#கானலானாயோ_காதலே
#தேவி_கண்மணி
#TNW_Contest_Story
#marriage_politics
#husband_wifelove
#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்
#ஆழிசெல்வன்நீரதி
காதலித்து கைப்பிடித்து
கனவுகளோடு ரதி
கணவன் ஆழியின்
கூட்டுக் குடும்பத்தில்
காலடி எடுத்து வர....
காலம் ரதிக்கு
கசப்பை கற்றுத்தந்தது...
காலை முதல் இரவு வரை
கண்ணீரை மறைத்து கலங்கும் நிலை...
குடும்பம் காக்க வேண்டும் என்று
காதலை கூட கட்டுப்படுத்தினான்
காயப்படுகிறாள் என கருத்தில் அறிந்தும்
கடமையென கா(பொறு)த்திருக்க
கட்டளை இட்டான் கணவன் ஆழி...
காய்ந்துபோன மனதோடு
காதல் கல்யாணம் ஏன்
கேட்கும் நிலைக்கு
கடந்திருந்தாள் ரதி
கண்ணில் இருந்த காதல் கூட
கசப்பாய் மாறியது...
காதல் கல்யாணம் என
கேலி செய்ய கடமையாக செய்யும் வேலையில்
குற்றச்சாட்டு
கீழ்த்தரமான பார்வைகள்
குடும்பத்தில் வேலைக்காரியாக
குறைந்தது அவளின்
குணமாறியாது....
காத்திருந்த உண்மை
காலம் வந்தபோது தெரிந்தது
கண்முன்னே அண்ணன் தம்பியின் குடும்ப வாழ்க்கை
கற்றுத் தந்தது பாடம்...
குடும்ப அரசியல்
கசங்கத் தொடங்க
கண்ணீர் சிந்திய மனைவியின் கவலை
கணவன் மனமும் கலங்கியது....
குழந்தை பிறந்த தாரணி கையில் தாங்கும் மாமியார்
கர்ப்பமான பவ்யாவுக்கு
கவனமாய் ஆள் வைத்த உறவு
காய்ச்சலோடு வேலை செய்த ரதியை மட்டும் கவனிக்கவில்லை...
குடும்பம் காட்டும் பிரிவினை
குற்றம் சாற்றும் உறவினை
கவலையில் துடிக்கும் மனதினை புரிய...
கண்கள் திறந்தன
கடுமையாக நடக்க
காதல் என்ற பெயரில்
காரணமென்று புரிந்தது...
குழந்தை மீது விழுந்த வார்த்தை
கோபத்தின் உச்சியில்
கன்னத்தில் விழுந்த அடி
குடும்பம் ஒரு பக்கம் கணவன் ஒரு பக்கம் கைவிட்ட நிலையில்
கடைசியில் வீட்டை விட்டு
குழந்தைகளுடன்
கண்ணீரில் வெளியேறிய ரதி...
பொறுத்துப் போனவள்
பொங்கி எழுந்தாள்
புரியாத குடும்பத்தை
பிரிய நினைத்தாள்
பிரிந்த வீடு
புரிந்தது நிலை
பெண்ணின் அருமை....
பெற்றோரின் வளர்ப்பு
பிள்ளைகளின் பிணைப்பு
பாசம் என்னும் மாயை
பிடிவாதம் பிடித்து பெண் ஆடும் ஆட்டம்
பிரியும் உறவுகள்
புரிந்தும் புரியாத
புதிரான நிலாநிலை
பாவம் தான்...
கட்டிய மனைவியை
கண்ணின் மணியாக குழந்தைகள்
கைவிட மனமில்லை ஆழிக்கு...
காயம் ஆழமாக இருந்ததால்
காதலித்தவளின் அருகில்
கணவனாக நிற்க....
கல்யாணம்
காப்பது
குடும்பத்தை குழந்தைகளை
குடும்ப வாழ்க்கை மட்டுமே இல்லை...
காதலோடு வாழ்வதே காலம் நிலைத்து நிற்கும் உறவு
கற்றுக்கொண்டான்
ரதியின் காதல் கணவன் ஆழி.....
கடை வீடு
குழந்தைகள்
காதல் மனைவி
கைகோர்த்து மீண்டும் காதல் புரிதலோடு மலர்ந்தது
குடும்ப வாழ்க்கை...
கணவன் துணையிருந்தால்
காயங்களும் கு
ணமாகும்...
காதல் உண்மையாக இருந்தால்
கானலும் ஒரு நாள்
காவியமாகும்.....
( ஆழி சொல்லு...
என்னடி ரதி.....ஷூ cute