Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன்வசந்தன் -அத்தியாயம் 11

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீ தானே என் பொன்வசந்தன்
அத்தியாயம் 11
அபி நம்பமுடியாத தலையசைப்புடன் அந்த பரிசை பார்த்தாள்,பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரம் பொங்கியது , அது ஒரு DVD “வடிவேலு சிரிப்பு வெடிகள்” என்று தலைப்பிடபட்டிருந்தது ,கூடவே ஒரு கார்டில்,
"ப்ளீஸ் ஒரு சின்ன ரிக்வஸ்ட், இதை பார்த்தாவது கொஞ்சம் சிரிங்க மேடம், ஹெல்த்க்கு நல்லது..”என்று எழுதி இருந்தது .
"என்ன தைரியம் இருந்தா அவன் எனக்கு இப்படி ஒரு கிப்ட் கொடுப்பான்? “என்று மனம் குமைந்தாள் .
“எவ்ளோ ஆசையா ஓபன் பண்ணி பார்த்தா இப்படி ஒரு கிப்ட்ட குடுத்து டோட்டலா ஆப் பண்ணிட்டானே, இவன்லாம் திருந்தவே மாட்டான்..” என்று வெறுப்புடன் நினைத்தாள்..அடிபட்ட புலியை போல இங்கும் அங்கும் நிலைகொள்ளாமல் நடந்தாள், நடக்கும் போது போக வர அந்த dvd வேறு கண்ணில் பட்டு அவளுக்கு எரிச்சல் மூடியது..
"இதுக்கு அவன் கிப்ட் கொடுக்காமலே இருந்திருக்கலாம், நான் கேட்டேனா இப்படி ஒரு கிப்ட்?”என்று பற்களை நறநறவென்று கடித்தாள்..
“எனக்கு சிரிக்க தெரியாதா நான் என்ன சிரிக்காம உராங்குட்டான் மாதிரியா இருக்கேன்..?” என்று கண்ணாடி முன் நின்று தன்னை தானே கேட்டுக்கொண்டாள்.. அதில் தெரிந்த தனது கடுகடுத்த முகத்தை பார்த்ததும்…
"ஒருவேளை அவன் சொல்றது உண்மை தானோ..?” என்று அபிக்கே தோன்றிவிட்டது..ஓரக்கண்ணால் அந்த dvd யை பார்த்தவள் ஒருமுடிவுக்கு வந்தவளாக அதை லேப்டாப்பில் போட்டு ஓட விட்டாள், ஆரம்பத்தில் அசிரத்தையாக பார்த்தவள் போகப்போக விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு ரசித்து பார்த்தாள் ,அப்படியே ஒரு இனிய புன்னகையுடன் உறங்கியும் போனாள்…
மறுநாள் காலையில் அபி படுக்கையிலிருந்து எழும்ப மனம் இல்லாமல் அரை தூக்கத்தில் மெதுவாக புரண்டுகொண்டிருந்தபோது…திடுமென கேட்ட அழைப்புமணி அவள் தூக்கத்தை முழுமையாக விரட்டியடித்தது..
“யார் இந்த நேரத்துல..?” என்று கேள்வியுடன் கதவை திறந்தவள் பூர்ணாவும் விக்கியும் முகம் முழுவதும் சிரிப்பாக நிற்பதை பார்த்து ஆனந்தமாக அதிர்ந்தாள்…
“ஹாப்பி பர்த்டே அபி…” என்று இருவரும் ஒரு பூங்கோதை கொடுத்து வாழ்த்தவும்.. புன்னகையுடன் அதை ஏற்று நன்றியுரைத்தாள்..அபி அவளது இரவு உடையில் இருப்பதை பார்த்து அவள் சங்கடமாக உணரக்கூடும் என்று விக்கி
"பர்த்டே பேபி… இவ்ளோ நேரமாவா தூங்கறது போங்க.. போய் ரெடி ஆகுங்க நான் அது வரைக்கும் அருண் கிட்ட கொஞ்சம் மொக்கை போடுறேன்” என்றுவிட்டு அருணின் பிளாட் பக்கம் சென்றான்…
பூர்ணா உள்ளே வந்ததும் ,"என்ன சாப்பிடுற பூர்ணா டீ ஆர் காபி? “என்று அபி விருந்துபசாரம் செய்ய,
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்பு..” என்றாள் பூர்ணா..
"எங்க பூர்ணா?”
"ஹே இன்னிக்கு சாட்டர் டே அதுவும் உன்னோட பர்த்டே, செலபரேட் பண்ண வேண்டாமா? நானும் விக்கியும் எல்லாம் பிளான் பண்ணிட்டோம், அதெல்லாம் நீ எதுவும் பேச கூடாது கெளம்பு அபி..”
