Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

முத்து கண்டிப்பாக மதி க்கு நல்லது தான் செய்வான் ன்னு நான் நினைச்சேன் sis.. அதுபோலவே சூப்பர்...
மதி யின் அழுகை நியாயமே...
Very nice ud..
And once again thank you so much sis. for your daily ud
 
“விடு மதி..! அங்க துர்காவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை...இந்த நேரத்துல பேசுற பேச்சா இது..!” என்றார் பார்வதி.

“உங்களுக்குத் தெரியுது..! பெத்த தாயி இவகளுக்குத் தெரியலையே மதினி..!” என்றார் மலர்.

“எப்படிப் பெரியம்மா தெரியும். அரளிக் காயைப் பிடுங்கி, அரைச்சுக் கொடுத்ததே அவுக தானே..?” என்று சொன்னபடி வந்தான் முத்து. அனைவரும் அவனைத் திரும்பிப் பார்க்க,

“நீ என்ன சொல்ற முத்து...?” என்றார் மலர்.

“ஆமா பெரியம்மா..! இன்னைக்கு காலைல தோட்டத்துக்குப் போகும் போது தான் பார்த்தேன்...இவங்க நாடகத்தை...” என்றான்.

“நாடகமா..?” என்றனர் புரியாமல்.

“ஆமா..! நாடகமே தான். மதி வாழ்க்கையை கெடுக்க நினைச்சாங்க, அது நடந்திடுச்சு ஒரு காலத்தில். முகிலனை எப்படியாவது அவங்க மாப்பிள்ளை ஆக்கணும்ன்னு முயற்சி பண்ணினாங்க....அது நடக்கலை.யாரும் எதிர்பாக்காத திருப்பமா, முகிலனும்,மதியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. அது அவங்களுக்குப் பொறுக்கலை. இப்போ துர்கா மருந்தைத் தானா குடிக்கலை. இவங்க தான் குடிக்க வச்சிருப்பாக. யாருமில்லன்னு நினைச்சுகிட்டு, காலையில இவக பேசினது எல்லாமே என் காதில் விழுந்துச்சு...!” என்றான் முத்து.

“என்னடா கதை சொல்ற..? நீ சொல்றதுக்கு என்ன ஆதாரம்..?” என்று சிலும்பிக் கொண்டு வந்தான் துரை.

முத்து அவனை முறைத்துக் கொண்டு நிற்க,

“என்ன திலகா இதெல்லாம்..? எது எதுல விளையாடுறதுன்னு இல்லை. ஒருவேளை விபரீதமா ஏதாவது நடந்திருந்தா...? உசுரு போனா திரும்ப வருமா..?” என்று அரசி சத்தம் போட்டார்.

“உசுரு போயிருந்தா, அதுக்கும் என் மகன் தான் காரணமுன்னு சொல்லி, ஜெயிலுக்கு அனுப்பலாம்ன்னு நினைச்சிருப்பாங்க... இல்லையா மதினி...?” என்றார் மலர் கோபமாய்.

“ஏற்கனவே அனுப்பினவக தான...? மறுபடியும் அனுப்பலாம்ன்னு நினைச்சிருப்பாங்க..!” என்றான் முத்து.

“நீ என்ன சொல்ற முத்து...?” என்று மலர் புரியாமல் கேட்க,

“ஆமா, இப்ப வந்து கேளுங்க. எத்தனை தடவை சொல்ல வந்தேன். யாராவது சொல்ல விட்டிங்களா...? என்னமோ மதி பக்கத்துல வந்தாலே, அவளையும் என்னையும் வச்சு எப்படிப் பேசுனிங்க..? அப்பல்லாம் எங்க போனிங்க...? முகிலன் கல்யாணத்தன்னைக்கு, போலீஸ்க்கு சொன்னது நான்தான் அப்படின்னு தான நினைச்சிங்க..? கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திங்களா பெரியம்மா...?

உங்க வீட்ல தான் போனே இருந்துச்சு.உங்க வீட்டுக்குள்ள சர்வ சாதரணமா நான் நடமாடிக்கிட்டு இருந்தேனா..? இல்லை திலகா அத்தை நடமாடிக்கிட்டு இருந்தாங்களா..? இதைக் கூட யோசிக்கத் தோணலையே உங்களுக்கு...!” என்றான் வெம்பிப் போன குரலில்.

“முத்து சொல்றது உண்மையா திலகா மதினி..?” என்றார் மலர் ஆக்ரோஷமாய்.

உண்மை வெளிப்பட்டு விட்டதால், திலகா பயப்படவெல்லாம் இல்லை.

