Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 19

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE




அத்தியாயம் 19

தொலைபேசியின் இனிய அழைப்பில் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்த. வெங்கட்ராமன் எட்டி ரிஸீவரை கையிலெடுத்தார்.

மறுமுனையில் ஒரு பெண் முரளியிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டாள்.ஒரே ஒரு கணம் யோசித்த வெங்கட்ராமன் பின் ஏதோ ஒரு முடிவிற்கு வந்தவராய் முரளியின் அறையிலிருந்த தொலைபேசிக்கு தொடர்பு கொடுத்தார்.

காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டிருந்த ஹோம் தியேட்டரின் சத்தத்தை குறைத்து விட்டு ரிஸீவரை எடுத்தான் முரளி.

"ஹலோ! முரளி ஸ்பீக்கிங்.."

"நா….நான் ரேகா பேசறேன்…"

"ரேகா!...உனக்கெப்படி என் வீட்டு நம்பர் தெரியும்?"

"ஒரு பி ஏவுக்கு அவ பாஸோட வீட்டு நம்பர் தெரியறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல…"

"ஓகே .ஓகே .கம் டூ த பாய்ண்ட். எதற்காக போன் பண்ணினே?."

"உங்களை நான் உடனே சந்திக்கனும்.பர்சனலா பேசனும். ப்ளீஸ்.முடியாதுனு சொல்லிடாதிங்க…"

ரேகாவின் குரல் தழுதழுத்தது.

அழுகிறாளா என்ன? ஆனால் அதற்கெல்லாம் அசருகிறவனா முரளி?

"முடியாது ரேகா. நீ எதுக்காக என்னை சந்திக்க நினைக்கறேனு எனக்கு நல்லாத் தெரியும். அது நிச்சயமாய் நடக்காது.முடிஞ்சு போன ஒரு விஷயத்தை பற்றி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்ல.பை தி வே, இனிமேல் இப்படி வீட்டுக்கெல்லாம் போன் பண்ணாதே.ஐ டோன்ட் லைக் இட்.."

பட்டென்று ரிஸீவரை முரளி வைத்த அதேசமயம், அந்நேரம் வரை எக்ஸ்டென்சனில் மகனின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த வெங்கட்ராமனும் வருத்தத்துடன் ரிஸீவரை அதன் தாங்கியில் வைத்து விட்டு டைனிங் ஹாலுக்கு வந்தார்.

எப்பொழுதும் மகனை சீண்டிக் கொண்டே சாப்பிடும் வழக்கமுள்ளவர் அன்று மட்டும் ஏனோ மௌனவிரதம் மேற்கொள்ள ஆச்சரியப்பட்ட கௌரி அவரை சீண்டினாள்.

"நேத்து நம்ம லோகு மாமா கிட்ட யாரோ ஒரு பெண்ணைப் பற்றி விசாரிக்கச் சொன்னேளாமே. எதுக்காகன்னா?"

"அவசியம் தெரிஞ்சுக்கனுமோ?"

"தெரிஞ்சுக்கத் தானே கேட்கறேன்…."

"அப்போ நல்லா தெரிஞ்சுக்கோ. நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.அதுக்காகத் தான் அந்தப் பொண்ணை விசாரிச்சேன்."

"அது சரி. இத்தனை வயசுக்கப்புறம் இன்னொரு கல்யாணமா? நீங்களும் உங்க ஜோக்கும் சுத்தமா சகிக்கலெ.விளையாடாதிங்கன்னா. உண்மையை சொல்லுங்க.நம்ம முரளிக்குத்தானே பொண்ணு பார்த்திங்க?"

"பல்லை உடைப்பேன் ராஸ்கல்…ஏண்டி உன் பிள்ளைக்கு பொண்ணு பார்க்கறதை தவிர எனக்கு வேற வேலை இல்லேன்னு நினைச்சியா? நான் பார்த்த அந்தப் பொண்ணு அழகாய், புத்திசாலியா முக்கியமா நல்ல குணவதியாய் இருந்தாள். எனக்குத் தான் அப்படியொரு பெண்ணை மகளாய்ப் பெறும் பாக்கியமில்லையே. அந்தப் பெண்ணைப் பெற்ற பாக்கியசாலி யாருனு தெரிஞ்சுக்கலாமேனு ஒரு ஆர்வம். அவ்வளவுதான்.."