என்று கறாராக கூறினாள் பூர்ணா…
அபியும் ஒரு புன்னகையுடன் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
“உன்னோட ரூம் மேட் காவ்யா எங்க காணோம்..?”
"அவ நேட்டிவ்க்கு போய் இருக்கா.. நாளைக்கு நைட் தான் வருவா..”
என்று விட்டு.. ரெடியாவதற்க்காக உள்ளே சென்றாள்.. வேகமாக குளித்து உடைமாற்றி வந்தவளை பார்த்து பூர்ணா,
"சீக்கிரம் ரெடி ஆகிட்ட குட்..” என்றாள் மெச்சுதலாக,
“அப்புறம் அபி சொல்ல மறந்துட்டேன்.. நீ ஷவர்ல இருக்கும் போது உங்க வீட்ல இருந்து உனக்கு போன் பண்ணினாங்க, உன்னோட அப்பா தான் பேசினார்.. பர்த்டே விஷ் பண்ண கூப்பிட்டிருப்பாரு.. நீ போன் பண்ணி பேசிடு..” என்றாள் சாதாரணமாக,
சட்டென்று அபியின் கண்களின் ஓரம் கசிந்தது… ஆனால் கண்களை இருக்க மூடி தன்னை சமாதான படுத்திகொண்டு.. பூர்ணாவிடம் சரி என்பது போல் தலையசைத்துவிட்டு தன் போன் ஐ எடுத்து உடனே சுவிட்ச் ஆப் செய்தாள்…
இருவரும் வெளியே வந்து அருணின் வீட்டை நோக்கி சென்றனர்.. விக்கியுடன் பேசிக்கொண்டிருந்த அருண் வாயிலில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப்பார்த்தான்.. அபி அவனது வீட்டை நோக்கிவருவது தெரிந்தது, சட்டென்று இப்போது தான் அபி முதன் முறையாக தன் வீட்டுக்கு வருகிறாள் என்பது உரைத்தது.. ஏனோ தெரியவில்லை அவனுக்கு அபி வலதுகாலை வைத்து தன் வீட்டுக்குள் வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.. அது அவனுக்கே சிறுபிள்ளை தனமாக தோன்றினாலும் அந்த நேரத்தில் அவனுக்கு அது என்னவோ உலகத்திலேயே மிக முக்கியமாக பட்டது..
"ரைட் லெக் வைக்கணும்.. ரைட் லெக் வைக்கணும்..” என்று மனதிற்குள்ளே மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்தான்..
அபியின் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் வீட்டுக்குள்அடியெடுத்து வைக்கும் போது சரியாக இடதுகால் தான் முறைப்படி வந்தது ,நொடியில் நிராசையுற்று அந்தகாட்சியை காண சகிக்காமல் கண்களை மூடி ஏமாற்றத்துடன் அபி உள்ளேவருவதை ஓரக்கண்ணில் பார்த்தவன் மறுகணம் சட்டென்று ஆச்சர்யத்தில் முழுதாக கண்களை விரித்தான் … அபி இடதுகாலை வைக்காமல் ஒரு கணம் தாமதித்து நின்று வலதுகாலை வைத்து உள்ளே வந்தாள், அருணின் முகம் சூரியனை போல் பிரகாசமுற்றது ,முகமெல்லாம் சிரிப்பாக அவன் அபியை பார்க்க அவள் அவனை பார்த்துமுறைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்..
“வாங்க பூர்ணா வெல்கம் டு மை ஹோம் பார் தி ஃபர்ஸ்ட் டைம்..” என்றான் குறிப்பாக அபியை பார்த்தபடி ,அவளோ கண்டுகொள்ளாமல் இருக்கவும்,
"என்ன ஆச்சு இவளுக்கு..” என்று குழம்பியவன்..மறுகணம் இது அவனது பர்த்டே கிப்ட்டினால் வந்த விளைவு என்று ஊகித்து கண்கள் மின்ன விஷமமாக சிரித்தான்..
அதை பார்த்து அபி கோபத்தில் அவனை மேலும் முறைத்தாள்.. அருணுக்கு ஏனோ அவள் கோபம் கூட அழகாக தெரிந்தது..

அருண் மற்றவர்களுக்கு வீட்டுத்தலைவனாக காபி தயாரித்து கொடுத்து விருந்துபசாரம் செய்தான்..
