Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 1 2

Advertisement

Admin

Admin
Member

உண்மையில் நான் தான் அனிதாவுக்குப் பீஸ் கொடுக்கணும். மனதில் சிறு அமைதியும், நிம்மதியும் வந்திருப்பது அவளால் அல்லவா... என நினைத்துக்கொண்டான்.

இரவு எழு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த விஷ்வம் “அம்மா மீனா, நீ கேட்ட காய்கறிகள் எல்லாம் இதுல இருக்கு....” என்றதும்,

“இதோ வரேன்ப்பா...” என்று சமையல் அறையில் இருந்து குரல் வந்தது.

கைகளைத் துடைத்தபடி வெளியே வந்த மீனா நைட்டி அணிந்து ஒரு கொண்டை போட்டிருந்தாள். மெலிவான உடல் என்பதால்... அணிந்திருந்த நைட்டி பார்க்க பெரிதாக இருந்தது.

“என்னம்மா டிரஸ் இது? பெரிசா இருந்தா கொஞ்சம் தச்சாவது போடக் கூடாதா....”

“போங்கப்பா... இப்ப என்னை யாரு பார்க்க போறா?....” மீனாவின் குரலில் இருந்த வெறுமையைப் பார்த்து பெற்றவருக்கு மனம் கொதித்தது.

வாழ்க்கையை அலுத்துப்போனது போல் இது என்ன பேச்சு? என்று நினைத்தவர் “உனக்கு இருபத்தியேழு வயசுதான் ஆகுது.... உன் வயசுக்கு ஏத்த மாதிரி இரு மா.....” என்றார் மனம் தாளாமல்.... அவரை ஒரு அலட்சிய பார்வையால் அடக்கியவள், காய்கறிகளை ஆராய....


“இந்தா மீதி பணம்.” என்று அவர் கொடுத்ததை வாங்கிப்பார்த்த மீனா “என்னப்பா இவ்வளவு இருக்கு... அனியோட ஜெஸ் க்ளாஸ் பீஸ் கட்டலையா....” என்றாள்.

“அந்தச் சார் வாங்க மாட்டேனுட்டார் ம்மா....சின்ன குழந்தை தானே வேண்டாம்னுட்டார்.” என்று அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே உள்ளே வந்த அனிதா “அம்மா இன்னைக்கு சார் எனக்குப் புதுசா நிறையச் சொல்லிகொடுத்தார் மா....நானும் சாரும் கேம் விளையாடிணோமே.... நான் தான் ஜெயித்தேன்.” என்றாள் கண்கள் மின்ன...

மகள் ஜெயித்தாள் என்றது உண்மை இல்லை என்று தெரிந்தாலும் “அப்படியா.... என் செல்லம் அறிவாளி ஆச்சே...” என்று மகளைத் தூக்கி வைத்து மீனா கொஞ்சினாள்.

ஹரிஹரனை பத்தி பேச்சென்றால்... அனிதா நிறுத்தாமல் பேசுவாள் கேட்கத்தான் மீனாவுக்குப் பொறுமை இருக்காது. இன்றும் அது போல் அவள் ஆரம்பிக்க “அம்மாவுக்கு வேலை இருக்கு டா... அப்புறம்.” என்று மகளை டிவி பார்க்க அனுப்பிவிட்டு... தந்தையிடம் திரும்பினாள்.

“என்னப்பா இவ வரவர ரொம்ப அந்தச் சார் பத்தியே பேசுறா... யாரோ என்னவோ.... கிளாஸ் நேரம் மட்டும் போயிட்டு வரட்டும் மத்த நேரம் அனுப்ப வேண்டாம்.” என்றாள்.

“அவ வயசுக்கு என்னால அவளை ஒரு இடத்தில பிடிச்சு வைக்க முடியலை.... உன் அண்ணிக்கு இவ ரொம்ப நேரம் அஸ்வத்தோட விளையாடினாலும் பிடிக்கலை.... இப்ப அந்தத் தம்பி வந்ததும் அங்கேயே தான் விளையாடிட்டு இருக்கா... பார்த்தா நல்லவரா தான்மா தெரியிறார்...”

“இந்தக் காலத்தில எல்லாம் யாரையும் அப்படி நம்பி பெண் குழந்தைகளை விட முடியாதுப்பா... நாளைக்குச் சனிக்கிழமை தானே நான் சீக்கிரம் ஆபீஸ்ல இருந்து வந்துடுவேன். நானே நேர்ல போய் அவரைப் பார்த்திட்டு அப்படியே பீஸ் கொடுத்திட்டு வரேன்.”

