Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MP 25 2

Advertisement

Admin

Admin
Member
அன்பரசி மலர்விழியை காணச் செல்ல, மேற்கொண்டு ஜீவாவை பார்த்துப் பேச முடியாது போயிற்று. மலர்விழியோ இவளை பார்த்ததும், “அட்வான்ஸ் ஹேப்பி பேர்த்டே அக்கா” என வாழ்த்தினாள்.

அவள் கூறியவுடன் தான் மறுநாள் தனக்கு பிறந்தநாள் என்பதே ஞாபகம் வந்தது, அந்த நல்லவளுக்கு. மலருக்கு நன்றியுரைத்து விட்டு, அவளின் அலங்காரம் முடியும் வரையில் அவள் அறையிலேயே இருந்தாள். பின், லட்சுமி அம்மாவுடன் இருந்து அவர் கூறியபடி, வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாப்பிள்ளை அழைப்பு முடித்து, ரிசப்ஷனும் ஆரம்பாகியது ஒரு வழியாக… ஒரு பக்கம் எல்லாரையும் சாப்பிட செல்லுமாரு கூறியபடி, குழந்தைகள் மேல் ஒரு கண்ணும் வைத்திருந்தாள். அவள் நிக்கித்தாவை வைத்துக் கொண்டு சமாளிக்க சிரமப்படுவதை பார்த்து, “நான் வைச்சுக்கறேன் பாப்பாவ… நீ போ” என நிக்கியை தன் கைகளில் வாங்கினான் ஜீவா.

போகும் அவனையே சில நொடிகள் வெறித்தாள் அன்பு. இத்தனைக்கும் அவன் பார்வை தன் மேல் படிந்து மீள்வதை அவளும் உணர்ந்தே இருந்தாள். அவன் பார்வையை காணும் பொழுதெல்லாம் தன் முகமெல்லாம் சுடாவதை அவளாள் தடுக்க முடியவில்லை. ‘இது என்ன இப்போது தான் புதிதாக அவனை பார்ப்பது போல உணர்கிறேன்?

நாளையோடு இருபத்தி ஒன்பது முடியப்போகிறது! இப்போது போய் டீனேஜ் பெண்ணை போல் சலனமாகிறது மனது!!’ நினைவலைகளில் இருந்து தப்பித்து, மீண்டும் அனைவரையும் கவனிக்கும் பொறுப்பில் ஈடுப்பட்டாள். முக்கால் வாசி கூட்டம் செல்ல மணி ஒன்பதரை ஆகியது.

அதன்பின் தான் பிள்ளைகளின் சாப்பாடு ஞாபகம் வர, குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்த ஜீவாவிடம் விரைந்தாள். “நிலு குட்டி, நிக்கிமா சாப்பிட போலாமா?”

“ம்மாமா நாங்க சாப்பிட்டோமே… அப்பா ஊட்டி விட்டாங்க.” கேட்டதும் துளைக்கும் பார்வையுடன் அன்பரசி, ஜீவாவை நோக்க, “ரெண்டு பேரும் சும்மா பாப்கான், ஐஸ்கீரிம்னு தின்னுட்டு இருந்தாங்க. அதான் கூட்டிட்டு போய் சாப்பிட வெச்சேன்.” என்றான் விளக்கமாக.

கேட்டவள் ஒன்றும் பேசாமல், திரும்பி டைனிங் ஹால் பக்கம் நடக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே லட்சுமி அம்மாவுடன் அப்பாவையும் ஒன்பது மணிக்கே சாப்பிடச் செய்தாள். அவர்கள் சாப்பிட்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என.

மணமக்களை வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிட இன்னும் சில நேரம் ஆகும். இப்போது தான் மட்டும் தனியே தான் உணவருந்த வேண்டும் என நொந்தபடி இலையின் முன் அமர்ந்தாள். இலையில் இருக்கும் உணவுவகைகளை பார்த்த போது, பக்கத்தில் யாரோ இடித்துக் கொண்டு உட்கார்ந்தனர்.

யார் என பார்த்தால், ஜீவா! சுறுசுறுவென கோவம் ஏற, நாசி சிவப்பாவதை அவளாளே உணர முடிந்தது. “என்ன செக்கன்ட் ரௌவுன்டா?” அன்பரசியின் நக்கலான வாக்கியத்தில், துள்ளித் திரும்பி அப்பவியாக முகத்தை வைத்துக் கூறினான்.

