Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனவீணையின் புதுராகமே - முன்னோட்டம் - 4

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
அதி யாழி டீசர் :

'ஏய் லூசு யாழி என்ன பண்ற நீ..??' என்று அவள் மனம் கடிவதை பொருட்படுத்தாமல் அவள் பார்வை நொடிக்கொரு முறை ஒரு வித தாள லயத்தோடு கடந்த சில நிமிடங்களாகவே நெற்றியில் படிந்து, புரண்டு தவழும் அவன் கேசக்கற்றையில் நிலைத்து இருந்தது.

அதிலும் அதி அவ்வப்போது ஸ்டீரிங்கை ஒரு கையால் பிடித்தவாறு நெற்றியில் புரளும் கேசத்தை இடக்கரத்தால் கோதி விடும் அழகு அவளை மொத்தமாக கொள்ளை கொள்ள தவித்து தத்தளித்து போனது பேதை நெஞ்சம்.

கண்களை இறுக மூடிக்கொண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவாறு 'பார்க்காத, பார்க்காத' என்ற அவளுக்கு அவளே இட்ட கட்டளைகள் எல்லாம் அதியின் ஆளுமையின் முன் மண்டியிட அவளும் என்ன தான் செய்வாள்..??

புகைபடத்தில் கண்ட நொடியே இத்தனை வருடங்களாக சலனமின்றி இருந்த பெண் மனதில் நுழைந்து கலகம் செய்து கொண்டிருப்பவனின் அருகாமையில் பெண்ணவள் படும்பாடு வார்த்தைகளில் அடங்கி விடக்கூடியவை அல்ல..!!

குளிர் தென்றலும் அனல் காற்றும் ஒன்றோடொன்று கைகோர்த்து அவளை தழுவி வதைக்க தொடங்கிதில் சுகவதை கொண்ட மனம் மீண்டும் அவனையே முட்டி நின்றது.

அதிலும் அதிர்துடியனின் இடதுபுற புருவ முடிவில் இருந்த சிறு தழும்பு அவன் வசீகரித்தை கூட்டிட அதை தொட்டு பார்க்கும் எண்ணம் எழ திடுக்கிட்டு போனாள்.

"வேணாம் யாழி தப்பு பண்ணாத அவருக்கும் உனக்கும் நிறைய வயசு வித்யாசம் கண்டிப்பா போடா வாடான்னு சொல்ல முடியாது அது கூட பரவால்ல உன்னால அவரை பார்த்து பேச கூட முடியலை எப்படி காலம் தள்ள முடியும் வேண்டாம்டி உங்களுக்குள்ள கண்டிப்பா செட்டே ஆகாது..., அதோட உன் யூடியுபர் கனவும் கோவிந்தா கோவிந்தா தான் சோ கண்ட்ரோல் யுவர்செல்ப்" என்று மனதை அடக்க அவள் அரும்பாடுபட,

அதுவோ அவளுக்கு எதிராகவே திரும்பியதோடு அல்லாமல் கடிவாளமற்ற குதிரையாக அதிர்துடியனிடம் சரண் புக துடித்து கொண்டிருந்தது.. அவள் எத்தனையோ முயன்ற போதும் அதை இறுக்கி பிடிக்க முடியாமல் அவள் விழிகளும் மனதோடு கூட்டு சேர்ந்ததில் அவளையும் அறியாமல் சுற்றம் மறந்து அவனில் லயித்து கிடந்தாள்.

"ஏன் யாழி இப்படி பார்த்துட்டு இருக்க..??? மானத்தை வாங்காதே தயவு செய்து திரும்பு" என்று அவளே அவளுடன் போராடி களைத்து போனாள்.

