Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 13

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----13

ஆதித்யா வந்தவுடன் கீழே வந்து விட்ட வசந்தி மனம் கேளாமல் மாடியின் மேலே தன் பார்வையை செலுத்திக் கொண்டு இருக்க.

எப்போதும் அங்கு வந்தால் வசந்தியை கண்காணிக்கும் வேலை பார்க்கும் சத்யாவுக்கு அந்த பார்வை பட இவள் எப்போவும் நான் வந்தால் என்னை தானே முறைச்சி முறைச்சி பார்ப்பா….

இப்போ என்ன மேலே பார்த்துட்டு இருக்கா என்று நினைத்து “என்ன வசந்தி மேலே பார்க்குற….” என்று மிக இயல்பாய் அவள் பெயரை சொல்லி பேச.

அதை கேட்ட வசந்தி என்னவோ இவன் தான் பேர் வைச்ச மாதிரி கூப்பிடுறான் என்று நினைத்து அவனை முறைத்து பார்க்க.

அவள் முறைத்ததை பார்த்த பிறகு தான் சத்யா நார்மலுக்கே வந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஏன் என்றால் சத்யா வந்தால் எப்போதும் வசந்தி முறைத்து தான் பார்த்து வைப்பாள்.

அதனால் சத்யா அது தான் அவள் உண்மையான பார்வை என்று எண்ணிக் கொண்டு இன்று ஏன் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்து தான் தேவைக்காக மட்டும் பேசும் சத்யா அன்று பேச்சி வளக்க பேசினான்.

அவள் முறைப்பை பார்த்து திருப்தி உற்றவனாய் “என்ன வசந்தி ஏன் மேலே பார்க்குற என்று கேட்டனே….” என்றதற்க்கு.

“இல்லே கண்டது வாய் வைச்சா பாழா போயிடுமே….அது தான் மேலே பார்க்குறேன்.” என்ற அவள் பேச்சிம் பேசும் தோரணையும் இவள் எதை கூறுகிறாள் என்று சந்தேகத்துடன் .

“இப்போ எதை பத்தி பேசுற….”

“காலையில் வத்தல் போட்டேன். அதான் காக்கா வாயை வைச்சா பாழா போயிடுமே அது தான் மேல மேல பாக்குறேன்.” என்ற பேச்சி கேட்டும் அவன் சந்தேகம் தீருவதாய் இல்லை.

“காக்கா வாயை வைச்சா பாழா போயிடுமா….அப்போ சாமி கும்பிட்ட பிறகு ஏன் படையலில் வைத்ததை நாம் சாப்பிடுவதுக்கு முன்னே காக்காவுக்கு வைக்கிறோம்.” என்று அறிவு பூர்வமாக பேசுவதாக நினைத்து கேட்க.

நம் வசந்தியா கொக்கா….அவன் பேச்சை தூசி தட்டுவது போல் “அது தான் நீங்களே….சொல்லிட்டிங்களே...சாமி கும்பிட்ட பிறகு தான் காக்காவுக்கு வைக்கிறோம் காக்கா சாப்பிட்டு சாமிக்கு வைப்பது இல்லலே…” அவள் பேச்சி இவள் ஏதோ பொருள் வைத்து பேசுகிறாளா …. ?இல்லை சாதரணமாக பேசுகிறாளா... ?என்று நினைத்து அவளை உத்து பார்க்க.

அவன் பார்வையை பார்த்து மனதுக்குள் இவன் ஏன் இப்படி உத்து உத்து பார்க்கிறான். அய்யோ இது நல்லதுக்கு இல்லையே என்று நினைத்தவள். தாமரைக்கு பரிதாபப்பட்டு நாம் மாட்டிக் கொள்ள போகிறோம் என்று நினைத்தவளாய் ஏதோ வேலை இருப்பது போல் நைசாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அவள் போன பின்னும் இவள் என்ன பேசினாள் என்று நினைத்துக் கொண்டே அவனும் மேல பார்த்தான்.

அப்போது மேல இருந்து தாமரையின் கோபக்குரல் கேட்டதும் போவோமா...வேண்டாமா என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த இடத்தை விட்டு போன வசந்தி தாமரையின் குரல் கேட்டு ஹாலுக்கு வந்தவள்.

ஏதும் யோசிக்காது மாடி படிக்கட்டில் காலை வைக்க. பின்னாலேயே வந்த சத்யா அவள் கையை பிடித்து “இப்போ ஏன் மேல போற….? என்றதற்க்கு

“முதலில் கையை விட்டுட்டு பேசு. நான் தாமரை இல்லே எது நடந்தாலும் தெரியாமல் இருப்பதற்க்கு.” என்று அவள் பேச பேச தான்.

