Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

🦜கொஞ்சும் கிளிகள் 🦜

Advertisement

Narmadha mf

Well-known member
Member
கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் எதார்த்தமான மொழி நடையுடன் எந்த வித மிகை படுத்துதலும் இன்றி நிதர்சனத்துடன் கதைக்களம் மனதை நெகிழ்ச்சியாக்கியது 😍😍😍😍😍😍.

சரண்யாதேவி 🥰🥰:
வீட்டுக்கு செல்ல பெண், தாயின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே வராத படிப்பை துறந்து அப்போதைக்கு சுகமான வாழ்கையை வாழ்ந்ததன் விளைவு எதிர்காலத்தை எதிர்கொள்ள பயத்துடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது. குடும்பத்தால் போற்ற பட்டவள், வாழ்க்கையில் தோற்ற போது அதே குடும்பத்தால் நோகடிக்கவும் பட்டாள்... கல்வியின் அருமையை புரிந்து தன் செல்ல மகள்கள் அந்த கல்வியை தரமாக கற்க வேண்டும் என்று ஏக்கம் நிறைந்து தன் குடும்பத்தை பார்த்து நின்ற தருணங்கள் மனதை ரணமாக்கியது🙁🙁..
சராசரி பெண்ணாய் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இவளுக்கு நிராசையாக போனதோடு வாழ்கை பற்றின அனுபவம் வலிக்க வலிக்க கற்று கொடுத்துவிட்டது..


வெற்றிவேல் :
தலைமகனாய் பிறந்து குடும்ப முன்னேற்றம் கருதி படிப்பை தொடராமல் குடும்ப பாரத்தை ஏற்று நல்ல ஆண்மகனாய் இருந்தது உண்மை தான்..
காதல் இல்லாத மனிதன் உலகில் அரிதானவர்களே அப்படி பட்ட காதல் இவன் வாழ்வில் வந்ததில் தவறொன்றும் இல்லை தான் ஆனால் அந்த காதலுக்காக போராடி தோற்று இன்னோரு அப்பாவி பெண்ணை திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவளுடன் வாழ்ந்து அவனது மகவை சுமந்து நிற்கும் பெண்ணை இக்கட்டான சூழலில் அனைவர் முன்பும் அவமானம் செய்து கொட்டும் மழையில் வீட்டை விட்டு வெளியேற்றிய கொடூர செயல் என்றும் ஜீரணிக்க இயலவில்லை.... முற்றிலும் வெற்றியை வெறுக்க வைத்த இடம் இதுதான்😒😒.


தனம் -வேல்முருகன் :
தனம் :வெற்றி மீது கொண்ட அதீத பாசமே வெற்றியின் வாழ்வில் வெற்றிடத்தை உருவாக்க பார்த்தது.. இவரும் ஒரு பெண் பிள்ளைக்கு தாய் என்பதை மறந்து மருமகளாய் வந்த பெண்ணை கீழ் தரமாக பேசுவதும் உருவத்தை எள்ளி நகையாடுவதும், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவளது உணவில் கை வைத்த செயல் எல்லாம் இவர் மீது எல்லை இல்லா கோபத்தை உருவாக்கியது.குழந்தையுடன் வீடு வந்த மருமகளை வீட்டை விட்டு துரத்திய செயல் அனைத்தும் அவரது பாவத்தின் கணக்கை உயர்த்திக்கொண்டு தான் சென்றது..

வேல்முருகன் :வெற்றியின் காதலை அறிந்தும் வலுக்கட்டாயமாக அப்பாவி பெண்ணை அவன் வாழ்வில் இணைத்ததே அனைத்து பிரச்சனைக்கும் மூல காரணம்.
இருப்பினும் பல இடங்களில் சரண்யாவை ஆதரித்தார்...

சுகந்தி -சிவகுமார் :

சுகந்தி :என்ன சொல்ல இவர் மீது தான் அதிக ஆதங்கம் 😑😑😑சரண்யா இவருக்காக தான் ஒரு விதத்தில் படிப்பை விட்டது, வாழ்கையில் நிற்கதியாய் பிறந்த வீடு வந்த மகளை பாகுபாடுடன் இவர் நடத்திய விதமும் சரண்யா வாழ்கை எதிர்கொண்டு நல்ல முறையில் வாழும் போது பழைய நிலையை வைத்து சொல்லி காட்டி பேசுவதும் இவர் உண்மையில் சரண்யாவை பெற்ற தாயா என்ற சந்தேகமே வருகிறது😏😏.

சிவகுமார் :பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்ததன் விளைவு இன்று மகளை பார்க்கும் போதெல்லாம் குற்றவுணர்வில் தவிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது 😒😒😒.


அபிராமி:படிப்பறிவு இருந்து என்ன பயன் தன் வாழ்வில் வெற்றி கைவிட்டு போன நிதர்சனம் புரிந்தும் அடுத்த பெண்ணுக்கு கணவனாய் மட்டுமில்லாமல் தகப்பனாய் மாறி இருப்பவனை தன் பக்கம் இழுக்க இவள் செய்த வேலைகள் இவள் மீது மதிப்பை குறைத்துவிட்டது ... காதலுக்காக போராடுவது தவறல்ல ஆனால் இன்னோரு பெண்ணின் கணவன் என்று அறிந்தும் காலங்கள் கடந்தும் நினைத்ததை அடையும் வெறியுடன் காத்திருந்தது உவப்பானதாக இல்லை.

பிரியா, வித்யா, சுரேன் சுயநலம் 😤😤😤.

மாயா, சக்திவேல் தவறு செய்தவர்கள் தான் ஆனால் அண்ணனின் மனதை உணர்ந்த பின் சரண்யாவை இவர்கள் நடத்திய விதம் ஆறுதல் அளித்தது...

வெற்றி -சரண்யா 👨‍👩‍👧‍👧
இவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர காரணமாக அமைந்தவர்கள் குழந்தைகள் மட்டுமே,...


சரண்யா :வாழ்க்கையை வலிக்க வலிக்க கற்றுக்கொடுத்த கடந்த காலமும், பாதுகாப்பின்மையும், குழந்தைகளின் ஏக்கமும் அவர்களின் எதிர்கால நலன் இவை அனைத்தும் தாண்டி வெற்றி மீது வைத்துள்ள தூய்மையான அன்பும் கணவனுடன் சரண்யாவை சேர்த்தது.
வெற்றி :குற்றவுணர்வும், தன் குழ்ந்தைகள் மீதான உண்மையான அன்பும் துடிப்பும் செய்த தவறின் வீரியத்தை உணர செய்து அதற்காக வருந்தி சரண்யாவுடன் சேர்ந்தது நிம்மதியை கொடுத்தது.சரண்யா மற்றும் பிள்ளைகள் நலனிலும், அவர்கள் மீதான மதிப்பை உயர்த்தி அவர்களுக்கு பக்கபலமாய் இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது ☺️☺️☺️.தன் தாயிடம் தெளிவாக சரண்யாவுடனான வாழ்கையையும் தன் நிலையையும் எடுத்து கூறிய விதம் மனதை நெகிழ்ச்சியாக்கியது 🥰🥰.


கொஞ்சும் கிளிகள் பட்டுகுட்டி விஜிதா😘😘😘லட்டு குட்டி அஜிதாவுடன் இவர்கள் வாழ்கை பயணம் நிம்மதியுடனும் ஆரோக்கியத்துடனும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐.

@ஆராதனா துரை மென்மேலும் பல்வேறு படைப்புகளை உங்கள் எழுத்துநடை முறையில் படைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐.
 
Last edited:
Top