ஒரு மிடறு அருந்திய அபி மெச்சுதலாக புருவம் உயர்த்தினாள்,ஆனால் உடனேயே சமாளித்துக்கொண்டு முகத்தை உம் மென்று வைத்துக்கொண்டாள் அந்த ஒரு கணநேரம் போதாதா அருணுக்கு அவளது முக மாறுதலை அறிய ,அவளது பாராட்டை கண்டுகொண்டவனாக கண்களால் சிரித்தான்..
அவன் கண்டுகொண்டதை அறிந்து அபிக்கு அவன் மேல் இன்னும் கோபம் வந்தது ,இப்படி இவர்கள் கண்களால் பேசிக்கொண்டிருந்த நேரம் ,திடுமென விக்கி
"சரிடா, அபிக்கு நீ குடுத்த கிப்ட்ல என்ன இருந்தது..?" என்று கேட்க
"என்ன கிப்ட்?” என்று அருணும் அபியும் ஒரே குரலாக கேட்டனர்..
“என்னடா ரெண்டு பெரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே மாதிரி ஷாக் ரியாக்ஷன் குடுக்கறீங்க..?”
நான் நேத்தே உன்னோட பாக் அ ஓபன் பண்ணி பார்த்துட்டேன் அதுல நீ அபி பேர் போட்டு ஒருகிப்ட் வச்சிருந்த.. இப்போ அது உன்னோட பாக்ல இல்லை சோ நீ அபிகிட்ட குடுத்துட்ட, கரெக்ட்டா ..? இந்த விக்கி கண்ணுல இருந்து எதுவும் தப்பாது..”
என்று சுய தம்பட்டம் அடித்துக்கொண்டான்..
"அடப்பாவி அடுத்தவங்க பாக்அ ஓபன் பண்ணி பாக்குறியே உனக்கு வெக்கமா இல்லை..?” என்று அருண் கோபமாக கேட்க
"அது அடுத்தவங்க பாக் ஐ தானே பார்க்க கூடாது.. மச்சான் நீ யாருடா என் நண்பேன்டா என் தளபதிடா..” என்று சினிமா வசனம் பேச
பூர்ணா சிரித்துகொண்டே.. “விக்கி பேச்சை மாத்துறாங்க, விடாத அந்த கிப்ட்என்னனு கேளு…” என்று அவனை ஊக்கினாள்..
“அதானே கேட்ட கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுடா… அது என்ன கிப்ட்டு..?”என்று விடாக்கண்டனாக விக்கி கேட்க
அபி அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்
அபி அவனை கண்களில் கனல் எழ பார்க்க அதை சற்றும் தளராமல் தங்கி நின்றான் அருண்..
சில நொடிகளுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அபி பக்கென்று சிரித்துவிட்டாள்..
அருணும் அவளை தொடர்ந்து சத்தமாக சிரிக்க அவர்கள் சிரிப்பதை வினோதமாக பார்த்தனர் பூர்ணாவும் விக்கியும்…
-------------------------------------------------------------------------------------------------------------------------
முதலில் நால்வரும் ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்குசென்றனர் அபியும் பூர்ணாவும் துணிக்கடையில் அலசி ஆராய்ந்துகொண்டிருந்தனர்…
பூர்ணா அபியை மாடர்னாக ஏதாவது வாங்க சொல்லிவற்புறுத்திக் கொண்டிருந்தாள்…
அவள் நச்சரிப்பு தாங்காமல் சரி என்று தயக்கத்துடன் தலையாட்டினாள்… இருவரும் சேர்ந்து அவளுக்கு சில உடைகளை தேர்ந்தெடுத்தனர், பூர்ணா அபியை அவற்றை அணிந்து பார்க்குமாறு ட்ரையல் ரூமுக்கு அனுப்பினாள்..
பிறகு பூர்ணா விக்கியுடன் ஆண்கள் ஆடை பிரிவிற்கு சென்றுவிட.. அருண் மொபைலில் பேஸ் புக் பார்த்துக்கொண்டு அபி வெளியே வருவதற்காக காத்திருந்தான்..
அபி ஒரு ஜீன்ஸ் பான்ட்டையும் ஷார்ட் டப்பையும் போட்டு பார்த்தாள்.. எதற்கும் பூர்ணாவை அழைத்து கருத்துகேட்கலாம் என்று எண்ணி, கதவை திறந்து அங்கே பணிபுரியும் ஒரு பெண்ணிடம்
"எக்ஸ் கியூஸ் மீ அங்க என்னோட ஃபிரென்ட் இருப்பாங்க கொஞ்சம் கூப்பிடுறீங்களா..?”என்றாள் …
அந்த பெண் சுற்றிலும் பார்த்து விட்டு அருண் அங்கே நிற்பதை பார்த்து அவனிடம் போய், “சார் உங்க ஃபிரென்ட் உங்களை கூப்பிடுறாங்க..” என்று ட்ரையல் ரூமை காட்டினாள்..