“ஆமா..! நான் தான் பண்ணுனேன். துரை தான் பேசுனான். இப்ப என்னாங்குற..?” என்று திலகா திமிறிக் கொண்டு வர,

“ச்சை..இப்படிப் பேச வாய் கூசலை உங்களுக்கு. ஒரு நல்ல காரியத்தை கெடுத்தோம்ன்னு மனசு கிடந்தது அடிக்கலை. எதுவுமே தெரியாத மாதிரி எப்படிப் பேசி நடிச்சிங்க. பண்றதையும் பண்ணிட்டு, என் மகனையே உங்களுக்கு மாப்பிள்ளை ஆக்கணும்ன்னு வேற நினைச்சிருக்கிங்க..? உங்களுக்கு பார்வதி மதினி குடும்பத்தை தான் ஆகாது. நான் என்ன பண்ணினேன். என் புருஷன் என்ன பண்ணார்..? இல்லை என் மகன் தான் என்ன பண்ணான்...?” என்று கத்தியவர் அழுதே விட்டார்.

“அம்மா..! பேசாம இருக்கிங்களா..? உங்க அழுகைக்கு எல்லாம் இவங்க அருகதையே இல்லாதவங்க. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். இவ்வளவு யோசிக்காமையா இருந்திருப்பேன். போனதைப் பேசி என்ன ஆகப் போகுது. உங்களுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவிங்கன்னு தான் சொல்லலை..!” என்றான் முகிலன்.

“எப்படி முகிலா...இப்படி இருக்காங்க...?” என்று மலர் அழுக,

“இது மட்டுமா பண்ணியிருக்காங்க...? என் பொண்டாட்டி செத்ததுக்கு காரணமே இவங்க தான் பெரியம்மா. அவகிட்ட, என்னையும் மதியையும் பத்தி, தப்புத் தப்பா சொல்லி, எங்களுக்குள்ள சண்டையை வர வச்சு, என் வாழ்க்கையையும் சேர்த்தே அழிச்சுட்டாங்க..!” என்றான் வேதனையுடன்.

“என்ன சொல்ற முத்து..?” என்று மதி அதிர்ந்து கேட்க,

“ஆமாம் மதி..! அவளும் இப்படி அரளிக்காயை சாப்பிட்டு தான் செத்தா. சும்மா அரைச்சுக் குடிக்கிற மாதிரி குடி. அப்போதான் உன் புருஷன் உன் வழிக்கு வருவான்...அப்படி இப்படின்னு அவளை உசுப்பேத்தி விட்ருக்காக. இவங்க ஒரு விஷம்ன்னு தெரியாம, அவளும் என்னை பயமுறுத்துறதா நினைச்சு மருந்தைக் குடிக்க, எவ்வளவு முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியலை. சாகப் போற கடைசி நிமிஷத்துல, என்கிட்டே சொல்லிட்டு தான் செத்தா.

அப்போ கூட, அவ சாவுக்கு நான் தான் காரணம்ன்னு சொல்லி, போலீஸ்கிட்ட ஏத்தி விட்டதும் இவங்க தான். அப்போ இருந்த மனநிலையில் நானும் ஒன்னும் செய்ய முடியலை.ஆனா அப்போவே நினைச்சேன், இவங்களால உனக்கு இனி எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு.

நீயும் இந்த ஊருக்கு வந்ததுல இருந்து, இதைத்தான் சொல்ல முயற்சி பண்ணேன். ஆனா, முடியலை..” என்றான் முத்து வேதனை நிறைந்த குரலில்.

“முத்து...!!!!!!” என்று அவனின் கையைப் பிடித்த மதி, கதறி அழுதே விட்டாள்.

“என்னால தான் உனக்கு இவ்வளவு பிரச்சனையும்...! என்னால உன்னோட வாழ்க்கையே போய்டுச்சே முத்து..!” என்று அவள் கதறி அழ,

“என்னை மன்னிச்சுடு முத்து..! நான் கூட தப்பா நினைச்சுட்டேன்..!” என்று மலரும் சொல்ல,

“யார் என்ன நினைச்சிங்கன்னு எனக்குக் கவலை இல்லை. ஆனா கடைசி வரைக்கும் மதி என்னை நம்புனா பாருங்க. அது தான் நட்பு. முகிலனுக்கு மதியைப் பேசி முடிச்சப்ப, சின்னதா ஒரு பொறாமை வந்தது உண்மைதான். அந்த வயசுல அதுக்கு அர்த்தம் தெரியலை.நீ பெருசா, நான் பெருசான்னு பார்க்குற வயசு. ஆனா, மதி வாழ்க்கை கெட்டுப் போகணும்ன்னு நான் எப்படி நினைப்பேன்..! யாரு என்ன சொன்னாலும், ஏன் முகிலனே கோபப் பட்டப்பக் கூட, மதி என்னை விட்டுக் குடுக்கலை...இதுல இருந்து தெரியலையா...எங்க உறவு முறை.

இப்பன்னு இல்லை..இனி எப்பவுமே, மதிக்கு ஒரு பிரச்சனைன்னா...இந்த முத்து நிப்பான். எவன் என்ன வேணுமின்னாலும் பேசிக்கோங்க..!” என்றபடி சென்று விட்டான் முத்து.

முகிலன், தனக்கு இதெல்லாம் தெரியும் என்ற ரீதியில் நின்றிருக்க, பெரியசாமியும் தலை குனிந்தார்.

