

கனலிக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றும் அவள் திருமணம் செய்தவன் தற்போது தன்னுடைய முதலாளி என்பதும் உடலை பற்றி எரியச் செய்யும் நெருப்பாக தகிக்க செய்தது.

"போடி போ நீ எப்படி சந்தோசமா வாழுறன்னு நானும் பாக்குறேன்."

♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥-♥

"ஸ்வீட்டி அபி இன்னைக்கு எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு, சோ டிரைவர் அண்ணா கூட ஸ்கூலுக்கு போயிட்டு வாங்க. கண்டிப்பா நான் பிக்கப் பண்ண வருவேன்." என்று தன் அண்ணன் பிள்ளைகள் இருவரையும் சமாதானம் செய்ய

"எங்கள ட்ராப் பண்றத விட உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை."

'நீ பதில் சாெல்லாமல் நாங்கள் உன்னை விடப் போவதில்லை.' என்பது போல் இருவரும் நிற்க

"நான் சொன்னாலும் உங்களுக்கு புரியாது செல்லம்." என்று விஷ்வா தன்மை ஆகவே எடுத்துக் கூற

"நீ முதல்ல சொல்லு அதுக்கப்புறம் எங்களுக்கு புரியுதா புரியலையான்னு பார்க்கின்றோம்."

"இன்னைக்கு நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு ஜேஎம்டி ஜாயிண்ட் பண்ண போறாங்க, அதுக்கு முன்ன ஒரு போர்ட் மீட்டிங் வேற அரேஞ்ச் பண்ணியிருக்கேன். சோ நான் கண்டிப்பா அதுக்கு போகணும்."

"உன்னுடைய ஆபீஸ் டைமிங் 9:30 தானே அதுக்கு நீ நடந்து போனா கூட இவ்வளவு சீக்கிரம் கிளம்பணும் எந்த அவசியமும் இல்ல. எங்கள ஸ்கூல்ல விட்டுட்டு மெதுவா போ."

"ஸ்வீட்டி சொன்னா புரிஞ்சுக்கோ மீட்டிங் போறதுக்கு முன்னாடி நான் தாத்தா கூடவும் பாட்டி கூடவும் பேச வேண்டியது இருக்கு."

"பேச வேண்டியது இருந்துச்சுன்னா அத நேத்து ராத்திரி பேசி இருக்கணும், இல்ல காலையில எந்திரிச்சதும் பேசி இருக்கணும். அதவிட்டுட்டு நாங்க ஸ்கூலுக்கு போற டைமிங் தான் உனக்கு கிடைச்சுதா." என்று கூறி தங்கள் பிடியிலேயே உறுதியாக நிற்க விஸ்வா மனதிற்குள்

"அடியே கனலி உன் மேல இருக்க காதலில் ஒரு ரைமிங்கா இருக்குமுன்னு இவனுக்கு கிருபாலி ன்னு பேரு வச்சா, இவளும் உன்ன மாதிரி டைமிங்ல பேசியே என்னை கொல்றாலே."

கஷ்டப்பட்டு ஒருவழியாக இருவரையும் டிரைவருடன் அனுப்பிவிட்டு உள்ளே வர, டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெற்றவர்கள் முன்பு அமர்ந்து தனக்கான எடுத்துக்கொண்டு உன்ன ஆரம்பிக்க, ரஞ்சித் பூரணியும் பாதி உணவில் எழுந்து செல்ல அவர்களை தடுத்த விஷ்வா

"உங்ககிட்ட நான் பேசணும்."

"நாங்க கூட உன்கிட்ட பேசணும்னு வந்து நின்னப்போ என்கிட்ட நீ பேச விரும்பல. இப்போ நீ பேசும் பொழுது நான் எதுக்காக கேட்கணும்."

"நேற்று நீங்க பேசும்பொழுது உங்களுடைய சுந்தர் மச்சானுக்கு மாமாவா தான் இருந்தீங்க, அதனால நான் உங்ககிட்ட எதுவும் பேச முடியல.

அப்படியே நான் பேசி இருந்தாலும் அதை நீங்கள் ஏத்துக்கிட்டு இருப்பீங்கன்னு என்னால உறுதியா சொல்ல முடியல. இப்ப நா என்னுடைய பெத்தவங்க எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்."

