Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென வானிலை மாறுது!-1

Advertisement

praveenraj

Well-known member
Member

"உங்காளு படம் ரிலீஸ் ஆகுது போல?"

"ஹா ஹா எப்படியும் ஊத்திக்கும்..."

உடனே ஓட்டிக்கொண்டிருந்தவன் ஹைபை கொடுக்க கைகளை பின்னால் நீட்டினான்,

இவனின் செயல்களில் காண்டனவள் முட்டைக்கண்களைக் கொண்டு உருட்டி மிரட்ட

"என்ன முறைப்பு?"

"ஏய் எதுக்கு அவளை அதற்ற?" என்றான் அவன்.

"பார்ரா உனக்காக தானே பேசுறேன்?"

"இல்லம்மா எங்களுக்குள்ள யாரும் வரவேணாம். ப்ளீஸ்..."

"பார்ரா அவ்வளவு ஆகிடுச்சா?"

"ஆமா" - அவள்

"அடிங்கு குந்தாணி. ஊமை குசும்பி..."

"வேணாம் பாப்பா..." என்றான் அவன்.

"மறுபடியும் பார்ரா!"

"ஓயாம எல்லாம் உன் மூஞ்சியைப் பார்க்க முடியாது ..."

"காமெடி? நாளைக்கு ஞாபகப் படுத்து நாளானைக்கு வேணுனா சிரிக்கிறேன்..."

அவளோ தொடையைக் கிள்ள

"அடிங்கு என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றாள் அவள்.

"ஒருத்தர் இன்னொருத்தர..."- அவன்

"டேய் உங்க அலும்பு தாங்கல. ஈஸ்வரா என்ன ஏன் இந்த கழிசடை பசங்க கிட்டயெல்லாம் கூட்டு சேர்க்க வெக்கிற?" என்றவளின் தொடை பலமாகவே கிள்ளப்பட,"சரி சரி என் ஏன் இந்தக் கூட்டத்துக்கு மத்தியில பெத்து விட்டுட்டுப் போன?" என்றாள்.

ஹா ஹா ஹா என்று இருவரும் சிரிக்க,

"ஆமா ஜூஸ் எங்க?" என்றாள் அவள்.

"உன்கிட்ட தானே கொடுத்தேன்? எங்கடி?"

"டேஸ் போர்டுல..."

"யாராவது அங்க போய் வெப்பாங்களா?"

"எடுடா..."

"என்னது?"

"எடுடானு சொன்னேன்" என்றவள் நமட்டு சிரிப்பு சிரிக்க,

அவளோ மீண்டும் கிள்ளினாள்

"எல்லாம் என் கிரகம். என்னடி ஆளாளுக்கு மிரட்டுறீங்க . இருங்க உங்கள நான் டார்சர் பண்றேன் பாருங்க..." என்றவள் முன்னே எட்டி டேஷ்போர்டுக்கு வர,

அதற்குள் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் எட்டி டேஷ் போர்டை திறக்க

"ஏய் ஏய் ஏய்.!!!.."

................................................................


"மாம் மாம்... மம்மி..."

கத்தல் ரூமைவிட்டு வெளியே இருந்தவர்களை வந்தடைய, சந்தோசப் படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று இருவரும் ஆவலாய் உள்ளே விரைந்தனர். கூடவே விஷ்ணு பிரசாத்தும் உள்ளே வந்தார்.

எழ முயன்றவனால் முடியவில்லை. அவன் சிரமப்பட

"ஸ்ட்ரைன் பண்ண வேணாம்..." என்றபடியே அவன் அன்னை உள்ளே வந்தார்.

முகமெல்லாம் சதைப்போட்டு சுற்றிப் பார்க்க அது அவன் அறைதான் என்று புரிந்தது. ஆனால் அது ஒரு ஹாஸ்பிடல் செட் அப்பில் காட்சியளித்தது.

எதுவும் புரியாமல் விழித்தவனை ஓடிவந்தவர் வாஞ்சையாய்த் தடவி முத்தம் வைத்தார்.

"சிந்துஜா எங்க?... எங்க?" என்றான் அவன்.

"......................."

"லேகா எங்க?"

"....................."

"நான் இங்க எப்படி வந்தேன்?"
"டென்ஷன் ஆகாத ப்ளீஸ் ரிலாக்ஸ் இந்திரா..."

மீண்டும் சுற்றிப்பார்த்தவன்,"எவ்வளவு நாளா இப்படி இருக்கேன்?"

சகுந்தலா அழ,

"மாம் இப்போ சொல்லப்போறய்யா இல்லையா?"

"ரிலாக்ஸ் வர்மா..."

அவரின் கையை இவன் உதறிவிட்டு மீண்டும் கத்தினான்.

வேறுவழியின்றி இன்ஜெக்ஷ்ன செலுத்தினார் எழில்வேந்தன்.

சகுந்தலாவோடு பொம்மி அம்மாவும் சேர்ந்து அழ,

"பொம்மி நீயே அழுதா சகுவ யாரு சமாதானம் செய்வா?"

