Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞💞♥️வருவதோ புது வசந்தம் ♥️💞💞 💗💗விமர்சனம் 💗💗

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240129_124505.jpg💖💖வருவதோ புது வசந்தம் 💖💖

எழுத்தாளருக்கு: லவ் & லவ் ஒன்லி போட்டி கதையில் காதலை கருவாக கொண்டு எழுத தொடங்கிய கதையின் மையப்புள்ளியாக.... படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டு அதில் தோல்வியடைந்த ஒரு பெண் தன் மணவாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்து இறுதியில் தன் கணவனின் துணைக் கொண்டு எவ்வாறு தங்கள் மணவாழ்க்கையில் வெற்றி கொள்கிறாள் என்பதனை கதாசிரியர் எதார்த்தமான தன் எழுத்து நடையில் கதையை மிக சுவாரஸ்யமாக கொண்டு சென்று நிறைவாக முடித்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏👌👌

7cf98146e7839081c217132528d36efd.gif


மதுமிதா: நம் கதையின் நாயகி சுந்தரம் _ மீனாட்சி தம்பதியருக்கு அண்ணன் மாதவனுடன் வசதியான வீட்டில் இளைய மகளாக பிறந்து தந்தைக்கு செல்ல மகளாக அவ்வீட்டின் இளவரசியாக வளர்ந்து தைரியமும், துடுக்குதனமும், தன்னம்பிக்கையையும் ஒருங்கே பெற்ற பெண்..... படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டு பிரச்சினையில் சிக்கி காவல் நிலையம் வரை சென்று காதலில் தோல்வியுற்று சுற்றித்தாரின் அவதூறு பேச்சிற்கு ஆளாகி அதனால் தந்தைக்கு உடல் நலிவுற்று துணை நிற்க வேண்டிய அண்ணனும் தன் நலமட்டுமே பெரிதாக எண்ணி மனைவி ரம்யாவுடன் தனிக்குடித்தனம் சென்று விட அத்தனை வளமும் இருந்தும் திருமண சந்தையில் விலை போகாமல் இருக்க அவளின் நிறைவேறாத காதல் காரணமாக அமைந்து விடுகிறது 😨😨☹️☹️😱

கரிகால பாண்டியன்: நம் கதையின் நாயகன்.... கருப்பாயி _ பாண்டி தம்பதியருக்கு அண்ணன் ராஜபாண்டி தங்கை வசந்தியுடன் இளைய மகனாகப் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்பதற்கு வசதி இல்லாததால் நம் நாயகி மதுவின் தந்தை சுந்தரமிடம் உதவி பெற்று படித்து அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும்....நற்பண்புகளையும் அமைதியான குணத்தையும் ஒருங்கே பெற்ற சூது வாது தெரியாத அன்னையின் மிரட்டலுக்கு அடிப்பனிந்தே பழகிய பேச்சு சாதுர்யமற்ற ஏமாளியான நல்லவன் என்று சொன்னால் சரியாக இருக்கும் 😧😧😕😕 🙁🙁😰😰😥😥
தந்தை பாண்டி நல்லவர் தான் பாசமானவர் தான் ஆனால் குடி அவரை முழுமையாக மூழ்கடித்து அவரால் அந்த வீட்டிற்கு எந்த உபயோகமும் இல்லை என்ற நிலையில் தாய் கருப்பாயி கிடைத்த வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து பெரிய மகனுக்கு அண்ணன் மகளான சகுந்தலாவுடன் திருமணம் முடித்து தாயின் வற்புறுத்தலால் அண்ணன் வீடு கட்டவும் தங்கையின் திருமண செலவும் நம் நாயகன் தலையில் தான் விழுகிறது 😥😥😥 காரணம் அவன் அரசு ஊழியம் பார்ப்பது....கரிகாலனை பொறுத்தவரை கருப்பாயிக்கு ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைதான் 😡😡😠😠🤬🤬😤😤


சுந்தரத்தின் விருப்பத்தின் பேரில் இருவேறு குணங்களை கொண்ட கரிகாலன் _ மதுமிதா திருமண பந்தத்தில் இணைகிறார்கள் 😍😍😍

புகுந்த வீட்டில் முதல் நாளே ஓரகத்தி சகுந்தலாவின் வசைபாடலோடு பிரச்சினையோடு தான் தொடங்குகிறது நம் நாயகி மதுவிற்கு 😨😨😨 கரிகாலன் கட்டத் தொடங்கிய வீடு பணப்பற்றாக் குறையால் பாதியில் நிற்க பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் புதுப்பெண்ணை மிரட்சி அடைய செய்வதாய் 😱😱😱

