Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 16 2

Advertisement

Admin

Admin
Member
பிரண்ட்ஸ் கதை முடிச்சிடலாம்னு நினைச்சேன் ஆனா முடியலை. இன்னும் ஒரு எபி இருக்கு, அதுக்கு அப்புறம் தான் எபிலாக்...


இருந்த பசிக்கு நிஜமாய் ஒரு கட்டு கட்டி விட்டான். உண்டு பின் அவன் முன் ஹாலிற்கு வர, அவனோடு வந்தவள் “மா எனக்கு பசிக்குது” என்று செல்லம் கொஞ்ச,

“அதுல இருக்குற ஃபிரைட் ஐட்டம்ஸ் எதுவும் கொடுக்க மாட்டேன்” என்று அவர் சொல்ல

“அப்போ எனக்கு பசிக்கலை” என்றாள் உடனே. ஆனாலும் ராஜலக்ஷ்மி எழுந்து சென்று அவளுக்கு ப்ளேட்டில் எதோ வைத்து கொடுத்து அவள் உண்ட பிறகே விட்டார். அவர்களை அமைதியாய் வேடிக்கை பார்த்திருந்தான்.

“வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க? நாச்சி அம்மா எப்படி இருக்காங்க? ஏன் கூட்டிட்டு வரலை யாரையும்?” என்று அன்பழகன் கேட்க,

“நானே திடீர்ன்னு தான் கிளம்பினேன், அதனால அவங்களை நானே கூப்பிடலை, கூப்பிட்டிருந்தா அம்மாவும் பாட்டியும் வந்திருப்பாங்க, இவ பிரசவ சமயத்துல எப்படியும் வரணும்னு நினைப்பாங்க, அதான் இப்போ நானே கேட்கலை!” என்று நிஜமாய் அவன் நினைத்திருந்த காரணத்தை கூறினான்.

“தொழில் எப்படி போகுது” என்று மீண்டும் அன்பழகன் ஆரம்பிக்க,

“நாளைக்கு கூட பேசலாமே ஊர்ல இருந்து வந்தது. டயர்டா இருப்பாங்க விடுங்க” என்று ராஜலக்ஷ்மி சொல்ல, விட்டால் போதும் என்று எழுந்து விட்டான் ராஜராஜன்.

அவன் ஊரிலிருந்து வந்த மனநிலைக்கும் இப்போதைய மனநிலைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்! நிச்சயமாக சத்தியமாக அவனே எதிர் பார்த்திருக்கவில்லை.

மனதின் பாரம் எல்லாம் வடிந்து, என்னவோ அவனின் உடல் பாரத்தை சுமக்க முடியாமல் நடந்தவன், இப்போது மனதளவிலும் உடலளவிலும் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

அதோடே சென்று ஒரு வெந்நீர் குளியல் போட்டு வெளியே வந்தவன், ட்ராக் பேன்ட் டீ ஷர்ட் அணிந்து படுக்க ஆயத்தமானான். இதழ்கள் அவனுக்கு பிடித்த வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.


“அடடா ஜாதிக் குதிரை இது


என்னை தான் தேடித் திரிகிறது”

சற்று சத்தமாகவே பாடல் வந்தது அவளை ரசித்து பார்த்தபடியே.

எப்போதும் வீட்டில் வேஷ்டி தான் இலகுவான உடை, இப்படி ஒரு உடை அணிந்து பார்த்ததில்லை. இன்று உடை அணியும் அவனையே அங்கை பார்த்திருக்க..

“நான் ட்ரெஸ் மாத்தும் போது ஏன் பார்க்கற? எனக்கு வெக்கமா இருக்காது” என அவன் பேச..

“உங்களுக்கு வெக்கம் நம்பிட்டேன்” என்று ராகம் இழுத்தவள், “என்ன பாட்டு பாடுறீங்க, எனக்கு அந்த பாட்டு தெரியலை?” என்றாள்.

