நிழலாடும் நின் நினைவில் 02

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஹீரோ எங்கன்னு கேட்டவர்களுக்கு எல்லாம் ஹாய் சொல்ல வந்துட்டாரு ஹீரோ. இலவச இணைப்பா மற்றொரு கதாபாத்திரத்தையும் அழைச்சிட்டு வந்திருக்காரு. கதையில் அவங்க பங்கு என்னன்னு உங்க கெஸ் ஷேர் பண்ணுங்க.

நிழலாடும் நின் நினைவில் 02

அடுத்த அத்தியாயம் ஜுன் 05 பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
கொஞ்சம் படபட பரபர அத்தியாயம் . எல்லாருக்கும் எல்லாம் சரியாகும் எனும் நம்பிக்கையுடன்....

கதாப்பாத்திரங்களின் உறவுகளின் நுணுக்கங்களை அழகா கையாண்டு இருக்கீங்க. சரியா சொல்லணும் அப்படின்னா ஷர்மிளாக்கும் திருமணம் ஆகிவிட்டது அண்ட் அவங்களோட துணைகளோட நல்ல புரிதல் கதைக்கு ஒரு பெரிய பலம்.

இரண்டு காட்சிகளை ஒரே வார்த்தையால் இணைக்கும் விதம் பிரமாதம். டக்குன்னு வேகமெடுக்குது கதை. அடுத்தடுத்து வாசிக்க ஆவல்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
Last edited:

முன்னொரு நாள்
மலர்ந்த காதல்
முடிவில் நட்பாய் மாறியது...


மனைவியின் புரிதலில்
மனக்காயங்கள் மெதுவாய் மறைந்தது...

மனமகிழ்ந்த கணவன்
மனதில் நேசம்
மீண்டும் மலர்ந்தது...

மனதை வாசித்த நட்பொன்று
மௌனத்தின் மொழியையும் புரிந்தது...

மெல்லிய உணர்வுகள் எல்லாம்
மறைக்க முடியாத மெல்லிய நட்பாக மாறியது...

மனதின் ரணங்களை
முகமலர்ச்சிக்குள் மறைத்தாலும்...

மறந்துவிட்டேன் என்று சொல்லும் நெஞ்சம்
மீண்டும் அதே நினைவில் மிதக்கிறது...

மழைத்துளி
மண்ணைத் தேடுவது போல்
மனமும் சில
மன நினைவுகளைத் தேடுகிறது...

முடிந்த காதல் என்றாலும்
முற்றிலும் முடிவதில்லை
மீண்டும் நட்பாக...

மறுகி மறுகி வந்திடும் நினைவுகள்
மனதின் ஓரத்தில்
மாறாது என்றும் வாழ்கிறது...
 
உடல் இரண்டானாலும்
உணர்வுகளை ஒன்றாகி
உடன் பயணித்த உறவு
உணர்வற்ற நிலையில்
உறைந்து கிடக்க
உடன் இருப்பவர்களின்
உயர் அழுத்தம் கூட்ட....

உடனே வாருங்கள் அடுத்த அத்தியாயம் உடன்....
 

Advertisement

Advertisement

Back
Top