“என்னையா..?” என்று ஆச்சர்யமாக வினவினான்..
"ஆமா சார் உங்களை தான்..” என்றுவிட்டு போனாள் அந்த பெண்
அவன் ட்ரையல் ரூம் பக்கம் சென்று மெதுவாக கதவை தட்டினான்
"ஹே உள்ள வா..” என்று அபியின் குரல் கேட்டது
அவன் மெதுவாக கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தான்…
அபி கவனம் முழுவதும் தன் புதிய உடையில் இருக்க கண்ணாடியில் உடலை திருப்பி அழகு பார்த்துக்கொண்டே “எப்படி இருக்கு” என்று கேட்டாள்…
“நல்லா இருக்கு..” என்றவனின் குரலை கேட்டதும் அதிர்ந்துபோய் அவன் புறமாக திரும்பி..
"ஹே நீ ஏன் உள்ள வந்த? வெளிய போ" என்று கட்டளையிட்டாள் அதை சற்றும் பொருட்படுத்தாமல் சாவகாசமாக உள்ளேவந்து "நீ தானே உள்ள வர சொன்னே…” என்று கேட்டான்
"அது நான் பூர்ணானு நெனைச்சி சொன்னேன்.. வெளிய போ அருண்… யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..” என்றாள் தர்மசங்கடமாக உணர்ந்து,
ஆனால் அவன் காதிலே விழாதவன் போல், அவள் பின்னால் நின்று கொண்டு கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்தையே பார்த்தபடி "எல்லாம் ஓகே, இந்த பின்னல்தான் இடிக்குது..” என்று, அவளது ஒற்றை ஜடை பின்னலை மெதுவாக பிரித்தான், அந்த மென் தொடுதலில் கூந்தல் நுனியில் தொடங்கி உடல் முழுவதும் சிலிர்த்தது அபிக்கு..
"நௌ இட் ஈஸ் பர்ஃபெக்ட்..” என்று அவளை விழுங்குவது போல் பார்க்க அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் முகம் சிவந்து தலை குனிந்தாள் அபி..
சரி நீ போ.. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…”
அவளுக்கு அவன் அங்கிருந்து கிளம்பினாள் போதும் என்றிருந்தது…
“நோ அபி உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு.. இன்னிக்கு ஒரு நாள் இந்த டிரஸ்லேயே இரு ப்ளீஸ்..” என்று கியூட்டாக கெஞ்சினான். அவனிடம் மறுக்க மனம் வராமல் ‘சரி..’ என்றாள் தயங்கியபடி
முதன் முறையாக ஜீன்ஸ் டாப் அணிவதால் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது அபிக்கு.. அப்போது அங்கே வந்த விக்கி "ஹலோ இங்க அபின்னு ஒருத்தங்க இருந்தார்களே நீங்க பார்த்தீங்களா..” என்று அபியிடம் கேட்க
அவள் பதிலுக்கு “விக்கி…” என்று மிரட்ட
"ஐயோ அபி நீங்களா? என்னால நம்பவே முடியலை யாரோ ஹீரோயின்னு நினைச்சேன்..”
"நீங்க இப்படி கிண்டல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த டிரஸ்ஸே போட்டிருக்க மாட்டேன்..”
என்று குறைப்பட்டாள்..
“நோ..நோ.. இந்த டிரஸ் உனக்கு செமையா இருக்கு..” என்று பூர்ணா அவளை பாராட்ட அபி கொஞ்சம் தேறுதல் அடைந்தாள்.
அடுத்து மூவி போக திட்டமிட்டிருந்தனர், விக்கியும் அருணும் முன்நடக்க அபியும் பூர்ணாவும் வளவளத்துக்கொண்டே பின்தொடர்ந்தனர்..
“என்ன மூவிக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்க?” என்று அருண் விக்கியிடம் கேட்டான்.
"அது ஏதோ இங்கிலீஷ் ஹாரர் மூவிடா… பேர் சரியா நியாபகம் இல்லை..” என்றான் விக்கி,
நடந்து கொண்டிருந்தவன் நின்று விக்கியை பார்த்து
"என்னது ஹாரர் மூவியா..? உனக்கு வேற படமே கிடைக்கலையா?” என்றான் அருண்..
"டேய் மச்சான்.. இன்னிக்கு சாட்டர்டே டா… அவனவன் பல்லுவிலக்குறானோ இல்லையோ ஏதோ ஒரு படம் பார்க்க கெளம்பி வந்துடறேன்.. எல்ல ஷோவும் ஹவுஸ்புல், இதுக்கு டிக்கெட் கெடைச்சதே அதிசயம்..”
