ரசித்துப் படித்து பிடித்த இடங்களை மேற்கோளிட்டுக் காட்டும் உங்க அன்பில் நெகிழ்கிறேன் ஆத்தரே. Yes! I get very emotionally attached with my story characters. அது என் பலமா பலவீனமான்னு தெரியல. Yet, I love that feel. Thanks for the feedback முகிலன் ஆத்தரே.இந்த அத்தியாயம் படிக்கும் போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது. எழுத்தாளர் அப்படியே கதையோடு ஒன்றி கதாப்பாத்திரங்களின் உள்ளே புகுந்து எழுதுகிறார்.
உண்மையில் அப்படி எழுதினால்தான் படிப்பவர்களும் கதையோடு ஒன்றிப் போவர்கள்.
ஒவ்வொரு டயலாக்க்கும் அவ்வளவு அழகா யோசிச்சு யோசிச்சு உருவாக்கி இருக்கீங்க.
"கணவன் முன்னாடி ஐ.டி கார்ட் போட்டுட்டா பேச முடியும்?" இது அத்தனை ரசிச்சேன்.
மெலிதான சோகத்தை இவங்களோட கலகல டயலாக் வெச்சு கோர்த்து இதமா கொடுத்து இருக்கீங்க. அதனால் ஒரு இதமான புன்னகையோட படிச்சேன். அழகா இருக்கு.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்