வெங்கட்ராமனின் வயிற்றெரிச்சலையோ, கோபத்தையோ முரளி கண்டு கொள்ளவேயில்லை. மௌனமாகவே சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பி போய் விட்டான்.

"பிள்ளையாடி பெத்து வெச்சிருக்கே? இவன் பிறக்காமலே இருந்திருந்தால் கூ ட யார் குடியும் கெட்டிருக்காது. ஆனால் இப்போ கடவுளே! ஊர் பிள்ளையெல்லாம் பார்த்துட்டு இவனைப் பார்த்தால் அப்படியே பத்திட்டு வருது…"

"அப்படியெல்லாம் சொல்லாதிங்கன்னா. யார் கிட்ட தான் குறையில்லே? நம்ம புள்ளய நாமே மட்டம் தட்டலாமா? வயசுக் கோளாறு. ஒரே பிள்ளைனு செல்லமா வேற வளர்த்துட்டோம். ஒரு கால்கட்டுப் போட்டால் தன்னால சரியாயிடுவான்…"

"எனக்கு நம்பிக்கையில்லடி கௌரி. எத்தனைபேர் குடியை கெடுத்தானோ? எத்தனை பேரை அழ வைத்தானோ? ஆனால் ஒண்ணு மட்டும் நிச்சயம். பண்ணின பாவத்துக்கு ஒருநாளில்லே ஒருநாள் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகனும்."

"உங்க பிரசங்கத்தை உங்க காலேஜ் பசங்களோட நிறுத்திக்கோங்கன்னா. பெத்த பிள்ளையை நல்லபடியா ஒர வழிக்கு கொண்டு வர முடியல.இதில பெரிசா பேச வந்துட்டார். ஊர் பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தந்தால் மட்டும் போதுமா? பெத்த பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத் தெரியல .இதில ஊர் பிள்ளைங்களுக்கு இவர் என்ன பாடம் சொல்றார்னு பார்க்கறவங்க ஏசத்தான் செய்வாங்க.என்னவோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.அப்புறம்உங்க இஷ்டம் "

படபடவென்று பொரிந்து கொட்டிவிட்டு கௌரி நகர்ந்து செல்ல, வெங்கட்ராமன் ஏதோ யோசனையில் வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்.



முரளி நாணா அய்யர் வீட்டுக்கருகில் தன் காரை நிறுத்தி விட்டு மாடியேறத் திரும்பிய பொழுது படிக்கட்டில் காத்திருந்த மோகன் அவசரமாய் அருகில் வந்தான்.

"முரளி!...ரேகா வந்திருக்காடா..உன்கிட்ட பேசனுமாம்…"

"நான்சென்ஸ்..இதை சொல்லத்தான் இவ்வளவு அவசரமா வந்தியா?அவளை அப்படியே அனுப்பி தொலைக்காமல் ஏண்டா என் உசிர வாங்கறே?"

"சொன்னேனே முரளி உன்னை பார்க்க விரும்ப மாட்டான் போயிடுனு சொன்னேன்டா..ஒரே ஒரு முறை பார்த்துட்டுப் போயிடறேன்னு கெஞ்சினாள்டா.. அவ அழறதைப் பார்க்க பரிதாபமாயிருந்ததா…அதான்…"

"உடனே மனம் இரங்கி இருக்கச் சொல்லிட்டியாக்கும்.மடையன்டா..நீயெல்லாம் ஒரு ப்ரெண்டுன்னு வந்து வாய்ச்சிருக்கே எனக்கு. சரி சரி.மாடியில் வேற யாரெல்லாம் இருக்கா?"

"ரேகா மட்டும் தான்.கிரியும் சங்கரும் நல்லவேளை வெளியே படத்துக்குப் போயிருக்காங்க."

