Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 3 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் - 3

சென்னையில்

தன்னைச் சுற்றி சூழ்ச்சி வலை பின்னப்படுவதை அறியாமல், எப்போதும் போல் அன்றும் காலையில் எழுந்தவுடன், காலைக் கடனை முடித்து தன் தந்தை ரூமுக்கு சென்று காலை வணக்கம் செலுத்தினாள். பின் அவருடனே சிட் அவுட்டில் அமர்ந்து காபியை பேசிக்கொண்டே அருந்தினாள். இது தான் இவர்களின் தினம் தோறும் நடக்கும் வாடிக்கை. பின் தன் தந்தையிடம் விடைப் பெற்று காலேஜுக்கு செல்ல கிளம்பினாள்.

காலேஜ் கேண்டினில் ஷாலினியின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள் பத்மினி. “ஏன்டி பீச்சில் இவள் பேசுனதே டிவியில் காமிச்சாங்க பார்த்திங்களா?. பெற்றவர்கள் நடத்தி வைக்கும் திருமணம் தான் சிறந்ததாம்! நூத்தி கிழவி மாதிரி பேசுனாடி.”

அதற்க்கு மற்றொரு தோழி வரா, “சரி அவள் தான் திருமணத்தை பற்றி நூத்து கிழவி மாதிரி பேசியிருக்கா? உன்னுடைய ஒபினியன் என்ன?” “இப்போ கேட்டியே இது சரியான கேள்வி, முதலில் சூப்பரான ஒரு பையனை காதலிக்கனும்.”

அதற்க்கு வரா “ஏய் இரு, இரு நீ சூப்பரான பையனை லவ் பண்றது ஒகே, அவன் திருப்பி உன்னை லவ் பண்னுவானன்னு யோசிக்க மாட்டியா?” அதற்கு ஷாலினி மனதினில் நம்ம தோழிக்கு இவ்வளவு அறிவு இருக்க கூடாது என்று நினைத்துக்கொண்டே “சரி, சரி ஒரு சுமாரான பையனை காதலிக்கனும், எங்க காதலுக்கு அவங்க வீட்டிலேயும், சம்மதிக்ககூடாது. எங்க வீட்டிலேயும் சம்மதிக்ககூடாது”

அதற்கு வரா “அப்ப உங்களுக்கு யார் கல்யாணம் செய்து வைப்பாங்க” என்ற கேள்விக்கு, “அது தான்டி சொல்ல வருகிறேன். முந்திரிக்கொட்டை மாதிரி நடுவுலே… நடுவுலே… என்னை டிஸ்ட்டப் பண்ணாதே. அப்புறம் எனக்கு ஒரு ப்லோவா வராது.” அதுக்கு ஒன்றும் சொல்லாமல் தலையைய் மட்டும் அசைத்தாள். அமைதியா இருக்காங்களாமா அதை இப்படி சிம்பாளிக்கா காமிக்கிறா. அஃது என்று தன் பேச்சை தொடர்ந்தால்.

“இரண்டு பேரும் ஓடி போவோம். அப்போ எங்க அப்பாவின் ஆட்களும், அவங்க அப்பாவின் ஆட்களும் எங்களை தேடுவாங்க. அந்த பிட்வின் கேப்பில் ரொமன்ஸ் பண்ற த்ரில்லிங் இருக்கே சூப்பரோ, சூப்பர். இதெல்லாம் இந்த அரஞ்டு மேரஜில் வருமா?” என்று தான் ஏன் லவ் மேரஜித்தான் சிறந்தது என்ற தன் வலுவான காரணத்தை கூறினாள்.

இவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பத்மினி. “ஷாலு இன்னும் த்ரில்லிங்கா இருக்க நான் உனக்கு ஒரு யோசனை சொல்லவா?” என்ற பத்மினியை ஷாலினி ஒரு மார்கமாக பார்த்தால். ஏன் என்றால் அவளை பற்றி நன்கு அறிந்திருந்தாள். பத்மினி அனைத்தையும் பொறுமையாகத்தான் கேட்பாள். ஆனால் திருப்பி அவள் பதில் அளித்தால் மற்றவர்கள் பல்பு வாங்க வேண்டியதுதான்.