சத்யாவுக்கு வசந்தி ஏன் அப்படி தன்னை பார்த்தாள் என்று விளங்கியது.” அப்போ உனக்கு எல்லா….தெரியும்.” என்று அந்த எல்லாவில் அழுத்தம் கொடுக்க.

ஏன் இவன் இப்படி கேட்கிறான். கேட்கும் முறையும் சரியில்லையே என்று நினைத்துக் கொண்டு. “ம்” என்று சொல்ல.

“ஒ அப்போ வசதியா போயிடுச்சி.”

“ஏ...ஏ...துக்கு வ...சதியா...போயிடுச்சி.”

“என்னம்மா வாய் இப்படி தந்தி அடிக்குது.”

“கவலே படாதே குறைந்த பட்சம் இப்போதிக்கு நீ நினைப்பது போல நம்ம வசதி பத்தி பேசவில்லை.”

என்ற அவன் பேச்சில் இவன் என்ன இது மாதிரி எல்லாம் பேசுறான். எது எப்படியோ இங்கு பாதுகாப்பா இருக்க முடியும் என்று நினைத்து தானே . தன் மனசாட்சியை அடகு வைத்து இங்கு இருக்கிறோம். இவன் இப்படி பேசுவதை பார்த்தால்.

நாமும் கூறிய சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போயிடனும் போலவே….என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டே அவனை பார்க்க.

“என்ன இந்த இடத்தை விட்டு போவதை பத்தி பிளான் போடுறியா….?” என்ற கேள்விக்கு.

ஆம். இல்லை என்று இரண்டு வகையாக தலையாட்டி வைக்க.

“என்ன வசந்தி நீ ரொம்ப தைரியசாலின்னு உன் அப்பன். ஊரு முழுக்க சொல்லிட்டு திரியரான்.நீ என்னன்னா இப்படி பயந்து போய் இருக்க.”

அதற்க்கும் ஒன்றும் பேசாது வசந்தி சத்யாவையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுக்கு தன் தவறு புரிந்து விட்டது. நான் ஆதித்யாவை பற்றி தெரியும் என்று சொல்லி இருக்க கூடாது. கண்டிப்பாக இவன் ஏதோ பிளான் செய்ய போகிறான்.

தன்னையே பார்த்திருந்த வசந்தியைய் பார்த்து “ இது தான் பொண்ணுங்க புத்தி என்பது. உனக்கு தெரிஞ்சா அதை உன்னோட வைச்சி இருக்கனும் . இப்படியா என்னிடமே வந்து சொல்லுவே….இதே போல் நீ வெளியிலும் சொல்ல மாட்ட என்று என்ன நிச்சயம்.” என்றதற்க்கு.

அவசர அவசரமாக “இல்லே நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன்.”

“ எனக்கு தெரியும் நீ சொல்ல மாட்ட .ஏன்னா எதுக்கும் உதவாத அப்பா.அம்மா பாவம் ஏற்கனவே அவங்க உன் அப்பானாலே ஏகப்பட்ட கஷ்டத்தை அனுவிச்சிட்டாங்க.இப்போ உன் தங்கைக்கு ,தம்பிக்கு ஒன்னுன்னா தாங்குவாங்களா….?”

“என்ன என்ன சொல்றிங்க. என் தம்பிக்கு தங்கைக்கு என்ன.”

“சேச்சே நீ பயப்படதே வசந்தி. நீ தான் யாரிடமும் ஒன்னும் சொல்ல போறது இல்லையே...அப்புறம் அவங்களுக்கு என்ன ஆவபோவுது.சரி சரி நீ போய் சூடா இஞ்சி தட்டி போட்டு டீ கொண்டா.” என்று சொன்னவன்.

எதுவும் நடவாது போல் ஹாலில் உள்ள ஹோபாவில் அமர்ந்துக் கொண்டு டிவியை ஆன் செய்தவன். பின் “இப்போ எல்லாம் டிவியில் எந்த ப்ரோக்ராமும் சரியே இல்லலே….” என்று சொன்னவன்.

பின் “நீ இங்கு போர் அடிச்சிட்டு இருக்க தானே பாவம். ஒன்னு பண்றேன் வசந்தி நான் நிறைய பட டிவிடி எடுத்துட்டு வர்றேன் நீ போட்டு பாரு என்ன. என்ன நீ இன்னுமா டீ போட்டு எடுத்துட்டு வரலே போம்மா போ….” என்று சொன்னவனின் பேச்சை தட்ட முடியாது மேல பார்த்துக் கொண்டு சமையல் அறை பக்கம் செல்ல பார்க்க.

“வசந்தி நில்லு. நான் அடிக்கடி இதே பத்தி பேச மாட்டேன். தலைவர் மேல போயிட்டாருன்னா...நீ மேல போவது என்ன இது மாதிரி பார்க்கும் வேலை கூட வைச்சிக்க கூடாது.