"என்னடா இப்படியெல்லாம் பேசி எங்களை சமாதானப்படுத்த சொல்லி அந்த கனலி உன் கிட்ட சொல்லி அனுப்பினால. நீ என்ன சொன்னாலும் சரி ஒரு தரங்கெட்ட இந்த வீட்டுக்கு மருமகளாக நான் ஒருகாலமும் அனுமதிக்க மாட்டேன்."

"ஒரு காதலனாக தன் காதலியை பற்றி அவதூறாக பேசும் பெற்றாேர் மீது கோபம் வந்தாலும், இவை அனைத்தும் சுந்தர் மாமாவின் வாய் வார்த்தைகளே அதற்காக இப்பொழுது பெற்றோரிடம் கோபம் கொண்டால் எப்பொழுதும் அவர்களை சமாதானம் செய்ய முடியாது என்பதால் விஷ்வா அமைதி காத்தான்.

"கனலி நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு கிடையாது." என்று பொறுமையாகவே தன் தாய் தந்தையருக்கு கனலி பற்றி புரிய வைக்க நினைக்க

"பணத்துக்காக உன் பின்னாடி சுத்தி இன்னிக்கு வரைக்கும் உன்னை அவ பிடியிலே வச்சி இருக்காளே இது ஒன்னு போதாது அவளை அவளுடைய குணம் என்னென்ன நாங்க தெரிஞ்சுக்கிறதுக்கு."

"அவ என் பின்னாடி சுத்தினதா உங்களுக்கு யாருமா சொன்னா, நான்தான் அவ பின்னாடி சுத்தினேன். இன் ஃபேக்ட் அவளுக்கு நான் ஒரு பணக்கார என்கிற விஷயம் தெரியவே தெரியாது. ஆனா அப்போவே அவ பணக்காரி தான்.

16 வயசிலேயே அவளுடைய அப்பா தன்னுடைய சொத்து எல்லாத்தையும் அவளுடைய பெயருக்கு எழுதி வைத்திருந்தார். அப்பமே அதோட மதிப்பு சொத்து மதிப்பு பல லட்சம்.

ஆனா அவளுக்கு என்னைக்குமே பணம் பெருசா தெரிஞ்சது இல்லம்மா. தன் பெயரில் இருந்த எல்லா சொத்தையும் தன் கூட பிறந்தவர்களுக்கும், சித்தப்பா பிள்ளைகளுக்கும் எழுதி கொடுத்துட்டா.

பணத்தை பெருசா நினைக்கிற ஒருத்தி இன்றைய நிலைமையில் கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்தை யாருக்கும் தாரவாக்க நினைக்க மாட்டாங்க."

மேலும் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு விஷ்வாவின் பெற்றோர் மனநிலை பாதி இளகி இருக்க

"அப்புறம் எதற்காக அவ உன் கூட தனியா வீட்டுல தங்கி இருந்தா."

"அம்மா அவர் பெங்களூர் காலேஜ் ஹாஸ்டல் தங்கி படிச்சிகிட்டு இருந்தா. நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ண கொஞ்ச நாள்ல தான் அவளே நம்மளுடைய வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்.

அதுவும் எங்க கூட பாட்டியும் இருந்தாங்க. அவ ரொம்ப நல்ல பொண்ணு மா. லிவிங் டுகெதர் அப்படின்னு ஒரே ஒரு வார்த்தை சும்மா அவனை சீண்டி பார்ப்பதற்காக சாெ ன்னேன். அதுக்காக என்ன கோபத்துல அடிச்சுட்டா மா."

இவ்வளவு நேரம் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ரஞ்சித்

"அப்படின்னா இதுவரைக்கும் கனலி மும்பை போனதே இல்லையா? சுந்தர் சாென்னது பாெய்யா."

'இந்தக் கேள்விக்கு நீ என்ன பதில் கூறப் போகின்றாய்.' என்பதுபோல அவர்கள் இருவரும் நிற்க ஆழ்ந்த முயற்சி எடுத்து தன்னை சமப்படுத்திக் கொண்டே விஷ்வா

"கனலி விருப்பப்பட்டு மும்பை போனது இல்லை. ஆனால் உங்களுடைய மச்சான் கனலியை கடத்திக்கொண்டு போயிருக்காரு. ஆனால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் திரும்ப வந்துட்டா."

"இதை நாங்க எப்படி நம்புறது."

