Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 18 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் பதினெட்டு :

சரியாய் பதினெட்டு மாதங்களுக்கு பிறகு,

அன்று தான் புதிதாய் கட்டியிருந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம், ராஜலக்ஷ்மியும் அன்பழகனும் தான் பரிவட்டம் கட்ட இருந்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்து உச்சி கால பூஜை ஆரம்பிக்க இருக்க,

வீட்டில் இருந்து அவளின் ஆக்டிவாவில் அங்கை கிளம்ப, அவளிற்கு பின் ரதி பூர்ணிமா, ஆம்! அது தான் அவளின் செல்ல மகளின் பெயர். ஒன்றரை வயதை நெருங்கும் தத்தி தத்தி தளிர் நடையிடும் தத்தை, இருப்பக்கமும் காலிட்டு அமர்ந்திருக்க, அவளை அணைவாய் பிடித்தபடி விகாஸ், இப்போது ஆறு வயதை தொட்டிருந்தான்.

அவனுக்கு பின் ஸ்ருஷ்டி அண்ணனை பிடித்தபடி அவள் மூண்டு வயதை தொட இருந்தாள். அவளுக்கு பின்னே ராஜராஜன், இவர்களை பிடித்த படி..

ஒரே ஆக்டிவாவில் ரயில் வண்டியாய் இத்தனை பேர். கோவில் முன் சென்று நிறுத்த ஊரே வேடிக்கை பார்த்தது. இவர்களை பார்த்ததுதும் கோவிலின் வாயிலில் நின்றிருந்த மனோ வேகமாய் வர, முதலில் ராஜராஜன் இறங்க, அவளிற்கு பின் இருந்த ஸ்ருஷ்டியை இறக்கி கீழே விட்டான்.

அவள் சமத்தாய் அப்பாவின் அருகில் நிற்க, அவளுக்கு பின்னே விகாஸ் இறங்கினான். அவனுக்கு முன் இருந்த ரதியை மனோ தூக்கிக் கொள்ள, அங்கை வண்டியை விட்டு இறங்க, மனோவின் கண்ணசைவில் வேகமாய் ஒருவர் வந்து அதனை சற்று தள்ளி நிறுத்த வாங்கி சென்றார்.

அங்கையின் கை வண்டியில் இருந்து விலகியது தான் தெரியும், “அத்தை தூக்கு” என்று ஸ்ருஷ்டி அருகில் வந்து நின்றாள்.

“நடக்கணும் பேபி” என்று மனோ கண்டிப்பான குரலில் சொல்ல,

“அத்தை, அப்பா என்னை திட்டுறாங்க” என்று அங்கையிடம் அவள் சொல்ல,

“நீ வாடா செல்லம், அப்பாவை அவங்க அப்பாக்கிட்ட நாம மாட்டி விடலாம்” என்று அவளை தூக்கி கொண்டாள்.

விகாஸ் சென்று ராஜராஜனின் அடிபடாத கையினை பிடித்துக் கொண்டான்.

ஆம்! ராஜராஜனுக்கு கையில் ஒரு சின்ன அடி, அது வீக்கம் கண்டிருக்க, அதற்கு பேண்டேஜ் சுற்றி இருந்தனர்.

அங்கை முன் நடக்க இடைவெளி விட்டு ராஜராஜன். மனோ அவளின் மருமகளை கொஞ்சியபடி அவர்களின் பின்னே, இவர்கள் மூவரும் நடந்து வருவதற்காக ஊரே காத்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

சுவாமிநாதனுக்கு பொறுமை பறந்து கொண்டிருக்க, தமிழ்செல்வன் ராஜராஜனிடம் “சீக்கிரம் வர மாட்டியாடா?” என்றார் அதிகாரமாக.

நொடியும் யோசிக்காமல் திரும்பி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“டேய், நீ சும்மா இருக்க மாட்ட” என்று சுவாமிநாதன் அவரை அதட்டியபடி “ராஜா” என்று குரல், நின்றவன் திரும்பி “நீங்க பாருங்க பெரியப்பா” என்று வேகமாய் வெளியே நடந்தான்.

“என்னடா நீங்க?” என்று அங்கிருந்த நாச்சி தான் கடிந்தார், “ரெண்டு நாளா எத்தனை வேலை அவனுக்கு, பூஜை முடிஞ்சதும் வீட்டுக்கு போனவன் அசந்து தூங்கிட்டான், அதுக்கு என்னடா ஒரே சவுண்டு, அவன் ஒருத்தன் தான் ஓடி ஓடி வேலை பார்க்கறான்”

“ஊர்ல இருந்து வந்தவனுங்க சும்மா நிக்கறானுங்க. ஏன் நாளைக்கு அவனுங்களுக்கு சொத்துல பங்கு குடுக்க மாட்டீங்களா?” என்று எப்போதும் போல பட்டவர்த்தனமாய் பேச,

அங்கே கெளரி சங்கரும் நந்த குமாரும் “என்ன பாட்டி?” என்ற படி வந்தனர்.