“சுமாரா தான் பாடுவேன்”

“பரவாயில்லை எவ்வளவு மோசமா இருந்தாலும், நான் காதை மூட மாட்டேன்” என்று அவள் சொல்லிய பாவனையில் சிரிப்பு பொங்கியது அவனுக்கு.

அவளின் அருகில் வந்தவன் பாடினான், அவளை பார்த்தபடியே


“அடடா ஜாதிக்குதிரை இது
என்னைத்தான் தேடி திரிகிறது...


கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன்
கழுத்தின் கீழே புறாக்கள் கொண்டேன்...

ஒரு கண்ணில் பார்த்தாலே
ஒரு வாரம் எழ மாட்டேன்....

இரு கண்ணில் பார்த்தாலோ
என்ன ஆகும் சொல்ல மாட்டேன்...

இந்த ரோட்டுத்தாமரை என்ன விலையோ
இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ..

சிரிக்கும் போது சிலிர்த்துக் கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்திக்
கொண்டேன்..


என்று நிறுத்தி விட்டான்.

பாடும் போதே அதன் அர்த்தங்கள் சொல்லும் ரசனையான பார்வை,

“கண்ட்ரோல் கேர்ள், இவன் முன்னாடி வெக்கப் படாதே” என்று அங்கை மனதிற்குள் சொல்லிச் சொல்லி பார்வை மாறாமல் கெத்தாய் அவனை பார்த்திருந்தாள்.

அவன் பாடி முடித்ததும் அதன் தாக்கம் சிறிதும் தன்னிடம் இல்லை என்பது போல காண்பித்து, “நாட் பேட், என்ன பாட்டு?” என்றவளிடம் பாட்டினை யூ ட்யுபில் போட்டு காட்டினான்.

அதில்
ரோமியோ ஆட்டம் போட்டா சுற்றும் பூமி சுற்றாதே என்று ஒலிக்க, அவளை அதை சற்று நேரம் பார்க்க விட்டு,

“நீ நம்புவியா மாட்டியான்னு எனக்குத் தெரியலை, ஆனா உண்மையா என் மனைவியா இருந்தாலும் ஒரு பொண்ணை பார்த்து இப்படி பாடுவேன்னு நினைச்சதில்லை. கொஞ்சம் ரொம்ப திமிரா தான் சுத்துவேன். ஆனா உன்கிட்ட டோட்டல் ஃபிளாட் தான், என்னை விட என்கிட்டே நீ திமிர் காண்பிக்கும் போது எனக்கு கோபம் வர்றதில்லை அதை ரசிக்க தான் தோணுது” என்று மனதை திறந்தான்.

“இன்னைக்கு என்னடா ஆச்சு இவனுக்கு, பாடறான், ஓவரா பேசறான்” என்று பார்த்திருந்தாள்.

“இதெல்லாம் அப்புறம், நாம வெக்கத்தை பத்தி பேசிட்டு இருந்தோம். அது உனக்கு வருமா? வராதன்னு? உனக்கு வரும்!” என்று விட்ட இடத்தில் சரியா துவங்கினான்.

“இவனுக்கு என்னவோ ஆச்சுடா, இவன் இவ்வளவு பேசவே மாட்டானே” என்று நினைத்துக் கொண்டே “வெட்கம் வராது” என்ற திமிர் பார்வை பார்த்தாள்.

“சரி, நீ நம்பலையா, இப்போ நீ ட்ரெஸ் மாத்து, கண்டிப்பா உனக்கு வெக்கம் வரும்” என்று பேச..

“ஆங்” என்று அவனின் பதிலில் விழித்தவள், பின்பு சிரிப்பு வந்து விட சிரித்துக் கொண்டே “தோடா, என்கிட்டயேவா” என்ற பார்வை பார்த்து, “எனக்கு வராது” என்றாள் ஸ்திரமாய்.

“வருதா இல்லையான்னு பார்ப்போம், நீ முதல்ல மாத்து!” என்று இழுக்க..

