Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 17 2

Advertisement

Admin

Admin
Member
நடந்தவன் திரும்பிப் பார்க்க... வராண்டாவில் இருந்த இருக்கையை காண்பித்தார் “உட்கார முடியுமா?” என்பது போல,

அவன் அமர அவரும் அமர்ந்தவர், “எனக்கு இதை யார்கிட்டயும் சொல்லணும்னு இல்லை, சொல்லவும் மாட்டேன். ஆனா நீங்க..” என்றவர் ராஜராஜனின் பார்வையில் “நீ” என்று மாற்றி, “நீ அங்கையை கல்யாணம் பண்ணி இருக்க, நீ அங்கையை எங்களோட பொண்ணா பார்க்கும் போது, சரியா பார்க்காம போனான்றதுக்காக தான் இதை சொல்றேன்” என்றவர்,

“எனக்கு எங்க அப்பா அம்மாவை தெரிஞ்ச நாளா, இவரையும் தெரியும். அவங்க எல்லாம் என்னை பார்த்துக்கிட்டதை விட இவர் என்னை பார்த்துக்கிட்டது தான் அதிகம், ஒரு வயசுக்கு மேல எனக்கு அவர் மேல இருக்குற பிடித்தம் மாறி போச்சு, ஏன் போச்சு எனக்குத் தெரியாது, அது தப்பான்னும் எனக்கு தெரியாது”

இத்தனை வருஷம் எங்களோடவே இருந்தவரை என்னோட அண்ணனுங்க அடிச்சு துரத்துவாங்கன்னு நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கு அப்பா கிட்ட பயம், இவர் தான் வேணும்னு சொல்ல முடியலை?”

“நீ தான் வேணும்னு என்னால இவர் கிட்ட சொல்ல முடிஞ்ச அளவுக்கு என் வீட்ல இருக்குற யார் கிட்டயும் சொல்ல முடியலை, அம்மா கிட்ட கூட சொல்ல முடியலை. காதல்ன்ற வார்த்தை அம்மாக்கெல்லாம் ரொம்ப தப்பு. அதனால் என்னால் சொல்ல முடியலை”

“அப்போ சாகவும் மனசு வரலை, உயிரோட இருந்தா நிச்சயம் வருவார்ன்னு நம்பிக்கை. அப்போதான் நான் எவ்வளவு வேண்டாம்னு சொல்லியும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க”

“என்னோட தற்கொலை முயற்சியப்போ சரியா இவர் வந்திட்டார் , இது கண்டிப்பா தெய்வ சங்கல்ப்பம் தான், இல்லை இவர் ஏன் அன்னைக்கு வரணும். அதுவும் நான் தற்கொலைக்கு முயற்சி செஞ்ச போது இவர் ஏன் காப்பாத்தணும்?”

“ஆனா வேற யார் காப்பாத்தியிருந்தாலும் திரும்ப திரும்ப செத்து போகற வரை ஏதாவது சாக முயற்சி செஞ்சிட்டே தான் இருந்திருப்பேன், கண்டிப்பா அவனை கல்யாணம் செஞ்சிருக்க மாட்டேன்”

“இவருக்கு என் மேல கோபம் கூட, நான் இவ்வளவு தீவிரமா இல்லைன்னா கண்டிப்பா அவரோட காதல் சொல்லியிருக்க மாட்டார். ராயர் குடும்பத்துக்கு விசுவாசமா இருக்க முடியாம துரோகின்னு பேர் வாங்கிட்டோமேன்னு என்னைக்கும் அவருக்கு வருத்தம் தான்”

“ஆனா எனக்கு வேற வழியில்லை, ஒரு வேளை அப்பாவே இந்த கல்யாணம் செஞ்சி வெச்சிருந்தார்னா இந்த குற்ற உணர்ச்சி அவருக்கு இல்லாம இருந்திருக்கும்”

