Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 5

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்----5

படுத்திறந்த ஆயாவை பார்த்த தாமரை நாளை என்ன ஆனாலும் அவர்களை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு கட்டியவளாய் அவரை எழுப்பாமல் வீட்டில் இருக்கும் அரிசி ரவையில் உப்புமாவை கிண்டியவள் தொட்டுக் கொள்ள காரமாக உளுத்தம் பருப்பு, காஞ்ச மிளகாய் வறுத்து சட்னி அரைத்து தன் ஆயாவை எழுப்பி வலுக்கட்டாயமாக அவருக்கு கொடுத்து விட்டு அவர் உடம்பை தொட்டு பார்த்தாள்.

சுரம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்க மாத்திரை கொடுக்காமல் அவரை படுக்க வைத்தவள். இருக்கும் பத்து சாமனை தானே துலக்கி கவிழ்த்து வைத்தவள் ஆயாவை பார்த்துக் கொண்டே தானும் அவர் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

ஆயா நல்லா இருந்தா தன்னை இந்த வேலை எல்லாம் செய்ய விடுவார்களா….என்று யோசித்தவள் ஆயாவுக்கு ரொம்ப முடியலையா...அது தான் தன்னை தடுக்காமல் படுத்துக் கொண்டு இருக்கிறார்களா என்று நினைத்தவளுக்கு கவலை அதிகமாகியது.

ஆம் வள்ளியம்மா தன் பேத்தியை ஒரு வேலையும் வாங்காமல் ஒரு ராணியாக தான் வளர்கிறார். துணி கூட தனக்கு எப்படியாவது வாங்கிக் கொள்வார். ஆனால் தன் பேத்திக்கு நல்ல துணியை மட்டுமே தான் வாங்கி கொடுப்பார். தன் பேத்திக்கு பெற்றோர் இல்லையே என்ற குறையே தெரியக் கூடாது என்று கூடுதல் கவனத்தோடு வளர்த்தார் என்று கூட சொல்லலாம்.

தாமரை தன் ஆயாவின் நினைவில் தூக்கம் தொலைத்தாள் என்றால் ஆதித்யாவும் வள்ளியம்மா நினைவில் தான் தன் தூக்கத்தை தொலைத்தான்.ஆதித்யாவுக்கு வள்ளியம்மா பற்றி அனைத்தும் தெரியும்.

ஆம் வள்ளியம்மாவின் மருமகள் எப்படி இறந்தாள் என்பதிலிருந்து அனைத்துமே தெரியும்.அது தொட்டு தன் பேத்தியை எப்படி பாதுகாப்பாக வளர்கிறார் என்பதும் தெரியும்.

வள்ளியம்மாவின் உயிரே தன் பேத்தி தான் என்பதும் தெரியும். கூடுதலாக தன்னை எந்த அளவுக்கு அவர்கள் நம்புக்கிறார்கள் என்பதும் தான்.இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கும் வள்ளியம்மாவின் பேத்தியை நான் பார்ப்பதே தவறு.

அதுவும் அவர்களின் குடும்பத்தில் நடந்தது தெரிந்தும் நான் இப்படி பாப்பது மிக பெரிய தவறு. சரி அதையும் மீறி நான் அவளின் மேல் உள்ள ஆசையால் நான் பெண் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் எனக்கு பெண் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் அவளை திருமணம் செய்துக் கொண்ட பின்னால் ஜாதி கட்சியின் ஓட்டில் எம்.எல்.ஏ வான்னா என்னை இந்த பதவியில் இருக்க விடுவார்களா….? என்று பல்வேறு வகையாக யோசித்தவன் இறுதியில் இனி தாமரை பற்றி நினைக்க கூடாது என்று முடிவு செய்தவனாய் தூங்கி போனான்.

அடுத்த நாள் காலை எப்போது போல் தான் விடிந்தது. ஆனால் வள்ளியம்மா குடும்பத்துக்கும்….? ஆதித்யாவுக்கும்….? எப்போதும் வள்ளியம்மா எழுந்த பிறகே எழும் தாமரை அன்று எழுந்து பார்த்த போது தன் ஆயா எழாமல் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து தொட்டு பார்க்க.