“மூணு வேளையும் அன்னதானம் நடக்குது. என்ன தேவைன்னு பாருங்கடா? சும்மா வெள்ளையும் சொள்ளையுமா சுத்தினா ஆச்சா?”

சௌந்தரியும் விஜயாவும் அவர்களின் குடும்பத்தோடு இருக்க, “பொண்ணுங்களுக்கு என்ன தேவைன்னு பாருங்க” என்று அந்த பேரன்களின் மனைவிமார்களை ஏவினார்.

ஆம்! இரண்டு நாட்களாக மூச்சு விடக் கூட முடியாத அளவிற்கு ராஜராஜனுக்கு வேலை. எல்லாம் சிறப்பாய் நடக்க வேண்டும் என்று ஒன்றொன்றும் பார்த்து பார்த்து அவனின் மேற்பார்வையில் செய்ய வேலைகள் அதிகமாகி விட்டன.

மூன்று வேளையும் அன்னதானம், மூன்று நாட்களுக்கு ராயர் குடும்பத்தின் செலவே!

கோவிலை கட்டியது மனோவின் மனைவி கரிஷ்மாவின் கட்டுமான கம்பனி என்றதால் அதாகப் பட்டது செலவு அவர்களினது என்றதால், மனோவிற்கும் கரிஷ்மாவிற்கும் தான் பட்டம் கட்ட வேண்டும் என்று ராஜராஜன் சொல்லி விட்டான்.

மிக அதிகமான சலசலப்பு தான். “அதெப்படி தங்களது ஊரில் அவர்களுக்கு கட்ட முடியும்?” என்று.

“ஏன் அன்பழகன் எந்த ஊர்?” என்று அவர்களின் வாயை அடைத்து விட்டான்.

இது முடிவான உடனே மனோவிற்கு அழைத்து, “இப்படி தான் சொல்வார்கள், உனக்கு என்ன செய்ய பிரியமோ அதனை செய்” என்றும் விட்டான்.

சொன்னதை கற்பூரமாய் பற்றிக் கொண்ட மனோவும் “என் அப்பா அம்மா இருக்க, எப்போதும் எதிலும் முதல் மரியாதை அவர்களுக்கு தான்” என்று சொல்லி விட,

இப்போது இன்னும் அதிகமான சலசலப்பு தான் குடும்பத்தில்!

அதெப்படி சுவாமிநாதன் இருக்க அவருக்கு தான் கொடுக்க வேண்டும் என்று மற்ற மக்கள் அனைவரும் பேச, அதிலும் தமிழ்செல்வன் என் அண்ணனுக்கு தான் என்று எகிறிக் குதித்து பேசினார்.

நாச்சி எதிலும் தலையிடவில்லை, அங்கை “எதுக்கு எங்கப்பா அம்மா? இது இல்லைன்னா என்ன? ஏன் இப்படி பண்றீங்க?” என்று தனிமையில் அவனிடம் சண்டையிட்டாள்.

ராஜராஜன் கேட்கவில்லை என்ற போது, “ஒன்னும் தேவையில்லைன்னு நான் பேசப் போறேன், நீ கூட தான் எங்கம்மாவை ஓடிப் போனவ சொன்ன, இப்போ என்ன நல்லவன் மாதிரி பேசற?” என்று வார்த்தையை விட,

“தொலைச்சிடுவேன், நீ வாயை மூடிட்டு இரு. நான் நல்லவன்னு யாருக்கும் ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியமில்லை, முக்கியமா உனக்கு என்னைக்கும் பண்ண மாட்டேன் போடி, ஏதாவது எனக்கு தெரியாம என்னை மீறி பேசினேன்னு தெரிஞ்சது என்ன பண்ணுவேன்னு கூட தெரியாது” என்று அவளை பேசக் கூடாது என்று தடை செய்து விட்டிருக்க,

அங்கைக்கும் அவனிற்கும் முட்டிக் கொண்டு நின்றது. இத்தனை சலசலப்பு அவளுக்கு பிடித்தமில்லை. “என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் என்ன? போங்கடா நீங்கல்லாம். அவங்க மரியாதைக்கு உரியவங்க தான். புதுசா யாரும் மரியாதை குடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று நினைப்பு.

