Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 10

Advertisement

“இளநீர் வெட்ட சொல்லவாப்பா..?” என்றாள்.

“வேண்டாம்மா..!” என்று அவர் சொல்ல...

“தேரக் காயை எண்ணெய்க்கு போட்டுடுலாம்..!” என்றாள்.

“சரிம்மா..!”

“என்னப்பா ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றாள்.

“ஒண்ணுமில்லைம்மா..!”

“இல்லப்பா உங்க முகமே சரியில்லை..என்னன்னு சொல்லுங்கப்பா..!” என்றாள் விடாமல்.

“எல்லாம் உன் கல்யாண விஷயம் தான் சக்தி..உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணுமின்னு சொன்னா..அதுக்கு ஏத்த மாதிரி அப்பா பார்ப்பேன்ல..” என்றார்.

அவரைப் பெருமையாகப் பார்த்தாள் சக்தி.பொதுவாக அவர்கள் ஊரில் யாரும் பெண்ணிடம் அபிப்ராயம் கேட்க மாட்டார்கள்.அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு தான் கழுத்தை நீட்ட வேண்டும்..ஆனால் அந்த விஷயத்தில் தன் அப்பாவை நினைத்து பெருமைப்பட்டாள் சக்தி.

“அப்பா உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு சரிப்பா...ஆனா கொஞ்சமாவது தன் மானமும்,சுயகவுரவம் இருக்குற மனுஷனா இருக்கணும்..ஜால்ரா அடிக்கிற எவனும் எனக்கு வேண்டாம்..!” என்றாள் தெளிவாய்.. தீர்மானமாய்.

“சரிம்மா..! உன் சதோஷம் தான் என் சந்தோசம்....உன் மனசுல வேற எதுவும் இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லிடுமா..?” என்றார்.

“என் மனசுல வேற எதுவும் இல்லை...யாரும் இல்லை...” என்றாள்..அவள் தந்தை கேட்காத கேள்விக்கும் பதிலை சேர்த்து.

“மன்னுச்சுக்கமா..உன்னை சந்தேகப்பட்டு கேட்கலை..” என்றார்.

“எனக்கு உங்களைப் பத்தி நல்லா தெரியும்ப்பா..!” என்றாள்.

“சந்தோசம் சக்தி...பாட்டி தான் வாயிருக்க மாட்டாம..அதையும் இதையும் சொல்லி என்னை குழப்பி விட்ருச்சு...இப்ப தான்மா நிம்மதியா இருக்கு...”என்றவர்...

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குமா...? நீ வீட்டுக்கு போயிடுறியா..?”

“சரிப்பா.....தேங்காயை எண்ணிப் போட்ட உடனே நானும் கிளம்பிடுவேன் ப்பா...” என்றாள்.

“சரிம்மா..!” என்றபடி அவர் நகர...”கிழவி இருக்கு உனக்கு..” என்று அவள் பாட்டியை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.ஆனால் பாவம் தன்னைக் கண்காணிக்கும் கண்களைப் பார்க்கத் தவறி விட்டாள் அவள்.

“ஷாட் போலாமா சார்...” டைரக்டர்.

“ஒ..போலாம்..”என்றான்.

“ரெடி..டேக்...அக்சன்...”

“நீங்க இல்லன்னா...எனக்கு வாழ்க்கையே இல்லை...” என்று அழுதபடி துப்னா விஷத்தைக் குடிக்க...

அவள் குடித்து முடித்த சிறிது நேரத்தில்...ஒரு கும்பல் வந்து அவளை அப்படியே தூக்கியது.

துப்னா காரில் கடத்தப்பட்டாள்.செய்தி ஹீரோவை எட்ட...அவர்களுக்கு பின்னாலேயே காரில் விரட்டி சென்றான் அஜய்...கேமாராவும் அவர்கள் பின்னால் செல்ல.....

“கட்..கட்..” என்றார் டைரக்டர்.

“சார்..இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்..” என்றார் அவர்.

“ஓகே..” என்றவன் மனதை ஒருநிலைப்படுத்த...

“ரெடி..டேக்..அக்சன்..”

மீண்டும் அவன் காரில் துரத்த...இப்போது அவனின் முகத்தில் தேவைக்கு அதிகமாகவே எக்ஸ்பிரசன் இருக்க....”சூப்பர்..” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் இயக்குனர்.

