Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -09

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -09

அடர்ந்த ரோஸில் மெல்லிய சரிகை மற்றும் கற்கள் பதித்த டிசைனர் சாரியை கட்டி, அதற்கு ஏற்றார் போல் டிசைனர் ப்ளவுஸ்... தலைக்கு உச்சியில் சின்ன கிளப் போட்டு... கண்களில் மைதீட்டி சின்னதாக பொட்டு வைத்தாள்... அவள் மேலிருந்து இறங்கி வரும்போதே அபி... சூப்பர்டி தேவதை மாதிரியிருக்கே..

ஆமாம் ஆரா..தன் கையால் முகத்தில் திருஷ்டி கழித்தாள் லதா...

பின்னாடியே இனியன்... ஒயிட் ஷர்ட் மற்றும் ஸ்கை ப்ளூ ஜீன்ஸில் வந்தான்..

அண்ணா நீயும் சூப்பர் என்றாள் அபி.. ஆராவை கவனிக்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு காரை நோக்கி போனான்...

சரி அத்தே.. நாங்க கிளம்பறோம்... உடனே அபி , ஆரா அருகில் வந்து, பார்த்து செயிடி.. மாட்டிக்க போறே..

அதெல்லாம் மாட்ட மாட்டேன்...

இனியன் காரை எடுக்க.. முன் சீட்டில் உட்கார்ந்தாள்... அவர்களின் வீட்டை கடந்து மெயின் ரோடுக்கு வர.. ஆமாம் எந்த கோவிலுன்னு சொன்ன...ம்ம் திருவேற்காடு..

என்னது.. காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்...

திருவேற்காடு அம்மன் கோவில்.. அங்கதான் வேண்டிக்கிட்டேன்...

இல்லையே அம்மா வடபழனி சொன்னாங்க...

ம்ம் அதுவும் உண்டு... இன்னிக்கு எனக்கு பர்த் டேயில்லையா அதான் எங்க அம்மா எல்லா கோவிலுக்கும் போக சொல்லிருக்காங்க..

அதெல்லாம் முடியாது எனக்கு மாயா கூட டேட்டிங் இருக்கிறது உனக்கு தெரியும்தானே... அப்பறம் எப்படி இத்தனை கோவிலுக்கு நான் வருவேன்..

நீ அங்கேவிட்டு போயிடு.. நான் கேப் பிடிச்சு வேற கோவிலுக்கு போய்க்குவேன்... அப்பறம் வாழ்த்துக்கள் உங்க டேட்டிங்கு..

மெல்ல சிரித்தபடி ..தேங்க்ஸ்.. உனக்கு விஷ் பண்ணவேயில்ல நானு... ஹாப்பி பர்த் டே...

பரவாயில்ல நான் இதெல்லாம் எதிர்பார்க்கமாட்டேன் இனியா...என்ன சாதிச்சிட்டோம் நாம்ம பிறந்தநாள் கொண்டாட.. எனக்கு இதில்ல இஷ்டமேயில்ல அதான் கேக் கூட கட் பண்ணல..

அவளை கூர்மையா பார்த்துட்டு உன் மொக்கையை நிறுத்திறீயா... ப்ளூ டூத்தில் கால் வர... போனை அட்டன் செய்தான்.. ஹாய் மாயா டார்லிங்...

ஹனி நான் எங்கே வரனும்...

ம்ம்... திருவேற்காடு வந்துடு... அங்க உன்னை பிக் கப் செஞ்சிக்கிறேன்.. ஓகே.. மாயா போனை வைக்க.. ஆராவின் முகத்தின் ரியாக்ஷனை பார்த்தான்... ஏதோ யோசிட்டே வராளே...

கோவில் முன்னே காரை நிறுத்தி... சாமி தரிசனத்திற்கு டிக்கட் வாங்கினான்.. ஆரா அதற்குள் அம்மனுக்கு சாத்த மாலை வாங்கினாள்.. இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்... கோவிலில் இருக்கும் அமைதி இனியனை ஈர்த்தது.. ஆரா ரொம்ப நாளாச்சு நான் கோவிலுக்கு வந்து... இப்போ மைன்ட் ரொம்ப ப்ரீயா இருக்கு... சின்ன வயசில வந்தது.. இப்போ ரொம்ப சேன்ஞ் பண்ணிருக்காங்க... தரிசணத்தை முடித்துவிட்டு, கையில் குங்குமம் எடுத்துக் கொண்டுவந்தாள்...