ஆனால் அங்கையும் சரி, ராஜராஜனும் சரி, இந்த சலசலப்புகள் எதுவும் மனோவிற்கோ, ராஜலக்ஷ்மிக்கோ, அன்பழகனிற்கோ தெரிய விடவில்லை.

தெரிந்தால் அவர்கள் இதன் பொருட்டு இந்த கும்பாபிஷேகம் முடியும் வரை ஊர் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டர் என்பது திண்ணம்.

அன்பழகனிடம் பழகிய வரை ராஜராஜனுக்கு தோன்றியது இது தான். ராயர் மீது எவ்வளவு பற்றோ அதற்கு சற்றும் குறையாமல் ஊரின் மீதும் பற்று என்று சொல்லலாம். அங்கையை இங்கே கொடுத்திருப்பதால் ஊரோடு அவருக்கு இனி தொடர்பு தான்.

ஆனாலும் இந்த ஒரு மரியாதை அவருக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பினான். உண்மையில் அவர்களின் பிரச்சனைகள் தீர்ந்து, கோவில் வந்தது அங்கே மனோவினால் தானே. அதனைக் கொண்டே ராஜராஜன் இதனை செய்தான்.

இவன் இப்படி செய்து விட்டதால் மற்ற மக்கள் வேலையை இழுத்துப் போட்டு செய்யவில்லை. அதனால் ராஜராஜன் தான் எல்லாம் பார்க்கும் படி ஆகிற்று. ஊர் மக்கள் எல்லாம் உடன் செய்தனர்.

அண்ணன்களிடம் செய்யுங்கள் என்று சொன்னால் செய்திருப்பர். அவனை மீறவோ அலட்சியம் செய்யவோ மாட்டர். ஆனால் அவன் சொல்லவில்லை. “போங்கடா” என்று விட்டு விட்டான்.

சுவாமிநாதனுக்கு பரிவட்டம் கட்டவில்லை என்ற கோபம் தமிழ் செல்வனுக்கு. அதனால் அந்த கோபத்தை ராஜராஜனிடம் காண்பிக்க.. அவன் திரும்பி நடக்க.. இப்படியாக ஒரு சின்ன களேபாரம்.

கெளரி சங்கரும் நந்த குமாரும் வேகமாய் சென்று அவனை பிடித்து இழுத்து வந்தனர், “வாடா” என்பது போல..

முகத்தை தூக்கி கொண்டு தான் வந்தான்.

ராஜலக்ஷ்மி இதனை பார்த்தவர் அருகில் வந்த அங்கையிடம் “ராஜனுக்கு கோபம் போல” என்றார்.

“இருந்துட்டு போகுது, அதுக்கென்ன?” என்றாள் அலட்சியமாய்.

“சமாதானம் பண்ணு அம்மு, இங்க வந்து நிக்க வை”

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. உன்னை மாதிரி உன் புருஷன் பின்னயே சுத்திட்டு இருப்பேன்னு நினைச்சியா? அதெல்லாம் சமாதானம் ஆனா ஆகறார், ஆகாட்டி போறார். நீ சாமி கும்பிடு” என்று வார்த்தைகளால் கடிக்க,

“உனக்கு எதுக்கு கோபம்?” என்றார் புரியாமல்.

“எதுக்கோ மா, என் வாயை பிடுங்காத” என்றாள் அவ்வளவு கோபமாய்.

அவர் பின் பேசவில்லை.

அப்போது கரிஷ்மாவின் அப்பா, சில சொந்தங்களோடு வர, அங்கே அவர்களுக்கு ராஜ மரியாதை தான், அவர்களால் தான் எல்லாமே. அவர்களோடு தான் கரிஷ்மா வந்தாள், வந்தவள் ஸ்ருஷ்டியை தேட, அவளோ அத்தையை விட்டு வரவில்லை. அதனால் அங்கை தான் அவளை தூக்கிக் கொண்டு அவர்களின் புறம் வரும் படி ஆகிற்று.

தாத்தாவை பார்த்ததும் விகாஸ் அருகில் வந்தான்.

மனோ இவர்களை பார்த்ததும் அவனின் கையில் இருந்த ரதி பூர்ணிமாவை தில்லையிடம் கொடுத்திருக்க, அவரோ பேரனை பார்த்ததும் அவனை கொஞ்சியவர், நேராக சென்றது அன்பழகனிடம் தான்.

