Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 10

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 10:

“சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை.

“என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க...

“இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங் வச்சா கூட..மனுஷன் பேசாம இருப்பார்..” என்றான் மகேஷ் அந்த டைரக்டர் காதின் அருகில்.

“என்ன..?” என்பதை போல் அவனைப் பார்த்தார் அவர்.

“எல்லாம் அப்படித்தான் சார்..!” என்பதை போல..அவன் ஜாடை காட்ட..அவருக்கு ஏதோ....புரிந்தும் புரியாததைப் போல் இருந்தது.

“இன்னும் என்ன ஷாட் பாக்கியிருக்கு..?” என்றான் அஜய்..யோசனையுடன்.

“சார்...ஹீரோயினை கடத்திட்டு போற...கும்பல்கிட்ட இருந்து அவங்களைக் காப்பாத்துறிங்க....அவங்களுக்கு அப்படியே தாலியைக் கட்ட போக அதுக்கு முன்னாடி ... கொஞ்ச நேரத்துல இறந்துடுறாங்க..! நீங்க வர மாட்டிங்கன்னு நினச்சு அவங்க ஏற்கனவே குடுச்ச விஷம் அவங்க உயிரைப் பறிச்சுடுது....அவ்ளோ தான் சார்...பிளாஷ்பேக் முடியுது..” என்றார் டைரக்டர்.

“ஓகே...!” என்றான் அமைதியாய்.

“ஷாட் எங்க....லொக்கேஷன்...?” என்றான்.

“அந்த ஆத்தங்கரையோரம்...கடத்துறாங்க சார்...நீங்க பின்னாடியே போறீங்க....அவங்க அந்த தென்னந்தோப்புக்குள்ள...கொண்டு போக...அங்கதான் லாஸ்ட் சீன் லொக்கேஷன்...” என்றார் அவர்.

“கார்லயா..?” என்றான்.

“ஆமா சார்..!”

“ஓகே....டயலாக் பேப்பரைக் குடுங்க..!” என்று நல்ல பிள்ளையாய் வாங்கிக் கொண்டான்.இன்னும் இரண்டு நாளில் எப்படி அவளைத் தன் வழிக்கு வர வைப்பது என்ற யோசனை வேறு அவனுக்கு.

நாளைக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

“கண்ணன்..!”

“சார்..!”

“என்ன செய்வீங்களோ தெரியாது...நாளைக்கு சக்தி எங்க போறா...எங்க வரான்ற முழு விபரம் எனக்கு வேணும்..!” என்றான்.

“சார்..!” என்று அவன் அதிர்ச்சியாக...

“ஒரு நாளைக்கு எத்தனை தடவை அதிர்ச்சியாவிங்க..? ஒண்ணுமில்லை.. எனக்கு அவகிட்ட கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான்..” என்றான்.

“ஓகே சார்..!” என்றான். அவளை சந்திக்கும் நிமிடத்திற்காக காத்திருந்தான் அவன்.

“இனி அவளைப் பார்க்கும் போது...திமிராக பேசக் கூடாது...கொஞ்சம் தன்மையாவே பேசணும்...”என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவனுடைய வசதிக்கு ஏற்ப...மறுநாள்...சக்தி அவர்களின் மக்கா சோளக் காட்டின் வழியே நடந்து போய் கொண்டிருக்கிறாள் என்ற தகவல் அவனைத் தேடி வர..கொஞ்சமும் தாமதிக்காது அவளைத் தேடி சென்றான்.

ஏதோ ஒரு யோசனையில் நடந்து கொண்டிருந்த சக்தி...தன் முன் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தவள்...அங்கு அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்தாள்.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அவனை விலகிக் கொண்டு நடக்க...”ஒரு நிமிஷம்..” என்றான் சாந்தமான குரலில்.

“என்ன..?” என்பதை போல் அவள் நிற்க...

“உன்னோட முடிவு என்ன..?”

“என்ன முடிவு..?”

“தெரியாத மாதிரி நடிக்காத..?” என்றான்.

“நிஜமாவே தெரியலை..!” என்றாள்.

“டேய்..! நீ எங்கடா அவகிட்ட காதலை சொன்ன..?” என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க...
 
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு....” என்றான்.

“அதுக்கு..!” என்றாள்.

“அதுக்கா..?” என்றவன் பல்லைக் கடிக்க...எத்தனை படத்தில் நடித்தாலும் காதல் சொல்லும் லட்சணம் என்னவோ அவனுக்கு வரவில்லை.