“வராது” என்றாள் மீண்டும். வெட்கத்திற்கு இப்படி ஒரு சண்டையா என்று வெட்கமே வெட்கமாய் பார்த்தது இருவரையும்.

“வராம நானும் விடறதா இல்லை” என்று விடாமல் அவனும் சீண்ட,

“நான் மாத்தினா தானே இந்த சவால், என்னால மாத்த முடியாது, வேணும்னா நீங்க எனக்கு மாத்தி விடுங்க, எனக்கு வருதா இல்லையான்னு பார்க்கறேன். ஒரு வேளை உங்களுக்கு வெட்கம் திரும்ப வருமோ என்னவோ” என்று அவனை வம்பிழுத்து கெத்தாய் சொல்ல..

“அடிங்க” என்று சிரித்தவன், “பார்த்துடலாமா யாருக்கு வருதுன்னு” என்று அவளின் அருகில் வர.. வாழ்க்கையின் சில இனிமையான நிகழ்வுகள், “எனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லையே” என்று அவன் நினைத்த நிகழ்வுகள்.

“எங்க உன் கேப்” என்றான் அருகில் வந்தவன்,

“தொ இங்க” என்று அவள் காண்பிக்க,

“போட்டுக்கோ, ஒரு ஸ்னேப் எடுத்துக்கறேன்” என்றவனிடம், “நீங்க என்னை எடுக்கற முதல் ஸ்னேப்” என்றாள்.

“ஓஹ் ஆமாமில்லை” என்றவன், “துரைசாணியம்மா மாதிரி இருக்க, அதாவது இங்கிலிஷ் மாகாராணி மாதிரி இருக்க” என்று ராஜராஜன் ரசித்து சொல்லிய போது, இத்தனை நேரம் கட்டுப்படுத்தி இருந்தது தகர்ந்து விட, என்ன முயன்றும் அவளின் கன்னங்கள் அப்படி ஒரு சிகப்பை காண்பித்தது, கண்கள் வெட்கத்தை.

“ஹ, ஹ, நான் ட்ரெஸ் மாத்திவிடாமயே உனக்கு வெட்கம் வந்துடுச்சு” என்று பெரும் குரலில் சிரித்தவனிடம்,

அவனை செல்லமாய் முறைத்து “நீங்களும் வாங்க” என்று அவள் அழைக்க, இத்தனை மாத காலத்தில் முதல் முறை இருவரும் ஒரு செல்பி.

ஒரே நாளிலேயே வாழ்க்கை வாழ்ந்து பார்த்துவிடும் எண்ணம் தான். உடலளவில் வாழ்ந்து பார்த்ததில் குறையே இல்லை இருவருக்குமே, மனதளவில் இருவருக்குமே சற்று குறை இருக்க, அதையெல்லாம் களையும் எண்ணம் பார்த்த இந்த நாளிலேயே, இருவரிடமுமே!

என்னவோ சொல்ல முடியாத ஒரு நிறைவு ராஜராஜனிடம், அவளிடம் வாயடித்தது போல உடையை அவன் தான் மாற்ற, அப்படி ஒன்றும் பிகுவெல்லாம் இல்லை அங்கையற்கண்ணியிடம், மிருதுவான பருத்தி இரவு உடைக்கு மாற்றி விட்டவன்,

அவள் படுத்ததும் அருகில் படுத்தான். அவளை பின்புறமாய் அணைத்து படுத்துக் கொண்டான்.

அவர்களின் எதிரில் பெரிய கண்ணாடி இருக்க, நேரில் முகம் பார்க்க முடியாது, அணைத்து பிடித்து இருந்தவர்களுக்கு கண்ணாடியில் முகம் தெரிய அதனை பாத்தவாறு பேச ஆரம்பித்தனர்.

