Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 2 2

Advertisement

Admin

Admin
Member

ஆகாஷ் ரொம்ப எளிதாகச் சொல்லிவிட்டான். ஆனால் அதைக் கேட்ட மீனா அதிர்ச்சியில் நின்று விட்டாள். திருமணம் பந்தம் அவ்வளவு எளிதா என்ன வெட்டிக்கொள்ள.... அவன் தான் இப்படி உளறுகிறான் என்று பார்த்தால்.... அவன் பெற்றோர் வாயே திறக்கவில்லை....

மீனாவிற்குத் தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. இவன் தன்னை இந்த மூன்று மாதமாக மனைவி என்ற பெயரில் வேறு வேலை செய்ய அழைத்து வந்திருப்பது தெரியாமல்... அவனோடு சேர்ந்து இவளும் தானே மகிழ்ந்திருந்தாள்.

என்ன ஆனாலும் சரி, அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் செல்வதாக இல்லை.... இவனுக்கு விளையாட தன் வாழ்க்கை தான் கிடைத்ததா என்று நினைத்தவள், அவன் என்ன கொடுமை செய்த போதிலும் அவள் அசைய வில்லை.

அவளிடம் தன் வேலை பலிக்கவில்லை என்றதும், ஆகாஷ் இன்னும் அவளை அடித்துத் துன்புறுத்தினான்.

“நீங்க பார்த்திட்டு தானே இருக்கீங்க. உங்க மகனை கேட்க மாட்டீங்களா....” மீனா மனம் பொறுக்காமல் மாமியாரை பார்த்து கேட்க....

“அவன் யார் சொல்றதையும் கேட்க மாட்டான். அவன் பிடிவாதம் பிடிச்சா பிடிச்சது தான். அதனால தான் நாங்க கல்யாணம் பண்ணி வச்சோம். இப்படியெல்லாம் நடக்கும்ன்னு எங்களுக்கு முன்னாடியே தெரியும்.” என்றார் அவர்.

ஆக மகனின் குணம் தெரிந்து, அவன் எப்படியும் சில நாட்களில் தன்னை விரட்டிவிடுவான் என்று எதிர்ப்பர்த்ததால்... தான் திருமணத்தை யாருகும் சொல்லாமல் எளிமையாகச் செய்திருக்கின்றனர்.

இதுவரை உறவினர் வீட்டிற்கோ அல்லது அவர்கள் வீட்டு விஷேஷதிற்கோ அவளை அழைத்துச் சென்றதே இல்லை. அதன் காரணமும் இப்போது புரிந்தது. மகனுக்கு அப்போது தானே அவர்கள் விருப்பபடி இன்னொரு திருமணம் செய்ய முடியும்.

மகனின் கீழ்தரமான செயலுக்குத் துணை போகும் இது மாதிரி பெற்றோர் இருக்கும் வரை.... இது போல் நிறைய ஆகாஷ்கள் வருவார்கள் என்று நினைத்தவள், இதற்கு மேலும் இந்த வீட்டில் இருந்தால்... அது தனக்குக் கேவலம் என்று அந்த வீட்டை விட்டுச் செல்லும் முடிவை எடுத்தாள்.

அரை உயிராய் வந்த மகளைப் பார்த்ததும் மீனாவின் பெற்றோர் துடித்தனர். எப்படியும் அவளைத் திரும்பக் கணவன் வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்று அவர்கள் பக்க உறவினர் சிலரை அழைத்துக்கொண்டு ஆகாஷ் வீட்டில் சென்று பேச.... அவர்களுக்கு அங்கே அவமானமே மிஞ்சியது.

பணக்காரன் என்று தெரிந்து வலை வீசி பிடிக்க மகளை அனுப்பியதாக மீனாவின் பெற்றோர் மீதே பழியைத் திருப்பிவிட்டனர். போலீஸ் கோர்ட் என்று சென்றால்... மீனாவிற்கு வேறு ஒருவருடன் தவறான உறவு இருப்பதாகவும், அதனால் தான் விவாகரத்து கேட்பதாகவும், சொல்லப்போவதாகக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேச.... பணப் பலமோ ஆள் பலமோ இல்லாத மீனாவின் பெற்றோர் சுக்கு நூறாக உடைந்து விட்டனர்.

திருமணம் பதிவு செய்யப்படவும் இல்லை... திருமணம் நடந்ததற்கான போதிய சாட்சிகளும் இல்லை.... கடைசியில் வேறு வழி இல்லாமல்.... விடுதலை பத்திரத்தில் கையழுத்து இட்டுவிட்டு வந்தனர்.