"சரிங்க ஐயா..." என்ற பொம்மி சகுந்தலாவிடம்,"அம்மா வாங்க..." என்று அழைத்தார்.

"அண்ணா..."

"நீ போமா நான் வரேன்..." என்ற எழில் சிறிதுநேரம் அங்கேயே இருந்துவிட்டு வெளியேறினார்.

.............................................................

தங்களுக்கு சொந்தமான பிரைவேட் ஜெட்டில் பயணத்தைத் தொடங்கியவன் சென்னையிலிருந்து பொள்ளாச்சி வரை வந்திறங்கி, பிறகு அங்கிருந்து காரில் பயணித்தான். அவனுக்கு சிறுவயது முதலே இப்படி காரில் ஜன்னலோரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி வருவது மிகவும் பிடித்தமான ஒன்று. இன்றும் அப்படித் தான் ஜன்னலோரம் அமர்ந்து அந்த விலையுயர்ந்த காரினை செலுத்திக்கொண்டிருப்பவருக்கு பின்னால் அமர்ந்தபடியே சென்றான். என்ன இயற்கையை ரசிக்கும் அந்த மனநிலை அவனுக்கு வரவில்லை. மனமெங்கும் ரணம் பொங்கி வழிந்தது. இந்த உலகில் மிகவும் கொடுமையானது குற்றயுணர்ச்சி ஆகும். அதும் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருக்கும் நிலை இருக்கே? கொடுமையிலும் கொடுமை! அதன் பின்னால் நடந்த அந்த நிகழ்வின் நினைவுகளுக்குச் சென்றான்.

கண் விழித்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு போட்டது போட்டபடியே வந்திறங்கிவிட்டார் அவர். அவருக்கு மட்டும் வேலை செய்ய வேண்டு என்று ஆசையா என்ன? வாழ்க்கை சில நேரங்களில் நம்மை மிகவும் கடுமையாக்கும். அடுத்த நொடியைக் கடப்பது கூட ஒரு யுகமாய்த் தோன்றலாம். அதற்காக நொடியை நகரவிடாமல் நிறுத்தவா முடியும்? இல்லை போதும் இதற்கு மேல் நான் வாழ மாட்டேன் என்று சொல்லி விடைபெற்றுவிட முடியுமா என்ன? இதுவும் கடந்து போகும் என்ற தாரகை மந்திரம் தான் இன்று உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களையும் எவ்வளவு கஷ்டத்திலும் கடுமையானச் சூழ்நிலைகளிலும் நகர்த்திக்கொண்டிருக்கும் மந்திரக் கோள். பின்னே ஒரு விஷயம் நடந்திருக்கவே கூடாது. ஆனால் நடந்துவிட்டது. இப்போது என்ன செய்ய முடியும்? பூமியைப் பிளந்து விடலாமா? கடலை அடக்கிவிடலாமா? இல்லை. இட் ஹேப்பெண்ட். ஜஸ்ட் கோ பார்வேர்ட். ஈவெண் திஸ் வில் பி பைகோன். அதுவே இந்த ஐந்து மாத காலத்தில் அவர்களுக்கு வாழ்க்கை கற்றுத்தந்த பாடம். ஆசை மகள் தான். என்ன செய்ய முடியும்? கூடவே மகனும் இனி எந்திரிப்பானா இல்லையா என்ற நிலை. அதற்காக வயிறு தான் பசிக்காதா? மூச்சுதான் வாராதா? இதயம் தான் துடிக்காதா? தங்களால் வேலைக்கே போகாமல் ஆயுசுக்கும் அமர்ந்து சாப்பிட முடியும். வசதி இருக்கிறது. ஆனால் தங்களை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் லட்சக்கணக்கான மக்கள் உள்ளார்களே? அவர்களின் நிலைமை? அதற்காகவாவது உழைக்க வேண்டுமே? அதுதான் அவர் உழைத்துக்கொண்டே இருக்கிறார். அது கூடவே இங்கு இப்படி மகனை படுக்கையிலும் மகளை புகைப்படத்திலும் பார்க்க அவருக்கு திராணியில்லை. அதனால் தான் மும்பை, கொல்கத்தா, டெல்லி என தங்களின் தொழிலை மேற்பார்வை பார்க்க அங்கே சென்றுவிட்டார். ஐந்து மாதம் கழித்து இன்று தான் உயிரே வருகிறது அவருக்கு.

.............................................................................................................

