இந்த அத்தியாயத்தை நான் மிக மிக ரசித்தேன். நீங்களுமே மிக ரசித்து எழுதி இருப்பதை புரிந்து கொண்டேன். இந்த அத்தியாயம் அப்படியே கதைக்குள்ளே போய் உட்கார்ந்து எழுதி இருக்கீங்க என்று தோன்றியது.
அலுவலக வேலைகள் அங்கே தருண் ரம்யா என அனைவரும் இவனுக்கு துணை நிற்பது எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் மீறாமல் அழகா செதுக்கி இருக்கீங்க.
தாலி கட்டும் புகைப்படத்தில் துவங்கி ,திருமண நாள் பால்கோவா, ரிசப்ஷன் புகைப்படம், அந்த சிரிப்புக்கான காரணம் எல்லாமே ரொம்ப ரொம்ப ரசிச்சேன். சொல்லப் போனால் ஷ்ரவனோட சேர்ந்து அது என்ன கிப்ட் அப்படின்னு நானும் தேடினேன்.
ஆனா அதுக்கு ஆன்சர் கிடைக்கிறதுக்குள்ளே நீங்க ரம்யாவை வீட்டை விட்டு கிளப்பிட்டீங்க ஆத்தரே.
'ரம்யா அண்ட் ஷ்ரவன் உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒண்ணு சொல்றேன் இந்த ஆத்தர் சொல்றது எல்லாம் கேக்காதீங்க. பழசு எல்லாம் எங்களுக்கு வேண்டாம் சொல்லிட்டு பேசாம இந்த நிமிஷத்திலே இருந்து புதுசா லவ் பண்ணி வாழுங்க' அப்படின்னு என்னை சொல்ல வெச்சிடாதீங்க ஆத்தரே. சீக்கிரம் ரெண்டு பேரையும் சேர்த்து வைங்க.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்