அவன் சென்றது ஒரே டேக்கில் எடுக்கப்பட....மீண்டும் அவன் அடியாட்களை அடிப்பது போன்ற சீன்...அடுத்த டேக்கில் எடுக்கப்பட்டது...

துப்னாவை அவன் நெருங்க....அவள் உயிர் பிரிந்தது.அதைப் பார்த்து அவன் அதிர்ந்து நிற்க...

“கட்..கட்..”

“சார்..இபோ நீங்க அவங்க பேரை சொல்லி..அதிர்ச்சியா கத்தனும்..” என்று சொல்ல...

அவர் எதிர்பார்த்ததிற்கு இரண்டு மடங்காய் அந்த சீன் வர..அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.

அஜய்...கண்ணனைப் பார்த்து கண் அசைக்க...உடனே அவனுடைய காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் கண்ணன்.

“எல்லாம் ரெடியா..?”

“ரெடி சார்..” என்று கையில் எதையோ கொடுக்க....அந்த இடத்தை விட்டு பறந்தான் அஜய்.

வேலையை முடித்து விட்டு களைப்புடன் சென்று கொண்டிருந்தாள் சக்தி.துணைக்கு மருதாணியும் சேர்ந்து கொள்ள..அவள் பேசிக் கொண்டே வர..சக்தியோ அமைதியாக வந்தாள்.

வேகமாக அவள் அருகில் கார் வந்து நிற்கவும்..அவள் திடுக்கிட்டு திரும்ப...அவள் வாயத் திறக்க கூட சந்தர்ப்பம் கொடுக்காதவனாய்... அவளை இழுத்து காரில் போட்டான் அஜய்.

“என்னை..விடு..என்னைய விடுடா..பொறுக்கி..” என்று அவள் கத்த..

“இந்த பொறுக்கி என்ன செய்றேன்னு பாருடி உன்னை...” என்று பல்லைக் கடித்தவன்....பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து வேகமாக கட்ட...அவள் எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.நினைத்ததை முடித்து விட்டான் அஜய்.

“இப்ப என்ன செய்வ..?” என்று அவன் அவளைப் பார்க்க...”ச்சி...உனக்கு வெட்கமாயில்லை..” என்று அவள் ஏதோ சொல்ல வர..அவள் சொல்லி முடிப்பதற்கு முன்..அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்தான்.

“நான் சொல்றதை கேளு..” என்று அவன் சொல்ல எத்தனிக்க..வேகமாய் அவன் அணைப்பில் இருந்து திமிறி வெளியே வந்தாள் சக்தி.

அவன் எதிர்பார்க்காத நேரம் படக்கென்று கார் கதவைத் திறந்து வெளியே வர...

இதை எதிர்பார்க்காத அவன்...”சக்தி நில்லு...” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தபடி தானும் இறங்கினான்.

“ச்சி..கையை விடு..! என்ன நினச்சுட்டு இருக்குற உன் மனசுல...பெரிய ஹீரோன்னா...இப்படி கடத்தி வந்து தாலியைக் கட்டிட்டா...நான் உன் பின்னாடியே வந்துடுவேனா...இதென்ன சினிமாவா..?” என்றாள் கோபமாய்.

“அப்பறம் என்ன செய்வ..? நான் சொல்றதை முதல்ல கேளு..” என்று கொஞ்சம் இறங்கி வந்து அவன் கெஞ்ச..

“ச்சி..பொறுக்கி..கையை விடுடா..” என்று கையை தன் பக்கம் இழுத்தவள்...

“எது எப்படின்னாலும்...நான் உனக்கு தாலியைக் கட்டிட்டேன்..!” என்றான்.

“அது எதுக்கு எனக்கு..?” என்றவள்..அவனே எதிர்பார்க்கா வண்ணம்..அந்த தலையை பட்டென்று கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.

இதை அவள் மட்டுமில்லை...அவளுக்கு முன்னால் வந்து கொண்டிருந்த அவள் அப்பாவும்...பின்னால் வந்து கொண்டிருந்த மருதாணியும்... பார்க்க..அப்படியே திகைத்து நின்று விட்டனர்.