பிரகாரத்தை சுற்றிவிட்டு... அவன் கையை பிடித்தாள்.. என்ன என்று இனியன் திரும்ப... குங்குமமே வச்சிக்கல..

கையிலிருந்த குங்குமத்தை கீற்றாக எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிட்டாள்...

ஏய் வேணாம்டி.. நான் வெளியே போனவுடன் அழிச்சிடுவேன்...

அது உன் விருப்பம்... நீ வேற டேட்டிங் போற..

ம்ம்.. உனக்கு கேப் புக் பன்றேன்... தன் மொபைலை எடுக்க... அதில் கால் வர ஆரம்பித்தது... மாயா தான் போன் வந்துட்டா போல.. என்று ஆர்வமாக எடுத்தான் இனியன்..

ஹலோ... இனி எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் , இப்போதான் போன் வந்துச்சு.. நான் ஆஸ்பிட்டலுக்கு போறேன்..ஸாரி..

எந்த ஹாஸ்பிட்டல் நான் வரட்டா...

இல்லை...வேணாம்.. நான் போய் கால் செய்றேன் நீங்க அப்பறம் வாங்க.. என்று போனை கட் செய்தாள்..

ச்சே.. இப்படியாச்சே... மாயா வரலையாம் அவங்க அப்பாவ ஹாஸ்பிட்டல சேர்த்திருக்காங்களாம்.. சரி வா வீட்டுக்கு போகலாம்..

இப்போ மாங்காடு போனோம்... அங்கேயும் வேண்டுதல் இருக்கே... ஆரா ஆரம்பிக்க..

சரி வா இன்னைக்கு ப்ரீதான் கூட்டிட்டு போறேன்.. பாதி தூரம் சென்றவுடன்... பசிக்குது காலையில சாப்பிடல கோவிலுக்கு போயிட்ட பிறகு சாப்பிடலாம் நினைச்சேன்..

மணி 10.00 ஆக.. காரை அடையார் ஆனந்தபவனில் நிறுத்தினான்... பேம்லி ரூமில் உட்கார.. என்ன வேணும் என்றான்... பொடி தோசை, நெய் ரோஸ்ட்... அப்பறம் சோலா பூரி...

இவ்வளவு ஆயில்டி.. எப்படி சாப்பிடுவ..

நான்தானே சாப்பிட போறேன் நீயேன் கஷ்டபடுற.. அப்பறம் கண்ணுவைக்காதே சொல்லிட்டேன்...

ஆடர் செய்த உணவுகள் ஆரா முன்னே வைக்க... இனியன் தனக்கு பிரஷ் ஜூஸ் மட்டும் ஆடர் கொடுத்தான்..

ஹப்பா என்ன நெய் வாசனை ஆள தூக்குதே... எத்தனை கலர் கலர் சட்னி.. கண்ணை மூடி வாசனை பிடித்தாள். இனியா நீ கொஞ்சம் சாப்பிடேன்.. எனக்கு வயிறு வலிக்கும்..

பின்னே இவ்வளவு கொட்டிக்கிட்டா வயிறு வலிக்கதான் செய்யும்.. முக்கியமான மெயில் பேசாதே என்றான்..

அவன் பேசுவதை சட்டைசெய்யாமல் சாப்பிட ஆரம்பித்தாள்... இனியனுக்கு மலேசியாவிலிருந்து அவன் பிரண்ட் மெயில் அனுப்ப.. மொபைலில் அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்...

அவன் வேலையில் கவனம் கொள்ள.. இனியா ஆ என்றாள்... இனியனும் வாயை திறக்க... ரோஸ்டை சாம்பாரில் தொட்டு ஊட்டினாள். பிறகு அவள் ஒரு வாய் சாப்பிட, திரும்பவும் பூரியை ஊட்டினாள்.. மெயிலை டைப் செய்தபடியே அவனே வாயை திறந்து வாங்கிக் கொண்டான்... காலையில் வெறும் சாலட் மட்டுமே சாப்பிட்டான் என்று ஆராவிற்கு தெரியும்.. அதற்காக தான் நிறையவே ஆடர் கொடுத்தாள்...