உடம்பு கொஞ்சம் வெத வெதப்பாக சூடு இருப்பது போல் இருக்க பயந்து தன் ஆயாவை பார்த்தாள். தன் பேத்தியின் கைய் தொடு உணர்ச்சியில் கண் முழித்த வள்ளியம்மா தன் பேத்தியின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்து “எனக்கு ஒன்னும் இல்லே கண்ணு கொஞ்சம் அசதி அவ்வளவு தான்.” என்று சொல்லி எழ பார்கக.

“என்ன ஒன்னும் இல்லை.உடம்பு சூடா இருக்கு ஒன்னும் இல்லையா….?”என்றதற்க்கு.

“அது படுக்கை சூடு கண்ணு. “ என்று சொல்லி விட்டு தன் பேத்தியின் பேச்சை கேளாது எழுந்தவள். பால் வாங்க கதவை திறக்க போக. அவரை தடுத்த தாமரை “காசு கொடு ஆயா நான் போய் பால் வாங்கியாறேன்.” என்று சொன்னவளை பார்த்து முறைத்த வள்ளியம்மா.

“என் உடம்பில் உசுரு இருக்கும் வரை நீ கடைக்கு போக தேவையில்லை.” என்று சொன்னவர் முடியாமல் நடந்து சென்று பால் வாங்கி கொடுத்த பிறகு தான் அமர்ந்தார்.

தாமரை தன் ஆயாவை முறைத்துக் கொண்டே “அது என்ன ஆயா உங்களுக்கு அவ்வளவு அடம்.உடம்பு முடியலேன்னாலும் நீங்க தான் கடைக்கு போகனுமா….? ஏன் என்னை கடைக்கே அனுப்ப மாட்டேங்கிறிங்க.

என் வயசு பொண்ணுங்க எல்லாம் கடைக்கு போயிட்டு தான் இருக்காங்க. ஆனா நீங்க தான் ரொம்ப பண்றிங்க ஆயா….” என்று சொல்பவளை பார்த்து.

“உனக்கு என் கவலை தெரியாது கண்ணு . அதுவும் இல்லாமல் நீ சொல்ற பொண்ணுங்க இருக்கும் இடம் நல்ல இடமா இருக்கும். நம்ம இருக்கும் இடம் அப்படியா….?”

“அதற்க்கு தான் சொல்றேன் ஆயா வேறு இடம் பார்த்துட்டு போகலாமுன்னு.”

“போகலாம் தான். ஆனால் வாடகை நிறைய கேப்பாங்களே….கண்ணு.அதுவும் இல்லாம இன்னும் ஒரு வருடத்துக்குள்ள உன் கல்யாணத்தை முடிச்சிட போறேன். அப்புறம் இந்த வயசான கிழவி எங்கு இருந்தா என்ன கண்னு.” என்று சொல்லும் தன் ஆயாவை முறைத்து பார்த்தவள்.

“உங்களுக்கு வேறு பேச்சே தெரியதா….ஆயா எப்போ பார்த்தாலும் என் கல்யாணத்தை பத்தியே பேசுறிங்களே…..” என்று சொன்னவள் கோபத்துடன் வள்ளியம்மா வாங்கி வந்த பாலில் காபி வைத்து கொடுத்து விட்டு தானும் குடித்தாள்.

ஆதித்யா வீட்டுக்கு செல்ல நேரமாகியதை பார்த்த வள்ளியம்மா “சீக்கிறம் நீ காலேஜ் கிளம்பு கண்ணு. நான் இட்லி வாங்க போறேன்.”

“ஆயா நான் இன்னிக்கி காலேஜ் போகலை. நீங்க அவங்க வீட்டில் வேலை முடிச்சிட்டு வாங்க நாம் ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.” என்ற பேத்தியின் பேச்சை கேளாது.

“எனக்கு ஒன்னும் இல்லை கண்ணு. நீ காலேஜ் போ.” என்று விடா பிடியாக தாமரையை அனுப்பிய பின்னே வள்ளியம்மா ஆதித்யா வீட்டுக்கு சென்றார்.

வள்ளியம்மா காலை டிபன் செய்த பிறகும் கீழே வராமல் இருந்த ஆதித்யாவை நினைத்துக் கொண்டே சமைத்த பாத்திரத்தை டையினிங் டேபிளில் வைத்துக் கொண்டே மேலே பார்க்க.

வீட்டின் உள்ளே நுழைந்த சத்யா அதை பார்த்து விட்டு “என்ன வள்ளியம்மா இன்னும் தலைவர் கீழே வரவில்லையா…..?”

