Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 13

Advertisement

Sakthi bala

Active member
Member
தன் அறைக்குள் சென்ற மதிவதனிக்கு அப்பொழுது தான் ஒரு விஷயம் உரைத்தது. சென்னையில் அவர்கள் இருவருக்கும் தனி அறை இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும் போது இருவரும் ஒரே அறையில் படுப்பது போல தான் தோன்றும்,

ஆனால் மனோரஞ்சன் ஆபீஸ் அறையில் சென்று படுத்து விடுவதால், மதிவதனிக்கு ஒரு பிரச்சனையும் இல்லாமல் போயிற்று. ஆனால் இங்கோ ஒரே ஒரு கட்டில் உள்ள அறை தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அறை வாயிலில் நின்றுக் கொண்டு மதிவதனி யோசித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த மனோரஞ்சன் அவள் ஏன் இப்படி நின்றுக் கொண்டிருக்கிறாள் என்று யோசிக்கும் போதுதான் அவனும் அதை கவனித்தான்.

“ஓ....இது தான் பிரச்சனையா?! மது நீ என்னை நம்பலாம். நாம ரெண்டு பேரும் கட்டிலிலேயே படுத்துக்கலாம். இங்க தரை வேற ரொம்ப சில்லுனு இருக்கும். சோ ப்ளீஸ்.....” என்றான் அவன் கட்டிலை காட்டி.
அவள் மறுப்பேதும் சொல்லாமல் சென்று படுத்துக் கொண்டாள். பயண அலுப்பில் படுத்தவுடன் அவள் உறங்கி விட்டாள். மனோரஞ்சன் மட்டும் சிறிது நேரம் தன் அருகில் உறங்கும் தன் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு அவனையும் உறக்கம் தழுவியது.

மறுநாள் அனைவரும் கோவிலுக்குச் செல்வதற்கு தயாராகி வந்தனர். அழகிய காப்பர் சல்ஃபேட் நிறத்தில் பட்டுப்புடவை கட்டி, கடல் கன்னி போல வந்த மதிவதனியை பார்த்து மனோரஞ்சன், “வாவ்...மது....இந்த சாரில நீ ரொம்ப அழகா இருக்க! இன்னிக்கு நிறைய பேர் உன்னை பார்த்து மயக்கம் போட்டு விழ போறாங்க போ!”என்று அவளை பார்த்துக் கண்ணடித்தான்.

“ம்ம்க்கும்”

“ஹலோ....என்ன ம்ம்க்கும்?”

“அன்னைக்கு நிலா கேட்டப்போ நீங்க எதுவுமே சொல்லலியே? இப்ப மட்டும் என்னவாம்?”

“அப்பவும் நீ அழகா தான் இருந்தே!ஆனால் அப்போ நாம அவ்வுளவா பழகல. நான் பாட்டுக்கு நீ அழகா இருக்கேனு சொல்ல போய், நீ என்னை அடிக்க கட்டையை தூக்கிட்டு வந்துட்டேனா? அதான் சொல்லல. ஆனா இப்போ நாம ரெண்டு பேரும்......” என்று இழுத்தான்.

“நாம ரெண்டு பேரும்?” படபடக்கும் மனதை அடிக்கியபடி கேட்டாள்.

“நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல. அதை சொன்னேன்”

“ஓஹோ....” அவள் கண்களை உருட்டி பெரிதாக ஒரு ஓ போடவும், அவன்,”ஏய்! பார்த்து பார்த்து, கண்ணு வெளிய வந்து விழுந்திட போகுது!”

“ச்சு....போங்க ரஞ்சன்” அவள் சிரிக்கவும் நிலா அங்கே வந்து நின்றாள்.

“அண்ணா....அண்ணி....இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? போங்க, போய் கார்ல உக்காருங்க”

‘இவளை!’ என்று மனதிற்குள் நிலாவை திட்டிக் கொண்டே காரில் ஏற சென்றான் மனோரஞ்சன்.

அப்பொழுது வினோதன் அவன் அருகில் வந்து,”என்ன மச்சி?நிலா கரடி மாதிரி வந்து டிஸ்டர்ப் பண்றாளா?” என்று சிரித்துக்கொண்டே அவன் தோளில் கை போட்டபடி கேட்டான்.

அவன் கையை எடுத்துவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டான் மனோரஞ்சன்.வினோதனின் முகம் நொடியில் சிரிப்பை தொலைத்தது.இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மதிவதனி வினோதன் அருகில் வந்து,”அண்ணா....என்னாச்சுண்ணா?உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை? சொல்லுங்க. என்னால முடிஞ்சா உதவி பண்றேன்”

“ஒண்ணுமில்லேமா...என் நண்பனுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி அதான் இப்படி நடந்துக்கிறான்”

மதிவதனி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.’பிரச்சனை நித்யாவால தான். அது எனக்கு தெரியும். ஆனா அதை பத்தி வினோ அண்ணாவும் நம்ம கிட்ட சொல்லாம மறைக்கிறார்.ஒருவேளை நித்யாவோட குணம் சரி கிடையாது, அதனால தன் ஃப்ரெண்ட்க்கு நல்லது செய்யனும்னு நினைச்சு ரஞ்சன் இப்படி எல்லாம் செய்யுறாரோ? அதை தான் இப்போ வினோ அண்ணா சொல்லிட்டு போறாரோ?’யோசித்தபடியே சென்று காரில் ஏறினாள்.
அவர்கள் சென்றது காரைக்குடியில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில். கோவிலுக்குச் செல்லும் போது அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே சென்றனர். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் நுழைந்ததுமே நடந்த சம்பவம் அவர்கள் மகிழ்ச்சியை துடைத்து போட்டது.