பெற்றவர்கள் முன்பு சில கோப்புகளையும் பென் ட்ரைவ் வைத்துவிட்டு இதுல நீங்க கேட்ட எல்லா ஆதாரமும் இருக்கு. கனலியை கடத்திட்டு போனதுக்கு மட்டுமில்ல இதுவரைக்கும் அவர் உங்களுக்கு தெரியாம பண்ண எல்லா தப்பு காலம் ஆதாரமும் இருக்கு.

ஆனால் கனலி எந்த பாதிப்பும் இல்லாமல் வந்ததுக்கு அவளுடைய வார்த்தை மட்டும்தான் இருக்கு. எனக்கு அதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை.

உங்களுக்கு ஒருவேளை ஆதாரம் தேவைப்பட்டா உங்களுக்கு தெரிந்த எத்தனையோ ஹாஸ்பிடல்ஸ் இருக்கு. ஒரு காதலனா இதுக்கு நா அனுமதிக்கக் கூடாது. ஆனா இருந்தாலும் எனக்கும் கனலிக்கும் வேறு வழியில்லை.

எங்களுக்கு ரெண்டு வீட்டு சம்மதத்தோடு சேர்ந்து வாழணும்னு ஆசையா இருக்கு. அதுக்காக மட்டும்தான் இவ்வளவு இறங்கி பேச வேண்டியதா இருக்கு."

தன் பெற்றோரிடம் கூற வேண்டிய அனைத்தையும் கூறி முடித்த பின்பு தலையின் பாரம் தாங்க முடியாத விஷ்வா தன் தலையை இரு கைகளால் தாங்கி பிடித்த வண்ணம் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

விஷ்வாவின் தலையை மெல்ல கோதி விட்ட ரஞ்சித்

"எனக்கு அந்தக் கனலி பற்றி தெரியாமல் இருக்கலாம், ஆனா உன்ன பத்தி தெரியும். நீ சொல்ற எல்லாத்தையும் நாங்க முழுமனதோடு நம்புறாேம்.

இவ்வளவு பண்ணதக்கு அப்புறமும் அந்த சுந்தரை சும்மா விடப் போறியா."

தன் பெற்றோர் தான் கொடுத்த ஆதாரத்தை பார்க்காமலே தன் வார்த்தையை ஏற்றுக்கொண்டது விஷ்வாவிற்கு புது தெம்பை கொடுத்தது.

"என்னுடைய வாழ்க்கையிலே விளையாண்ட ஒருத்தர நான் எப்படி சும்மா விடுவேன்." என்று புத்துணர்ச்சியுடன் எழுந்து கொள்ள

"அப்பா போர்ட் மீட்டிங் நேரம் ஆகிடும் நீங்க சீக்கிரமா கிளம்பி ஆபீஸ்க்கு வந்துடுங்க." என்று புறப்பட தயாராக ரஞ்சித்

"பிரஜித் நம்மள விட்டு இல்லாமல் போனதற்கும் சுந்தர் தான் காரணமா..." விஸ்வா இதைப் பற்றி பேசக்கூடாது என்று நினைத்தாலும்

"இல்லப்பா சுந்தர் மட்டும் இதற்கு காரணம் இல்லை, அவர் பேச்சைக் கேட்டு சரியா யோசிக்காம முடிவு எடுக்க நீங்களும் அம்மாவும், உங்கள் முடிவை எதிர்த்து பேச தெரியாத பிரஜித், நடக்கிறது எல்லாம் தப்புன்னு தெரிஞ்சும் அதை தடுத்து நிறுத்த நான் இப்படி எல்லாருமே காரணம்தான்."

எதிர்பார்த்த பிரச்சனைகளை சமாளித்து அனைத்தும் தங்கள் விருப்பப்படி நடக்க, காதலர்கள் இருவரும் நாங்கள் எதிர்பாரத இடத்திலிருந்து வர பாேகும் பிரச்சனையில் மீ்ண்டும் பிரியப்பாேவதை உணர்ந்திருந்தால் பின்னர் வரப்பாேகும் பிரச்சனையை சமாளித்திருப்பார்களாே.....!


இனி நிஜங்களுடன்.......
 
உங்களல என்ன பன்னலாம்னு நீங்களே சொல்லிடுங்க....

எல்லாம் நல்லா கொண்டு போற மாதிரி போயி இப்பிடி முடிச்சா....ஐ ஆம் வெரி ஆங்கிரி வித் யூ
 
Top