தானே சென்று வலிய சொன்னால்..எந்த பெண்ணும் சரி சொல்லணும் என்ற இறுமாப்பு அவனிடம் இருந்தது.அது தான் அவனை மேற்கொண்டு பேசவிடவில்லை.

அவள்..அவனை சட்டை செய்யாது நடக்க....”நில்லு..ச..சக்தி..” என்றான்.

“இப்படி ஆள் இல்லாத இடத்துல வந்து நீங்க பேசுறதைப் பார்த்தா என்ன நினைப்பாங்க தெரியுமா..?” என்றாள்.

“என்ன நினைப்பாங்க..?” என்றான் கிண்டலாய்.

அவனை மேலும்..கீழும் பார்த்தவள்...”நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்க போறது இல்லை..அப்பறம் எதுக்கு...இப்படி வலிய வந்து வாங்கிக் கட்டுறிங்க..?” என்றாள்.

“அதையும் பார்ப்போம்..” என்று அவன் சொல்ல...

“உன்னிடம் எனக்கென்ன பேச்சு..?” என்பதைப் போல்..அவள் திரும்பி நடக்க...படக்கென்று அவள் கையைப் பிடித்தான் அஜய்.

“கையை விடுங்க..!”

“விடலைன்னா..என்ன பண்ணுவ..?”

“என்ன வேண்ணாலும் பண்ணுவேன்..!” என்றாள் திமிராய்.

“ஏன்..அருவாளை எடுத்து தலையை சீவிடுவியா..?” என்றான் கிண்டலுடன்.

அவன் சொல்லி முடிக்க....அவன் கழுத்தில் கருக்கருவாள் இருந்தது.புல்லை அறுத்த அருவாளை இடுப்பில் சொருகியிருந்தவள்.. அவன் அவ்வாறு சொல்லவும்..பட்டென்று எடுத்து அவன் கழுத்தில் வைத்து விட்டாள்.

கழுத்தில் வைத்தவள் அவனை நெருங்கி நிற்க...அவளின் அருகாமை அவனை என்னவோ செய்தது.அவளை மையலுடன் பார்த்தவன்...

“இப்ப நான் பயப்படனுமா..?” என்றான்.

“இவன் அடங்கவே மாட்டானா..?” என்று எண்ணியவள்....கையை எடுக்க போக..அவனோ..அவளின் கையைப் பிடிக்க...

“விடு..விடு..” என்று அவள் கையை இழுக்க..அவளின் கையில் இருந்த அருவாள்....அவனின் நெஞ்சில் கீறியது...”

சட்டையையும் மீறி லேசாக ரத்தம் தெரிய...ரத்தத்தைப் பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.அவனின் முகம் பார்க்க..அவனோ அதே பார்வையுடன் நிற்க...

“இவன் திருந்தவே மாட்டான்..இவனுக்கு இந்த காயம் தேவைதான்..” என்று எண்ணியவள்..அவன் எதிர்பார்க்கா வண்ணம்..அவனைத் தள்ளியவள்...அங்கிருந்து ஓட்டமும்,நடையுமாக சென்று விட்டாள்.

ஒருவேளை திரும்பி பார்த்திருந்தால்...அவனின் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தை பார்த்திருப்பாளோ என்னவோ..?

“சார்..ரத்தம்..” என்று கண்ணன் சொல்லும் வரை..அவன் அந்த கோபத்தில் இருந்து வெளியே வரவில்லை.

“ச்ச்சு..விடு..!” என்றான் கண்ணனை.

“சார் ரத்தம் சார்..” என்றவன் அவனை எதிர்பார்க்காமல்..பர்ஸ்ட் எய்டு பாக்சில் இருந்த மருந்தை எடுத்து அவனுக்கு போட...அந்த எரிச்சலில்..”ஸ்ஸ்ஸ்..” என்றான் அஜய்.

“எவ்வளவு திமிரு இருக்கும் உனக்கு...உன்னோட திமிர அடக்கல நான் அஜய் இல்லடி..” என்று என்ன...

“வேண்டாம் சார்..! விருப்பம் இல்லாத எதுவும் ரொம்ப நாளைக்கு நிலைக்காது..” என்றான்.அந்த நிமிடம் அவனை அறைந்திருந்தான் அஜய்.

”தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே...! நான் சொல்றதை மட்டும் செய்..” என்று அவனுக்கு பல உத்தரவுகளை சொன்னான்.சக்தியிடம் காட்ட முடியாத கோபத்திற்கு...கண்ணன் பலியாடு ஆகிக் கொண்டிருந்தான்.

“சாரி..சார்...”

“சொன்னதை செய்..!” என்றான்.

“ஓகே சார்..!”

அங்கே ஒருவன் தனக்காக திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதை அறியாத சக்தி....