“துரோகியாகிட்டோம்ன்றது அவரால சில சமயம் கடந்து வரவே முடியாது. அப்போல்லாம் என்கிட்டே பேச மாட்டார். பல முறை வார் ஃபிரன்ட் இல்லை பார்டர் போய்டுவார். மாசக் கணக்கா வர மாட்டார். உங்கப்பா கிட்ட உங்கம்மா கிட்ட பேசுன்னு சொல்வார். ஆனா நான் பேசமாட்டேன். எனக்கு என் அப்பா அம்மா மேல பாசமில்லைன்னு கிடையாது, ஆனா அதை விட இவர் மேல வெச்ச காதல் அதிகம்”

“இன்னும் கூட எங்கப்பாம்மா மேல எனக்கு கோபம் தான். எங்களை ஏன் இப்படி ஊரை விட்டு வர்ற நிலைமைக்கு கொண்டு வந்தாங்கன்ற கோபம். அவங்க அந்த கல்யாணம் பேசமா இருந்திருந்தா, இவர் ஊருக்கு வந்திருந்தாலும் அப்பா அம்மாவை மீறி நான் இவரோட போயிருக்க மாட்டேன். இவரும் அவங்களை மீறி என்னை கூட்டிட்டு வந்திருக்க மாட்டார்”

“என்னை ஓட வெச்சதும் அவங்க தான், அவரை துரோகியாக்கினதும் அவங்க தான். எத்தனை வருஷமாகிட்டாலும், நாங்க இப்போ நல்லா இருந்தாலும், எங்கயோ ஒரு மூலையில என்னோட மனசுலயும் அவரோட மனசுலையும் இருக்குற இந்த கசடு போகாது” என்று நிறுத்தி விட்டார்.

அங்கே ஒரு பெரிய மௌனம். ராஜராஜனுக்கு அவர் சொல்வதில் இருந்த உண்மையை ஒத்துக் கொள்ள தான் வேண்டி இருந்தது. ஆனாலும் காண்பித்து கொள்ளவில்லை.

“எது எப்படின்னாலும் ஒரு விஷயம் ரொம்ப தெளிவா இருக்கேன், உங்க கஷ்டத்துக்கு நாங்க காரணம் கிடையாது. நீங்களா என்னை அனுப்பி விட்டீங்க, இல்லையே, அந்த ஆத்மன் தொல்லை குடுத்தா அவனை எதிர்த்து நீங்க நின்னிருக்கணும். அதை விட்டு உங்க தோல்விக்கெல்லாம் எங்களை காரணம் சொல்லக் கூடாது” என்று நிறுத்தியவர்,

“என் பொண்ணை ஒன்னும் சொல்ல மாட்டீங்க தானே” என்றார்.

“உங்க பொண்ணை சொல்வேனா இல்லையா தெரியாது. என் மனைவியை நிச்சயம் சொல்ல மாட்டேன். அப்புறம் உங்களையும் சொல்ல மாட்டேன், ஏன்னா சொல்ல உங்க பொண்ணு விட மாட்டா” என்றான்.

சில அமைதியான நிமிடங்கள். ராஜராஜன், “நீங்கள் செய்தது சரி, தவறு, என்பது போல எதுவும் சொல்லவில்லை”

“நீங்க போய் தூங்குங்க அத்தை, நடந்ததை யாரும் மாத்த முடியாது. நடக்கறது நல்லதாவே நடக்கும், போங்க” என்று சொல்லும் போது இவனை காணாமல் அங்கை எழுந்து வந்து விட்டாள்.

இவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் “என்ன?” என்று கவலையாய் பயந்து கேட்டு வர,

“என்ன?” என்றான் ராஜராஜன் இலகுவாகவே.

“அம்மா ஏன் இங்க உட்கார்ந்து இருக்காங்க? என்ன சொன்னீங்க நீங்க அவங்களை?” என்று முறைப்பாய் கேட்க,

“நானும் எங்க அத்தையும் பேசிட்டு இருந்தோம் உனக்கென்னா”

“ஆங், இது எப்போ இருந்து?”

