Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 24

Advertisement

உன்னைத் தாங்க நாங்க இருக்கோம்ன்னு சொல்லியே கழுத்தறுத்துட்டாங்க சரண்யா குடும்பம்.... 😡😡😡 அதுவும் ஒன்னுக்கு ரெண்டு பெண் பிள்ளைங்கன்ன உடனே மொத்தமா விலகி நின்னுட்டாங்க....

பொண்ணைப் பெத்தவங்களுக்கு பையன் அடிவாங்குனது பெரிசா போச்சு... பிரச்சனையை பேசி தீர்க்க எந்த சின்ன முயற்சியும் கூட செய்யல...😠😠😠

வெற்றி பொண்டாட்டி தானே அடிச்சாலும் என்ன பேசினாலும் எங்க போகப் போறான்னு அலட்சியம்... அவன் வார்த்தைகள் குடுத்த வலி எதுவும் அவனுக்கு தெரியல....

அவ போனதுக்கு அப்புறம் சேருறதுக்கு இவ்வளவு முயற்சி பண்றவன் அவளுக்கு அவன் மேல நம்பிக்கை வர்ற மாதிரி எதுவுமே செய்யல... அதான் அவ குடும்பத்தை நம்பி இருந்துட்டா....

வேல்முருகன் இப்போ தான் உருப்படியா ஒரு காரியம் செய்யப் போறாரு.... அந்த வீடு சரண் ஆசைப்படி கட்டினது.... அதுக்குள்ள இருந்து தனத்தை துரத்தணும்.... அவங்க சரணையும் பச்சை பிள்ளைகளையும் ரோட்டுல நிறுத்தின மாதிரி.... 😈😈😈😈😈😈
 
புது வீடோ பழைய வீடோ எதுவானாலும் தனி வீடு அது போதும்... இதை வேல்முருகன் சொல்ல வேண்டி இருக்கு …. இவ்வளோ கேட்டும் இந்த முட்டாள் வெற்றி சரண்யா பத்தி யோசிக்கவே மாட்டேங்குறான் ….இவன் கையை எதிர்பார்க்காம இருக்கிற வழிமுறை தான் சரண்யா யோசிக்கணும் ….
 
சரண்யாமா தனம் பூனை இல்லை பூதம் 👹👹👹👹👹.

அடேய் வெற்றி உன்னை தெளிய வைக்க ஒருத்தர் எப்பவும் வரணுமா??? உனக்கே புத்தி இல்லையா இப்போ கூட உன்னோட தாய் (பேய் )கிட்ட போனவுடன் அது சரண்யாவை குதறும் என்று உனக்கு தெரியாதா 😏😏😏😏உங்க அப்பா வந்து சொல்லவும் புத்தி வருது 🤦🤦🤦🤦🤦.
பேய்(தனம்) கூட குடும்பம் நடத்தினவருக்கு(வேல் முருகன்) தான் பேய் எப்படி பட்டது என்று தெரியும் பேய் பெத்ததுக்கு (வெற்றி ) தெரியாதே அதனால் தான் வெற்றிக்கு தெரியவில்லை
 
Facebook ல கதை நல்லா இருக்கு என்று என் சகோதரி (தரணி) பதிவை பார்த்தேன் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பதிவை படிக்க தொடங்கினேன். இரவு உறங்கும் முன் 14 பதிவை படித்துவிட்டு, இன்று 1.45am இருந்து ஓரே மூச்சாக 24 பதிவு வரை முடித்து விட்டேன், சரண்யா அவள் கணவனுடன் மனதார சேர்ந்ததும் கதையை முடிக்காமல் அவள் சந்தோசமாக வாழ்வதை யும் சில பதிவுகள் தந்த பிறகு கதையை முடிக்கவும் நன்றிகள்
 
Top