இதை அறியாத வரா, “ சொல்லு பத்தூ நீ சொன்னா சரியா தான் இருக்கும். ஏன்னா நம்ம கிளாஸில் நீதான் டாப்பார்.” அதற்க்கு ஷாலினி “அது தான் அவள் சொல்லிட்டாலே சொல்லும்மா சொல்லு” மனதினில் எப்படியும் பல்பு கொடுக்க போரா அது எத்தனை வோல்ட்டேஜ் அப்படின்னு பார்க்கலாமே.

“பேசாமே நீ கல்யாணம் பண்ண கூட்டிட்டு போறவன் ஒரு தீவிரவாதியா இருந்தா கூட சேர்ந்து போலீசும் தேடும். இன்னும் கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்”. என்ற தோழியை கொலைவெறியோடு பார்த்தாள் ஷாலினி.

இவை அனைத்தையும், பக்கத்தில் இருந்த ஒருவன் தன் லேடஸ்ட்டு ஐபோனில் வீடியோ எடுத்துக் கொண்டிந்தான் காபி அருந்தியவாறே.

“சரி, சரி நாம் கொஞ்சம் படிப்ப பத்தியும் பேசலாமா? ஏன்னா நம்ம படிக்கதான் காலேஜ் வந்து இருக்கோம்னு நினைக்கிறேன்.” என்ற பத்மினியை பார்த்து ஷாலினி, “நாங்க மட்டும் என்ன கபடி ஆடவா வந்தோம். நாங்களும் படிக்கதாம்மா வந்து இருக்கோம்.” என்ற ஷாலினியிடம் “கொஞ்சம் சீரியஸா நான் சொல்வதை கேட்கிறீர்களா…” என்ற பத்மினியின் கேள்விக்கு பிறகு அங்கு அமைதி நிலவியது.

“ஷாலு எங்க அப்பா, ஒரு ஆடிட்டர் பத்தி சொல்லி இருக்கார் அவர் சிபாரிசுக்கு எல்லாம் மதிப்பு கொடுக்க மாட்டாராம். உண்மையான திறமை இருக்கிறவங்களுக்குதான் தன் அஸிஸ்டெண்டா சேர்த்துப்பராம். எனக்கு அவர் கிட்ட சேரனுமின்னு ஆசை.

பி. காமில் நல்ல பெர்சென்டேஜ் எடுத்தா அவரே நல்ல கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட்டு பின் தன் அஸிஸ்டெண்டாகவும் சேர்த்துப்பாராம். அதனால் நான் நல்லா படிச்சி நல்ல மார்க்கு வாங்கவேண்டும் “ என்ற தோழியை எப்போதும் போல் பெருமையுடன் பார்த்தாள் ஷாலினி.

ஷாலினிக்கு தெரியும் பத்மினி எப்படியும் நினைத்ததை முடிப்பாள் என்று. ஆம், அவள் தான் பத்தாம் தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம் வந்தாள். அவள் காமெர்ஸ் குரூப் எடுத்தற்க்கு ஏன் முதல் குரூப் எடுக்கவில்லை, உன் மார்க்குக்கு எம்.பி.பி.எஸ் கண்டிப்பா கிடைக்கும் என்று அனைவரும் சொல்லியும், இவள் இந்த குரூப்பையே எடுத்து படித்தாள்.

அதுவும் அவள் அப்பா எனக்கு இரண்டாவதை விட முதல் தான் பிடிக்கும் என்று சொன்ன காரணத்திற்க்காகவே பன்னிரெண்டாவது தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்தாள்.