“அது தான்பா நானும் மேலையே பார்த்து இருக்கேன். எப்போவும் இன்னாத்திக்கு எழுந்து சாப்பிட்டு கட்சி ஆபிசுக்கே போயிடுவார். ஆனால் இன்னிக்கு என்னன்னே இன்னும் எழவே காணும். உடம்பு ஏதும் சரியில்லையான்னு தெரியலையே….”

என்று வருத்தத்துடன் சொன்னவரை பார்த்து “கவலை படதே வள்ளியம்மா நான் போய் பாத்துட்டு வர்றேன்.” என்று சொன்னவன் மேலே போய் பார்க்க ஆதித்யா கதவு திறக்காமல் இருப்பதை பார்த்து வள்ளியம்மா சொன்னது போல் உடம்பு சரியில்லையா என்று பயப்பட வில்லை.

மாறாக நேற்று சரக்கு கொஞ்சம் அதிகமோ என்று தான் கவலை பட்டான். ஆதித்யா குடிப்பான் தான் ஆனால் அளவுக்கு அதிகமாக எல்லாம் குடிக்க மாட்டான். தேர்தலில் வெற்றி பெற்றால் மற்றவர்களின் கட்டயாத்தில் கொஞ்சம் அதிகமாக சரக்கை எடுத்துக் கொள்வான். அது சந்தோஷத்தில் எடுத்துக் கொள்வது.

யாரின் கட்டாயத்துக்கும் இல்லாது அதிகமாக குடிப்பான் என்றால் அது அவனின் பெற்றோர் இறந்த தினமாக தான் இருக்கும். ஆனால் நேற்று தலைவரின் பெற்றோர் இறந்த தினம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்து உள்ளே போய் பார்த்தால் டேபிளில் அடித்த சரக்கு மிச்சம் இருக்க ஆதித்யாவின் கைய் ஒரு பக்கம் கால் ஒரு பக்கமாக குப்புர படுத்து தூங்கிக் கொண்டு இருப்பவனை பார்த்து என்ன ஆச்சி தலைவர் இது போல் நிதானம் இழக்கும் அளவுக்கு குடிக்க மாட்டாரே என்று கவலை பட்டுக் கொண்டே ஆதித்யாவை தட்டி எழுப்பினான்.

சத்யாவுக்கு ஆதித்யாவின் மேல் தலைவர் என்பதுக்கும் மேல் பாசம் உண்டு. அது போல் தான் ஆதித்யாவுக்கு தொண்டன் என்பதையும் தாண்டி சத்யாவை தன் தம்பி போல் நடத்தினான்.

ஆதித்யா சத்யாவை தம்பியாக நினைக்க காரணம் அவன் பெயராக கூட இருக்கலாம். ஆம் ஆதித்யாவின் அப்பாவின் பெயர் சத்ய நாரயணன். முதன் முதலில் சத்யாவை ஆதித்யா பார்த்தது அவன் இளைஞர் அணி தலைவராக ஆக்கப்பட்ட பிறகு தான்.

அப்போது தான் அந்த கட்சியில் வந்து அவன் சேர்ந்தான். அப்போது சத்யாவுக்கு வயது இருபது தான். அவனும் ஆதித்யாவை போல் யாரும் இல்லாதவன் தான். ஆதித்யாவது விபத்தில் தன் தாய் தந்தையரை மட்டும் தான் இழந்தான்.

ஆனால் சத்யா தன் குடும்பத்துடன் வேனில் சென்ற போது தன் தாய்,தந்தை அத்தை மாமா என்று மொத்தம் எட்டு பேரை மொத்தமாக பறி கொடுத்தவன். அதிலும் கொடுமை என்ன என்றால் அனைவரும் இவன் கண் எதிரில் தான் இறந்தார்கள். அந்த வேனில் சத்யாவும் இருந்தான்.

அவன் மட்டும் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமா….துரதிஷ்டமா….என்று இன்று வரை அவனுக்கே தெரியவில்லை. அவன் கதையை கேள்வி பட்டு ஆதித்யா இன்னும் அவனிடம் தன் நெருக்கத்தை காண்பித்தான்.

சத்யா ஆதித்யாவுக்கு வலக்கைய் மட்டும் இல்லை. இடக்கையும் அவன் தான். அதனால் தான் சத்யா ஆதித்யாவின் ரூம் வரை போகும் அளவுக்கு சுதந்திரம் பெற்று இருந்தான்.அந்த பாசத்தில் தலைவருக்கு என்ன ஆச்சி என்ற கவலையுடன் டேபிளில் இருந்த வற்றை எல்லாம் சுத்தப்படுத்தி விட்டு.