“அதுக்காக ஹாரர் மூவிலாம் எப்படிடா பார்க்கறது?”
என்றான் எரிச்சலாக ,
"ஏன்டா உனக்கு பேய் படம்னா பயமா?” என்று கிண்டலடித்தான் விக்கி
"ச்ச..ச்ச.. எனக்கு பயம் இல்லைடா பட் பொண்ணுங்க நம்ம கூட வராங்க அவங்க பயந்துட்டா..” என்றான் வெகு அக்கறையாக …
"டேய் அது இன்னும் நல்லதுடா பயந்து போய் நம்மள கட்டி புடிச்சிக்குவாங்க..” என்று சிரித்தான்..
அவனை முறைத்து பார்த்த அருண் .."ச்சீ அல்ப்பம் மாதிரி பேசாத டா இது சரியா வராது நாம வீட்டுக்கு போலாம் ..”
“டேய் காசு வேஸ்ட்டா போய்டும் டா வாடா போலாம்..”
என்று அவனை சம்மதிக்கவைக்க முயன்றான்…
“என்ன இங்க ப்ராப்ளம்..” என்றனர் பூர்ணாவும் அபியும் அவர்களுடன் வந்து சேர்ந்தபடி
"இவன் ஹாரர் மூவினா வர மாட்டானாம், கேட்டா நீங்க பயந்துடுவீங்கன்னு சொல்றான்..” என்று குறைகூறினான் விக்கி…
"அருண் நோ ப்ராப்ளம் எனக்கு ஹாரர் மூவினா பிடிக்கும்..” என்றாள் பூர்ணா..
அருண் நம்பிக்கை நிறைந்த விழிகளுடன் அபியை பார்க்க அவளும்,
"எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று கூறவும் அவனது பதற்றம் மேலும்அதிகரித்தது..
“அப்புறம் என்னடா வா போலாம்..” என்று விக்கி அவளை பிடித்து இழுத்து சென்றான்..
உண்மையாக அருணுக்கு பேய் படம் என்றால் சிறுவயது முதலே பயம், ஆனால் அதை நண்பர்கள் முன்னால் சொல்ல முடியாதே.. அதுவும் அபி முன்னால் மானம் போய்விடும், இந்த விக்கி கலாய்த்தே ஆளை காலி செய்துவிடுவான்.. எனவே வேறு வழி இல்லாமல் திரைஅரங்கினுள் சென்று கார்னர் சீட்டில் அமர்ந்தான் அவனுக்கு பக்கத்தில் அபி ,பிறகு பூர்ணா மற்றும் விக்கி இந்த வரிசையில் அமர்ந்தனர்.. முதலில் வினோதமாக எதுவும் இல்லாமல் அமைதியாகவே படம் சென்றது அருண் தனது விரைத்த உடலை தளர்த்தி சிறிது சாய்ந்து அமரலாம் என்று நினைத்த சமயம் திடுமென கேட்ட ஒரு பெண்ணின் கிரீச்சிடும் குரல் அவனை மயிர்கூச்செரிய செய்தது தூக்கிவாரி போட்டுகொண்டு நிமிர்ந்து அமர்ந்தான் ..பின்னர் தொடர்ந்து அமானுஷ்ய சத்தங்கள் திரையிலிருந்து வர வர அவனுக்கு பயத்தில் உடல் வியர்த்து, இதயம் படபடக்க தொடங்கியது ,அதற்குமேல் தாங்க முடியாது என்று அவன் நினைத்த நேரத்தில் சரியாக இடைவேளை வரவே விழுந்தடித்துக்கொண்டு வெளியே போனான்..
இடைவேளை முடியும் வரை தன் நண்பர்கள் கண்ணில் படாதவாறு ஒளிந்திருந்துவிட்டு, அதன் பிறகும் உள்ளே போகாமல் வெளியிலேயே உலாத்திக்கொண்டிருந்தான்..
அபி அவனுக்கு போன் செய்து "அருண் எங்க இருக்க..” எனவும்
“பாப்கார்ன் வாங்கிட்டு இருக்கேன்..” என்று பொய்யுரைத்தான்..
அரை மணி நேரம் ஆகியும் அருண் வராததால் அபி அவனுக்கு மீண்டும் கால் செய்து,
"அருண் என்ன நீ இன்னும் வரலை சீக்கிரம் வா படமே முடியப்போகுது”
"முடியட்டும்னு தானே வெளிய நினைக்குறேன்..” என்றான் அடிக்குரலில்
"என்ன சொல்ற அருண் சரியா கேட்கலை"
"தோ வரேன் அபி..”