“எத்தனை காய்ன்னு எண்ணிடுங்க அண்ணா..!” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

மகாலிங்கம் அருகில் ஒரு சேரில் அமர்ந்திருக்க...பறித்து போட்ட தேங்காய்களை எண்ணிக் கொண்டிருந்தனர் வேலையாட்கள்.

“கழிவு காய்களை துண்டா எடுத்து போட்டுடுங்க..கைக்காயை..தனியா போட்டுடுங்க..!” என்று சொல்லிக் கொண்டிருக்க....

“ஏம்மா..?” என்றார் லிங்கம்.

“வியாபாரி ஒரே மாதிரி காயைக் கேட்குறாங்கப்பா...நம்மகிட்ட எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புவாங்க போல...போன தடவை வந்தப்பவே வியாபாரி சொன்னார்...” என்றாள்.

“நல்ல விஷயம் தாம்மா..!” என்றார்.
 
“இளநீர் வெட்ட சொல்லவாப்பா..?” என்றாள்.

“வேண்டாம்மா..!” என்று அவர் சொல்ல...

“தேரக் காயை எண்ணெய்க்கு போட்டுடுலாம்..!” என்றாள்.

“சரிம்மா..!”

“என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றாள்.

“ஒண்ணுமில்லைம்மா..!”

“இல்லப்பா உங்க முகமே சரியில்லை..என்னன்னு சொல்லுங்கப்பா..!” என்றாள் விடாமல்.

“எல்லாம் உன் கல்யாண விஷயம் தான் சக்தி..உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணுமின்னு சொன்னா..அதுக்கு ஏத்த மாதிரி அப்பா பார்ப்பேன்ல..” என்றார்.

அவரைப் பெருமையாகப் பார்த்தாள் சக்தி.பொதுவாக அவர்கள் ஊரில் யாரும் பெண்ணிடம் அபிப்ராயம் கேட்க மாட்டார்கள்.அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு தான் கழுத்தை நீட்ட வேண்டும்..ஆனால் அந்த விஷயத்தில் தன் அப்பாவை நினைத்து பெருமைப்பட்டாள் சக்தி.

“அப்பா உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு சரிப்பா...ஆனா கொஞ்சமாவது தன் மானமும்,சுயகவுரவம் இருக்குற மனுஷனா இருக்கணும்..ஜால்ரா அடிக்கிற எவனும் எனக்கு வேண்டாம்..!” என்றாள் தெளிவாய்.. தீர்மானமாய்.

“சரிம்மா..! உன் சதோஷம் தான் என் சந்தோசம்....உன் மனசுல வேற எதுவும் இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லிடுமா..?” என்றார்.

“என் மனசுல வேற எதுவும் இல்லை...யாரும் இல்லை...” என்றாள்..அவள் தந்தை கேட்காத கேள்விக்கும் பதிலை சேர்த்து.

“மன்னுச்சுக்கமா..உன்னை சந்தேகப்பட்டு கேட்கலை..” என்றார்.

“எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும்ப்பா..!” என்றாள்.

“சந்தோசம் சக்தி...பாட்டி தான் வாயிருக்க மாட்டாம..அதையும் இதையும் சொல்லி என்னை குழப்பி விட்ருச்சு...இப்ப தான்மா நிம்மதியா இருக்கு...”என்றவர்...

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குமா...? நீ வீட்டுக்கு போயிடுறியா..?”

“சரிப்பா.....தேங்காயை எண்ணிப் போட்ட உடனே நானும் கிளம்பிடுவேன் ப்பா...” என்றாள்.

“சரிம்மா..!” என்றபடி அவர் நகர...”கிழவி இருக்கு உனக்கு..” என்று அவள் பாட்டியை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.ஆனால் பாவம் தன்னைக் கண்காணிக்கும் கண்களைப் பார்க்கத் தவறி விட்டாள் அவள்.

“ஷாட் போலாமா சார்...” டைரக்டர்.

“ஒ..போலாம்..”என்றான்.

“ரெடி..டேக்...அக்சன்...”

“நீங்க இல்லன்னா...எனக்கு வாழ்க்கையே இல்லை...” என்று அழுதபடி துப்னா விஷத்தைக் குடிக்க...

அவள் குடித்து முடித்த சிறிது நேரத்தில்...ஒரு கும்பல் வந்து அவளை அப்படியே தூக்கியது.

துப்னா காரில் கடத்தப்பட்டாள்.செய்தி ஹீரோவை எட்ட...அவர்களுக்கு பின்னாலேயே காரில் விரட்டி சென்றான் அஜய்...கேமாராவும் அவர்கள் பின்னால் செல்ல.....