கோவிலில் அம்மன் சந்நிதி அருகே ஒரு குடும்பம் நின்று அம்மனை தரிசித்துக் கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயது மனிதர், அவர் மனைவி, அவர்களது மகள்

இவர்கள் எல்லோரும் உள்ளே நுழைவதை பார்த்த அந்த மனிதர் முகத்தில் பலத்த அதிர்ச்சி தெரிந்தது. சுதாரித்துக் கொண்டு, திரும்பி அவர் மனைவி, மகளிடம், ”ரெண்டு பேரும் வாங்க, கிளம்பலாம். நிம்மதியா இருக்க தான் கோவிலுக்கு வரோம். கண்டவங்கல்லாம் கோவிலுக்கு வந்து கோவிலோட நிம்மதியையும், தூய்மையையும் கெடுக்கிறாங்க. ச்சே! வாங்க போலாம்!” என்று வேகமாக வெளியே கிளம்பினார் அந்த மனிதர்.

அவர் மனைவியும் அவரை பின் தொடர்ந்தார். திரும்பி ஒரு பார்வைக் கூட பார்க்கவில்லை. அவரின் மகள் மட்டும் சூரியநாராயனனை திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி போய் இருந்தன. அவை மன்னிப்பை இறைஞ்சின. சூரியநாராயணன் அவளை பார்த்து போ என்பது போல தலை அசைத்தார்.

சில நிமிடங்களுக்கு அங்கு யாராலும் எதுவும் பேச முடியவில்லை.மௌனத்தில் கழிந்தது. மதிவதனிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. மனோரஞ்சனிடம் கேட்கலாம் என்று பார்த்தால் அவன் அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. சூரியநாராயனன் மௌனத்தை உடைத்து பேசினார். “நல்லவேளை. தாத்தா, பாட்டி இங்க வரல. இல்லேனா ரொம்ப மனசு கஷ்டப்பட்டிருப்பாங்க. இங்க நடந்த விஷயத்தை யாரும் அவங்கக் கிட்ட சொல்லக் கூடாது சரியா? வாங்க போய் சாமி கும்பிடலாம்”

மெல்ல அவர்களிடையே மீண்டும் கலகலப்பு திரும்பியது. சாமி கும்பிட்டு விட்டு, அருகிலிருந்த குளக்கரையோரம் பொங்கல் வைத்தனர். மதிவதனி அங்கும் இங்கும் ஓடி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதிவதனி பொங்கல் வைத்து முடித்ததும், பொங்கல் பானை வைத்து பூஜை செய்வதற்கு ஒரு அழகான பெரிய கோலத்தை போட ஆரம்பித்தாள். கோலத்திற்குக் கலர் குடுப்பதற்கு மனோரஞ்சன் அவளுக்கு உதவ வந்தான். அவள் சொல்லுகிற கலரை குடுத்துக் கொண்டிருந்தான்.

“மது. உன் நெத்தியில் கலர் இருக்கு பாரு. துடைச்சிக்கோ”
அவள் எங்கேயென்று தெரியாமல் தடுமாறவும், மனோரஞ்சன் அவள் அருகில் வந்து தன் கர்சீப்பை எடுத்து அவள் நெற்றியில் இருக்கும் கலரை துடைத்து விட்டான்.

“இப்போ போயிடுச்சா?” என்று கேட்டபடியே அவனை பார்த்தவள், அவன் தன் அருகில் நிற்பதைக் கவனித்து நிலை தடுமாறினாள்.. இரண்டு பேரும் இமைக்க மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அவன் கண்கள் அவள் கண்களை ஆழ்ந்து ஊடுருவி அவள் இதய பெட்டகத்தை சென்றடைந்தது. அந்த கண்கள் வெளிப்படுத்துவது என்ன? காதலா? அன்பா? இல்லை வேறு ஏதோ? வேறு ஏதோ, ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தது, ஏதோ விடைத்தெரியா கேள்வி, அந்த கண்களில் தெரிந்தது.அது என்னவென்று புரியாமல் மதிவதனி குழம்பினாள்.ஆனால் எதை பற்றியும் யோசிக்காமல் அவன் கண்களில் சிறை பட தயாரானாள்.அவன் மேலும் அவள் அருகில் நெருங்கி வந்து கையை நீட்டி.....

“அஹெம்...அஹெம்....அஹெம்...இங்க என்ன நடக்குது? நாம கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கோம். நீங்க என்னடானா இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க?என்ன இதெல்லாம்?!” கிண்டலடித்துக் கொண்டே வந்தாள் நிலா.