“நீ என்னை வான்னு கூப்பிடலை, எப்போ வருவீங்கன்னு கேட்கலை, உன்னை பார்க்காம என்னவோ என் வாழ்க்கைல குறைஞ்சது, எனக்கு எதுவுமே செய்ய பிடிக்கலை” என்றான்.

“இப்போ” என்றவளிடம் பதில் சொல்லாது,

“உனக்கும் அப்படி தான் இருக்கா?”

“தெரியலை” என்றாள் உண்மையாய், “ஆனா உங்களை மிஸ் பண்ணினேன் இங்க வந்த பிறகு, ரொம்ப இல்லை கொஞ்சமா” என்று உதடு சுருக்கி அவள் பேசிய விதத்தில், முத்தமிட ஆசை வந்து அவளின் காது மடலை லேசாய் ஒற்றி எடுத்தான், “எப்படி மிஸ் பண்ணின?” என்ற கேள்வியோடு.

“அதெல்லாம் தெரியலை ஆனா பண்ணினேன்” என்றாள் கறாரான குரலில்.

அவனுக்கு சிரிப்பு வர அடக்கியவன் “அப்போ ஏன் வர சொல்லலை?”

“அது எப்போவும் சொல்ல மாட்டேன் இல்லையா, அதனால இப்போவும் வரலை போல”

புரியாமல் அவளை கண்ணாடியில் பார்த்தவனிடம், அவளுமே அங்கே பார்த்தே பதில் சொன்னாள். “நான் மிலிட்டரி அப்பாவோட பொண்ணு, உங்களுக்கு ஞாபகமே இல்லையா? சின்ன பொண்ணுல இருந்தே அப்பா எப்போ போனாலும் சிரிச்சு தான் டாட்டா கொடுப்பேன். நடுவுல ஃபோன் வந்தாலும் உங்களை பார்க்கணும் போல இருக்கு எல்லாம் சொல்ல மாட்டேன். அது எனக்கு அப்படியே தான் இருக்குது போல, இப்போ நீங்க கேட்கவும் தான் எனக்கே தோணுது”

“உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” என்றான், என்ன முயன்றும் சற்று பயத்தோடே குரல் வந்தது. முன்பானால் உனக்கு என்னை பிடிச்சா என்ன பிடிக்காவிட்டால் என்ன என்ற அலட்சியம் இருக்கும். இப்போது அது கிஞ்சித்தும் இல்லை.

அதற்கு பதில் சொல்லாமல் “உங்களுக்கு?” என்றாள்.

“ரொம்ப, ரொம்ப” என்றான் இறுக்கி அணைத்தபடி, முகத்தையும் கண்ணாடியில் காண்பிக்காமல் அவளின் கூந்தலில் புதைத்து கொண்டு, “எனக்கு பிடிக்கும்னா அது வேற” என்றான்.

“என்ன வேற?” என்றாள் புரியாமல்.

“நிஜம்மா நீ வேற லெவல் தான், ஒரு வேளை கட்டாயத்தின் பேர்ல இந்த கல்யாணம் நடக்காம இருந்திருந்தா, நான் உன்னை மாதிரி ஒருத்தியை கனவுல கூட நினைக்க முடியாது” என்றான்.

கண்ணாடியில் முகம் பார்க்க முடியாமல், “என்ன காம்ப்ளெக்ஸ்ஸா?” என்றாள்.

“சே சே ரியாலிட்டி, நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க, நிறைய படிச்சிருக்க, வசதியா இருக்க, அப்பாவும் அண்ணாவும் பெரிய போஸ்ட்ல இருக்காங்க, அப்போ என்னை மாதிரி ஒருத்தனுக்கு எப்படி கல்யாணம் பண்ணி குடுப்பாங்க. நீயும் என்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ண நினைக்க மாட்ட இல்லையா? உங்க அப்பா மாதிரி அண்ணா மாதிரி நினைச்சிருக்கலாம் இந்த வாழ்க்கை வேற தானே” என்றான்.

