வான் தழுவிடிலோ வெண்ணிலவே 19 நிறைவுப் பகுதி

Advertisement

கதை அருமை. ஆரா விக்ரம் இருவரையும் நிரம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி. எல்லா அத்தியாயங்களுக்கும் கருத்துக்கள் கொடுத்து ஒரு பெரிய ரிவ்யூவும் கொடுத்து அத்தனை ஊக்கத்தை கொடுத்து இருக்கீங்க. உங்கள் அன்புக்கு மனம் கனிந்த நன்றிகள்
 
அழகான , நிறைவான முடிவு. ஆராதனா தன் தவறை உணர்த்த இந்த முறை கண்ணன் அர்ஜுன் பார்த்தசாரதி வடிவில் வந்திருக்கான்.

கண்ணம்மா னா கண்ணன் தங்கச்சியா னு கேட்கிற இடம் விக்ரம் போலவே சிரிச்சிட்டேன்.

எட்வர்ட்க்கும் ஒரு காதல் கதை

சிங்கமோ, புலியோ தன் துணைகளிடத்தில் கவுரவம் பார்க்காது இறங்கிப் போவதும் ஒரு வகை கம்பீரம் தான்.

இருவரின் கல்யாண கலாட்டா படிக்க ஆவல்.

எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன்
தேவி
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் மிகப் பெரியது. உங்களோட பெரிய பெரிய கமெண்ட்ஸ் எங்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்தது. உண்மையை சொல்லிடீங்க யாராக இருந்தாலும் தங்களின் துணைகளிடத்தில் வறட்டு கவுரவம் பார்க்காமல் இருப்பது நல்லது. ஆனால் எபிலாக்லே கல்யாண கலாட்டா வருமா? அதுதான் பெரிய டவுட். ஹாஹா. உங்களது அன்புக்கு ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 
அழகான ,நிறைவான முடிவு❤️
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப சந்தோஷம். நீங்களும் கதையின் துவக்கத்தில் இருந்து கூடவே வந்து அழகு அழகா கமெண்ட்ஸ் தந்தீங்க. அடுத்த அத்தியாயம் வருவதற்குள் நீங்க கெஸ் செய்வது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 
Beautiful story. Rombha nalla iruku. Vetri pera vaazhthukal.
மனம் நிறைந்த நன்றிகள் மா. ஒரே மூச்சிலே எல்லா அத்தயாய்த்தையும் படிச்சு முடிச்சிட்டீங்க. அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுவே கதை உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு தெரிஞ்சது. வெரி ஹாப்பி மா. அழகான கமெண்டுக்கும் உங்கள் அன்புக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 
சண்டையிட மட்டுமில்ல, சமாதானாம் ஆகவும் ஒரு நிமிஷம் போதும்னு சொல்ற மாதிரி, உண்மை தெரிந்த மறுகணமே ஆரா டோடல்லா சரண்டரான இடம் அத்தனை அழகாக இருந்தது.

எல்லாம் தெரிந்தும், அமைதியின் உருவாய் காட்சியளித்த தியாகி விக்ரம், ஆராகிட்ட லைஃப்ட் & ரைட் அடி & பேச்சு வாங்கினது செம்ம.

எட்வர்ட் அவன் வரும் காட்சிகளில்… அன்பாகட்டும், நட்பாகட்டும், கூட இருக்குறவங்களயும் படிக்கிற எங்களையும் இரிட்டேட் பண்ணறது ஆகட்டும், ஃபுல் மார்க் வாங்கிடுறான். சூப்பர் பையன் அவன்.

அர்ஜுன் ஸ்வாதி ஜேடன் மாயா அனைவரும் சூப்பர் பாட்டுக்கு bgm மாதிரி கதையின் காட்சிகளை அத்தனை அழகுபடுத்துறாங்க.

விக்ரம் பார்த்தசாரதி ஹீரோன்னா, அர்ஜுன் பார்த்தசாரதி சூப்பர் ஹீரோ!!!

சிங்கம் புலியின் செல்லச் சண்டைகள் அத்தனை ரசனையாக இருந்துது. இவங்க சண்டையில் கண்ணணும் கண்ணமாவும் மாட்டிட்டுத் தவிக்கிறதுதான் ஹைலைட். இனி சிங்கமும் புலியும் குட்டி புலியிடம் வசமாய் மாட்டிக்கொள்ளப் போவதைப் பார்க்க ஆவல்…
 

Advertisement

Advertisement

Back
Top