தலைவரே கூப்பிட்டா தான் போகனும் . நல்லா கவனிச்சிக்கோ தலைவர் கூப்பிட்டா மட்டும் தான் போகனும். நான் இது மாதிரி செய்றதாலே நீ என்னை பத்தி என்ன நினைச்சா கூட பரவாயில்லை.” என்று சொன்னதும் தன் பேச்சி முடிந்தது என்பது போல் டிவி பார்க்க.

வசந்தி தன் தைரியம் அனைத்தையும் போனது போல் சமையல் அறை நோக்கி சென்றாள். ஆம் அவள் தைரியம் தான் போய்விட்டது. அவளின் பலவீனமே அவள் தங்கை அவள் தம்பி தான்.

அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்க்காக தான் தன் படிப்பை மூட்டை கட்டி விட்டு வேலைக்கு போக ஆராம்பித்தாள். ஏன் இன்னும் சொல்ல போனால் ஆதித்யாவின் எண்ணம் முதலிலேயே தெரிந்த பிறகு கூட அதை தாமரையிடம் சொல்லது விட்டதுக்கு காரணம்.

இந்த அதிக படியான சம்பளத்தால் தன் தம்பி தங்கைக்கு ஆசைப்பட்டது வாங்கிக் கொடுக்க முடியுமே என்பதால் தான். இப்போது சத்யா சொன்ன உன் தம்பி தங்கைக்கு ஏதாவது நடந்தால்…

அது தனக்கான மிரட்டல் என்பதை தெள்ள தெளிவாக புரிந்துக் கொண்டாள். மேலும் இனி நானே இந்த வேலை விட்டு போகனும் என்று நினைத்தால் கூட போக முடியாது என்று நினைத்துக் கொண்டே ….டீயைய் போட்டவள் அதை எடுத்துக் கொண்டு சத்யாவிடம் நீட்ட..

அதை வாங்கி ஒரு வாய் குடித்தவன் “பரவாயில்லை நல்லாவே டீ போடுற….சாப்பாடு எப்படி செய்வேன்னு தான் தெரியலே….” என்று சொல்லிக் கொண்டே டீயைய் குடித்து முடித்து விட்டு கப்பை அவளிடன் நீட்டினான்.

அவன் பேச்சிக்கு எந்த எதிர் பேச்சிம் பேசாது அவனை நிமிர்ந்தும் பாராது அவன் கொடுத்த கப்பை வாங்கிக் கொண்டு செல்பவளின் முதுகையே பார்த்திருந்தவனுக்கு என்னவோ குறைவது போல் இருந்தது.

அது என்ன என்று யோசிக்கும் போது தான் அவள் பார்வை. ஆம் அவள் பார்வை தான் அவள் எப்போதும் தன்னை முறைத்து முறைத்து தான் பார்ப்பாள். அதன் அர்த்தம் அப்போது தெரியவில்லை என்றாலும் இப்போது அவள் எதற்க்காக தன்னை அப்படி பார்த்தாள் என்று தெரிந்தும் தன்னை நிமிர்ந்தும் பாராது அவள் செல்வது ஒரு மாதிரியாக இருந்தது.

பின் என்ன நினைத்தானோ...அப்பா போதும்டா இதை வளரவிடுவது சரியில்லை தலைவர் ஒருவர் மாட்டிக் கொண்டு முழிப்பது போதும் நான் எதிலும் மாட்டிக் கொள்ள கூடாதுப்பா….

தலைவருக்கு சரக்கு கலக்கி கொடுக்க நான் இருக்கே ….எனக்கு யார் இருக்கா…..? என்று மிக முக்கிய கவலையில் வசந்தியை மறந்தவனாக டிவி நிகழ்ச்சி நல்லா இல்லே நல்லா இல்லே … என்று சொல்லிக் கொண்டே அந்த நிகழ்ச்சியில் ஆழ்ந்து போனான்.

ஆதித்யாவின் பேச்சில் இவன் என்ன சொல்றான் கட்ட போவது இல்லையா...பின் ஏன் அப்படி பேசுறான் என்று தான் நினைக்க தோன்றியது அந்த பேதை பெண்ணுக்கு. அப்போது கூட அவளுக்கு அவன் சொன்னதின் அர்த்தம் புரியாது தான் இருந்தாள்.

“அப்போ ஏன் என் கிட்ட...இப்படி நடந்துக்கிறிங்க.” என்று அவனிடம் கேட்க.

“எப்படி தாமரை…..?” என்ற அவன் கேள்விக்கு பதில் சொல்ல கூட அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.

அவள் இது மாதிரி எல்லாம் பேசியது கிடையாது. அதனால் தட்டு தடுமாறி…..அவள் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டே “இது மாதிரி கட்டி பிடிக்கிறது. அப்புறம் ஒரு மாதிரி பாக்குறது.” இதற்க்கு மேல் எப்படி சொல்வது என்று தெரியாது அவனை பார்க்க.

