Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மின்னல் - (இயற்கை ரசனை)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
ஸ்ரீ ...... ஸ்ரீ ......! பெரிய மழை வந்துடும் போலிருக்கு ? கார்ல் போகாம நடந்து போறியே ? உடம்புக்கு ஏத்தச்சும் வந்துட்டா.

காம்பவுண்ட் கேட் வரை விரைந்து வந்து துர்கா. அவளை தடுக்க பார்த்தாள்.

"உன் பக்கத்துல இருந்தா ..... என்னால நிம்மதியாக இருக்க முடியலை டென்ஷன் ஆகுது. மனசு பாரமா இருக்கு.

உடம்புக்கு ஏத்தச்சும் வரட்டும் தான். நான் வெளியே போகிறேன். கொஞ்ச நேரமாவது என்னை நிம்மதியா இருக்க விட்டேன்.

உங்கள் தொந்தரவு தாங்க முடியாமல் தான் வெளியே போகிறேன்.... கனிஸ்ரீ கைகள் எடுத்து கூப்பினாள்.

குற்ற உணர்வுடன் தலை குனிந்து கொண்டாள் துர்கா.

நீண்ட பெருமூச்சு இழத்தா படி .... மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிய படி நடந்தாள்.

சாலையின் இருபுறமும் ஏலக்காய் செடிகள் ஆள் உயரத்துக்கு மேல் வளர்ந்து இருந்தது.

திடீரென்று வானம் லேசாய் பன்னீர் (மழை) தெளித்தது.

துர்கா இளைய ஜமீன்தார் பற்றி சொன்ன விஷயம் அவள் ஞாபகத்துக்கு வந்தது.

இளைய ஜமீன்தார் அகத்தியன் ....‌‌ இதுவரை நான் நேரில் பார்த்தது இல்லையா ?

ஆனால் தேனீயும் கம்பத்தில் உள்ள அந்த டான்ஸ் புரோகிராமிற்கு அவர் வந்து ...‌ முன் வரிசையில் அமர்ந்து பார்த்தாராமே ?

வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் தான்.‌‌... அகத்தியன் தாயகம் திரும்பினாராமே ?

நாட்டியத்தை இரு தடவை நேரில் பார்த்து ரசித்த மனிதர்.... தங்கள் எஸ்டேட்டில் உள்ள ஆடிட்டோரியத்தில் நான் வந்து நடனமாடுவதற்கு..... உதவியாளர் மூலம் பணத்தையும் வெள்ளி தாம்பாளம் பட்டுப்புடவையில் தட்சணையும் வைத்துக் கொடுத்து விட்டார்.

அவரை நான் கவனிக்கவில்லை? பரதநாட்டிய உடை அணிந்த கால்கள் சலங்கை கட்டி விட்டால்.... நான் என்னையே மறந்து போய் விடுவேன்?

எனக்கு ஆயிரம் ரசிகர்கள் இருக்கிறார்கள் இளம் தொழிலதிபர் அனுஷ் தவறாமல் நடந்து டான்ஸ் ப்ரோக்ராம் எங்கு நடந்தாலும் டாண் என்று வந்து விடுவார்மா?

இரண்டு வருடங்களுக்கு மேலாக முதல் வரிசையில் அமர்ந்து நடனத்தை இமை கொட்டாமல் ரசிக்கிறார் அனுஷ் என்று பெரியம்மா துர்கா அடிக்கடி கூறுவாளே?

அவனைக் கூட நான் ஏறிட்டுப் பார்த்த இல்லை.

பார்க்க விரும்பவில்லை என்பது தானே நிஜம்.....!

அனுஷ் தம்பிக்கு உன் மேல் ஒரு கண்! என்று அவனை பற்றியும் விடாமல் பெரியம்மா துதி பாடினாளே?

ஆனால்.... நான் எதற்கும் செவி சாய்க்கவில்லை. மசியவில்லையே......!

நான் பிறந்ததுமே.... அம்மா இறந்து விட்டாளா மே ? சே ... ! நானும் அப்போதே இறந்து போயிருக்கலாம்.

பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை. என்னை எடுத்து வளர்த்து விட்டாள்.

பாசமாய் உயிராய் தான் இருக்கிறாள்.ஆனால் எப்படியாவது இந்த பரம்பரை தொழிலில் என்னை இழுத்து விடப் பார்க்கிறாள்.

பெரியம்மாவின் மூத்த சகோதரி
ஞானகுமாரி இரண்டு பெண் குழந்தைகள் பெற்றவள்.

இருவருக்குமே நாட்டியம் கற்று தந்து..... தாரகைகள் ஆக்கி விட்டாளே.

அவர்களும் பெரிய தொழிலதிபர், வி.ஐ.பி.க்களை தங்களது பக்கம் ஈர்த்து மயக்கி.... பெரிய பங்களா, கார் என்று வசதியாய் வாழ்கின்றார்கள்.

அதை கண்கூடாய் பார்த்துவிட்டு தானே...... பெரியம்மா என்னை துளைத்து எடுக்கிறாள்.

எனக்கு புத்தி சொல்வதற்காக..... போன் செய்து தனது அக்கா ஞானகுமாரி வரவழைத்தாள்

அவளும் தன் இரு பெண்களுடன் வந்திருந்து.... என்னை சுற்றி வளைத்து கொண்டு கடுமையாய் திட்டி என் மனதை மாற்ற பார்த்தார்கள்.

கெஞ்சி போராடி பார்தேன் முடியவில்லை. விட்டால் வலுக்கட்டாயமாக எந்த பணக்காரனையோ வீட்டிற்கே வரச் சொல்லி விடுவார்கள் போல் மும்முரமாய் இருந்தார்கள் .

பொறுத்து பார்த்து விட்டு முடியாமல் ..... நான் கதவை அடைத்துக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்ள முயன்றாள்.

தாழ்ப்பாளை உடைத்துக் கொண்டு வந்து என்னை காப்பாற்றி விட்டார்கள்.

இதோபார் துர்கா இவர் தீர்மானமாக இருக்கும் என யாரோ இவன் கிட்ட வாயைத் திறக்க வேண்டாம் இனிமே அவளோட விஷயத்தை நான் தலையிட தலையிடுவதில்லை எதுக்கு பொல்லாப்பு ? பழி ,பாவம்.... எங்களை வந்து சேர்ந்திடும். தேவையா ?

நாங்க விடியற்காலை ஊருக்கு புறப்படறோம். நீயாச்சு... இனி இவளாச்சு....." என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

கொஞ்ச காலம் பயந்து கொண்டு பெரியம்மா அமைதியாய் தான் இருந்தாள்.

இப்போது மீண்டும் குடைந்தெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

அந்த அனுஷ் அவ்வப்போது ஒரு ஆள் தூது சொல்ல அனுப்பி வைத்தான்.

அனுஷ்யின் ஆசையை..... பெரியம்மாவிடம் அப்பட்டமாய் சொல்லி விட்டு..... பணத்தாசை காட்டி விட்டு செல்வானே அந்த ஆள்?

அதை போன்று..... இந்த இளைய ஜமீன்தாரரும் தன் ஆசையை உதவியாளர் மூலமாய் வெளிப்படுத்தி இருப்பாரோ?

அப்படி தான் இருக்க வேண்டும்.

அதனால் தான்..... பெரியம்மா நச்சரித்து கொண்டு இருக்காள். எனக்கு தெரியாமல் என்னென்னமோ நடக்கிறதே ?

இந்த மாதிரி ரகசியமாய் பேசுவதில்.... திட்டம் தீட்டுவதில் பெரியம்மா கெட்டிக்காரியாய் இருக்கிறாள்.

அந்த இளைய ஜமீன்தார் அகத்தித்தியன்.... என்னை நேரடியாக கண்டால் நான் அப்படி பட்ட பெண் இல்லை என்று எடுத்துச் சொல்லி விட வேண்டும்.

நாளை தான் டான்ஸ் புரோகிராம் ?