அவரின் அருகில் சென்றதும் அப்படி ஒரு பவ்யமான உடல் மொழி. மரியாதையாய் அவரிடம் சில வார்த்தைகள் பேசி பின்னர் தள்ளி வந்து பேரனிடம் ஏதோ கேட்டார்.

பின்னே விகாஸ் தானே அவரின் வாரிசு, கரிஷ்மா ஒரே பெண் அவர்களுக்கு.

அவனும் வேகமாய் சென்று தில்லையிடம் இருந்த ரதி பூர்ணிமாவை இறக்கி விடச் சொல்லி, அவளின் கை பிடித்து பொறுமையாய் மெதுவாய் தாத்தாவிடம் அழைத்து வந்தான்.

இதற்கு ஸ்ருஷ்டியை இன்னும் அங்கையை விட்டு அகலவில்லை.

அவரும் ஆசையாய் ரதியை கையினில் தூக்க சில நொடி இருந்தவள், பின் வேகமாய் இறங்க, கரிஷ்மா அவளை கையில் தூக்க, அவளிடம் இருந்தும் இறங்கி விகாஸ் கையினை பிடித்து நின்று கொண்டது அந்த பட்டுக் குட்டி.

“என்ன விக்கி உங்க தாத்தா கிட்ட ரதியை காமிச்சு சொல்ற?” என்று அங்கை கேட்க,

“ம்ம், என் பொண்டாட்டி சொன்னேன்” என்று சொல்ல,

அப்படியே அதிர்ந்து விட்டால் அங்கை.

பின் “என்ன விக்கி இது?” என்று அதட்டி, “இப்படி சொல்லக் கூடாது” என்று மிரட்டினாள்.

அவன் ரதியின் கை பிடித்து அழைத்து சென்று ராஜராஜனிடம் நின்று கொண்டான்.

“டேய், அவர் தான் சொல்லிக் கொடுத்தாரா உனக்கு?” என்று கோபமாய் கேட்க,

ராஜராஜனிற்கு அப்படி ஒரு கோபம் பொங்கி விட “நீ ரொம்ப பேசற அங்கை” என்று சொல்லி விட்டான்.

அங்கே எல்லோர் முன்னும் இருவரும் சண்டை கோழிகளாய் முறைத்து சிலிர்த்து நின்றனர்.
 
:love: :love: :love:

உன்னை மாதிரி புருஷன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பேன்னு நினைச்சியா???
சமாதானம் ஆனா ஆகிறார்........ அகட்டி போறார் :D:D:D
செமடா அங்கை....... எங்கே போகப்போறார்??? வருவாரு அவராவே.....
கையில என்னடா காயம்???

அப்பாவும் பையனும் தான் செம கோபத்தில் :mad:
மற்றதெல்லாம் மனோ சொன்னது போல் மாங்கா மடையர்கள் தான் போல :p

இப்போவே பொண்டாட்டின்னு சொல்லிக்கொடுத்தது யாருப்பா???
விகாஸ் குட்டி இப்போவே ராஜன் வீட்டில் செட்டில் ஆகிடுவான் போல.......

கரிஷ்மா பேசவேயில்லையே....... பேசாமலேயே சாதிக்கிறா போல.......

இன்னமும் அங்கை படிப்பு சொல்லலை மல்லி........
 
Last edited:
ஒரு Activa-வில் 5 பேரா:eek::eek::eek:
போலீஸ் புடிக்கலை??? சிக்கியிருந்தால் 5000 பைன் போட்டிருப்பாரே.......
இன்னுமா ஒரு கார் வாங்கலை???
 
Last edited:
இன்னொரு பார்ட்டும்‌ கொடுங்கம்மா
பத்தல...பத்தல
அடேய் ஆறு வயசு அரை டவுசர் விகாஸ் என்னடா இப்படி பேசுற..
But really I have seen kids
எங்க relative ல ஒரு மாமி கு பாப்பா பிறக்க முன்னாடி அதோட அண்ணனும்
அவன்‌ ப்ர்ண்ட் they are also relatives
அவன் சொன்னான் எனக்கு தங்கச்சி பாப்பா irundha you are the மாப்ளன்னு
இதுல வேற you are good உன் தம்பி nallavan ilanu
அடேய்னு irundhuchu
Kadaisila it was a baby boy :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Last edited:
Hi மல்லி சிஸ்
இது என்ன
புருசனும் பொண்டாட்டியும் சிலிப்பிக்கிட்டு இருக்காங்க
கரிஷ்மா family கெத்து தான்.
இளைய தலைமுறை இப்பவே ரொம்ப குளோஸ்.
 
Last edited:
Top