மகள் சொல்வதும் உண்மை தான். இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை.... சின்னப் பிஞ்சு என்று நினைக்கலாமல் எத்தனை பேர் கழுகள் போலக் கொத்திவிடுகின்றனர். தினமும் தான் பேபரில் பார்க்கிறோமே என்று நினைத்தவர் “சரிம்மா கதவை தாழ் போட்டுக்கோ.... நான் கிளம்புறேன்.” என்று சென்றுவிட்டார்.


நமக்கு மட்டும் பார்த்ததும் யார் நல்லவர்? யார் கெட்டவர்ன்னு தெரிஞ்சிடுமா.... அப்படிக் கண்டுபிடிக்கத் தெரியாமத்தானே வாழ்க்கையைக் கோட்டை விட்டுட்டு நிற்கிறோம் என்று நினைத்தவள், மேலும் அதைப் பற்றி யோசிக்க விரும்பாமல் மகளைத் தேடிச் சென்றாள்.

“அனி குட்டி இங்க வாங்க...” என்றவள், மகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ள....

“சார் கூட இப்படித்தாம்மா என்னை மடியில வச்சு தான் விளையாட சொல்லித்தருவார்.” என அனிதா திரும்ப ஹரிஹரனை பற்றி ஆரம்பிக்க... நாளை எப்படியும் சென்று அவனைப் பார்த்து விட வேண்டும் என்று நினைத்தாள்.

“அம்மா அனி குட்டிக்குக் குட் டச், பேட் டச் எல்லாம் சொல்லி குடுத்தேன் இல்ல.... யாரும் உன்னைப் பேட் டச் பண்ணலையே....” அவள் மெல்ல விசாரிக்க...



“இல்லையே இங்க... இங்க.... இங்க எல்லாம் தொட்டாதானே என்று ஒவ்வொரு இடமாகத் தொட்டு காட்டியவள், இங்க எல்லாம் யாரும் தொடலையே...” என்றதும் தான் மீனாவுக்கு நிம்மதியாக இருந்தது.

மறுநாள் சொன்னது போலவே மகளின் வகுப்பு நேரத்திற்குச் சென்றாள். சற்றுத் தொலைவில் இருந்து வரும் பெற்றோர்கள் பிள்ளைகளை உள்ளே அனுப்பிவிட்டு வகுப்பு முடியும் வரை வெளியே காத்திருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களோடு சென்று அமர்ந்து மீனா மெதுவாக ஜன்னல் வழியாகப் பார்க்க....

அனிதா ஹரிஹரனின் மடியில் அமர்ந்து விளையாடியக்கொண்டு இருந்தாள். அவனின் ஒரு கை அவளை மென்மையாகச் சுற்றி இருந்தது. அவன் விளையாட்டில் தீவிரமாக இருக்க....மீனாவின் பார்வை ஹரிஹரனை ஆராய்ந்தது.

சராசரி உயரத்துடன் சிவந்த நிறத்தில் சுருளான கேசம், நெற்றியின் இருபக்கமும் மட்டும் சற்று ஏறி இருந்தது. வயது முப்பதுகளில் இருக்கும் என்று நினைத்தவளுக்குக் கண்டிப்பாகத் திருமணமாகி மனைவி குழந்தைகள் என்று இருப்பதால் தான் அனிதாவிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்கிறான் போல என்று நினைத்தாள்.

அவள் பார்த்துக்கொண்டிருந்த போதே எதேட்சையாக ஹரிஹரனும் அவளைப் பார்த்தான். யார் இப்படிப் பார்க்கிறது? என்று யோசித்தவன், அடுத்த நொடியே விளையாட்டில் கவனத்தைத் திருப்பினான்.

ஹரிஹரனின் கண்களில் கனிவு இருந்ததே தவிரக் கல்மிஷம் இல்லை. சரி இவனை நினைத்து இனி பயப்பட வேண்டியது இல்லை என்று நினைத்தவள், அருகில் இருந்தவரிடம் பேச ஆரம்பித்தாள்.