கார் எவ்வளவு நிதானமாக செல்ல வேண்டுமோ அவ்வளவு நிதானமாகவே சென்றது. இது இவனுக்காக பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட கார். என்ன ஆனாலும் உள்ளிருப்பவர்களை எவ்வித சேதாரமும் ஆகாத வண்ணம் பாதுகாக்கும் வகை. புல்லெட் ப்ரூப் கண்ணாடி என சகல வசதிகளுடன் இருக்கும் காரிது. கார் பாதுகாப்பாகவே பயணித்தது. ஆனால் அவன் மனமும் மூளையும் பாதுகாப்பாக உணரவில்லை. அவன் நிலையை யோசித்தான்,

'ச்சே ஒரு கொலைகாரனுக்கு இவ்வளவு பாதுகாப்பா?' அப்போது தான் அவனுக்கு அந்த சம்பவமே நினைவுக்கு வந்தது. 'ஏதோ எதிரே... யாரோ...' என்று நினைக்கையிலேயே தலைவலி உயிரைப் பிடுங்க அவன் தடுமாறினான். வண்டியின் சென்ட்ரல் மிர்ரரில் அதை நோக்கிய டிரைவர் துரிதமாய்ச் செயல்பட்டு வண்டியை ஓரங்கட்டி,

"என்னாச்சி தம்பி?" என்றார். சற்று வயது முதியவர். என்ன ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருப்பார். அவருக்கு சொல்லப்பட்ட அறிவுரைகள் போதனைகள் நிபந்தனைகள் எல்லாம் ஒன்றுதான். வண்டியை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தவேண்டும். வண்டியில் gps பொறுத்தப்பட்டுள்ளதால் வண்டி எங்கே எவ்வளவு தூரம் செல்லுகிறது என்பது கணக்கிடப்பட்டுக்கொண்டிருந்தது. கூடவே வண்டியின் ஸ்டேரிங்கை பார்க்கும் வண்ணம் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. எங்கிருந்து வேணுனாலும் காரில் நடப்பதைப் பார்க்கலாம். தங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு வண்டியும் பின்னால் ஒரு வண்டியும் தொடர்ந்துகொண்டு வந்தது. ஆனால் இதெதுவும் வண்டியில் பயணிக்கும் அவனுக்குத் தெரியாது. இதையெல்லாம் கவனிக்கும் நிலையிலும் அவனில்லை.

அவரின் கேள்விக்கு,"ஒன்னுமில்லை, சும்மா தலைவலி..." என்றான்.

அவ்விஷயம் உடனே தெரியப்படுத்தப் பட்டதும் பின் காரிலிருந்து வந்த டாக்டர்,"சார் வாட் ஹப்பெண்ட்? ஹொவ் டூ யு பீல் நவ்?" என்றார்.

இப்போதுதான் இவன் இதையே கவனிக்கிறான். ஆனால் இதை நினைத்து வருந்துவதா இல்லை மகிழ்வதா என்று அவனுக்குப் புரியவில்லை. 'கரணம் தப்பினால் மரணம்' என்பதை நன்கு அனுபவித்து உணர்ந்துகொண்டான். அவன் அவ்வளவு மோசமான ஓட்டுநர் இல்லை. இதிலொரு வேடிக்கை என்னவென்றால் அவன் ஒரு கார் ரேசர். அதும் வெளிநாடு மோட்டோ ஜிபிகளில் கலந்துகொள்ளும் ஒருவன். என்னதான் முதலிடத்தில் இல்லை என்றாலும் இந்தியாவிலிருந்து பங்குபெற்று அதில் அதிக தரவரிசையில் இருந்தான். இன்று அவனிடம் காரினை ஸ்டார்ட் செய்ய சொன்னால் போதும், அவ்வளவு தான்! நினைக்கையில் கை நடுங்குகிறது.

'கொலைக்காரன்' என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.

அதற்குள் அவன் அன்னையும் தந்தையும் லைனில் வந்துவிட்டனர்.

"என்னாச்சி?... நீ பேசாம கிளம்பி இங்கேயே வந்திடு..." என்றார் அவன் தந்தை.

"வேணாம்..."

"சரி அப்போ நாங்க அங்கே கிளம்பி வரோம்..."

இதெல்லாம் அவனுள் தாக்கத்தை ஏற்படுத்த கூடவே பயம், தலைவலி, குற்றயுணர்ச்சி தாழ்வு மனப்பான்மை என்று எல்லாம் ஒருசேர,"ஐயோ என்னைக் கொஞ்சம் தனியாத்தான் விடுங்களேன்? ப்ளீஸ் ஐ யம் ஆல்ரைட்..." என்று கத்தினான்.

அவன் மனம் குமுறிக்கொண்டிருந்தது. பிறகு மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான். இது மலை ஏறும் போது ஏற்படும் ஏர் பிரஷர் குறைவினால் ஏற்படுவது என்று அவனும் உணர்ந்துகொண்டான்.

இங்கே அவனை அனுப்பிவைத்தவுடன் அவன் பெற்றோர்களும் அவன் நிலைகுறித்து வருந்தினர். எப்படி இருந்தவனின் இன்றைய நிலையை நினைத்து வருந்திட,"விடுங்க" என அவன் அன்னை அவன் தந்தையைச் சமாதானப் படுத்தினார்.
கண்டிப்பா முதல் பத்து எபிசோட் மெதுவா சோகமா தான் போகும்...

(வானிலை மாறும் ....)
 
உங்களுடைய "சட்டென வானிலை
மாறுது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரவீன்ராஜ் தம்பி
 
Last edited:
Top