“அதுவும் நான் படிக்கலை, பார்க்க நல்லா தான் இருக்கேன், குறை சொல்ல முடியாது, ஆனா சூப்பர் ஹேண்ட்சம் எல்லாம் இல்லை, முக்கியமா மேல்தட்டு ஸ்டைல் எல்லாம் வராது, என் அண்ணனுங்க, என் அக்காங்க இவங்களுக்கும் எனக்குமே வித்தியாசம் இருக்கும், காலேஜ் போயிருந்தா கொஞ்சம் பழகியிருப்பேனோ என்னவோ?”

“ஸ்கூல் முடிச்சு அப்படியே வேலை, அந்த பழக்க வழக்கம் தான் வரும். அப்போ உனக்கு என்னை பிடிக்க செய்யாது தானே?” என்றான். இது எதையுமே அவளின் முகம் பார்த்து பேசவில்லை, அவளின் மீது முகத்தை புதைத்துக் கொண்டே தான் பேசினான்.

எனக்கு இதற்கு பதில் வேண்டும் என்ற பிடிவாதம் அவனின் உடல் மொழியில் இருந்ததோ, அதை அவளும் உணர்ந்தாளோ?

“என்கிட்டே இதுக்கெல்லாம் பதில் கிடையாது. ரெண்டு வருஷத்துக்கு பிறகும் உங்க கூட சேர்ந்து வாழப் பிடிக்கலை தான். அப்பாவோட கம்பல்ஷன்க்கு தான் வந்தேன், ஆனா கல்யாணம் அப்பாவோட கம்பல்ஷன்ல நடக்கலை, அவர் கேட்ட உடனே எனக்கு ஓகே சொல்ல தோணிச்சு, அதுக்கப்புறம் ஓகே சொல்லியிருக்க வேண்டாமோ தோணிச்சு, இப்படி எல்லாம் தோணிச்சு தான் ஆனா...” என்று நிறுத்தியவள்,

“என் முகம் பாருங்க” என்று சொல்ல, நிமிர்ந்து கண்ணாடியில் தெரியும் அவளின் முகம் பார்க்க..

“ஆனா... இப்போ இந்த மாதிரி எல்லாம் என்னால யார் கூடவும் நினைச்சு கூட பார்க்க முடியாது”

“எந்த மாதிரி?” என்றான் புரியாமல்.

“இந்த மாதிரி, கட்டி பிடிச்சிக்கிட்டு முத்தம் குடுத்துகிட்டு இப்படி, இந்த மாதிரியான ஒரு இன்டிமேட்டா என்னால யார் கூடவும் நினைக்கக் கூட முடியாது. எனக்கு நீங்க மட்டும் தான்னா இதுக்கு பேர் என்ன?”

“அந்த பேர் என்னவோ நீங்க வெச்சிக்கங்க, அண்ட் இப்போ ஐ அம் ஹேப்பி தான். எனக்கு எந்த குறையும் இல்லை”

“சில சமயம் நினைச்சிருக்கேன், எப்படி என் ஃபிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் உங்களை சொல்வேன், காண்பிப்பேன், அறிமுகப் படுத்துவேன்னு”

“ஆனா இன்னைக்கு எனக்கு கொஞ்சமும் தயக்கம் வரலை. நீங்க திரும்பி போனவுடனே ஓடி உங்க பின்ன வர தான் தோணினது. ஆனா முடியாது இல்லையா? அப்புறம் தான் கத்தினேன்?”

“அப்புறம் நீங்க பக்கத்துல வந்த பிறகு, நீங்க இப்படி யாரோடயோ நடந்து வர்றதுக்கு திட்டுவீங்களோ தோணி, பயமா போச்சு. அப்புறம் அழுகை வந்துச்சு”

“இதுக்கு பேர்ல்லாம் என்னன்னு எனக்கு தெரியாது, எனக்கு இப்படி எல்லாம் தோணும்னு எனக்கே இன்னைக்கு தான் தெரியும்” என்று நீளமாய் பேசினாள்.