மறுநாள் மீனா வீட்டிற்கு வந்த ஆகாஷ் அவளுக்குச் சில லட்சங்கள் பணம் கொடுக்க.... மூன்று மாதத்திற்கான விலையா என்ற கொதிப்பில் உடலெல்லாம் பற்றி எரிய.... அதை வாங்கி அவன் முகத்தில் திருப்பி அடித்தவள், அதோடு அவன் கட்டிய தாலியையும் கழட்டி அவன் முகத்திலேயே வீசி காரி துப்பி அனுப்பினாள்.

இந்தக் கலாட்டவில் அவள் கருவுற்று இருப்பதையே அறியாமல் இருந்தாள். ஆகாஷ் பிள்ளை என்று எதுவும் வந்து விடக்கூடாது என்று கவனமாகத்தான் இருந்தான். அப்படி இருந்தும் அவள் கருவுற்று இருந்தாள்.

மீனா நினைத்தால் இந்தக் குழந்தையை வைத்தே அவனை ஒரு வழியாக்க முடியும். ஆனால் அதைச் செய்ய அவள் விரும்பவில்லை.... அவன் பேசியதை கேட்ட பிறகு அவனோடு சேர்ந்து வாழ்வதும் ஒன்று தான், தெருச் சாக்கடையில் போய் விழுவதும் ஒன்று தான் என்று நினைத்தாள்.

“அந்தக் குழந்தையை அழித்துவிடு, கொஞ்ச நாள் கழித்து வேறு திருமணம் செய்வோம்.” என்ற தாயின் பேச்சையும் அவள் கேட்பதாக இல்லை... இனி தன் வாழ்வில் வேறு திருமணம் இல்லை... என்று முடிவு செய்தவள், தன் வாழ்க்கைக்கு இந்தக் குழந்தை ஒன்றே போதும் என்று முடிவெடுத்தாள்.

மகளின் வாழ்க்கை இப்படி ஆனதே என்ற கவலையில் அவளின் தாயும் சிறிது நாட்களில் இறந்துவிட்டார். ரதிக்குப் பெங்களூரில் வேலை கிடைக்க.... அவள் அண்ணனும் அவளுடன் கிளம்ப.... மீனாவும் அவள் தந்தையும் தவித்தனர்.

“உங்க அப்பாவை நாங்க பார்க்கிற கடமை இருக்குப் பார்த்துக்கிறோம். ஆனா உன்னைக் காலம் எல்லாம் வச்சு பார்த்துக்க எங்களால முடியாது. உன்னை நீயே பரத்துக்க முடியும்னா நீயும் எங்களோட வரலாம்.”

ரதி சொல்ல வருவது மீனாவுக்கு நன்றாகவே புரிந்தது. எங்களுக்குச் சுமையாக இல்லாமல் இருப்பதென்றால் வா அல்லது வராதே என்பதே.... அவளைச் சொல்லியும் குற்றமில்லை.... ஆரம்பத்திலேயே இந்தத் திருமணம் வேண்டாம் என்று தான் ரதி சொன்னாள். தன் பெற்றோர் தான் கேட்கவில்லை... அதோடு அவர்களும் புதிதாகத் திருமணமானவர்கள் அவர்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது. அவர்கள் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் அல்லவா....

மனோஜுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை.... அதோடு அவனுக்கு எதையும் எடுத்துச் செய்யத் தெரியாது. சொன்ன வேலையைச் செய்யும் கிளிப்பிள்ளை போல் அவன். அவனை வைத்துக்கொண்டு ரதியும் வேறு என்ன செய்ய முடியும்.

மீனாவுக்கும் சென்னையில் இருக்கப் பிடிக்கவில்லை.... தப்பித் தவறி கூட அவள் ஆகாஷின் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை...... அதனால் அண்ணன் குடும்பத்தோடு அவளும் பெங்களூர் கிளம்பினாள்.

ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து அதில் குடி புகுந்தனர். மீனா வீட்டுப் பக்கத்திலேயே ஒரு சின்ன வேலை தேடிக்கொண்டு தன் இறுதி வருட பட்டபடிப்பை முடித்தாள். படிப்பு முடிந்த சிறிது நாட்களிலேயே அவளுக்கு அனிதா பிறந்து விட்டாள்.

குழந்தையின் முகம் பார்த்தும் தான் தன் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். குழந்தையை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என்பது ஒன்றே அவள் சிந்தனை ஆகி போனது.