“நீ இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சுப் போய்ருப்பன்னு நான் நினைக்கவேயில்லை திலகா..!” என்ற அரசி, மதியுடன் சென்று,

“உன்கிட்ட மன்னிப்பு கேட்கிற தகுதி கூட இல்லை மதி. என் பொண்ணையே நான் தப்பா பேசிட்டேன்..!” என்றார் அரசி வருந்தி.

“விடுங்க பெரியம்மா...! பழசெல்லாம் பேச வேண்டாம்..!” என்றாள் மதி.

“எல்லாரும் ஒன்னு கூடிட்டிங்க...!!!” என்று திலகா ஆங்காரமாய் கத்த,

“கொஞ்சம் விட்டிருந்தா, உன் பொண்ணு செத்திருப்பா..இப்பக் கூட பார்வதி தான் உன் மகளைக் காப்பாத்தியிருக்கா..! இன்னமும் நீ திருந்தலைன்னா...நீயெல்லாம் மனுஷியே கிடையாது..!” என்றார் அரசி.

“நான் இப்படித்தான்..! யாரோட தயவும் எனக்குத் தேவையில்லை..!” என்றார் திலகா.

“எப்படியோ போய்த் தொலை..!” என்று அரசி சொல்ல,

“இனி எங்க வாழ்க்கையில, கலகம் பண்ணனும்ன்னு நினைச்சிங்க... அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை.நீங்க இதுவரைக்கு செஞ்சதுக்கே..., நாங்க நினைச்சா பல வருஷம் உள்ள தள்ள முடியும். கணபதி மாமா முகத்துக்காக சும்மா விடுறேன்..!” என்றான் முகிலன் கோபமாய்.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய, ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றைப் பேசிக் கொண்டு சென்றனர். எல்லோரும் சென்ற பிறகு,

“அந்த முத்துப் பய சொன்னது எல்லாம் உண்மையாம்மா...?” என்றான் துரை.

“ஆமா துரை..! ஆனா ஏன் பன்னுனேன்னா...?” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரை அறைந்திருந்தான் துரைப் பாண்டி.

“துரை..!”

“துரை தான்..! நீ செஞ்ச எல்லாத்துக்கும் துணையா இருந்தேன் பாரு...இப்ப கூட உன்மேல தப்பு இருக்காதுன்னு சண்டைக்குப் போனேன் பாரு...என்னைச் சொல்லனும். எப்படிம்மா உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. துர்காவுக்கு ஏதாவது ஆகியிருந்தா...? என்ன பண்ணியிருப்ப...அப்படி என்ன உனக்கு பழி வாங்குற எண்ணம்.இதை எல்லார் முன்னாடியும் நான் செஞ்சிருக்க முடியும். என்ன பண்றது..? என்னை பெத்தத் தாயே போய்ட்டியே...?

நான் இப்ப துர்காவைப் பார்க்க போறேன். எல்லாத்தையும் விட்டுட்டு, எங்களுக்கு அம்மாவா மட்டும் இருக்குறதுன்னா வா. இல்லைன்னா, தயவு செஞ்சு இப்படியே எங்கயாச்சும் போய்டு..!” என்றபடி, தங்கையையும், தந்தையையும் நாடிச் சென்று விட்டான் துரை. திலகாவின் பழி உணர்ச்சி, அவரை நடுரோட்டில், தனி ஆளாய் நிறுத்தியிருந்தது.

வீட்டிற்கு வந்த மதி, முத்துவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள். இப்படி வேதனையுடன் முத்து பேசி, இன்று தான் கேட்கிறாள் மதி. எப்போதும் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்ள கூடியவன். இத்தனையும் மனதில் போட்டுக் கொண்டிருந்தானா..? பத்து வருடங்கள் கழித்து வந்த பின்பும், உனக்கு நான் இருக்கிறேன் என்று சொன்னதன் அர்த்தம் இது தானா..? என்று நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

அவள் அழுது கொண்டிருப்பாள் என்று முகிலனுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால், இப்போது தான் காய்ச்சலில் இருந்து தேறியிருக்கிறாள்.மறுபடியும் வந்துவிட்டால்...என்று யோசித்தவன், மதியைத் தேடிச் செல்ல,

மதிக்கோ, முகிலன் வந்தது எதுவும் கருத்தில் படவில்லை.

“மதி..!!!!” என்றான் முகிலன் ஆறுதலான குரலில்.அவன் குரல் கேட்ட மதி,

“மணி மாமா...!!!!!” என்ற கதறலுடன், ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.தானும் அவளை அணைத்துக் கொண்டவன்,

“மதி அழாத..!!!” என்றான்.

“முத்து பாவம் மணி மாமா..!! என்னால தான்...எல்லாமே என்னால தான்..!” என்று அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள். முகிலனுக்கும் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. அவளை அணைத்தபடியே நின்றிருந்தான்.
Muthu nee romba nallavanda
 
Top