இதமாய் இருந்த அணைப்பை இறுக்கிக் கொண்டான்.

“ஊர்ல எல்லாம் என்னை பிடிச்சிருக்கான்னு கேட்காம, பிடிச்சு தான் ஆகணும்ன்ற ஆட்டிடியுட் காமிச்சிட்டு, இங்க வந்து பிடிச்சிருக்கான்னு என்ன கேள்வி” என்று முறைத்தவளிடம்,

“தெரியலை, நீ என்னோட சந்தோஷமா இல்லையோ? என்னோட கடமையா இருக்கியோன்னு டவுட்?”

“டவுட் கேட்கற வாயை கடிச்சா தான் என்ன? எவ்வளவு கொழுப்பு உங்களுக்கு? மடையன்டா நீ”

“எனக்கும் கொஞ்சிப் பேச வராது, உனக்கும் கொஞ்சிப் பேச வராது, நாம இப்படி தான் இருப்போம்” என்று பேசியவள் தூக்கத்திற்கு கண்களை சொருகி மீண்டும் விழிக்க..

“இது என்ன எக்சாம்க்கு படிக்கற மாதிரி முழிச்சிருக்க நீ?”

“தெரியுதில்லை, நீங்க டவுட் கேட்டா இப்படி தான், எனக்கு தூங்கணும்” என்று சொன்னவள், பேசாமல் அமைதியான அப்படியே ஒரே நிமிடத்தில் உறங்கி விட்டாள்.

ஆனால் அவனிற்கு உறக்கமே வரவில்லை. இத்தனை மாதங்கள் வராத ஒரு உணர்வு. என்னவோ பலகாலம் அவளோடு வாழ்ந்து விட்ட ஒரு உணர்வு! மனதிற்கு அப்படி ஒரு நிறைவு!




ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
Last edited:
:love: :love: :love:

wow wow மல்லி........
ராஜராஜனை விட அங்கை பெருசா பேசிட்டா....... ஒரே ரத்தம் ஒரே மாதிரி attitude.......
என்ன குறை இருந்தாலும் அங்கைக்கு பிடிச்சிருக்கு..... அது போதுமே......
ஆனாலும் இவனுக்கு இன்னும் இன்னும் டவுட் வருதே......
ஒரு கடி குடுத்தா தான் அடங்குவான் போல......

ஊர்ல அவனுக்கு உன்னை புடிக்க வச்சிக்க மட்டும் செய்தான் போல.........
இப்போ தான் அந்த zone விட்டு வெளியே வந்து உனக்கு அவனை புடிச்சிருக்கானு யோசிக்கிறான்......
உனக்கு எந்த விதத்திலும் இணையில்லை என்னும் inferiority complex அவனுக்கு........
உன் கையில் தான் இருக்கு அவன் முழுதும் சரியாகிறது........

வெட்கம் cap துரைசாணியம்மா selfie :love:
அவனுக்கும் ஒரு cap கொடுத்திருக்கலாம் அங்கை.......

அந்த நிறைய படிச்சிருக்க :unsure::unsure::unsure:

ரோமியோ song மட்டும் தான் போல :p
அடடா ஜாதி குதிரை இது என்னை தான் தேடி திரிகிறது
ஒரு கண்ணில் பார்த்தாலே ஒரு வாரம் எழ மாட்டேன்
இரு கண்ணில் பார்த்தாலோ என்ன ஆகும் சொல்ல மாட்டேன்
சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன்
இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன்
ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே :love: :love: :love:
 
Last edited:
மாமியார் மாமனார் கிட்ட இருந்து காப்பாத்திட்டாங்க.........
ஆனாலும் அம்மா அண்ணன்கள் பற்றி கேட்கவே இல்லை RL.......

இந்த ஜாதி குதிரை பாட்டு ஷில்பா ஷெட்டி :love: :love: :love:

 
Last edited:
Top