பத்மினியின் தந்தை கேசவமூர்த்தி. சென்னையிலேயே பத்மினி த்ரி ஸ்டார் ஓட்டலை மூன்று இடத்தில் நடத்தி வருகிறார். அவருக்கு அது என்னவோ தெரியவில்லை எப்போதும் ஆடிட்டருக்கும் அவருக்கும், செட்டே ஆகாது.

எப்போதும் இயர்ரெண்டில் பிரச்சினையில் தான் முடியும். அதுக்காகவே தன் தந்தையின் பிரச்சினையை தீர்ப்பற்க்கு இவள் இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்தால் என்றால், தன் தந்தையே அந்த ஆடிட்டரைப் பற்றி இவ்வளவு பெருமையாக சொல்லும் போது அந்த முயற்ச்சியில் வெற்றி பெறாமல் இருப்பாளா?

அவளுக்கு தன் தந்தையே உலகம். தன் தோழியைப்பற்றி பெருமையுடன் நினைத்துக் கொண்டே வகுப்பறைக்கு தன் தோழிகளுடன் சென்றாள் ஷாலினி. பத்னிமியின் இந்த தந்தை பாசமே அவள் வாழ்க்கையில் சதுரங்கம் விளையாடப் போவது பாவம் அந்த பாச தோழிக்கு தெரியாது.

பத்மினி தன் தந்தை, தோழி, படிப்பு என்று தன் வாழ்க்கையை அனுபவித்து வாழந்தாள். இடையிடையே தன் பாட்டியையும் வெறுப்பேற்ற மறப்பதில்லை. அவளுக்கு பாட்டியை மிகவும் பிடிக்கும் அதுவும் அவள் தாய் தன்னுடைய ஐந்தாம் வயதில் ஜுரம் என்று படுத்தார் பின் அவர் உடம்பு சரியாகவே இல்லை.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் முடியவில்லை. அதுவும் மருத்துவர் மருந்தால் மட்டும் குணம் படுத்த முடியாது. அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் வேண்டும் அவர்களுக்கு தான் உயிர் வாழ்வதில் சிறிதும் விருப்பமில்லாத பட்சத்தில் எங்களாலும் ஒன்றும் பண்ணுவதற்க்கு இல்லை, என்று கை விரித்து விட்டனர். பின் உடல் நிலை இன்னும் மோசமாகி இறந்தே விட்டார்!!

இதெல்லாம் எப்போதாவது அப்பா வீட்டில் இருக்கும் பட்சத்தில் பாட்டி தன் தந்தையிடம் தன் ஆதங்கத்தை சொல்லுவார். மகராசி மனதில் இருக்கும் வேதனையை வெளியில் சொல்லாமலேயே போய் சேர்ந்து விட்டார் என்று. அவளுக்கு அப்போது எல்லாம் அப்பாவை திருமணம் செய்துக்கொண்டு அவர் எப்படி மனவேதனையில் இறக்க முடியும்?

இந்த பாட்டிதான் தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தன் மனதில் நினைத்துக் கொள்வாள். அப்போது மட்டும் பாட்டியின் மீது கோபம் வரும். அதை தவிர பாட்டியை பத்மினிக்கு மிகவும் பிடிக்கும்.

இதைப்பற்றி பேச்சு எடுத்தால் தந்தையும் எதுவும் சொல்ல மாட்டார்கள், பாட்டியும் எப்போதாவது ஏதாவது சொல்ல வந்தால் தந்தைக்கும், பாட்டிக்கும் இதனால் சண்டை வருவதால் இவளும் அதைப்பற்றி கேட்பதை விட்டு விட்டாள்.

அவளை பொருத்த வரை வாழ்க்கை அழகாக செல்கிறது. தாயுக்கு தாயாக தந்தையே அவளுக்கு அன்பு செலுத்துவதாலும், தந்தையின் மீது நம்பிக்கை இருப்பதாலும் அந்த பேச்சை எடுப்பதில்லை.