மனோரஞ்சன் பல்லைக் கடித்துக்கொண்டு நின்றான்.”ஏன்டி?உனக்கு வேற வேலையே கிடையாதா?ஏதாவது கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு முன்னாடி தயவுசெஞ்சு இங்கிருந்து போய்டு”

“அண்...அண்ண...அண்ணா...என்னைய...இந்த தங்கச்சிய பார்த்து...என்னை பார்த்து.....என்னை பார்த்தா இப்படி ஒரு கேள்வி கேட்டீங்க? அவள் சிவாஜிகணேசன் மாதிரி நடிக்கவும், மனோரஞ்சன் அவளை அடிக்கக் கையை ஓங்கினான்.

“ஓகே! சாரி சாரி, நான் போறேன். ஆனாலும் இப்படி அம்பியா இருந்த எங்க அண்ணன் ரெமோவா மாறுவாருனு நான் நினைச்சு கூட பாக்கல! எல்லாம் நேரம். நீங்க கண்டின்யு பண்ணுங்க. என்ன செய்ய? நான் மட்டும் இப்படி சிங்களா நிக்குறேனே! இங்க வந்தா இவங்க ரெண்டு பெரும் ரொமான்ஸ் பண்றாங்க. அங்க ரித்து என்னடானா கனவு உலகத்துல இருக்கான். வினு அண்ணா வேற அந்த சைடு....” என்று புலம்பிக் கொண்டே போனவளை பிடித்து நிறுத்தினான் மனோரஞ்சன்.

“ஏய்? இப்போ என்ன சொன்ன? வினோ என்ன பண்றான்? அவன் எங்கே?”

“அது...அது வந்து....அங்க வினோதன் அண்ணாவும், நித்யாவும் பேசி....” அவள் முடிப்பதற்குள் மனோரஞ்சன் வினோதன் இருந்த இடத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டான்.

"என்னாச்சு இந்த அண்ணனனுக்கு?! முனுமுனுத்துவிட்டு நிலா அங்கிருந்து சென்றாள்.

மதிவதனி தன்னை சுற்றி இருந்த ஒரு மாயக்கண்ணாடி சுக்கு நூறாக உடைவது போல உணர்ந்தாள். மனசில் ஒரு வலி தோன்றி உடம்பு முழுவதும் வியாபித்தது.’அவங்க ரெண்டு பேரும் பேசுனா இவருக்கு என்ன? எதுக்கு இப்படி ஓடுறாரு? ஒரு சமயம் என் கிட்ட நல்லா பேசுறாரு, ஆனா நித்யானு பேரை கேட்டாலே மாறிடுராரே. ஏன்?ஏன் இப்படி?’ கேள்விகள் அவள் மனதை குடைந்து அவள் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

நடந்தை மறந்து விட்டு மற்ற வேலைகளை கவனிக்க முற்பட்டாள், மதிவதனி ஆனால் அவள் மனம் மனோரஞ்சனிடமே போய் நின்றது. அந்த சமயத்தில் தான் ஒரு சின்ன குழந்தையின் அழுகுரல் அவளுக்குக் கேட்டது. அது ஆற்றங்கரையில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்த மதிவதனி அங்கே சென்றாள்.

ஏற்கனவே அவள் வீட்டினர் அனைவரும் அங்கு தான் நின்றுக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு மதிவதனி அங்கு சென்று பார்த்தபோது, ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி அங்கு நின்று, ‘அப்பா,அப்பா’வென்று அழுதுக் கொண்டிருந்தாள்.அவள் தந்தை ஆற்றில் குளிக்க சென்றவர் போலும்,அவரை காணவில்லை என்பது புரிந்தது. மதிவதனிக்கு உடம்பு நடுங்கியது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த சிறுமியின் தந்தையை தேட தொடங்கினர். மதிவதனியின் முகம் வெளிறி போய் இருந்தது. மனோரஞ்சன் அங்கு வந்து நிலைமையை புரிந்துக் கொண்டு அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டான். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் தந்தையை கண்டுபிடித்து விட்டனர். அவரை கரைக்கு கொண்டு வந்தனர்.

மனோரஞ்சன், மதிவதனியிடம் திரும்பி, “மது, வா நாம வீட்டுக்கு போகலாம்” என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்.
மதிவதனி திரும்பி திரும்பி பார்த்தாள்,”ரன்..ரஞ்சன்....அந்த....அவருக்கு ஒன்னும் இல்லையே? மயக்கம் தானே?” என்று நடுங்கிய குரலில் கேட்டாள்.

அவன் பதில் சொல்வதற்குள் கூட்டத்தில் இருந்தவர்கள் பேசிக் கொண்டது அவர்கள் காதில் விழுந்தது.’ஐயோ பாவம்! சின்ன பொண்ணு. இப்படி அனாதையா விட்டுட்டு மனுஷன் போய் சேர்ந்துட்டாரே! அம்மாவும் இல்ல போல’ இதை கேட்ட மதிவதனிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. அவள் காலின் கீழே பூமி நழுவியது. அடுத்த நிமிடம் அவள் நினைவிழந்தாள்.....

புலரும்
 
Top