சாப்பிட்டு முடித்து, தண்ணீரை அவனுக்கு கொடுக்க குடித்தும் முடித்தான்..

ஹப்பா எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சு... இந்த பிரஷ் ஜூஸூ மட்டும் இருக்கு.. அவன் எங்க குடிக்க போறான்.. வேணாம் வேணாம் சொல்லிட்டு பாதிக்கு மேல அவன்தான் சாப்பிட்டான்... ஜூஸை நாம்ம குடிப்போம்...

அவனை கையை தட்டி போகலாம் டைம் ஆயிடுச்சு என்றாள்... அப்போதான் ஜூஸ் இருந்த கிளாஸை பார்க்க... எங்கடி என் ஜூஸூ...

வேலை செஞ்சிட்டே எல்லாம் குடிச்சிட்ட...வா...

ம்ம் குடிச்சிட்டேன்னா.. ஞாபகமே வரலையே.. சரி வா...

வடபழினி கோவில் முன்னாடி காரை பார்க் செய்தான்.. அர்ச்சனைக்கு தட்டு வாங்க..தன் போனை தேனுவிடம் கொடுத்துவிட்டு வாலட்டிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தான்... உடனே போனை சைலன்டில் போட்டாள்...

மணி இரண்டாக இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்..

ஆரா அவளின் ரூமிற்கு சென்றாள் ... டிரஸை மாற்றிவிட்டு மொபைலை கையில் எடுத்தாள்.. அபிக்கு போனை போட்டு , ஏய் அபி இன்னிக்கு உங்க அண்ணா டேட்டிங் போகல.. சக்சஸ்டி சரி நான் அப்பறம் பேசுறேன்.. டிவியை ஆன் செய்து மியூஸிக் சேனலை மாற்றினாள்...

கட்டில்மேல் ஏறி நின்று டிவியில் ஒடும் பாட்டுக்கு டான்ஸ் ஆடினாள்..

“தங்கதாமரை பெண்ணே

வா அருகே...

தத்தி தாவுது மனமே

வா அருகே”... அதில் கஜோல் தன் கோர்டை கழிற்றி எறிய.. அதே போல் தன் மேலே அணியும் கோர்ட் மாடல் டிரஸை தூக்கி ஏறிந்தாள்...

சுவரில் ஒற்றை காலை ஊன்றி, இரு கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதையே பார்த்தபடி அவளுக்கு பின்னால் சுவரில் சாய்ந்திருந்தான்.. அவள் தூக்கி எறிந்த டிரஸ் அவன் முகத்தில் விழ.. இதுதெரியாமல் பாதி பாட்டுக்கு இடுப்பை வளைச்சு வளைச்சு ஆடினாள். ஒரு கட்டத்தில் ஆடிக்கொண்டே திரும்ப பார்த்துவிட்டாள் இனியன் நிற்பதை...

கையில்லாத ஜாக்கெட்டும் லாங் மிடி மற்றுமே அவள் உடம்பில் இருந்தது... ஆரா அவனை பார்த்து திகைத்து அப்படியே சிலை மாதிரி நிற்க..

ஆராவின் இடுப்பில் கை கொடுத்து தன்னருகே இழுத்தான்... அவன் கண்கள் தீயாக சூட.. அவள் முகத்தை ஒரு கையால் பிடித்து... ஏன்டி மாயா அப்பாவுக்கு, நெஞ்சி வலி ஆஸ்பிட்டல் சேர்த்திருக்காங்க பொய் சொன்ன..

நானா... அய்யோ நானில்ல...

நீயில்ல ஆனா யார் முலமா சொல்லியிருக்க... ஏன் என் போனை சைலன்டில் போட்ட..