"ஓகே நான் அவ கிட்ட பேசி சீக்கிரம் அனுப்ப பார்க்கிறேன்.நீ கீழேயே வெயிட் பண்ணு."

சொல்லிவிட்டு சாவகாசமாய் மாடியேறினான் முரளி .மாடியில் சோகப் பதுமையாய் காத்திருந்தாள் ரேகா. கொடி போன்ற உடலைத்தழுவியிருந்த வெண்ணிற சேலையில், முகத்தில் கலக்கமும் பயமும் தெரிந்தாலும் குறையாத அழகுடன் தேவதையாய் தெரிந்தாள்.

அழகு என்றால் எப்பேர்பட்ட அழகு? ஒரு காலத்தில் முரளியை பித்தனாக்கி பின்னால் திரிய வைத்த அழகல்லவா? ஆனால் இன்றோ?

அவளைப் பார்த்தவுடனேயே கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் முரளி. அடுத்து அவன் பேசிய பேச்சிலோ மிளகாயின் காரம்.

"நான் தான் வராதேனு சொன்னேனே ரேகா. ஏன் அநாவசியமா வந்து ஏமாந்து போறே?"

"இனிமேல் தான் நான் ஏமாறனுமா? ஏற்கெனவே தான் ஏமாந்துட்டேனே."

ரேகாவின் கண்கள் கலங்கி முகம் அழுவதற்கான ஆயத்தங்களில் இறங்கியது

"சின்ன விஷயத்தை நீ அநாவசியமா பெரிசுபடுத்தறே ரேகா. இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறே நீ?"

"இன்னும் என்ன ஆகனும்? அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே.இன்னும் என்ன பாக்கியிருக்கு? உங்க காரியம் முடிஞ்சதும் கை கழுவிட்டிங்க. அப்படித்தானே? ஆனால் என்னால அப்படி உங்களை விட்டுட முடியாது. என் வயிற்றில் வளரும் உங்க வாரிசுக்கு நீங்க ஒரு வழி சொல்லித்தான் ஆகனும்."

"வாரிசா? என்ன உளர்றே ரேகா? "

முரளி வியர்த்துப் போய் நின்று விட்டான்.

"நான் உண்மையைத் தான் சொல்றேன்..உங்க குழந்தை இப்போ என் வயிற்றில் வளர்ந்துட்டிருக்கு. எனக்காக இல்லேன்னாலும் உங்க குழந்தைக்காகவாவது எனக்கு வாழ்க்கை கொடுங்க முரளி……ப்ளீஸ்.."

ரேகா விம்மி விம்மி அழத் தொடங்க, முரளி அதிர்ச்சியில் செயலிழந்து போய் நின்றான்.

கடவுளே! எப்படி இந்த தவறு நேர்ந்தது?

"எப்படி….எப்படி ரேகா? அவ்வளவு ஜாக்கிரதையா இருந்துமா….. காட் ஐ கான்ட் பிலீவ் திஸ்.."

"நான் ..நான் சில சமயங்களில் பில்ஸ் எடுத்துக்க மறந்துட்டேன்…"

தப்பு செய்து விட்ட குற்ற உணர்வில் ரேகாவிற்கு நாக்குழறியது.

'டாமிட்!.....நிஜமாகவே மறந்துவிட்டாளா? இல்லை வேண்டுமென்றே சதி பண்ணுகிறாளா?'

சுர்ரென்று மண்டைக்கேறிய கோபத்தை சிரமப்பட்டு அடக்கிய முரளி சமாதானமாகவே பேச முற்பட்டான்.

"கூல் ரேகா….ஜஸ்ட் கூல்…இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போயிடல. இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? டேக் இட் ஈஸிம்மா ஒரு நல்ல கைனகாலஜிஸ்ட்டைப் பார்த்து கன்சல்ட் பண்ணி பேபியை அபார்ட் பண்ணிடலாம். நோ ப்ராப்ளம்…"

என்னவோ காஃபி சாப்பிற்குப்போய் காஃபி சாப்பிடலாம் என்பதைப்போல் வெகு இலகுவாக முரளி இந்த விஷயத்தைக் கையாள,ரேகா பயத்தில் வெலவெலத்துப் போனாள்.