மனோஜும் அங்கேயே தனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டான். ரதி அவளின் ஒரு வயது மகன் அஸ்வத்தை மீனாவிடம் தான் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வாள். அனிதாவோடு அவனையும் சேர்த்து பார்த்துக்கொண்டவள், மாலையில் அக்கம் பக்கம் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது... பக்கத்தில் இருக்கும் மளிகை கடைக்கு வீட்டில் இருந்தபடியே பாக்கெட் போட்டுக் கொடுப்பது, அருகில் இருக்கும் வீடுகளுக்கு இட்லி மாவு அரைத்துக் கொடுப்பது என்று தன் தேவைக்கும் குழந்தையின் தேவைக்கும் சம்பாதித்துக் கொண்டாள். அவளுக்கு விஸ்வம் உதவி செய்தார்.

ரதி அலுவலகத்தில் இருந்து வந்ததும் குழந்தைகளை அவளிடம் விட்டுவிட்டு சுருக்கெழுத்து, டைப்பிங் கம்ப்யூட்டர் எல்லாம் கற்றுக்கொண்டாள்.

குழந்தைக்கு ஒரு வயது ஆனதும், இனியும் அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்று அதே தெருவில் தனியே ஒரு சிறிய வீட்டை வாடைகைக்குப் பிடித்துக்கொண்டு மகளோடு அங்கே சென்றுவிட்டாள்.

விஸ்வத்தால் அஸ்வத் அனிதா இருவரையும் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால்... மேலும் ஒரு வருடம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தவள், மகளுக்கு இரண்டு வயது ஆனதும் அவளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் வேறு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
அலுவலகத்தில் அவர்களுக்குத் தேவையான ஆவணங்களைக் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும். காலை ஒன்பது மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை வேலை இருக்கும். மாதம் பதினைந்து ஆயிரம் சம்பளம் கொடுத்தனர்.

வீட்டு வாடகை, பால், மளிகை, அனிதாவின் பள்ளி செலவு போக... தன் பெயரில் ஒரு இன்சூரன்ஸ் போட்டுக்கொண்டு வந்தாள். அதற்கே மாத சம்பளம் சரியாகி விட... மாலை எழு மணி போல் வீட்டிற்கு வருபவள், இரவு துங்கும் வரை பாக்கெட் போட்டு கொடுக்கும் வேலையைச் செய்து வந்தாள். அதில் பெரிதாக ஒன்றும் வருமானம் இல்லையென்றாலும் எதோ கைசெலவுக்கு ஆனது.

இதையெல்லாம் நினைத்து பார்த்தவளின் விழிகள் கண்ணீரை அருவியாகக் கொட்ட.... ஏழு வருடங்கள் ஆனாலும் ஆகாஷால் மனதில் ஏற்பட்ட காயமும் வலியும் அப்படியே இருப்பதை உணர்ந்தவள், இப்படி அழுது கொண்டிருப்பதால்.... ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்த்து, எழுந்து சென்று பொட்டுகடலையை வைத்துக்கொண்டு பாக்கெட் போட ஆரம்பித்தாள்.

தன் வீட்டில் தனது அறையில் படுத்திருந்த ஹரிஹரனும், அப்போது அனிதாவை பற்றித் தான் நினைத்துக்கொண்டிருந்தான். இப்படி ஒரு குழந்தையே இருப்பது தெரியாத தகப்பன். இவனுக்கெல்லாம் தேவதை மாதிரி ஒரு குழந்தை....

இந்தக் குழந்தையை வளர்க்க மீனா எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதும் அவனுக்குத் தெரிந்ததால்.... குழந்தைக்காக ஏங்குபவர்கள் பலர் இருக்க.... வளர்க்க சிரமபடுகிறவள் வீட்டில் தான் நிறையக் குழந்தைகள் பிறக்கும் என்று நினைத்தவனின் பார்வை, சுவற்றில் மாட்டியிருந்த தன் மனைவியின் புகைப்படத்தை வேதனையுடன் வருடியது.

எப்பவுமே ஒன்றுக்கு ஒரு பொருளுக்கு ஆசைப்படும் பொழுது அது கிடைக்காது
ஆகாஷுக்கு காலம் கடந்து ஞானம் வருமோ?
ஹரியின் மனைவி பாவம்
ஒரு குழந்தைக்காக எவ்வளவு ஏங்கினாள்?
 
Last edited:

super ud sis
 
???

மீனா முடிவு (y)(y)(y)
பெண் குழந்தை வேற....... இன்னுமே பயமா இருக்கும் வாழ்க்கையை நினைத்து......

சொன்னது கேட்காத இவங்க பையனுக்கு அடுத்த வீட்டு பொண்ணு என்ன விளையாடும் பொம்மையா???
முதலில் இவங்களை கொழுத்தனும்......

ஹரிக்கு அனிதாவோடு பொண்டாட்டி நியாபகம் வருதே......
 
Last edited:
Top