கரிகாலன் மனைவியை எத்தனை தாங்க முடியுமோ அத்தனை தாங்ககத்தான் செய்கிறான் இருந்தும் அந்த வீட்டில் மதுவால் ஒன்றமுடியவில்லை ☹️☹️☹️ கணவனை புரிந்து அவனுடன் நெருங்கி பழகும் முன்பே மாமியார் தொடங்கிய சீர் பேச்சால் மதுவின் தாய் மீனாட்சிக்கும் , கருப்பாயிக்கும் இடையே வெடித்து கிளம்புகிறது பிரச்சினை 😧😧😧 ஊரார் முன்பு மதுவின் ஒழுக்கம் கடைப் பறப்ப பட மனைவியின் மனதை புரிந்து கொள்ளாமல் கரிகாலன் அவளின் நலனை கருத்தில் கொண்டு மதுவை பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுகிறான் 😱😱😨😨😰😰

பிறந்த வீட்டில் உறவுகளின் அவதூறு பேச்சாலும் தாயின் வசவு சொற்களாலும் அண்ணி ரம்யா மதுவின் மீது பொறாமை கொண்டு தகாத வார்த்தைகளால் குற்றம் சுமத்தப் பட மனம் வெதும்பி பெரிதும் காயப் பட்டு நள்ளிரவில் கணவன் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சேறுகிறாள்...!!!


மணமான பெண்ணிற்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும், நற்பேறும் கிடைப்பது அவள் கணவனுடன் வாழும் போது தான்.... பிரிந்து வந்தால் அவளின் நடத்தை சந்தை படுத்தப்பட்டு அவமானம் தான் மிஞ்சும் என்பதனை புரிந்து மனம் தெளிந்து கணவன் வாழும் ஒற்றை அறையை தஞ்சம் அடைகிறாள் 😍😍😍 அங்கே பாட்டு கச்சேரியோடு இனிதே தொடங்குகிறது கரிகாலன் _ மதுவின்
தாம்பத்திய வாழ்க்கை 🥰🥰🥰🥰♥️♥️💗💗💓💓💞💞💕💕

வாழும் இடத்தில் மதுவிற்கு சுற்றத்தார் அம்பிகா மற்றும் சுமதியின் நட்பு கிடைத்திட... அவர்களின் அறிவுரையை ஏற்றுக் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்த தொடங்குகிறாள் 😍 😍 😍


கணவனின் சீரில்லாத பொருளாதார நிலையை அறிந்து அதனை ஒழுங்கு படுத்த கணவன் எந்த ஒரு முயற்சியும் எடுக்க போவதில்லை என்பதனை உணர்ந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சியினை தன் கையில் எடுக்கிறாள்...!!!

வயிற்றுப் பிள்ளையோடு பெரிய பாண்டியின் வீட்டு விசேஷத்தில் கரிகாலனின் தாய்மாமா மாயனின் உதவியோடு கரிகாலனின் உடன் பிறந்தோர் மற்றும் மாமியாரின் சுயநலமான குணத்தையும் கணவனின் உழைப்பை சுரண்டி அனுபவிக்கும் அவர்களின் உண்மையான முகத்திரையை கிழித்து கணவன் அவர்களுக்கு கொடுத்த பணத்தை வாங்கி தருவதோடு மட்டுமல்லாமல் தன் ஒழுக்கம் எங்கு கேலிக் கூத்தானதோ அதே ஊராரின் முன்பு தன குணத்தை நிறுபித்து.... ஒரு கணவனுக்கு மனைவி தான் முதன்மை அவளுக்கு பின் தான் மற்ற உறவுகள் என்பதனை கணவனுக்கு உணர்த்தி தன் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறாள் நம் சிங்கப் பெண் மதுமிதா 🥰🥰🥰🥰

மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம் என்ற வாக்கியம் கரிகாலனுக்கு சாலப் பொருந்தும் ஆம் மதுமிதா அவனுக்கு கிடைத்த வரம் தான் 😍😍😍

இருண்டு கிடந்த அவன் வாழ்வில் ஒளி வீச வந்தவள்... அவன் மனைவி மதுமிதா ♥️♥️♥️


முட்புதர்கள் நிறைந்த அவன் வாழ்வை பூக்கள் நிறைந்த சோலையாக மாற்றி அமைத்தவள் அவன் மனைவி மதுமிதா ♥️♥️♥️

சுட்டெரிக்கும் வெயில் காலமாக இருந்த அவன் வாழ்வை வசந்த காலமாக மாற்றி அமைத்தவள் அவன் மனைவி மதுமிதா ♥️♥️♥️

புரிதலான அவர்களின் காதலுக்கும் இனிமையான தாம்பத்திய வாழ்வின் பரிசாக மகள் தமிழிசை 🥰🥰🥰
மது_ கரிகாலன் தூய்மையான நேசத்திற்கு சான்றாக கடவுள் தந்த வரமாக 😍😍😍