“ம்ம், நீ தூங்குன கேப்புல”

“என்ன பேசுனீங்க” என்றாள் அப்போதும் முகம் தெளியாதவளாக.

“அத்தை மாமாவோட லவ் ஸ்டோரி”

“ஆ, பொய், என்கிட்டயே சொன்னதில்லை, உங்க கிட்ட எப்படி சொல்வாங்க?”

“வாயால தான்” என்றான் இன்னும் அசால்டாய்.

ராஜலக்ஷ்மிக்கு சிரிப்பு வந்து விட, “நான் போய் தூங்கறேன்” என்று இருவருக்கும் தனிமை கொடுத்து விலகினார்.

சிரித்து செல்லும் அம்மாவையே பார்த்தவள் “என்ன பேசுனீங்க?” என்றாள் சொல்லியேயாக வேண்டும் என்ற த்வனியில்.

“நிஜம்மா அவங்க காதல் கதை தான். அவங்க எல்லாம் பைத்தியக்காரங்க, காதல் தீவிரவாதிங்க, நமக்கு அதெல்லாம் வேண்டாம். நாம நாமளா இருப்போம்” என்று அவன் சொல்லியது ராஜலக்ஷ்மியின் காதில் நன்கு விழுந்தது. சிரிப்போடே அவர் படுக்க சென்றார்.

“எங்கம்மாவும் நீங்களும் நல்லா பேசிக்கிட்டீங்களா?” என்ற அங்கையின் கேள்விக்கு பேசிக்கிட்டோம்” என்று ராஜராஜன் சொல்ல,

“நிஜம்மா, நிஜம்மா” என்று திரும்ப திரும்ப அவள் நம்பாமல் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“நிஜம்மா” என்ற பதில் அவன் திரும்ப சொல்லவில்லை. ஆனால் கண்கள் அதனை பிரதிபலிக்க, அமர்ந்திருந்த அவனின் பக்கத்தில் அமர்ந்து தோள் சாய, அங்கையை தோளோடு அணைத்துக் கொண்டான்.

“எங்கம்மா அவங்க காதல் கதை சொன்னதேயில்லை, நீங்க சொல்லுங்க”

“அது எதுக்கு நமக்கு, அதெல்லாம் நம்மளால முடியாது. அவங்கல்லாம் காதல் பண்ணட்டும், நாம குடும்பம் நடத்துவோம்” என்றான் அவளை பார்த்து கண்ணடித்து..

“அப்படின்னா?” என்றவளிடம்,

“அதை நீ தில்லை தமிழ்செல்வன் கிட்ட தான் கேட்கணும்”

“அது யாரு” என்று புரியாமல் முழிக்க,

“அடிங்க எங்கம்மாவை தெரியலையா?”

“ஹி, ஹி, பேர் சட்டுன்னு ஞாபகம் வரலை” என்று அசடு வழிய,

“ஊருக்கு போய் எங்கம்மா கிட்ட போட்டுக் கொடுக்கறேன்”

“அதுக்கு எதுக்கு ஊருக்கு போகணும், ஃபோன் பண்ணுங்க”

“நாளைக்கு காலையில பண்ணலாம், இப்போ வேற பண்ணலாம்” என்றான்.

“என்ன?” என்றவளிடம்,

“எப்போவும் படுத்துக்கிட்டு பண்ணுவோம், இன்னைக்கு நின்னுக்கிட்டு பண்ணிட்டோம், உட்கார்ந்துட்டு இப்போ பண்ணுவோம்” என,

அங்கையற்கண்ணிக்கு முதலில் புரியாமல், பிறகு புரிந்து, சத்தமாக வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தவள், “ஒரு முத்தத்துக்கு இந்த பில்ட் அப் பா” என,

அவளின் சிரிப்பை பார்த்து ராஜராஜன், “சரி, வேற எதுக்கு பில்ட் அப் குடுக்கட்டும்?” என்று கேட்டுக் கொண்டே அவளோடு சிரித்தான். எதற்கென்று தெரியாத ஒரு சிரிப்பு, இருவரின் மன சந்தோஷத்தை மட்டுமே கொண்ட சிரிப்பு.