கடைசியா போன வருஷம் அக்வ்வேரியம்ல ( aquarium) ஒரு குட்டி மல்டிகலர் மீனை இப்படி தான் உன்னையே மறந்து உத்து உத்து பார்த்து ரசிச்சுட்டு இருந்த ஆனா இப்போ அதை விட அதிகமா ஏன் உன் கண்ணு அவர் மேல போகுது.. ஏன்டி இப்படி பண்ற..?? இதுவரை நீ இப்படி யாரையும் பார்த்தது இல்லையே, என்னதான் அவர் பார்க்காதப்போ பார்த்தாலும் அது அவருக்கு தெரிஞ்சா மனமே போயிடும் அமைதியா இருடி" என்று உள்ளுக்குள் நொந்து போனாள்.

என்ன விதமான உணர்வு இது..!! ஒருவேளை விஷ்ணு சொன்னது போல அவன் தனக்கு முட்டை மந்திரித்து விட்டானோ என்று யோசிக்க அப்போது தான் தம்பியின் நினைவே வந்தது அவளுக்கு அதுவும் பல மணி நேரம் கடந்து.

********************************************************

மறுபுறம் அமர்ந்திருந்த அதிர்துடியனுக்கோ நொடிக்கொரு முறை தன் மீது படிந்து மீளும் அவள் பார்வையும், தவிப்பும், அவஸ்தையும் அனைத்திற்கும் மேலாக அவன் பார்வை அவள் மீது படியும் போதெல்லாம் நாணத்தில் செம்மை படர்ந்து சிவந்த கன்னங்களும் கள்வெறி கொள்ள செய்திட அவளை இப்படியே கடத்தி சென்று விடும் வேகம் பிறந்தது.

ஆனால் அதை அவன் செய்யும் முன் அவன் மனமோ 'அதி ஏற்கனவே பயந்து போயிருக்கா, இதோட எண்ணி நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி உன்கிட்ட பேசலை கொஞ்சம் கண்ட்ரோல்ல இரு' என்று அவனை அவனே கடிந்து கொள்ள,

பெரும் தயக்கத்தோடு அவனை பார்த்தவள் மெல்லிய குரலில், 'என்... என்னை எங்க கடத்திட்டு போறீங்க..??' என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட,

அவள் வார்த்தையில் பாதையில் பதித்திருந்தவனின் பார்வை அவள் புறம் திரும்பி சில நொடிகள் மௌனமாக படிந்த அடுத்த நொடியே அட்டகாசமாக சிரிக்க தொடங்கிவிட்டான்

'ஏன் சிரிக்கிறீங்க..??'

'என் மனசுக்குள்ள உட்காந்துட்டு அதை அப்படியே படிச்சு சொல்ற உன்னை என்ன பண்ணலாம்..??' என்று சிரிப்பினூடே கேட்டவன்,

ஸ்டிரிங்கில் தாளமிட்டவாறே, "எனக்கும் யாழியை கடத்திட்டு போக தோணுது கடத்திடலாமா..??" என்று புருவம் உயர்த்தி அவன் கேட்கவும்..,

எங்கே அவள் திருமணத்திற்கு மறுத்ததை அறிந்து கொண்டு இப்போது கடத்தி கொண்டு செல்கிறானோ..?? என்ற ஐயத்தில் கேட்டவள் அவன் பதிலில் தூக்கி வாரி போட அவனை பார்த்தாள்.

ராகம் நாளை மாலை இசைக்கும் இணைந்திருங்கள் ...

கருத்துக்களை பதிவிடுங்கள்...
 
Last edited:
???

மனசாட்சி காரி துப்பினாலும், அவனை நல்லாவே சைட் அடிக்கிறா..??

Font size கொஞ்சம் பெருசா போட்டா படிக்க ஈசியா இருக்கும்...
 
பண்ணிட்டேன் சிஸ்... தேங்க்ஸ் ?
 
??????சூப்பர் ????, பாருமா யாழி பாரு ????அப்படி தான் சூப்பரா சைட் அடி ?????.

சிங்கத்துக்கே வெக்கம் வர அளவுக்கு பாக்குறாளே ?????
 