வகுப்பு முடிந்தும் அனிதா வெளியே வரவில்லை... அவள் தான் ஹரிஹரன் கிளம்பும் வரை அங்கிருந்து நகர மாட்டாளே.... மீனா அவளைத் தேடிக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஹரிஹரன் அவளை இன்று தான் முதல் முறை பார்க்கிறான். யாரென்று தெரியாமல் அவன் புருவத்தை உயர்த்திக் கேள்வியாகப் பார்க்க.... அப்போது அனிதா அம்மா என்று ஓடி வந்தாள்.

அனிதாவுடைய தாய் என்றதும் ஹரிஹரன் அவளை மிகவும் மரியாதையான பார்வை பார்த்து லேசாகப் புன்னகைக்க.... மீனா அவனைக் கண்டுகொள்ளாமல் அனிதாவை பார்த்து “போகலாமா...” என்றாள்.

ஹரிஹரனுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க ஆசை இருந்தாலும் தாய் அழைக்கும் போது மறுக்காமல் அவளுடன் அனிதாவும் கிளம்ப... வாசல் வரை சென்ற மீனா... ஒரு நொடி நின்று பின் திரும்பி வந்தவள், தன் கைப்பையைத் திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்து ஹரிஹரனிடம் நீட்ட.... அவள் எதற்குக் கொடுக்கிறாள் என்று புரிந்த போதும்,

“நான் தான் சொன்னேனே.... அனிதாவுக்குப் பீஸ் வேண்டாம்.” அவன் மறுக்க.... “உலகத்தில சும்மா கிடைக்கிறதுன்னு ஒன்னும் இல்லை.... அதோட பீஸ் குடுக்க முடியாத நிலையில நாங்க இல்லை.” என்றதும் மேலும் பேசாமல் வாங்கிகொண்டான்.

அனிதாவின் தாத்தாவிடம் பேசியது போல் அவனால் மீனாவிடம் பேச முடியவில்லை... ஏனென்றால் அவள் பார்வையில் அவ்வளவு கடினம் இருந்தது.

மீனாவுடன் அவர்கள் வீட்டு வாசல் வரை சென்ற அனிதா “நான் சார் கூட இருக்கப் போறேன்.” என்று திரும்ப ஹரிஹரனிடமே ஓட அவனும் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

ஓ... மகள் யாருடன் பழகுகிறாள் என்று பார்க்கத்தான் வந்திருப்பாங்களோ எனச் சரியாகக் கணித்தவன், ஏன் நான் என்ன அவ்வளவு மோசமானவனா? என்று மனதில் சிறு கோபமும் எழுந்தது.

ஹரிஹரன் இதுவரை அனிதாவின் குடும்பத்தைப் பற்றி எதுவும் அவளிடம் கேட்டது இல்லை.... அவள் இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் இருக்கிறாள் என்று தெரியும். அவள் தாத்தாவை தெரியும், பிறகு அவள் இதே பள்ளியில் படிக்கிறாள் என்று தெரியுமே தவிர வேறு ஒன்றும் அவளைப் பற்றித் தெரியாது.

வகுப்பு நேரம் என்பதால்....அவனுக்கு அவளோடு பேச முடியாது.... அவளும் அவன் அருகாமையை விரும்புவாளே தவிர.... பேசி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டாள்.

அடுத்த வகுப்பும் முடிந்து கிளம்பும் போது “அனி குட்டியோட அம்மாவை இன்னைக்குப் பார்த்தாச்சு.... அப்பாவை எப்ப பார்க்கிறது?” ஹரிஹரன் கேட்க.....

“அப்பாவா.... எனக்கு அப்பாவே இல்லையே.....” என்று ஒரு குண்டை தூக்கி அவன் தலையில் போட்டது தெரியாமல் “பாய் சார்...” என்றபடி துள்ளி குதித்து அவள் வீட்டுக்கு அனிதா ஓடிவிட.... ஹரிஹரன் அதே இடத்தில் உறைந்து போய் நின்றான்.

 
:love: :love: :love:

மீனாவின் பயம் பெண் பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கே உரியது......
இங்கே நல்லவன் போர்வையில் உலவும் மிருகங்கள் பல.......
அந்த மாதிரி மிருகத்திடம் இருந்து தப்பிக்கும் பெண்கள் கொள்ளும் பயம் கேட்கவே வேண்டாம்.....

அப்பா இல்லாத பொண்ணு....... கல்மிஷமில்லாமல் பாசமா பார்த்துக்குற சார்....... அம்மாவின் சந்தேகம் தீர்ந்தது........
சார் என்ன பண்ண போறார்???
 
Last edited:

Advertisement

Top