Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே! பாகம் – 1

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே? எனது முதல் தொடர்கதையோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தளத்திற்கு நான் புதியவள். உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்.

பாகம் – 1
இடம்: லண்டன் முருகன் கோயில்
காலம்: பிரதோஷ நேரம் மாலை 5.30


‘ஓம் நமச்சிவாயா போற்றி
நாதன்தாள் போற்றி
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி’



உதடுகள் பாடலை முணுமுணுக்க, கர்ம சிரத்தையாய் சிவலிங்கம் முன் அமர்ந்திருக்கும் என் பெயர் அமுதினி. வயசு 24 சைஸ் 12(!?!). நான் அப்படி ஒன்றும் பேரழகி அல்ல. ஆனாலும் திரும்பிப் பார்க்க வைக்கும் சுமார் பிகருகளில் சூப்பர் பிகர், என் சொந்த ஊர் சேலம். கடந்த 8 மாதமாக லண்டனில் இருக்கிறேன். சின்ன வயசுல, அம்மா கூட பிரதோஷம் தவறாமல் போவேன். அந்த பழக்கம் இன்னிக்கு வரைக்கும் இருப்பதால், இதோ என் சிவன் முன் கைகூப்பி நிற்கிறேன்.

அதுக்காக என்னை பழம்ன்னு நினைச்சிடாதீங்க. 20% நானும் பிராடுதான். அப்பாவுக்கு தெரியாமல், எங்க கடை கல்லாப் பெட்டியில் 2 தடவை மூவாயிரம் எடுத்திருக்கேன். புரட்டாசி மாசம் அம்மாவுக்குத் தெரியாமல் பாய் கடையில் பிரியாணி வாங்கி நானும் எங்கக்காவும் சாப்பிட்டிருக்கோம். வாசல்ல குப்பை இருந்தா, யாரும் பார்க்கலைன்னா நைஸா பக்கத்து வீட்டு வாசலுக்குத் தள்ளி விட்ருவேன்.

இதோ இப்பக்கூட, என் முன்னாடி ஒரு அண்டா சாரி சாரி ஆன்டி, டைட்டா லெக்கின்ஸ் போட்டு உட்கார்ந்திருக்காங்க. இந்த வயசுக்கு இது தேவையான்னு மனசுக்குள் நக்கலாய் சிரிச்சுக்கிட்டு இருக்கேன். இது என் முன்னுரை. போகப் போக என்னைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்குவீங்க.

என் மனசாட்சியின் குரலுக்கு கடிவாளம் இடுவதுபோல், பூஜைக்கான மணி அடிக்கவும் கவனத்தை ஒருநிலைப்படுத்தி, பூஜை முடித்து பிரகாரம் சுத்தி வரும் போதே, இன்னிக்கு ‘என்ன பிரசாதம் குடுப்பாங்க’ என்று மனசு யோசிக்க ஆரம்பித்து விட்டது. போன தடவை தந்த வெண்பொங்கலில் உப்பு ஒரு கல் தூக்கல். அதுக்கு முந்தைய பிரதோஷத்தில் தந்த கொண்டகடலையில் கொஞ்சம் தேங்காய்ப்பூ சேர்த்திருந்திருக்கலாம்.

‘ச்சீ என்ன புத்தி இது, பிரகாரம் சுத்தும் போது பிரசாதத்தைப் பத்தி நினைப்பது? சிவபெருமானே! என்னை மன்னித்துவிடப்பா’ என்று வேண்டிக்கொண்ட, என்னைப் பார்த்து சிரித்த மனசாட்சி ‘ஏய் அமுதினி, என்ன நல்லவளாட்டம் சீனப் போடுற? பிரசாதம் வாங்கித் திங்கத்தான வெட்கமே இல்லாம உங்கம்மா கூட கோயிலுக்குப் போவ. இங்க கூட மதியம் போடுற சாம்பார் சாதம் நல்லாயிருக்கும்ன்னு அடிக்கடி வருவியே’ன்னு கழுவி கழுவி ஊற்றினாலும் கவலை கொள்ளாமல்,
கோபுரம் பார்த்தபடி கொடிமரத்தின் முன் கண்மூடி விழுந்து எழும் போதுதான் கவனிக்கிறேன், யாரோ ஒருவரில் காலில் அதும் ஆண்மகனின் காலில் (நீலநிற பேண்ட் அணிந்த கால்கள் என்பதால்) விழுந்திருக்கிறேன் என்பது புரிந்ததும் வெட்கம் அள்ளித் தின்றது என்னை.

சுதாரித்து எழுந்த உடனே, நான் முதலில் பார்த்தது, அந்த கண்கள்தான். ப்ப்பா... என்ன ஒரு கண்கள்! தீயிலிட்ட தங்கமாய் அப்படி ஒரு ஜொலிப்பு அந்த கண்களில்! ஆண்மகனுக்கே உரிய கம்பீரமும், இளம்பெண்ணோருத்தி காலில் விழுந்துவிட்டாள் என்ற குறும்பு சிரிப்பும் அவன் கண்களில் நடனம் புரிவதை என் கண்கள் கண்டு களித்தன.

ஏதும் பேசாமல் நகர்ந்தாலும், அவன் இன்னும் என்னையே, பார்த்தபடி தான் கொடிமரத்தின் முன் நிற்கிறான் என்பதை என் சில்லிட்ட முதுகு சொல்லியது!


காதல் வளரும்
 
Top