Last edited:
அதி யாழி டீசர் :

'ஏய் லூசு யாழி என்ன பண்ற நீ..??' என்று அவள் மனம் கடிவதை பொருட்படுத்தாமல் அவள் பார்வை நொடிக்கொரு முறை ஒரு வித தாள லயத்தோடு கடந்த சில நிமிடங்களாகவே நெற்றியில் படிந்து, புரண்டு தவழும் அவன் கேசக்கற்றையில் நிலைத்து இருந்தது.

அதிலும் அதி அவ்வப்போது ஸ்டீரிங்கை ஒரு கையால் பிடித்தவாறு நெற்றியில் புரளும் கேசத்தை இடக்கரத்தால் கோதி விடும் அழகு அவளை மொத்தமாக கொள்ளை கொள்ள தவித்து தத்தளித்து போனது பேதை நெஞ்சம்.

கண்களை இறுக மூடிக்கொண்டு எச்சிலை கூட்டி விழுங்கியவாறு 'பார்க்காத, பார்க்காத' என்ற அவளுக்கு அவளே இட்ட கட்டளைகள் எல்லாம் அதியின் ஆளுமையின் முன் மண்டியிட அவளும் என்ன தான் செய்வாள்..??

புகைபடத்தில் கண்ட நொடியே இத்தனை வருடங்களாக சலனமின்றி இருந்த பெண் மனதில் நுழைந்து கலகம் செய்து கொண்டிருப்பவனின் அருகாமையில் பெண்ணவள் படும்பாடு வார்த்தைகளில் அடங்கி விடக்கூடியவை அல்ல..!!

குளிர் தென்றலும் அனல் காற்றும் ஒன்றோடொன்று கைகோர்த்து அவளை தழுவி வதைக்க தொடங்கிதில் சுகவதை கொண்ட மனம் மீண்டும் அவனையே முட்டி நின்றது.

அதிலும் அதிர்துடியனின் இடதுபுற புருவ முடிவில் இருந்த சிறு தழும்பு அவன் வசீகரித்தை கூட்டிட அதை தொட்டு பார்க்கும் எண்ணம் எழ திடுக்கிட்டு போனாள்.

"வேணாம் யாழி தப்பு பண்ணாத அவருக்கும் உனக்கும் நிறைய வயசு வித்யாசம் கண்டிப்பா போடா வாடான்னு சொல்ல முடியாது அது கூட பரவால்ல உன்னால அவரை பார்த்து பேச கூட முடியலை எப்படி காலம் தள்ள முடியும் வேண்டாம்டி உங்களுக்குள்ள கண்டிப்பா செட்டே ஆகாது..., அதோட உன் யூடியுபர் கனவும் கோவிந்தா கோவிந்தா தான் சோ கண்ட்ரோல் யுவர்செல்ப்" என்று மனதை அடக்க அவள் அரும்பாடுபட,

அதுவோ அவளுக்கு எதிராகவே திரும்பியதோடு அல்லாமல் கடிவாளமற்ற குதிரையாக அதிர்துடியனிடம் சரண் புக துடித்து கொண்டிருந்தது.. அவள் எத்தனையோ முயன்ற போதும் அதை இறுக்கி பிடிக்க முடியாமல் அவள் விழிகளும் மனதோடு கூட்டு சேர்ந்ததில் அவளையும் அறியாமல் சுற்றம் மறந்து அவனில் லயித்து கிடந்தாள்.

"ஏன் யாழி இப்படி பார்த்துட்டு இருக்க..??? மானத்தை வாங்காதே தயவு செய்து திரும்பு" என்று அவளே அவளுடன் போராடி களைத்து போனாள்.

