நிழலாடும் நின் நினைவில் 05

Advertisement

இந்த அத்தியாயம் படிக்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. எழுத்தாளர் அப்படியே கதையோடு ஒன்றி கதாப்பாத்திரங்களின் உள்ளே புகுந்து எழுதுகிறார்.
உண்மையில் அப்படி எழுதினால்தான் படிப்பவர்களும் கதையோடு ஒன்றிப் போவர்கள்.

ஒவ்வொரு டயலாக்க்கும் அவ்வளவு அழகா யோசிச்சு யோசிச்சு உருவாக்கி இருக்கீங்க.
"கணவன் முன்னாடி ஐ.டி கார்ட் போட்டுட்டா பேச முடியும்?" இது அத்தனை ரசிச்சேன்.

மெலிதான சோகத்தை இவங்களோட கலகல டயலாக் வெச்சு கோர்த்து இதமா கொடுத்து இருக்கீங்க. அதனால் ஒரு இதமான புன்னகையோட படிச்சேன். அழகா இருக்கு.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
ரசித்துப் படித்து பிடித்த இடங்களை மேற்கோளிட்டுக் காட்டும் உங்க அன்பில் நெகிழ்கிறேன் ஆத்தரே. Yes! I get very emotionally attached with my story characters. அது என் பலமா பலவீனமான்னு தெரியல. Yet, I love that feel. Thanks for the feedback முகிலன் ஆத்தரே.
 
நெருக்கமான தோழமைகள் நொந்த நேரத்திலும்
நகைச்சுவை நுனியால் நெஞ்சை வருடி
நொடியளவு சிரிப்பையும் நிம்மதியையும் விதைத்து
நிழலாய் அருகில் நின்று நல்துணை புரிந்திட.....

நாளையொளி
நிச்சயம் வரும் என்ற
நம்பிக்கையை
நெஞ்சில் நிறைத்து
நீங்காத பாசத்தின் பலத்தால்
நிமிர்ந்து நிற்க வைத்திடும்
நட்பு வரம்.......
அத்தியாயத்தின் உணர்வுகளை மிக மிக அழகாக எடுத்துரைத்திருக்கீங்க கவிக்குயிலே. இரண்டு கவிதைகளும் அசத்தல். தோழமை பற்றிய வரிகள் மனத்தை வருடிச்செல்லும் மயிலிறகாக....நன்றிகள் பல பல நட்பே.
 
கவிதை எபியின் மொத்தத்தையும் சொல்லிடுச்சு.
நன்றிகள் பல பல தோழி. கவிதை எழுத எனக்கு மிகப்பெரிய inspirationஏ கவிக்குயில் பீனா அவர்கள்தான். @Mrs beena loganathan
 
அருமையான பதிவு 🤩 🤩
தருண் தான் கதைக்கான energy booster 🥰🥰🥰
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top