என்றான் ஆர்வமில்லாமல், இனிமேலும் போகாமலிருக்க முடியாது என்று ஒரு ஆழ்ந்த உள்மூச்சிழுத்து தன்னை திடப்படுத்திக்கொண்டு உள்ளே சென்றான்..
“ஏன் இவ்ளோ நேரம்..?” என்ற அபியிடம்
“ஒரு முக்கியமான போன் கால் பேசிட்டு இருந்தேன்..” என்றான்,
“சரி பாப்கார்ன் எங்கே..?” என்றாள் அவனது வெறும் கையை சுட்டிக்காட்டி
வாங்க மறந்துட்டேன்..”என்றான் ஏதாவது திடீர் சத்தம் வருமோ என்று பீதியுடன் கவனித்தபடியே..
அவனது வினோதமான நடவடிக்கையை பார்த்து வியந்தாலும் மேலும் எதுவும் கேள்விகேட்காமல் படம் பார்க்க தொடங்கினாள்..
சிறிதுநேரம் கழித்து எதேர்சையாக அருணின் பக்கம் பார்வையை திரும்பியவள் அதிர்ந்து போனாள் ,அவன் காதுகள் இரண்டையும் கைகளால் அடைத்துக்கொண்டு ,இரு கண்களையும் இருக்க முடியபடி திரையிலிருந்து முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தான்..
“பசங்க கூட பேய் படம் பார்க்க பயப்படுவாங்களா?” என்று மனதிற்குள் அதிசயித்தாள்..
“அருண் என்ன இது..” என்று விளையாட்டு சிரிப்புடன் கேட்டாள்.
கையும் களவுமாக பிடிபட்டுவிட்டோம் என்று தெரிந்து அருணின்முகம் குன்றியது
“அது ஒன்னும் இல்லை ரொம்ப சவுண்ட் ஆ இருந்தது அதான்..” என்றான் காற்றாகிவிட்ட குரலில் ,புன்னகை மேலும் விரிய "ஆஹான்"என்றாள் நான் உன்னை நம்பவில்லை என்று சொல்லாமல் சொல்வது போல,
குழந்தை போல் உதட்டை குவித்து அவளை குறைகூறுவது போல்பார்த்தான்..
அபிக்கு அவன் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும்போல் அவ்வளவு கியூட்டாக இருந்தான்…
“சரி பயமா இருந்தா என்கைய புடிச்சிக்கோ..” என்று அவனை சீண்டினாள்..
“பயமா அதெல்லாம் ஒன்னும்…” என்று அவன் முடிப்பதற்குள் அச்சுறுத்துவதுபோல் சத்தம் அவனது முதுகுத்தண்டை சில்லிடச்செய்ய அவன் சட்டென்று அபியின் கையை கெட்டியாக பற்றிக்கொண்டான் ,
அருண் இந்த அளவுக்கு பயப்பட கூடும் என்று அபி எதிர்பார்க்கவே இல்லை..ஆனால் சற்றும் நினைத்து பார்க்காத வகையில் அவனுக்கு இப்படி ஒரு முகம் இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அதற்குமேல் அவனை சங்கடத்திற்குள்ளாகும்படி எதுவும் பேசவில்லை அபி..
அருண் அபியின் புறமாக சாய்ந்து அவளது கையை இன்னும் அழுத்தமாக பற்றினான் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்த போதும் எதுவும் கூறாமல் அவனது அந்த நேர தேவையை கருதி அமைதியாகவே இருந்தாள்..சிறிது நேரத்திலேயே அவனது பிடி தளர்வதை உணர்ந்து அவன் புறமாக பார்த்தால்அவன் தூங்கி போய்இருந்தான், புன்னகையுடன் அவன் சிறுபிள்ளை போல்தூங்குவதை பார்த்திருந்தாள் அபி..
படம் முடிந்ததும் அவனை எழுப்பி விட்டாள், திடுக்கிட்டு விழித்தவனிடம் படம் முடிந்துவிட்டதை சுட்டிக்காட்டி கேலியாக சிரித்தாள்…
அடுத்து நால்வரும் டின்னர் சென்றனர், அருண் அவ்வப்போது அபியின் முகத்தையே கவலையாக பார்த்தான் ,ஐயோ அவள் மற்றவர்களிடம் சொல்லிவிடக்கூடாதே என்று ,அபிக்கு அவன் நிலைமை நன்றாக புரிய மனதிற்குள் சிரித்துக்கொண்டாள் …
அருண் வாஷ் ரூம் சென்றுவிட்டு திரும்பும் போது மற்ற மூவரும் சிரித்துக்கொண்டிருப்பதை கண்டான்..