“என்னைப் பத்தி என்ன நினச்சுட்டு இருக்குற நீ.... இப்படித் தாலியைக் கட்டுன உடனே உன் பின்னாடி வந்துவேன்னு எப்படி கணக்கு போட்ட...அப்படி போட்டிருந்தா உன்னோட கணக்கு தப்புன்னு அர்த்தம்.எனக்கு பிடிக்காததை ஒரு நாளும் நான் செய்யவே மாட்டேன்..!நீ போடுற தாளத்துக்கு ஆடுறதுக்கு வேற ஆளைப் பாரு...” என்றபடி அவள் திரும்ப போக எத்தனிக்க...

அஜய்...அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே இல்லை.அவனின் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கிக் கொண்டிருந்தாள் சக்தி.

“தான் நினைத்த அளவு அவள் ஒன்றும் கோழை இல்லை என்பதை கண் முன்னே கண்டான்...அவனுடைய இதயத்தில் ஏற்பட்ட வலி..அதை வெளியே தெரியாமல் இருக்க..அவன் பாடுபட்ட விதம்..இப்படி அனைத்தும்..மருதாணியின் கண்களில் இருந்து தப்பவில்லை.”

அவனை உதறிவிட்டு நிமர்ந்த சக்தி...தன் முன்னால் தன் அப்பா நிற்பதைப் பார்த்து திகைத்தாள்.

அஜைய்யுமே..அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“அப்பா...” என்று அவள் அதிர்ந்து நிற்க...அவர் கண்களும் கலங்கியிருந்தது.

அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு...அப்படியே..சரிய...

“அப்பா...” என்று கத்தியவள்...வேகமாய் அவரின் அருகில் சென்று தாங்கிக் கொள்ள..

அதற்குள் மருதாணியும்....அவளுடன் சேர்ந்து கொண்டாள்.நிலைமையை உணர்ந்த அஜய்...வேகமாய் அவர்களின் சென்று அவளை விலக்கியவன்... அவரைத் தூக்கிக் கொண்டு வந்து காரில் இறுத்த...

அவன்..,அவன் கார்..இதை எதையும் அறியும் மன நிலையில் அவள் இல்லை....வேகமாக...வண்டியை எடுத்தான்.

மருதாணியிடம் கேட்டு பக்கத்து ஊரில் இருந்த மருத்துவமனைக்கு காரை விட....அதுவரை சக்தி அழுது கொண்டே இருந்தாள்.அந்த நிலையிலும் அவளுக்கு ஆறுதல் சொல்லும் எண்ணம் அவனுக்கு வரவில்லை. மருத்துவமனையின் முன் காரை நிறுத்தியவன்..மருதாணியைப் பார்க்க...

அவள் வேகமாய் சென்று அங்கிருந்த நர்சை அழைத்து வந்தாள்.அவரை ஸ்ட்ச்சரில் வைத்து எடுத்துக் கொண்டு போக...அது வரை அமைதியாக இருந்தவன் விருட்டென்று காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டன.

அவனின் வேகத்தைப் பார்த்த மருதாணி மிரண்டு நிற்க...அதையெல்லாம் அறியும் நிலையில் சக்தி இல்லை.

என்னதான் அஜய் செய்தது தவறாகவே இருந்தாலும்...சக்தி தாலியைக் கழட்டி எறிவாள்..என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.தனக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருக்கும் போது..அவளுடைய அப்பாவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணினாள் மருதாணி.

“நீங்க பேஷன்ட்டுக்கு என்ன வேணும்..!”

“நான் அவர் பொண்ணு...”

“இதுல கையெழுத்துப் போடுங்க..!” என்று அந்த நர்ஸ் கேட்க...

“எங்க அப்பாவுக்கு...” என்று அவள் இழுக்க..

“அவருக்கு அட்டாக்...ஒரு ஆப்ரேஷன பண்ணனும்...கையெழுத்தை போடுங்க..!” என்றாள்.

கைகள் நடுங்க கையெழுத்தைப் போட்டு முடித்தாள் சக்தி.

“நீங்க இங்க வெயிட் பண்ணுங்க...” என்றபடி நர்ஸ் உள்ளே செல்ல...சுவற்றோடு சாய்ந்து நின்றாள் சக்தி.

“சக்தி..” என்று மருதாணி அவளைத் தொட...

சக்தியின் பார்வையோ ஒரே இடத்தில் நிலைகுத்தி நின்றது.

விதி தன் விளையாட்டை முடித்துக் கொண்டு....விடைக்காக காத்திருந்தது.
Wonderful
 
Top