"நோ முரளி….ப்ளீஸ் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பிங்கன்ற நம்பிக்கையில் தானே என்னையே நான் விட்டுக் கொடுத்தேன்….."

"நான் சொன்னதை அப்படியே நீ வேதவாக்காய் எடுத்துகிட்டு நம்பினால் அதற்கு நானா பொறுப்பு?"

சவுக்காலடித்தாற் போல் துடித்துப் போனாள் ரேகா. முரளியோ அவள் அதிர்ச்சியை லட்சியம் செய்யாமலேயே பேசினான்.

"லுக் ஹியர் ரேகா. இதெல்லாம் நீயா வரவழைச்சுகிட்டது…மாத்திரை எடுத்துக்க மறந்தது உன் தப்பு. அதுக்கு நான் என்ன செய்ய? ரெண்டு பேரும் ஆசைப்பட்டோம். ஸோ…சேர்ந்து அனுபவிச்சோம்.தட்ஸ் ஆல் டிட் ஐ எவர் கம்பெல் யூ? உன்னை நான் வற்புறுத்தினேனா? இல்லை தானே? நீயாகவே தான் இணங்கினாய்…"

தப்பை தானே செய்திருந்தாலும் கூட அடித்துப் பேசி அடுத்தவர் மேல் பழி சொல்லி தாங்கள் தான் தவறிழைத்து விட்டோமோ என்று அவர்களே நம்பும்படி செய்வதில் முரளி வெகு சமர்த்தன். இப்பொழுதும் அவன் பேசப் பேச, தவறு தன் மீது தானோ என்ற எண்ணத்தில், அழவும் மறந்தவளாக விக்கித்துப் போனாள் ரேகா.

தற்செயலாக முரளியின் பேச்சைக் கேட்டு மாடிப்படிகளில் அதிர்ந்து நின்றுவிட்ட மோகன், சற்றே நிதானித்துக் கொண்டு அறையினுள் நுழைந்து கைதட்டினான்.

"பென்டாஸ்டிக் முரளி..நீ வக்கீலுக்கு படிச்சிருக்க வேண்டியவன்.நல்லவேளை கடவுள் காப்பாற்றினார். இல்லேன்னா இந்நேரம் குற்றவாளிகள் எல்லாம் காப்பாற்றப்பட்டு நிரபராதிகளுக்குல்ல தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பாய்.."

"ஏய் ! நான் உன்னை கீழே தானே இருக்கச் சொன்னேன். எதுக்காக இப்போ நீ மேல வந்தே?."

"அது சரி பூனை கண்ணை மூடிகிச்சுன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிட்டதா நெனச்சுக்குமாம்.."

"ஓ! ஸிட் அட்டர் புல்ஸிட்!.. என்னடா ரெண்டு பேரும் சேர்ந்து சதி பண்றிங்களா? ரேகாவை நீதான் வரவழைச்சியா? இங்கே பார்றா இது என் பர்சனல் மேட்டர்.இதில் நீ தலையிடாதே. ஒரு பெண்ணால நம்ம நட்பு கெட்டுப் போக வேண்டாம் அண்டர்ஸ்டான்ட்?."

"அதையே தான் நானும் சொல்றேன்.நம்ம நட்பு பாழாககூடாதுனு நீ நிஜமாகவே நினைக்கிறேனா,ரேகாவை ஏத்துக்க…இல்லேன்னா…"

"என்னடா மிரட்டிப் பார்க்கறியா? இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படறவன் நானில்ல…"

அலட்சியமாய் சொல்லிவிட்டு, வாயிலை மறைத்துக் கொண்டு நின்றிருந்த மோகனை கையை வீசி ஒதுக்கித் தள்ளிவிட்டு படிகளில் இறங்க. முரளி எத்தனித்த பொழுது, மோகன் அவசரமாய் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்.