அவன் ஒரே வார்த்தையில் “ஏன்னா உன் மேல எனக்கு அம்புட்டு ஆசை.” என்று சொல்லிக் கொண்டே தன் கையில் உள்ள நகை பெட்டியை திறந்து அதில் உள்ள நெக்லஸை எடுத்து அவளுக்கு மாட்ட முயல.

அதை பிடிங்கி தூர விசிறி எரிந்தவள் “சே உங்களுக்கு இது மாதிரி என்னிடம் பேச அசிங்கமா இல்லே….நா...ன் நான் உன் கிட்ட பத்து வருடமா வேலை பார்த்த வள்ளியம்மா பேத்தி.”

இவ்வளவு நேரம் தெனவட்டாக பேசிக் கொண்டு இருந்த ஆதித்யா வள்ளியம்மா என்ற பெயர் கேட்டவுடன் ஒரு மாதிரியாகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவனுக்கு வள்ளியம்மாவின் ஆசை என்ன என்று தான் தெரியுமே…

தன் பேத்தியை மாலை கழுத்துமாக பார்க்க வேண்டும் அது தான் அவரின் ஒரே ஆசை. கடைசி நேரத்தில் அதை நான் நிறை வேற்றுவேன் என்ற மனநிறைவோடு தான் அவர் கண்ணை மூடினார்.

ஆனால் கடைசி வரை அவரின் ஆசை நிறை வேறவே போவது இல்லை.அதுவும் அதற்க்கு காரணம் நானே….

என்னை அவர் எவ்வளவு நம்பி இருந்தால் யாரையும் நம்பாது தன் பேத்தியை தன்னிடம் ஒப்படைத்து இருப்பார் என்று நினைக்க நினைக்க….அவன் கோபம் எல்லையைய் கடக்க.தான் என்ன செய்வது நான் இவளை கல்யாணம் செய்துக் கொள்வதா….?

இல்லை வள்ளியம்மா சொன்னது போல் வேறு மாப்பிள்ளை பார்த்து என்னால் கல்யாணம் செய்து வைக்க முடியுமா…..? என்னது நானே அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதா….முடியாது என்னால் முடியாது என்று வெறி பிடித்தவன் போல் அங்கு இருக்கும் பொருட்களை எடுத்து வீச.

அவன் செயலிலும் அவன் பேச்சிலும் வெட வெடத்து போன தாமரை ஒரு மூலையில் ஒதுங்கி நின்றுக் கொண்டு பயத்தில் தன் கண்ணையும் இருக மூடிக் கொண்டாள்.

டிவி பார்த்துக் கொண்டு இருந்த சத்யா மேல பொருட்கள் உடையும் சத்தத்தில் மாடி ஏறியவன் அங்கு வெறி பிடித்தது போல் ஆதித்யா ஒவ்வொரு பொருட்களாய் வீசுவதையும், தாமரை மூலையில் ஒடுங்கி இருப்பதையும் பார்த்து விட்டு ஆதித்யாவின் அருகில் சென்று அவன் கையைய் பிடித்து தடுத்தவன்.

“தலைவா என்ன செய்றீங்க.” என்று சொல்லி விட்டு அவன் கையில் உள்ள பொருளை வாங்கி கீழே வைத்து விட்டு அவனை கட்டிலில் அமர வைத்தவன்.

“என்ன தலைவா….பொறுமையா பேச வேண்டிய விஷயத்தை இப்படி கோபப்பட்டு கெடுத்துக்குறீங்களே….” என்று மெதுவாக ஆதித்யாவுக்கு மட்டும் கேட்கும் படி தாமரையை பார்த்துக் கொண்டே பேசினான்.

“என்ன என்ன பண்ண சொல்ற.” என்று திரும்பவும் கத்த.

“தலைவா அமைதி அமைதி.” என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருக்கும் தண்ணீயை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு “முதலில் இதை குடிங்க தலைவா…..” என்று அவனை அமைதி படுத்தியவன்.

பின் தாமரையைய் பார்த்துக் கொண்டே “அண்ணி சொல்ற விதத்தில் சொன்னா….கேட்டுக்க போறாங்க. அவங்களுக்கும் தன் பாட்டி ஆசையை நிறைவேத்துவதில் பங்கு இருக்கு தானே…..”
 
???

முதலில் இந்த அல்லக்கை சத்தியாவை விரட்டணும்.....
பிளான் போட்டு கொடுக்கிறதே அவன் தான்......
ரெண்டு பேரும் 2 பெண்கள் வாழ்க்கையில் விளையாடுறாங்க......
அவர்களுடைய பலவீனம் இவங்களுக்கு சாதகமாக எடுத்துகிட்டாங்க......

கேடி பாய்ஸ்......
 
Last edited:
Top