“கட்..கட்..” என்றார் டைரக்டர்.

“சார்..இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்..” என்றார் அவர்.

“ஓகே..” என்றவன் மனதை ஒருநிலைப்படுத்த...

“ரெடி..டேக்..அக்சன்..”

மீண்டும் அவன் காரில் துரத்த...இப்போது அவனின் முகத்தில் தேவைக்கு அதிகமாகவே எக்ஸ்பிரசன் இருக்க....”சூப்பர்..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் இயக்குனர்.

அவன் சென்றது ஒரே டேக்கில் எடுக்கப்பட....மீண்டும் அவன் அடியாட்களை அடிப்பது போன்ற சீன்...அடுத்த டேக்கில் எடுக்கப்பட்டது...

துப்னாவை அவன் நெருங்க....அவள் உயிர் பிரிந்தது.அதைப் பார்த்து அவன் அதிர்ந்து நிற்க...

“கட்..கட்..”

“சார்..இபோ நீங்க அவங்க பேரை சொல்லி..அதிர்ச்சியா கத்தனும்..” என்று சொல்ல...

அவர் எதிர்பார்த்ததிற்கு இரண்டு மடங்காய் அந்த சீன் வர..அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.

அஜய்...கண்ணனைப் பார்த்து கண் அசைக்க...உடனே அவனுடைய காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் கண்ணன்.

“எல்லாம் ரெடியா..?”

“ரெடி சார்..” என்று கையில் எதையோ கொடுக்க....அந்த இடத்தை விட்டு பறந்தான் அஜய்.

வேலையை முடித்து விட்டு களைப்புடன் சென்று கொண்டிருந்தாள் சக்தி.துணைக்கு மருதாணியும் சேர்ந்து கொள்ள..அவள் பேசிக் கொண்டே வர..சக்தியோ அமைதியாக வந்தாள்.

வேகமாக அவள் அருகில் கார் வந்து நிற்கவும்..அவள் திடுக்கிட்டு திரும்ப...அவள் வாயத் திறக்க கூட சந்தர்ப்பம் கொடுக்காதவனாய்... அவளை இழுத்து காரில் போட்டான் அஜய்.

“என்னை..விடு..என்னைய விடுடா..பொறுக்கி..” என்று அவள் கத்த..

“இந்த பொறுக்கி என்ன செய்றேன்னு பாருடி உன்னை...” என்று பல்லைக் கடித்தவன்....பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து வேகமாக கட்ட...அவள் எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.நினைத்ததை முடித்து விட்டான் அஜய்.

“இப்ப என்ன செய்வ..?” என்று அவன் அவளைப் பார்க்க...”ச்சி...உனக்கு வெட்கமாயில்லை..” என்று அவள் ஏதோ சொல்ல வர..அவள் சொல்லி முடிப்பதற்கு முன்..அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தான்.

“நான் சொல்றதை கேளு..” என்று அவன் சொல்ல எத்தனிக்க..வேகமாய் அவன் அணைப்பில் இருந்து திமிறி வெளியே வந்தாள் சக்தி.

அவன் எதிர்பார்க்காத நேரம் படக்கென்று கார் கதவைத் திறந்து வெளியே வர...

இதை எதிர்பார்க்காத அவன்...”சக்தி நில்லு...” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தபடி தானும் இறங்கினான்.

“ச்சி..கையை விடு..! என்ன நினச்சுட்டு இருக்குற உன் மனசுல...பெரிய ஹீரோன்னா...இப்படி கடத்தி வந்து தாலியைக் கட்டிட்டா...நான் உன் பின்னாடியே வந்துடுவேனா...இதென்ன சினிமாவா..?” என்றாள் கோபமாய்.

“அப்பறம் என்ன செய்வ..? நான் சொல்றதை முதல்ல கேளு..” என்று கொஞ்சம் இறங்கி வந்து அவன் கெஞ்ச..

“ச்சி..பொறுக்கி..கையை விடுடா..” என்று கையை தன் பக்கம் இழுத்தவள்...

“எது எப்படின்னாலும்...நான் உனக்கு தாலியைக் கட்டிட்டேன்..!” என்றான்.

“அது எதுக்கு எனக்கு..?” என்றவள்..அவனே எதிர்பார்க்கா வண்ணம்..அந்த தலையை பட்டென்று கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.

இதை அவள் மட்டுமில்லை...அவளுக்கு முன்னால் வந்து கொண்டிருந்த அவள் அப்பாவும்...பின்னால் வந்து கொண்டிருந்த மருதாணியும்... பார்க்க..அப்படியே திகைத்து நின்று விட்டனர்.