இருவரின் சிரிப்பு சத்தமும் உள்ளே கேட்க, அப்போது தான் உறங்க ஆரம்பித்த அன்பழகன் அருகில் படுத்த ராஜலக்ஷ்மியை அணைத்துக் கொண்டார்.

அங்கையற்கண்ணியின் திருமணத்திற்கு பிறகான அன்பழகனின் அணைப்பு, ராஜலக்ஷ்மி உறக்கத்திற்காக விழி மூடிய போதும் கண்களில் நீர் கசிந்தது.

யார் சொன்னது காதல் எளிதானது என்று, காதல் மிக மிக கடினமானது.

காதலுக்காக காதலிடமே பல சமயம் போராட வேண்டி வரும்!

ஆனாலும் காதல் தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும்!

அது தான் காதல்!

நமகெல்லாம் அது புரிய வேண்டாம்ங்க, நாம குடும்பம் நடத்துவோம்! பிடிச்சாலும் சரி! பிடிக்காவிட்டாலும் சரி!

பிடித்ததை, பிடிக்கறது பெரிய விஷயமா? பிடிக்காததையும் பிடிக்க வைக்கணும்!

இது கூட ஒரு வகையான காதல்!

முன்னது ராஜலக்ஷ்மி அன்பழகனின் காதல் என்றால் பின்னது அங்கையற்கண்ணி ராஜராஜனது!

(காதல் வலம் வர)



ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love: :love: :love:

அதெல்லாம் நம்மளால பண்ணமுடியாது நாம குடும்பம் நடத்துவோம் :p:p:p
என்னடா இப்படி சொல்லிட்ட......

ராஜி தான் ரொம்ப தீவிரம் போல காதலில்...... அன்பழகன் ராயரின் தீவிர விசிறி.......
என்ன தான் வளர்த்தாலும் அந்தஸ்து காதலின் குறுக்கே வந்துடுச்சே........

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்!
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
மனம் திறந்ததும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் என் உயிர் எனக்கு இல்லை!!!!

அவரோட துரோகத்தை சரிக்கட்ட தான் பொண்ணையும் கொடுத்தாரா........
பொண்ணோட விருப்பமின்மை தான் பிரிவுக்கு காரணம்......
இப்போ அங்கை ராஜன் கெமிஸ்ட்ரி lock and key mechanism ஆகிப்போச்சு :p:p:p
இந்த கெமிஸ்ட்ரி அங்கேயும் பத்திகிச்சே :eek:

மல்லி @Admin
அங்கை படிப்பு என்னனு சொல்லலை.......
ரெண்டு பேரையும் சேர்த்து வைச்ச விகாஸ், ஸ்ருஷ்டி & கரிஷ்மா ?‍?‍?‍? வரவேயில்லை......
 
Last edited:
என்னடா குழப்புற.....
உங்க பொண்ணை சொல்வேனா இல்லையா தெரியாது...... என் மனைவியை சொல்லமாட்டேன் :unsure:

ஏற்கெனவே ஒருத்தி.......
என்னை யாரும் லூசுன்னு சொல்லக்கூடாதா இல்லை உங்க மனைவியை சொல்லக்கூடாதா-னு கேட்டாள்........

ரெண்டு பேருமே ஒண்ணுதானே-னு அந்த குழப்பமே தீரலை....... இப்போ நீயுமா ராஜராஜா???
 
Last edited:
:love: :love: :love:

அத்தை மாமா ஓட love story...
1942 A love story... ? ? ?

நின்னுகிட்டு, படுத்துட்டு இப்போ உட்கார்ந்துகிட்டு ??
முத்ததுக்கா இந்த பில்ட் அப்...

Last lines awesome மல்லி...

அன்பழகன் & ராஜலட்சுமிக்காக...

தந்தையையும் தாயையும்
தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க
விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை
பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்..
உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
 
Last edited:
Top