கடைசியா போன வருஷம் அக்வ்வேரியம்ல ( aquarium) ஒரு குட்டி மல்டிகலர் மீனை இப்படி தான் உன்னையே மறந்து உத்து உத்து பார்த்து ரசிச்சுட்டு இருந்த ஆனா இப்போ அதை விட அதிகமா ஏன் உன் கண்ணு அவர் மேல போகுது.. ஏன்டி இப்படி பண்ற..?? இதுவரை நீ இப்படி யாரையும் பார்த்தது இல்லையே, என்னதான் அவர் பார்க்காதப்போ பார்த்தாலும் அது அவருக்கு தெரிஞ்சா மனமே போயிடும் அமைதியா இருடி" என்று உள்ளுக்குள் நொந்து போனாள்.

என்ன விதமான உணர்வு இது..!! ஒருவேளை விஷ்ணு சொன்னது போல அவன் தனக்கு முட்டை மந்திரித்து விட்டானோ என்று யோசிக்க அப்போது தான் தம்பியின் நினைவே வந்தது அவளுக்கு அதுவும் பல மணி நேரம் கடந்து.

********************************************************

மறுபுறம் அமர்ந்திருந்த அதிர்துடியனுக்கோ நொடிக்கொரு முறை தன் மீது படிந்து மீளும் அவள் பார்வையிலும், தவிப்பும், அவஸ்தையும் அனைத்திற்கும் மேலாக அவன் பார்வை அவள் மீது படியும் போதெல்லாம் நாணத்தில் சிவந்து சிவப்பேறிய கன்னங்களும் கள்வெறி கொள்ள செய்திட அவளை இப்படியே கடத்தி சென்று விடும் வேகம் பிறந்தது.

ஆனால் அதை அவன் செய்யும் முன் அவன் மனமோ 'அதி ஏற்கனவே பயந்து போயிருக்கா, இதோட எண்ணி நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி உன்கிட்ட பேசலை கொஞ்சம் கண்ட்ரோல்ல இரு' என்று அவனை அவனே கடிந்து கொள்ள,

பெரும் தயக்கத்தோடு அவனை பார்த்தவள் மெல்லிய குரலில், 'என்... என்னை எங்க கடத்திட்டு போறீங்க..??' என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட,

பாதையில் பதித்திருந்தவனின் பார்வை அவள் மீது சில நொடிகள் மௌனமாக படிய மறுநொடியே அட்டகாசமாக சிரிக்க தொடங்கிவிட்டான்.

'ஏன் சிரிக்கிறீங்க..??'

'என் மனசுக்குள்ள உட்காந்துட்டு அதை அப்படியே படிச்சு சொல்ற உன்னை என்ன பண்ணலாம்..??' என்று சிரிப்புடன் கேட்டவன்,

ஸ்டிரிங்கில் தாளமிட்டவாறே, "எனக்கும் யாழியை கடத்திட்டு போக தோணுது கடத்திடலாமா..??" என்று புருவம் ஏற்றி அவன் கேட்கவும்..,

எங்கே அவள் திருமணத்திற்கு மறுத்ததை அறிந்து கொண்டு இப்போது கடத்தி கொண்டு செல்கிறானோ..?? என்ற ஐயத்தில் கேட்டவள் அவன் பதிலில் தூக்கி வாரி போட அவனை பார்த்தாள்.

ராகம் நாளை மாலை இசைக்கும் இணைந்திருங்கள் ...

கருத்துக்களை பதிவிடுங்கள்...
Nirmala vandhachu ???
 
ஹலோ எஸ்குஸ்மி ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் விடுற ஜொள்ளு குற்றால அருவியா கொட்டுது வந்து துடைச்சு விடுங்க ??????????????.
 
யாழி எங்க ஹீரோ கிட்ட டோட்டலா சரண்டர் ஆகிட்டியே? ? ? ? இதுக்கா அவ்ளோ டையலாக் பேசின.... அதி எதிர்ல நாலு வார்த்தைக்கு மேல வரலையா செம செம இப்படிதான் :LOL: :LOL: :LOL: :LOL: நல்லா வருவாமா நீ ??????
 
Last edited:
Top