கரிகாலன்....மகள் மனைவியுடன் அவன் கட்டி முடித்த வீட்டிற்கு உறவுகள் சூழ மாமனார் அளித்த சீர்வரிசையுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் முகம் நிறைந்த சிரிப்புடனும் அவர்களின் புது மனை புகு விழா கோலாகலமாக நடைபெறுகிறது 🥰🥰🥰🥰

திருமணமான புதிதில் அவளின் குணத்தால் நம்மை கோப படுத்திய அதே மதுமிதா புகுந்த வீட்டின் அசாதாரண சூழ்நிலையால் மனம் தெளிந்து எந்த உறவுகள் அவளை வெறுத்து ஒதுக்கியதோ அதே உறவுகளை தன் நற்பண்புகளால் ஈர்த்து மாமியார் மெச்சும் மருமகளாக பெற்றோர் வியக்கும் மகளாக உறவுகளை அரவணைத்து செல்லும் அவளின் பாங்கு நம் மனதை கொள்ளை கொள்வதாய் 🥰🥰🥰

heart-emoji.gif

ஒரு வீடு மேன்மை அடைய குடும்பம் செழித்து தழைத்து வளர பெண்ணால் மட்டுமே முடியும் என்பதற்கு சான்றாக மதுமிதா என்றென்றும் நம் மனதை நிறைப்பால் என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️


சில மனிதர்களை அறிமுக படுத்தி ( கருப்பாயி, மீனாட்சி, சகுந்தளா, ரம்யா) நம்மை அதிர்ச்சி அடையச் செய்து....சில மனிதர்களை அறிமுக படுத்தி ( அம்பிகா, சுமதி, மாயன்) நம்மை வியப்பில் ஆழ்த்தி... மனிதனுக்குள் அடங்கிய காதல், பாசம், நேசம், அரவணைப்பு, குரோதம், விரோதம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, தோல்வி , பெருமை, என்ற அத்தனை உணர்வுகளையும் உள்ளடக்கிய அன்றாட வாழ்வில் நடக்கும் குடும்ப சிக்கல்கள் நிறைந்த வாழ்வில் காதலை நிறைத்து... காதல் கலந்த குடும்ப கதையை மிக சுவாரஸ்யமாக அற்புதமாக எளிமையான எழுத்து நடையில் எங்கும் தொய்வில்லாமல் மிக அருமையாக கதையை கொண்டு சென்ற @ஆராதனா துரை அவர்களின் எழுத்து பணி சிறக்க... இதேபோல் இன்னும் ஆயிரமாயிரம் கதைகளை அவர் நமக்கு தர கடவுள் அருள் புரியட்டும் 🤩🤩🤩🤩
வாழ்க வளமுடன் 🤩🤩🤩

மிக அருமையான கதை 🤩🤩🤩
மனதிற்கு நிறைவான முடிவு 😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
Last edited:
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
நம்ம சமூகத்துல நாட்டுநடப்புல நடக்குற சிற்சில விசயங்களை கூர்ந்து கவனித்து கதாசிரியர் தன் எழுத்துகளால் நம்மளை கட்டிப் போட்டாங்க.
நீங்க உங்க பாணில அருமையான விமர்சனம் தந்து எங்க மனசை கொள்ளை அடிச்சிட்டீங்க மச்சீ.love-hearts.gif
wow-cony-and-brown.gif
 
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
நம்ம சமூகத்துல நாட்டுநடப்புல நடக்குற சிற்சில விசயங்களை கூர்ந்து கவனித்து கதாசிரியர் தன் எழுத்துகளால் நம்மளை கட்டிப் போட்டாங்க.
நீங்க உங்க பாணில அருமையான விமர்சனம் தந்து எங்க மனசை கொள்ளை அடிச்சிட்டீங்க மச்சீ.View attachment 7393
View attachment 7394
மிக்க நன்றி மச்சி ♥️♥️♥️🙏🙏🙏

09169b185440714d1d9060cd3e2684bc.gif3954975fa3eee2c89934030a7fa92d0b.jpg
 
மிகவும் அருமையான விமர்சனம் மா.
மொத்த கதையையும் ஒரு சிறு குறிப்பில் வரைஞ்சுட்டிங்க 😉😉
 
Arumayana vimarsanam sis. Correct ah sollirukeenga. Oru aan kadhal/kadhalikaaga poradinaal unmayana kadhalanagavo/poruki yagavo parka paduvaan. Adhu oru pen seidhaal evlo ketta peyar, ketta peyar mattume.Vaazhkai epdi pandhaga adikiradhu. Nall velai karikalan oru better piece and have become best for Madhu. Of course she made life turn towards herself. Hats off @ஆராதனா துரை sis and vimrsanam ezhudhiya @Ram priya sis OHO!!!!!
 
Top