அது கோவிலுக்கு போறோமேன்னு... கோவில்ல மொபைல் அலோ பண்ணமாட்டாங்க இனியா அது உனக்கு தெரியாதில்ல... இப்பதான் ரூல்ஸ் போட்டாங்க..

ஆமாம், இன்னிக்கு உனக்கு பிறந்தநாளே இல்லையாமே.. உன் அண்ணன் சொன்னா...

ஹி...ஹின்னு சிரித்துவிட்டு ,இன்னிக்கு ஸ்டார் பர்த் டே..

அடிங்க...அவள் கையை முறுக்க..

அய்யோ வலிக்குதே... நான்தான் பொய்சொன்னே...

ஹாங்... இப்போ வா வழிக்கு... அவள் இடையை தடவி விட்டு நீ கூட கில்மாவா இருக்கடி..ஆமாம் எங்க உனக்கு இடுப்பு இருக்கு இடுப்பை வெட்டி வெட்டி ஆடுற... தொப்பையை போட்டுட்டு..

க்கும்...போடா..

உனக்கு என்மேல இன்டென்ஷனா..

ச்சீ உன்மேல... நான் ஹாலிவுட் ரேன்ஜீக்கு நினைச்சிருக்கேன் வருங்கால புருஷன...

ஓ..உலக அழகி நீ... ஹாலிவுட் கேட்குதோ... அப்பறம் ஏன்டி டேட்டிங்க கேன்சல் பண்ண..

அது மாயாவ வீட்டில இருக்கிறவங்க யாருக்கும் பிடிக்கலையாம்.. உன் தங்கச்சி... நான் அண்ணி சொல்லமாட்டேன்னு அழறா... அத்தை என் கையை பிடிச்சிட்டு என் குடும்பம் மானம் போயிடும் ஆரான்னு கெஞ்சறாங்க... சரி ஒரு குடும்பத்தோட நலனுக்காக இதில்ல நான் இறங்கிட்டேன்.. சின்ன பொது தொண்டு... அதான் சோஷியல் சர்வீஸ்..

ஆக கூட்டத்தோட தலைவி நீதான்... அப்ப தண்டனையும் உனக்குதான் ...நாளைக்கு நானும் மாயாவும் டேட்டிங் போறோம் நீயும் கூட வர....அதான் உனக்கு பனீஷ்மென்ட் ...

நான் எதுக்கு வரனும்...

எங்க கெமிஸ்ட்ரியை பார்க்க ஆரா..

நான் வர மாட்டேன்..

ஹாங் பார்க்கலாம்.. கட்டிவச்சின்னாலும் கூட்டிட்டு போவேன்..

இனியன் கோவிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சரணை அழைக்க போனை பார்த்தான்.. போன் சைலன்டில் இருந்தது.. அதில் மாயா மிஸ்டு கால் பத்துயிருக்க...

மாயாவுக்கு போனை போட்டான்...ஹாய் இனியா யாரோ எனக்கு தப்பா மெசேஜ் கொடுத்துட்டாங்க...யாருக்கோ பிடிக்கலை போல நான் உன்கூட டேட்டிங் வரது...

டக் கென்று ஆரா ஞாபகம்தான் வந்தது இனியனுக்கு.. அவ கார்ல யோசிக்க சொல்லவே அலர்ட் ஆயிருக்கனும்... சரணுக்கு போனை போட்டு மச்சான் உன் குட்டிமா பர்த் டே இன்னிக்கு ,வர சொல்ல கேக் வாங்கிட்டு வாடா கட் பண்ணலாம்..

டேய் லூஸூ அவளுக்கு இன்னும் இரண்டு மாசமிருக்கு பர்த் டே வர..

ஓ.. ஓ ஸாரிடா நான்தான் தெரியாம சொல்லிட்டேன்.. போனை அனைத்துவிட்டு அவள் ரூமிற்கு வர... நம்ம தேனு கதவை கூட லாக் பண்ணாமல் டிவியில் சத்தமாக பாட்டை போட்டு ஆடிக்கொண்டிருந்தாள்.

............
 
N

Nirmala vandhachu ???
Love you
Penne illapa mahale varum
Type panna sappidurathu theriyatha
Dating ponathu maya va illa thenu va???
 
Last edited:
Top