டெல்லி

வேக நடையுடன் தன் ரூமுக்கு வந்த பிரதாப் அசோக்கை அழைத்தவாறே தன் சீட்டில் அமர்ந்தான். பின் அசோக் வந்ததும் பைலை பார்த்துக்கொண்டே, “என்ன அசோக் சென்னையில் டிடெக்டிவ் வைத்து விசாரிக்க சொன்னனே அதுபற்றி என்னவானது. அவுங்களோட புல்டீடையில் வேண்டும்.

இன்னும் எனக்கு இங்க இரண்டு நாளில் வேலை முடிஞ்சுடும். பிறகு ஆறு மாதம் சென்னையில் தான் இருக்க போகிறேன். அங்க த்ரி ஸ்டார் ஒட்டல் ஒன்று விலைக்கு வருது அதை விலைபேசிட்டு இருக்கேன். அனேகமா நம்ம டீலீங் முடிந்துவிடும்.

அதனால் அங்கும் நம்ம புது பிரான்ச் ஒன்று ஒப்பன் பண்ணபோகிறோம். நீ சீக்கிரம் இந்த டீடையில்ஸ் கொடுத்தால் இரண்டு வேலையும் ஒன்றாய் முடித்துவிடுவேன்.” என்று கூறினான்.

என்னவோ தன் வாழ்க்கையும் வேலைமாதிரி திட்டம் தீட்டும் தன் முதளாளியை வேதனையுடன் பார்த்திருந்தான். தன் கேள்விக்கு பதில் வாரமல் போகேவே, தலை நிமிர்ந்து அசோக்கை ஏறிட்டான்.

அவன் முகத்தை பார்த்தே அவன் எண்ண போக்கை புரிந்துக் கொண்ட பிரதாப் “அசோக் நான் சொல்லுவதை மட்டும் செய். இந்த சென்டிமென்ட்டு எல்லாம் எனக்கு பிடிக்காது என்ன புரிந்ததா? ஏன்னா இனிமே நிறைய இது மாதிரி வேலைப்பார்க்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு முறையும் என்னால் உனக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. புரிந்ததா? அப்புறம் வீட்டில் இதைப்பற்றி மூச்சு விடகூடாது.” என்று ஆணையிட்டான்.

சரி என்று தலையசைத்து தன் கேபினுக்கு சென்று அமர்ந்தான் அசோக். தன் வேலையை மடிகணினியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சென்னையில் இருந்து ஒரு மின் அஞ்சல் வந்தது. அதன் அவசியத்தை சற்று முன்பு தான் பிரதாப்பின் வாயிலாக காதில் ரத்தம் வரும் வரை சொற்பொழிவுக் கேட்டுக் கொண்டதால், தன் வேலையை உடனே நிறுத்திவிட்டு பிரதாப்பின் கேபினுக்கு அனுமதிக் கேட்டுக் கொண்டு நுழைந்தான்.

அசோக்கை பார்த்தவுடன் என்ன என்று தன் ஒற்றை புருவத்தை மேல் நோக்கி கேள்வி எழுப்பினான். எப்போதும் போல் அவன் அந்த செயலில் அவன் கம்பிரத்தையும், மேனரிசத்தையும் தான் வந்த வேலையையும் மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக்கை புரிந்ததால் சிரித்துக் கொண்டே “என்னை பிறகு ரசிக்கலாம். இப்போது வந்த விஷயத்தை சொல்” என்றான். அசோக் மனதினில் ஆண் மகன் நானே என்னை மறந்து ரசிக்கின்றபோது, பெண்கள் அவனின் மேல் அவர்களாகவே வந்து விழுவதற்க்கான காராணம் விளங்கியது.

“என்ன அசோக் என்ன பார்த்தது இன்னும் பத்தலையா இல்லே நீ என் பின்னாடியே சுத்துவதை பார்த்து மற்றவர்கள் சொல்வது போல அவனா நீ?.”என்ற பிரதாப்பை பார்த்து.