"நான் மிரட்டலடா.உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்..ரேகாவை ஏத்துக்க. நான் உன்னுடைய எத்தனையோ தவறுகளை கண்டுக்காமல் இருந்திருக்கேன் தான்.ஆனால் இப்போ கண்ணெதிரிலேயே ஒரு பெண்ணோட வாழ்க்கையை நீ கசக்கிப் போட்டுட்டுப் போறதை வெறுமனே ஒரு பார்வையாளனா என்னால பார்த்துட்டிருக்க முடியல.ப்ளீஸ்டா…அவளை ஏத்துக்க…"

"வாட் ராட் யூ ஆர் டாக்கிங்? திடீர்னு இவ மேல அப்படியென்ன கரிசனம் உனக்கு? டேய்…உனக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும். என் ஆசைக்கு இணங்கியவளை எல்லாம் கல்யாணம் பண்றதுக்கு நான் ஒண்ணும் ராஜ பரம்பரையில் பிறந்தவனில்லை."

"பணத்துக்காக வர்றவளுக்கும் காதலுக்காக தன்னையே தர்றவளுக்கும் வித்தியாசம் இல்லையா? ரேகா நல்ல குடும்பத்து பொண்ணுடா. வயிற்றுப்பாட்டுக்காகத்தான் உனக்கு பி ஏ ஆனாளே தவிர உன் குழந்தையை வயிற்றில் சுமப்பதற்கில்லை"

மோகன் கோபமாக பேசுவதைக் கேட்டு ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டாற் போல் சிரித்தான் முரளி.

"என்னடா நைட் எதாவது தமிழ் சினிமாவுக்கு போயிருந்தியா என்ன? பன்ச் டயலாக்கா பொளந்து கட்டறே. இவளை மாதிரி பொண்ணுங்களை எல்லாம் நம்ப முடியாதுடா. என் கிட்ட வந்த மாதிரி இன்னும் எத்தனை பேர் கிட்ட போனாளோ?"

"முரளீ….."

நெஞ்சில் நெருப்பையள்ளிக் கொட்டினாற் போல் வேதனையில் துடித்துப் போனாள் ரேகா.

"நோ….!நீங்க என்னை ஏத்துக்கலேன்னாலும் பரவாயில்ல.ஆனால் வார்த்தைகளால் என்னைக் கொல்லாதிங்க. உங்களை நம்பியதற்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான். பட் ஐ ஆம் நாட் எ சீப் வோர் அஸ் யூ திங்க்….."

உயிரே போய்விட்டாற்போல் குமுறி குமுறி அழுதவளைப் பார்த்து நெகிழ்ந்து போன மோகன், முரளியை வெறுப்புடன் வெறித்துப் பார்க்க, அவனோ எதற்கும் கவலைப்படாதவனாக கலகலவென்று சிரித்தான்.

"அப்படி அவ மேல அந்த அளவிற்கு அன்பும் அக்கறையும் இருந்தால் நீயே அவளை ஏத்துகிட்டு வாழ்க்கை கொடு.வூ கேர்ஸ்?"

படு அலட்சியமாக தோளைக் குலுக்கி, போகிற போக்கில் இதையும் சொல்லிவிட்டு முரளி வெளியேற, மோகன் அதிர்ச்சியில் சிலையாக நின்றுவிட்டான்.
 
காதலிக்கும் போது
காதலன் மேல் நம்பிக்கை வைத்து
கற்பை இழக்கும் பெண்களுக்கு
கண்ட கண்ட பேச்சுக்கள் வாங்கி
கண்ணீர் விட்டு அழுக தான் வேண்டும்...
காலம் தரும் தண்டனை.....
கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம்
காதல் என்ற பெயரில்
காணாமல் போனால்
கஷ்டம் தான் படனும்.....
காலத்தின் கட்டாயம்...... 😭😭😭
 
நந்து மாதிரி நல்லவர்கள் வாழும் உலகில் தான்,
முரளி மாதிரி மூர்க்கன்களும் நடமாடுகிறார்கள்.

கனமான பதிவு ஆத்தரே🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️
 
நன்மையும் தீமையும் கலந்தது தான் வாழ்க்கை
 
Top