“ஐய்யோ என்ன இப்படி கேட்டுட்ட ராணிமா… எனக்கு டிரிங்க்ஸ் எல்லாம் பழக்கமே இல்ல…”

“ரொம்ப நடிக்காதீங்க, புரியாத மாதிரி! ஏற்கனவே பசங்களோட சாப்பிட்டுட்டு இப்போ எதுக்கு திரும்ப வந்திருக்கீங்க?”

“பசங்களுக்கு சாப்பாடு ஊட்டினேன்னு சொன்னேன். நான் சாப்பிட்டேனு சொன்னனா?”

ஜீவாவின் கேள்வியில் தான் தன் தவறை உணர்ந்தாள் அன்பு. “சாரி” என அவன் முகத்தை பார்க்காமல் சாப்பிட துவங்கினாள்.

மேலும், ரொம்ப நாள் கழித்து அவன் கூறிய ‘ராணிமா’ என்ற வார்த்தையே கோபத்தில் வாளி தண்ணீரை ஊற்றியது. அமைதியாக இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், ஆரவாரமாக மணமக்கள் டைனிங் ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது. அதன்பின், அவர்களை நிம்மதியாக உணவருந்த விடாமல், ஒரு வழி பண்ணினர் சுற்றியிருந்தவர்கள். அதில் ஜீவாவும், அன்பரசியும் அடக்கம்!

வினோத்தோ இதற்கெல்லாம் அசருவேனா என்று இருந்தான். ஜீவாவே ஒரு நிலையில், “என்னடா எப்படி போனாலும் கேட்ட போடுற?? எங்கடா கத்துகிட்ட இதெல்லாம்?” என்று புலம்ப, அதற்கு பதிலாய் “நான் தான் ஃபரஸ்டே சொல்லிட்டன்ல… எனக்கு ‘மலர்’ மோட் ஆன் ஜீ! அசரவே மாட்டான் இந்த வினோ.” என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

பதினோரு மணியளவில் கூடி இருந்த நெருங்கிய சொந்தமும், அவரவர் அறைகளுக்கு செல்ல, அன்பரசியும் பிள்ளைகளை கவனிக்க சென்றாள். அவர்களின் உடை மாற்றி, தானும் மாற்றிக் கொண்டு, படுக்க வைப்பதற்குள் சாப்பிட்ட சாப்பாடு செறித்து விட்டது அவளுக்கு. அப்போதும் தூங்கவில்லை இரண்டு வாண்டுகளும்!

“ஹே தூங்கப் போறதில்லையா நீங்க? நாளைக்கு காலையில எழுந்துக்காம அடம் பண்ணுங்க, அப்போ இருக்கு உங்களுக்கு!!” இதற்கு பதிலாய், நமுட்டு சிரிப்பு சிரித்தனர் நிக்கித்தாவும் நிலேஷும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு.

அந்த மண்டபத்தில் தங்கும் அறைகள் எல்லாம் மேலே முதல் மாடியில் இருந்தது. ஜீவா வினோத்துடன் மணமகன் அறையில் இருக்க, மேலே ஒரு அறையில் அன்பரசியும் குழந்தைகளும் இருக்க, மற்றொரு அறையில் ராகவனும் லட்சுமியும் தங்கினர்.

பன்னிரெண்டு மணி அருகில், மலர்விழி கூப்பிடுவதாக கூறி கீழே வருமாரு அவளின் தந்தை அழைத்தார். குட்டீஸ் இருவரும் “அம்மா நானும், நானும்..” என அடம் பண்ண, அவர்களை தனியே விட்டு செல்லவும் முடியாமல், கூட கூட்டிச் சென்றாள்.

கீழே வந்தால் ஒரே இருட்டாக இருந்தது… குழந்தைகள் கையை இருகரங்களிலும் பிடித்து அடிமேல் அடியெடுத்து அவள் நடக்க, சட்டென்று முழு வெளிச்சம் வந்து கண்களை கூசியது.

எதிரே தனக்கு நெருக்கமான அனைவரும் இருந்தனர். ராகவன், லட்சுமி, வினோத், மலர்விழி, அவளின் தந்தை, முக்கியமாக சிரித்த முகமாக ஜீவா. குட்டீஸ் ரெண்டும் ஒரே நேரத்தில் அவளின் சுடிதார் டாப்ஸை இழுத்து, அவளை முட்டி போட வைத்து, இரண்டு கன்னங்களிலும் ஆளுக்கு ஒன்றாக முத்தமிட்டு, “ஹேப்பி பேர்த்டேமா” என சந்தோஷ கூச்சலிட்டனர். இவளும் கண்கள் பனிக்க, ‘தாங்க்ஸ்டா’ என அவர்களை முத்தமிட்டாள்.

பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது… “அடடே டீச்சர் அம்மாவையே முட்டி போட வைச்சுட்டாங்களே… சொன்ன மாதிரியே அழகா விஷ் பண்றீங்க… குட் செல்லம்ஸ்” கூறிய வினோத்தை தோளில் அடித்துவிட்டு, அவர்கள் அனைவரும் நின்று மறைக்கும் பொருளை எட்டி பார்க்க முயன்றாள். மலர் உடனே நகர்ந்து வழிவிட்டு, “மேனி மோர் ஹேப்பி ரீட்டன்ஸ்கா… எங்களோட கிப்ட்” என ஒரு பரிசுப் பொருள் அடங்கிய பெட்டியை கொடுத்தாள், வினோத்தையும் சுட்டிகாட்டி.

“தாங்க்ஸ்மா” என கூறிவிட்டு, அவள் வழிவிட்டதால் காண முடிந்த பிறந்தநாள் அணிச்சலை(கேக்கை) பார்த்தாள். “ஹேப்பி பேர்த்டே லவ்ஸ் + ராணிமா” என எழுதியிருந்தனர் அதில். லட்சுமி அவளை கேக்கை வெட்ட சொன்னார்.

மனம் துள்ள, அணிச்சலை வெட்டினாள் அன்பரசி. முதல் பீஸ் குட்டீஸ் இருவருக்கும் சென்றது. அதன்பின், வினோத்தும் மலரும் அன்பரசிக்கு ஊட்டினர். ஜீவா பக்கத்தில் வருவேனா, என்ற வகையில் ராகவன் அருகில் நின்றிருந்தான்.

ராகவன், லட்சுமி, மலரின் அப்பா, மூவரிடமும் ஆசிப்பெற்று, கேக் பீஸ்ஸை ஆசையாக எடுத்துக் கொண்டு ஜீவாவிடம் சென்றாள். “ஹேப்பி பேர்த்டே” என கூறிவிட்டு, கேக்கை சாப்பிட ஆரம்பித்தான்.

அவ்வளவு தானா என இருந்தது அன்புக்கு. ஆர்வமாக அவன் முகத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அனைவரும் அவரவர் ரூம்முக்கு செல்லும் வரையிலும் எதுவும் பேசவில்லை ஜீவா.

சினுங்கிய மனதுடனே உறங்கினாள் அன்பு. அடுத்த நாள் பார்ப்பவர்கள் எல்லாம் வாழ்த்தை கூறினாலும், முழு சந்தோஷம் வரவில்லை அன்பரசிக்கு. எதையும் பெரிதாக யோசிக்கவும் முடியாமல் முகூர்த்த நேரம் நெருங்க, அதில் கவனம் செலுத்தினாள் அன்பு.

முக்கோடி தேவர்களின் ஆசிகளுடன் வினோத் மலர்விழியை தன்னில் பாதியாக்கி கொண்டான். அதன் பின் வந்த நேரம் சம்பிரதாயங்களை முடிப்பதிலும், சாப்பிடுவதிலும், குழந்தைங்களை பிடித்து வைப்பதிலும் பறந்து சென்றது.

காலை பதினொரு மணியளவில், மண்டபத்தை காலி செய்து மலர்விழியின் வீட்டிற்கு சென்றனர். மணமக்களுடன் லட்சுமியை அனுப்பிவிட்டு, அன்பரசி தன் வீட்டிற்கு கிளம்பினாள். பெண் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாப்பிள்ளை வீட்டுக்கு தான் மாலையில் அனைவரும் வருவர்.

மணமக்கள் இரவு தங்குவதும், வினோத்தின் புது வீட்டில் தான்… தன் வீட்டிலும் கிளம்பும் போது போட்டது போட்டபடியே இருக்க, அனைத்தையும் ஒழுங்கு படுத்தவென லட்சுமி மற்றும் ராகவனிடம் கூறிவிட்டு, பிள்ளைகளை அவர்களிடமே விட்டுவிட்டு, கால் டாக்ஸியில் புறப்பட்டாள்.

முதலில் தன் வீட்டை சரி பண்ணுவோம் என சாவியை கதவில் செலுத்தி, கதவை திறந்தாள். அது வரை தான் அவளுக்கு ஞாபகம் இருந்தது…. திறந்ததும் வாயடைத்து போயிருந்தாள்.
 
மிகவும் அருமையான பதிவு,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
அருமையான ரசிக்க வைக்கின்ற திருமண பதிவு பிறந்த நாள் பதிஹு
 
GOOD EPISODE SIS
 
Top