“ஏய்…” என்றான் தன் நிலை மறந்து. ஆம், அவன் எப்போதும் வேலை நேரத்தில் நண்பனுக்கு உண்டான சலுகையை எடுத்துக் கொள்ள மாட்டான். அவனிடம் வேலை பார்க்கும் மற்றவர்களை போல தான் அழைப்பான். ஆனால் இன்று நண்பனின் இந்த பேச்சில் அதிர்ந்து இவ்வாறு அழைத்து விட்டான். பின் என்ன அவனாவது சில பல விஷயத்தை பார்த்து விட்டான்.

இவன் இன்னும் கட்ட பிரம்மாசாரியே, அவன் தன் திருமண வாழ்க்கையை பற்றி பல கனவு கண்டுள்ளான். இவன் இந்த பேச்சால் யாரும் பெண் கொடுக்கவில்லை என்றால் அந்த அதிர்ச்சியில் தான் அழைத்து விட்டான். அவன் கவலை அவனுக்கு.

பின்பு தன் நிலைக்கு வந்த அசோக் சாரி சார் என்று தான் வந்த விஷயத்தைப்பற்றி சொன்னான். “சார் சென்னையில் இருந்து நம்ம கேட்ட டிடையில்ஸ் அனுப்பி இருக்காங்க” என்று சொல் தன் காதில் விழுந்த அடுத்த நொடி தன் வேலையை அனைத்தையும் மூடிவைத்து அசோக்கை தன் பக்கதில் தானே சேர் இழுத்து போட்டு அமரவைத்தான்.

அவன் முகத்தில் அப்படி ஒரு டென்ஷன் அவனிடம் பழகிய இத்தனை வருடங்களில் இந்த முகபாவம் அசோக்குக்கு புதியது.

தானும் தன் சிந்தனையை அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு அவன் பக்கத்தில் அமர்ந்து, தன் லேப் டாப்பை திறந்து மெயில் ஒப்பன் செய்து பிரதாப் பக்கம் நகர்த்தினான். பிரதாப் தன் பார்வையை அதில் பதித்தவாறு “போட்டோவுடன் தானே அனுப்பி இருக்கிறார்கள்” என்ற கேள்விக்கு…. “ஆமாம் சார் சில நீங்க சொல்லாதையும் அனுப்பச் சொல்லி இருந்தேன் சார்” என்ற பதிலில் கேள்வியாய் அவனை பார்த்தான் .

“பார்த்தா உங்களுக்கே தெரிஞ்சுடும் சார்“, என்ற பதிலில் தன் கவனத்தை திரும்பவும் லேப்டாப்பில் செலுத்தினான். அதில் இருக்கும் செய்தியை கவனமாக படித்து உள்வாங்கிக்கொண்டான். அதில் முதல் வரியில் அக்குடும்பத்தின் தலைவன் கேசவமூர்த்தி தொழில், பல ஸ்டார் ஓட்டலின் முதலாளி என்பதை படித்து அசோக்கை பார்த்தான்.

அசோக்கும் அப்போது பிரதாப்பைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் புன்னகையுடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர். கேசவா உன் தொழிலே உன்னிடம் நெருங்குவதற்க்கு தோதாக அமைந்திருக்கிறதே இதில் இருந்தே நான் நினைப்பதை சீக்கிரம் முடித்து விடலாம் என்று மகிழ்ந்து அடுத்ததை படிக்க ஆரம்பித்தான்.

அதில் கொடுத்த அறிக்கையில் தன்னிலை மறந்து சிலையாய் அமர்ந்து விட்டான். ஆம் அதில் தலைவி என்ற இடத்துக்கு நேர் இறந்து பதினைந்து வருடம் என்று இருந்தது.
 
???

Shock நியூஸ் வந்துடுச்சே கேட்காமலேயே......
பத்மினி ஆடிட்டர் கனவோடு......
பிரதாப் என்ன பண்ணபோறான்???
அம்மாக்கு எப்படி சொல்வான்???
 
Last edited:
Top