அபி எனது பேய் பட பயத்தை பற்றி சொல்லிவிட்டாள் போல அதான் என்னை கேலிசெய்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்..
ஆனால் அபி இப்படி செய்யக்கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை மிகவும் ஏமாற்றமாக இருந்தது முகம் தொங்கி போய் அவன் அங்கு சென்று அமர்ந்த போது தான் தெரிந்தது அவர்கள் வேறு ஏதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர் என்று,
“அப்போ அபி எதுவும் சொல்லலை,,” நன்றி நிறைந்த விழிகளுடன் அவன் அவளை பார்க்க அவள் புரிந்து கொண்டவள் போல் லேசாக சிரித்தாள்..விக்கி கூட அறியாத அருணின் சிறு ரகசியம் தனக்கு மட்டுமே தெரியும் என்பதே அவளுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.. தான் அவனுக்கு ஸ்பெஷல் என்ற உணர்வை தந்தது..
பார்க்கிங் பகுதிக்கு செல்லும் வழியில்
அவனருகில் வந்து "நான் எல்லார் கிட்டையும் சொல்லிட்டேன்னு தானே நெனைச்சா?” என்றாள்..
"ச்ச.. ச்ச.. உன்னைபோய் நான் அப்படி நினைப்பேனா?” என்று சமாளித்தான்.
"பொய் சொல்லாத அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரிஞ்சதே..” என்று சீண்டினாள் ..
“எவ்ளோ முறை என்னை சீண்டி இருப்பான் இப்போ என்னோட முறை திருப்பி கொடுக்க..” என்று எண்ணி கொண்டாள்,இருப்பினும் அவன் அப்பாவியாக முகத்தை வைத்து கொள்வதை பார்த்து மனமிரங்கி
"சரி நான் யார் கிட்டையும் சொல்ல மாட்டேன்.. நம்ம ரெண்டு பேர்க்கு நடுவுல ரகசியமா இருக்கும் போதுமா? “என்று கேட்டவுடன் அவனது முகம் ஸ்விட்ச் போட்டது போல்பிரகாசமானது.
விக்கி அவர்கள் இருவரையும் வீட்டில் டிராப் செய்துவிட்டு போனான். மனம் நிறைய மகிழ்ச்சியுடனும், உதட்டில் புன்னகையுடனும் அபி படுத்ததும் உறங்கி போனாள்..
ஆனால் சிரித்துநேரத்திலேயே போன் ஒலியெழுப்ப ,
”யார் இந்த நேரத்தில்..” என்று கடுப்புடன் கண்களை பிரிக்க முடியாமல் பிரித்து போனை எடுத்துபார்த்தால் “அருண்” “இவன் எதுக்கு இந்த நேரத்துல கால் பன்றான்?”
“ஹலோ..”
மறுமுனையில் அருணின் குரல் “ஹலோ அபி.. தூங்கிட்டியா?”
“இதை கேட்க தான் போன் பண்ணியா?”
என்றாள் சிறு கடுப்புடன்..
"இல்லை.. அது வந்து எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது..”
என்றான் தயக்கத்துடன்..
"அதுக்கு இப்படி தான் தூங்குறவங்களுக்கு போன் பண்ணி எழுப்பி விடுவியா?” என்று கேட்டாள் எரிச்சல் மறையாத குரலில்..
“சாரி அபி, அந்த படம் பார்த்ததுல இருந்து கண்ண மூடினா காதுக்குள்ள என்னென்னமோ சத்தம் கேக்குது..”
“என்ன இவன் இபப்டி இருக்கான்?” அபியால் அவன் சொல்வதை நம்ப கூட முடியவில்லை, தன்னிடம் பேசுவதற்காக இப்படி சாக்கு தேடுகிறானோ என்று தோன்றவும்,
"இவ்ளோ பயமா இருந்தா ஏன் அந்த படத்த பார்க்கணும் ,முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள் வெடுக்கென்று..
ஒரு கணம் மறுமுனையில் நிசப்தம் நிலவியது பிறகு
"சாரி நான் உன்னை ரொம்ப தொந்தரவு பன்றேன்னு நினைக்கறேன் நான் போனை வைக்கிறேன்..” என்று உடனடியாக கட் செய்தான்..
அவன் போனை வைத்ததும் அபிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது
"ஐயோ கடவுளே.. நான் அவனை காய படுத்திவிட்டேனே..”