ஆதித்யாவை “தலைவா….தலைவா….” என்று குரல் கொடுக்க ஆதித்யாவுக்கோ சத்யாவின் குரல் எங்கோ ஒரு மூலையில் கேட்பது போல் இருந்தது.குரல் கொடுத்து பார்த்த சத்யா இது வேலைக்கு ஆகாது என்று முடிவு கட்டியவனாய் ஆதித்யாவை தட்டி எழுப்ப.

அதற்க்கு மட்டும் சுரனை வந்தவனாய் “யார்ரா அது என்னை தட்டுவது.” என்று அதட்டிய படி எழ.

எந்த நிலையிலும் இவர் கெத்து மட்டும் விடாதே என்று மனதுக்குள் நினைத்தவனாய் “நான் தான் தலைவா….குரல் கொடுத்து பார்த்தேன். எழலே அது தான் தட்டி எழுப்பினேன் தலைவா….” என்றதற்க்கு ஒன்றும் சொல்லாது எழுந்து அவன் காலை கடனை எல்லாம் முடிக்க மட்டும் அங்கயே இருந்தவனை பார்த்து.

“என்ன சத்யா என்ன விஷயம்.” என்று கேட்டதற்க்கு.

கேட்கலாமா….வேண்டாமா….என்று யோசித்து சரி திட்டினாலும் பரவாயில்லை கேட்டு விடலாம் என்று முடிவு எடுத்தவனாய்

“தலைவா என்ன பிரச்சனை.” என்ற சத்யாவின் கேள்வியில் ஆதித்யாவுக்கு வியப்பே ஏற்ப்பட்டது.

ஆம் தாமரை தனக்கு சரி வர மாட்டாள் என்று முடிவு செய்து உறங்கியவன். நடுயிரவு வரை கூட அவன் முடிவை கடைப்பிடிக்க முடியவில்லை. இரண்டு மணிக்கு பாத் ரூமுக்கு சென்று வந்தவன் அதற்க்கு மேல் தூங்க முடியாமல் தாமரை நினைவாகவே இருந்தது. பின் ஒரு மணி நேரம் அப்படி இப்படி என்று திரும்பி படுத்தும் கூட உறக்கம் அவன் பக்கத்தில் கூட வரக்காணும்.

அதனால் தான் கபோடில் வைத்திருந்த சரக்கை அடித்தான். அதன் பின் தான் அவனால் உறங்கவே முடிந்தது.தன் மனதினை படித்தது போல் கேட்ட சத்யாவை பார்த்து அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது .

“ஏன் அப்படி கேட்கிறே….”

தன் கேள்விக்கு பதில் அளிக்காது தன்னையே கேள்வி கேட்பதில் இருந்தே தலைவருக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துக் கொண்டவன்.

“என்ன தலைவா எந்த பிரச்சனை என்றாலும் என் கிட்டே சொல்லுங்க.”

என்றவனிடம் இதை பற்றி என்ன சொல்வது என்று நினைத்தவன். “ப்சே ஒன்றும் இல்லடா….”

என்று சலிப்புடன் சொன்னதிலிருந்தே ஏதோ இருப்பது புரிந்துக் கொண்ட சத்யா “என் கிட்ட எல்லாம் சொல்லுவீங்களா…..வேலைகாரனால் என்ன செய்ய முடியும் என்று தானே சொல்ல மாட்டேங்கிறிங்க.” என்பவனை பார்த்து முறைத்த ஆதித்யா….

“நான் உன்னை வேலைகாரன் மாதிரியா நடத்துறேன். என் சொந்த தம்பி மாதிரி தானேடா நடத்துறேன்.”

என்றவனிடம் “அப்போ ஏன் சொல்ல மாட்டேங்கிறிங்க.”

“ஏய் இது கட்சி பத்தி இல்லேடா...இது பத்தி எல்லாம் சொல்ல முடியாது.”

ஆதித்யா சொன்னதையும் சொல்லிய முறையையும் பார்த்த சத்யா “தலைவா பொண்ணு விஷயமா…..?” என்று கேட்டதும் சட்டென்று தன்னை பார்த்த ஆதித்யாவை பார்த்தது அது தான் என்று தெரிந்துக் கொண்டான் சத்யா.