“என்னைப் பத்தி என்ன நினச்சுட்டு இருக்குற நீ.... இப்படித் தாலியைக் கட்டுன உடனே உன் பின்னாடி வந்துவேன்னு எப்படி கணக்கு போட்ட...அப்படி போட்டிருந்தா உன்னோட கணக்கு தப்புன்னு அர்த்தம்.எனக்கு பிடிக்காததை ஒரு நாளும் நான் செய்யவே மாட்டேன்..!நீ போடுற தாளத்துக்கு ஆடுறதுக்கு வேற ஆளைப் பாரு...” என்றபடி அவள் திரும்ப போக எத்தனிக்க...

அஜய்...அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே இல்லை.அவனின் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கிக் கொண்டிருந்தாள் சக்தி.

“தான் நினைத்த அளவு அவள் ஒன்றும் கோழை இல்லை என்பதை கண் முன்னே கண்டான்...அவனுடைய இதயத்தில் ஏற்பட்ட வலி..அதை வெளியே தெரியாமல் இருக்க..அவன் பாடுபட்ட விதம்..இப்படி அனைத்தும்..மருதாணியின் கண்களில் இருந்து தப்பவில்லை.”

அவனை உதறிவிட்டு நிமர்ந்த சக்தி...தன் முன்னால் தன் அப்பா நிற்பதைப் பார்த்து திகைத்தாள்.

அஜைய்யுமே..அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“அப்பா...” என்று அவள் அதிர்ந்து நிற்க...அவர் கண்களும் கலங்கியிருந்தது.

அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...அப்படியே..சரிய...

“அப்பா...” என்று கத்தியவள்...வேகமாய் அவரின் அருகில் சென்று தாங்கிக் கொள்ள..

அதற்குள் மருதாணியும்....அவளுடன் சேர்ந்து கொண்டாள்.நிலைமையை உணர்ந்த அஜய்...வேகமாய் அவர்களின் சென்று அவளை விலக்கியவன்... அவரைத் தூக்கிக் கொண்டு வந்து காரில் இறுத்த...

அவன்..,அவன் கார்..இதை எதையும் அறியும் மன நிலையில் அவள் இல்லை....வேகமாக...வண்டியை எடுத்தான்.

மருதாணியிடம் கேட்டு பக்கத்து ஊரில் இருந்த மருத்துவமனைக்கு காரை விட....அதுவரை சக்தி அழுது கொண்டே இருந்தாள்.அந்த நிலையிலும் அவளுக்கு ஆறுதல் சொல்லும் எண்ணம் அவனுக்கு வரவில்லை. மருத்துவமனையின் முன் காரை நிறுத்தியவன்..மருதாணியைப் பார்க்க...

அவள் வேகமாய் சென்று அங்கிருந்த நர்சை அழைத்து வந்தாள்.அவரை ஸ்ட்ச்சரில் வைத்து எடுத்துக் கொண்டு போக...அது வரை அமைதியாக இருந்தவன் விருட்டென்று காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டன.

அவனின் வேகத்தைப் பார்த்த மருதாணி மிரண்டு நிற்க...அதையெல்லாம் அறியும் நிலையில் சக்தி இல்லை.

என்னதான் அஜய் செய்தது தவறாகவே இருந்தாலும்...சக்தி தாலியைக் கழட்டி எறிவாள்..என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.தனக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருக்கும் போது..அவளுடைய அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணினாள் மருதாணி.

“நீங்க பேஷன்ட்டுக்கு என்ன வேணும்..!”

“நான் அவர் பொண்ணு...”

“இதுல கையெழுத்துப் போடுங்க..!” என்று அந்த நர்ஸ் கேட்க...

“எங்க அப்பாவுக்கு...” என்று அவள் இழுக்க..

“அவருக்கு அட்டாக்...ஒரு ஆப்ரேஷன பண்ணனும்...கையெழுத்தை போடுங்க..!” என்றாள்.

கைகள் நடுங்க கையெழுத்தைப் போட்டு முடித்தாள் சக்தி.

“நீங்க இங்க வெயிட் பண்ணுங்க...” என்றபடி நர்ஸ் உள்ளே செல்ல...சுவற்றோடு சாய்ந்து நின்றாள் சக்தி.

“சக்தி..” என்று மருதாணி அவளைத் தொட...

சக்தியின் பார்வையோ ஒரே இடத்தில் நிலைகுத்தி நின்றது.

விதி தன் விளையாட்டை முடித்துக் கொண்டு....விடைக்காக காத்திருந்தது.
 
Top