அவளே திரும்ப அவனுக்கு கால் செய்தாள், நான்கைந்து முறை ஒலித்த பின்னர் போனை எடுத்தாலும் பேசாமல் அமைதியாக இருந்தான்
"சாரி அருண், நான் தூக்க கலகத்துல இருந்தேன் அதான் கோபமா பேசிட்டேன்.. சரி இப்ப சொல்லு உனக்கு என்னதான் பிரச்சனை? நீ ஏன் இவ்ளோ பயப்படுற?”என்று மென்மையாக கேட்டாள்…
முதலில் தயங்கினாலும் பின்னர் அவனும் மெதுவாக மனம் திறந்து பேசினான், அவனுக்கும் தன் மனதில் இருப்பதை கேட்க ஒரு செவி தேவைப்பட்டது போலும்…
"நான் சின்ன பையனா இருக்கும்போது “ஈவில் டெட்” படம் பார்த்தேன் , அந்த படத்தை பார்த்துபயந்து எனக்கு மூணு நாள் காய்ச்சலே வந்துடிச்சி, அப்போ இருந்து பேய் படம்னா பயமா இருக்கும்னு எனக்குள்ள ஒரு மைண்ட் செட் ஆகிடுச்சு ,விகாரமான முகம் ,கோரமான சீன்ஸ் இதெல்லாம் பார்த்தாகூட பயந்துக்க மாட்டேன் ,ஆனா அந்த அமானுஷ்ய சத்தம், ஸ்கேரி சவுண்ட் இதெல்லாம் கேட்டா தான் ஒரு மாதிரி ஆகிடும், உடம்பெல்லாம் வியர்த்து நடுக்கம் வந்து ,இது ஒரு மாதிரியான போபியா இப்ப கூட சவுண்ட மியூட் பண்ணிட்டு பார்த்தா எனக்கு பயமே இருக்காது..” அவன் மனதில் இருந்தது எல்லாம் கொட்டித்தீர்த்தான்..
அருண் அவளிடம் ஈகோ பார்க்கவில்லை, தயக்கம் காட்டவில்லை, அது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, எப்போதுமே தன்னுடைய பலவீனத்தை யாருக்கும் காட்டகூடாது என்று நினைப்பவன் அருண் ,இப்போது எந்த வித தடையோ தயக்கமோ இல்லாமல், எப்படி என்னோட பலவீனத்தை இவளிடம் காட்ட முடிந்தது? விக்கியிடம் கூட கவுரவம் பார்க்கும்போது அபியிடம் மட்டும் ஏன் என் ஆண் என்ற கர்வம் அடங்கி போனது..
அவன் பெற்றோரை தவிர யாருக்குமே இதுவரை தெரியாத அவனது ரகசியம் இப்போது அபிக்கும் சொந்தமானது..
இவனை போய் எறிஞ்சி விழுந்தோமே என்று கழிவிரக்கம் கொண்டாள் அபி..
"சாரி அருண், இப்போநான் என்ன பண்ணனும்?”
"கண்ணை மூடி படுத்தா, மனசுக்குள்ள படபடப்பு அதிகமாகுது, ரொம்ப டென்ஷனா இருக்குஅதான் உன்கிட்ட பேசினா அந்த பீலிங் போகும்னு நெனைச்சி கால் பண்ணினேன், சாரி உன்னோட தூக்கத்தை வேற கெடுக்கறேன்..”
"அது பரவால்ல விடு, இப்போஎப்படி பீல் பண்ற? ஆர் யூ பீலிங் பெட்டர்?”
“இப்போ கொஞ்சம் ஓகே ,பட் போனை கட் பண்ணா திரும்ப அந்த பீலிங் வருமோன்னு பயமா இருக்கு..”
“அதுக்கு நான் என்ன பண்றது..”
என்று குழம்பினாள் அபி
“என்கிட்ட ஏதாவது பேசிக்கிட்டே இருக்கனும் நான் தூங்குற வரைக்கும்..”
“ஐயோ அவ்ளோ நேரம் நான் என்ன பேசுறது?”
"சரி நான் பேசுறேன் நீ கேட்டு உம் மட்டும் கொட்டினா போதும் சரியா..?”

“உம்..” என்றாள் அதுவே அவளது சம்மதம் என்பதுபோல
அவளது குறும்பில் லேசாக சிரித்துவிட்டுட்டு
ஏதேதோ கதை பேச தொடங்கினான் அவன், அபி ஒரு சீரான இடைவேளையில் உம் கொட்டி கொண்டிருந்தவள் அப்படியே உறங்கி போனாள், அவளது ஆழ்ந்த மூச்சு சத்தம் அவனது மனதிற்கு நிம்மதியையும் அமைதியையும் ஒருங்கே தர, ஹெட் போனை காதில் மாட்டியபடியே அவனும் ஆழ்ந்து உறங்கி போனான்...
தொடரும்
 
Last edited:
Top