“தலைவா பொண்னு யாரு…? என்ன உங்களுக்கு கொடுக்க மாட்டேன் என்று சொல்றாங்களா….? இல்லை பொண்ணு முரண்டு பிடிக்குதா….? எது என்றாலும் பரவாயில்லை தலைவா…சொல்லுங்க தலைவா பொண்ணை தூக்கிடலாம்.”

“சத்யா வேண்டாம் இந்த விஷயத்தை இத்தோட விட்டுட்டு.”

என்று சொல்லியும் ஏதோ பேச வந்த சத்யாவை தடுத்த ஆதித்யா “நீ சொன்னது பொண்ணு விஷயம் தான். ஆனால் பிரச்சனை பொண்ணு கொடுக்கிறது இல்லை.பிரச்சனை நானே தான்.”

“என்ன தலைவா சொல்றிங்க.”

“ஆமாம் பிரச்சனை என் பதவி.”

“புரியலை”

“நான் இப்போ இந்த பதிவியிலே இருக்கேன்னா...அதற்க்கு காரணம் நம் ஜாதி ஓட்டு தான். ஆனால் அந்த பொண்ணு நம்ம ஜாதி இல்லை. நான் அந்த பெண்ணை கல்யாணம் செய்துக் கொண்டால் கண்டிப்பாக என் பதவிக்கு பிரச்சனைவரும்.இந்த இடத்தை பிடிக்க நான் எவ்வளவு கஷ்டபட்டேன் என்று உனக்கு தெரியும்.”என்று அதற்க்கு மேல் சொல்ல தேவையில்லை என்பது போல் ஆதித்யாவை தடுத்த சத்யா.

“எனக்கு புரியுது தலைவா….ஆனால் இதுக்கு எல்லாம் ரொம்ப குடிச்சி உடம்பை கெடுத்துக்காதிங்க. யோசிக்கலாம் ஏதாவது வழி இருக்கும்.” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கீழே இருந்து வந்த சத்ததில் ஆதித்யா சத்யா இருவரும் விரைந்து கீழே போய் பார்க்க.

அங்கே வள்ளியம்மா கீழே மயங்கி விழுந்து இருக்க மற்ற வேலையாட்கள் அவரை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தனர்.அதனை பார்த்த ஆதித்யா விரைந்து வள்ளியம்மா அருகில் சென்று அமர்ந்து அவர் தலையை தன் மடி மீது வைத்ததும் சத்யா கொடுத்த தண்ணியை வள்ளியம்மா முகத்தில் தெளித்தான்.

அப்போதும் மயக்கம் தெளியாது இருந்த வள்ளியம்மாவை பார்த்து விட்டு சத்யாவிடம் “சத்யா சீக்கிரம் காரை எடு.” என்று சொன்னவன்.மற்ற வேலையாட்களை பார்த்து.

“ஒருத்தர் மயக்கம் வந்து விழுந்தா இப்படி தான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பிங்களா….?” என்று அவர்களிடம் கத்தி விட்டே வள்ளியம்மாவை தூக்கிக் கொண்டு தன்னுடைய ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்.

தன்னுடைய முதலாளியே தூக்கிக் கொண்டு வந்ததால் காலம் தாழ்த்தாமல் வள்ளியம்மாவுக்கு சிகிச்சையை ஆராம்பித்தனர். அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்த அந்த ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டரும் அவர் மகனையும் பார்த்து.

ஆதித்யா “பயப்படும் படி ஒன்றும் இல்லையே….?” என்ற கேள்விக்கு பதில் அளிக்காது.

சீப் டாக்டர் ஆதித்யாவை பார்த்து “அவர்கள் உங்களுக்கு என்ன உறவு ஆதித்யா.”

என்ற டாக்டரின் கேள்வியும் அவர் பார்வையுமே ஏதோ உணர்த்த “என்ன டாக்டர் பெரிய பிரச்னையா….?”

“என்னுடைய அனுபவத்தை வைச்சி பார்த்தா பிரச்சனை இருப்பது போல் தான் இருக்கு. ஆனால் அதை உறுதியா சொல்லனு முன்னா சில டெஸ்ட்டு எடுத்து பார்த்து தான் சொல்ல முடியும்.”

“நீங்க என்னவா இருக்கும் என்று சந்தேகப்படுறிங்க.”

“ப்ளட் கேன்ஸர்.”
 
Top