அதை முடித்துவிட்டு இங்க இருந்து புறப்பட வேண்டும் .

இங்கிருந்து போய் விட்டால்..... இந்த பிரச்சினை இதோடு தீர்ந்து விடும்..இனி மீண்டும் என்னை புக் செய்ய வந்தால் கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது தான்....

இத்தனைக்கும் பி.ஈ. படித்து முடித்து டிஸ்டிங்ஷன் (distinction) தேறியவள் நான்.

வீட்டில் இருந்தபடி நெட் மூலமாக நான் தயாரிக்கும் புராஜெக்ட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

வருமானம் கிடைக்கிறது வெறுமனே டான்ஸ் புரோகிராம் மட்டும் நம்பியிருக்கவில்லை.

இரண்டு பக்கம் வருமானம் வருகிறது.

ஆனால் இந்தப் பெரியம்மாவுக்கு இதில் திருப்தி இல்லை.

குல வழக்கப்படி நடந்து......
லட்ச லட்சமாக சம்பாதிக்க வேண்டும்.

யாராவது மயக்கி சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெரியம்மாவுக்கு....!

பெரியம்மாவை விட்டு..... ஏதாவது லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி கொள்ள..... எத்தனை நேரம் பிடிக்கும்?

ஆயிரம் தான் இருந்தாலும்...... என்னை பாசமாக வளர்ந்தவள். வயதாகி காலத்தில் அவளை 'அம்போ' என்று விட்டு செல்வதற்கு என் மனசாட்சி இடம் தரவில்லை.

சரி..... எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இயற்கையை ரசிக்கலாம்.

பன்னீர் தெளிப்பது போல் சொல்லி விட்டு விட்டு லேசாக நடித்துக் கொண்டிருந்ததையும், ஏழைச் செடிகள் குளிருக்கு நடுங்கிய சிலிப்பதையும் வேடிக்கை பார்த்துவிட்டு..... இடது பக்கம் திரும்பினாள்.

பச்சை பசேலென்று செடிகளுக்கு மத்தியில்.... வகிடு எடுத்து போன்ற ஒரு ஒற்றையடிப் பாதை சரிவாய் கீழ் நோக்கிச் சென்றது.

கிழே நீள்வட்டமாய் சிறு ஏரி....!

'ஆஹா....! சுற்றிலும் பசுமை..... நடுவில் நீல வண்ணத்தில் ஏரி.... நிலத்தை கெட்டியாக கரைத்து விட்டது போல் ஆகாயம் நீல வண்ணம் இருக்கிறது.

அந்த நீல வண்ணம் நீரில் பிரதிபலித்து..... எரியும் நீல நிறத்துடன் காட்சியளிக்கிறதே!

கீழே இறங்கி அந்த ஏரி அருகில் சென்றாள் என்ன ? என்று தோன்றியது.

அங்கிருந்து பார்த்தால் நான்கு புறமும் பச்சை நிறப் போர்வையை போர்த்தினால் உச்சி மேடு வரை அழகுடன் திகழ்வதைக் கண்டு ரசிக்கலாமே ?

சரிவின் வழியாக இறங்கி செல்ல வேண்டியது தான்.

எரி தண்ணீரில் பாதங்கள் நினைத்தால் என்ன?

ஆசை உந்தித் தள்ள..... அந்தக் கூற்று எழுதி சரி பாதையின் அருகே சென்றாள்.




401

? ஸ்ரீ நினைத்தது போல் இளங் ஜமிந்தார் ஆசைப்படுகிறாராம் ஸ்ரீ மேல்? ?

? ஸ்ரீ ஏரி அருகை சென்றிருக்கிறாள் அங்கு என்ன நடக்கும் ??

சின்ன யூடி தான் ஆரம்பத்தில வரும் அப்புறம் போகப் போக பெரிய யூடியா வரும் . யாரும் கோபப்பட வேண்டாம் ?

கடைசி இரண்டு யூடி ரொம்ப சின்னதா வரும்
 
Top