Hi Machi..
It's me Jayanthi Sudhakar n my pen name is Shambavi Chandran.
2026 கனவு பட்டறை போட்டி கதை..
ஆனா போட்டி முடிஞ்சி 'சில நிமிடங்கள் கழித்து..' னு YouTube ல வருமே அப்படி சில மாதங்கள் கழித்து பாவப்பட்ட ஜீவன்களோட( Hero Heroine) நம்மையும் மலர் படுக்கையில சுகமாக தூங்க வச்ச மாண்பு மிகு எழுத்தாளர்..
Anonymous writer Bavathi அவர்கள்.
கதையை பத்தி சொல்லனும் னா நிறைய கனவுகள் + எதிர்ப்பார்ப்புகளோட திருமண பந்தத்தில் இணையுற கிரி & கமலி வாழ்க்கை ஏன் சராசரி இளஞ்ஜோடிகளை போலில்லாம மனைவியை விலக்கி வைக்க தெரியாம, மனசார ஏற்கவும் முடியாம தடுமாறும் கிரி, என்ன காரணமென தெரியாமல் கணவன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கும் புது மனைவி கமலி..ஏன், என்னாச்சு, இனி இவங்க வாழ்க்கை எப்படியிருக்கும் என உயிரோட்டமான உரையாடல்களை அங்கங்க தூவி விட்டு அழகான குடும்ப கட்டமைப்புக்குள் நடக்கும் சராசரி அரசியல் களம் இதை அவங்க கற்பனையில அருமையா கொடுத்திருகாங்க பவதி.
கிரிதரன்..இளம் வயதில் குடும்ப பொறுப்புகளை சுமந்து தன் தாய் மற்றும் தமக்கைக்கு 24/7 365 days ATM machine ஆ அள்ளி அள்ளி கொடுத்தாலும் சிறு சேமிப்பாய் லைட்டா புத்தியோட தன் சித்தப்பாவிடம் சேமித்து வைக்கும் நாயகன். கமலியை இவன் தவிர்க்க காரணம் தெரிஞ்சு கோபம் வந்தாலும் எனக்கு இவனோட loyal commitment towards his wife ரொம்ப பிடிச்சது..சதா பணம் அனுப்பு னு பாசமா சொல்ற அம்மா, அக்கா அவனுக்கு னு ஒரு மனம் இருக்கும் அவனுக்கும் தன் சரிபாதி ய பத்தி நிறைய கனவுகள் இருக்கும் னு கொஞ்சமும் நினைச்சு பார்க்காதவங்க மத்தியில இன்னொரு அடிமையா வந்து சிக்குறா கமலி. கிரி அவளை ஏன் மனைவியா ஏத்துக்கல னு வெளிப்படையா சொன்னாலும் like a clean slate, தன் கணவன் அழகை ரசிக்கிறா, அவனை மனதார நேசிக்கிறா..அவன் வெளிநாட்டுக்கு கிளம்பும் போது தவிக்கிறா..அவனை பிடிச்ச ஒரே காரணத்துக்காக தன் புகுந்த வீட்டு ஆளுங்களையும் தன் வீடா நினைக்குறா..மனைவியோட பாசாங்கில்லாத மாசு மருவற்ற காதல் கிரியை அசைச்சு பார்த்தது ல இந்த உலகழகன் மனைவியை ஏத்துக்கிட்டாராம்..எப்ப கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் கழிச்சு அதும் கடல் தாண்டி கத்தார் ல வேலை செய்யும் போது..போடாங் னு திட்ட தோணிச்சு..ஆனா அந்த பய மேல இந்த புள்ள வச்சிருக்கிற பேய் காதலை பாக்கும் போது அந்த பெரிய பிசாசை மன்னிக்கலாம்..தப்பில்ல..
கமலி In my POV இவ தான் இந்த கதையோட ஆணிவேர் னு சொல்வேன்..இவளை சுத்தி தான் கிரி உள்பட எல்லாருமே..எந்தவொரு காரணம் தன் கணவனை தள்ளி வச்சதோ அவளோட இளமை உணர்வுகளை நீர்த்து போக வச்சதோ அதையே சவாலா எடுத்துட்டு கமலி யோட complete makeover..just Vow is to say simple..but the efforts she put to attain this commendable. எந்தவொரு இடத்திலும் கணவனை விட்டுக்கொடுக்காம அவனுக்காக அவன் குடும்பம், நண்பர்கள் ஏன் அவன்க்கிட்டயே சண்டை போட்டு தாரமாகும் முன் தாயாய் அரவணைத்த அன்பு தேவதை. இதுக்கு sample aa..'உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சதுல தான் என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சேன்..' கேட்க ஒரு catchy convo வா இருந்தாலும் அவ அனுபவிச்ச தனிமை, வலி, தவிர்ப்பு எல்லாம் சுமந்த ஒரு இடம். No matter Giri is hero of this story, to me u r leading a huge step above him as a leading character Kamali.
Bavathi நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாறி சுமார் 5 வருடங்களுக்கு முன் Anonymous madam கதைகளை படிச்சிருக்கேன்..நிறைய பேசியிருக்கோம்..taking that privilege will share how I felt genuinely once I finished this story Machi. Totally unexpected that Anonymous will be u yaar..started reading this once I saw posts about dialogs..but u tested our patience heavily Machi..keeping us waiting for long..everyday I would wake up n immediately look for any new updates u know...? கதையை பத்தி நிறைய பேசிட்டேன்..நீண்ட இடைவெளி விட்டாலும் கதைக்கு தேவையான வலிமையான கதைக்கரு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை short, crisp n pricking deep convos மூலம் கிரி கமலியை எங்க மலர்(ன) படுக்கையில அழகா தூங்க வச்சிருக்கீங்க மச்சி..இப்படி ஒரு அருமையான கதையை கொடுத்ததற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்





Do continue giving us such beautiful stories insisting family values. Thoroughly enjoyed this one.. Congratulations n Cheers Machi






Don't miss this beautiful story my dear friends. கண்டிப்பா படிங்க..trust me u will enjoy for sure.