Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW_047 அவர்கள் எழுதிய அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்

Advertisement

ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனத்தைக் கவர்ந்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

ஜெயதேவின் அறிமுக காட்சி படித்ததும், அருவம் படத்தின் டீசர் போல மனக்கண்ணில் தோன்றியது. ஆனால் கதையின் நகர்வில் அவரை ராங்கி பட்டாசின் ரோமியோவாக(செல்ல Chefஆக) உருமாற்றிய உங்கள் பாங்கு சூப்பர். அவருக்கு உங்கள் ஹீரோயின் எண்ணிலடங்கா செல்லப் பெயர்கள் சூட்டினாலும், கற்றாழை கண்ணாளனே படு மாஸ் ஆத்தரே. அவன் குணத்திற்கு ஏகமாகப் பொருந்தியிருந்தது.

அதைவிட பூமணிக்கு Flower Bell!!! செம்ம கற்பனை போங்க உங்களுக்கு.

சத்யாவை நீங்கள் Second Hero என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அவனும் அண்ணன் அளவிற்கு மாஸ் பர்ஃபோர்மன்ஸ் செய்தான். கண்மூடித்தனமான பாசத்தில் அவன் செய்த சேட்டைகளும், இழுத்து விட்ட வில்லங்கமும், அதற்காக அவன் பரிதவித்ததும் தான் கதையின் விறுவிறுப்பைக் கூட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆத்மி பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனிவொரு விமர்சனம் தான் எழுத வேண்டும். சுட்டிப்பெண் என்று நினைத்தால், அவள் நெத்தியடி பதில்களும், மனிதர்களின் மனத்தைப் படிக்கும் திறமையும் அற்புதத்திலும் அற்புதம். விளையாட்டுப் பெண்ணாக, விவகாரங்களைத் தட்டிக்கேட்கும் தைரியசாலியாக, வீட்டின் செல்லப் பெண்ணாக, காதல் மனைவியாக என இடத்திற்கு ஏற்ப செயல்பட்ட அவள் குணம் The Best.

கல்யாண கலாட்டாவில் ஆளாளுக்குப் பதற்றத்துடன் இருக்க, இவள் மணவாளனின் செல்லப்பெயர்களை அடுக்கி சூழ்நிலையை தளர்த்தியதும் சரி; தந்தையிடம் குழப்பங்கள் நடந்திருக்கக் கூடிய காரணங்களைப் பக்குவமாகப் பட்டியலிட்டபோதும் சரி; கொழுந்தனாரை நிற்க வைத்து கேள்வி கேட்டதும் சரி; ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அனைத்தும் கொள்ளை அழகு.

நெஞ்சம் நிறைந்தவரைத் திருமணம் செய்து கொண்டபோதிலும், குடும்ப விவகாரங்களைக் கையாண்ட இருவரின் அணுகுமுறையும் நேர்த்தியாக இருந்தது. ஜெய்தேவ் அம்மாவிடம் கோபம், பாசம் என்று போராடியதும், மாமனாரிடம் விட்டுக்கொடுத்த இடங்களும் மெய்சிலிர்க்க வைத்தது.

பாரபட்சம் பார்க்காமல் உடன்பிறப்புகளின் குணங்களையும், தவறுகளையும் நிதானமாகக் கலந்தாலோசித்த காட்சியில் ஜெய் மற்றும் ஆத்மியின் புரிதல் அட்டகாசம்.

மீனும்மாவின் கலகலப்பும், பரந்த உள்ளமும் படித்தவர்கள், இப்படியொரு மாமியார் வேண்டும் என்று ஒரு நொடியாவது சிந்தித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

சிட்டுக்குருவி அன்பும் வெள்ளந்தி மனமும் கூட வெகு இயல்பாக இருந்தது. ஆனால் சீனியர் சிடிசன்ஸ் கேடகரியில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் பூமணி தான்.

கதையின் முதல் பாதியில் பூப்போல அமைதியாக வலம் வந்தவர், Intervalக்கு அப்புறம் பூகம்பமாய் உருமாறியது அட்டகாசம். மாப்பிள்ளை மற்றும் புகுந்த வீட்டினர் என்ன செய்தாலும் அனுசரித்துப் போகும் பெரும்பாலான சாதுவான அப்பாக்களுக்கு மத்தியில், “என் மகள்களின் வாழ்க்கை” என்று நிமிர்வாய் நின்றது அசத்தல்.

நடந்த பிரச்சனைகளுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்டும், தழைந்தும் போன மாப்பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் இருந்து பக்குவமாகச் சிந்தித்து அவர்களைப் பெருந்தன்மையுடன் ஏற்ற குணமும் Simply Wow.

World’s Best Daddyன்னு Flower Bellக்கு உங்க தோட்டத்தில் இருந்து பூங்கொத்து அனுப்புங்க ஆல்-இன்-ஆல் அழகி ஆத்மி அவர்களே!

வாண்டுகளின் பட்டாளம் என்று பெயருக்கு அவர்களை கதையில் இணைக்காமல், அவர்களுக்கும் தேவையான முக்கியத்துவம் தந்து காட்சிகள் திட்டமிட்ட உங்கள் திறமை அற்புதம். குறிப்பாக சம்யூவைக் கண்காணிக்க அவர்கள் ஆத்மிக்கு உதவிய காட்சி சூப்பர்.

எனக்கு உங்கள் கதையில் மிக மிகப் பிடித்த விஷயம், சத்யா மற்றும் சம்யூவின் தவறுகளை, சூழ்நிலை சந்தர்ப்பம் என்று கூறி நியாயப்படுத்தாமல், அவர்களின் செயல்களுக்கான பின்விளைவுகளை எடுத்துக்கூறி, அனுபவத்திலும் காட்டி நல்வழிப்படுத்தியது தான். அதீத பாசமும், குடும்பத்தினரிடம் ரகசியம் காப்பதும் எந்த அளவிற்கு ஆபத்தானது என்று விழிப்புணர்வூட்டும் வகையாக அமைந்தது.

ஆத்மி புகுந்த வீட்டிற்கு வந்ததும், மாலை நேரங்களில் நித்தியம் ஒரே Routineஆக புதுப்புது பலகாரங்கள் சமைப்பதும், அதற்கு மீனம்மா புகழாரம் பாடுவதும், சத்யா எலி ஆவதும், ஜெய் தள்ளி நிற்பதும், அவனை அவள் சீண்டுவதும் என்று பல எபிசோடுகளில் கவனித்தேன்.

ஆனால் உங்கள் தனித்துவமான கற்பனை வளத்தில், அங்கு நடந்த அலப்பறைகள் யாவும் ஒவ்வொரு விதமாக ரசனையாக இருந்தது. சிறிதும் சலிப்புத் தட்டவில்லை.

எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு ஏற்ப கதாபாத்திரங்களின் உணர்வுகளை அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து தெளிந்த நீரோடையாகக் கதை நகர்த்திய உங்கள் தனித்துவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. போட்டி முடிந்ததும், உங்கள் உண்மை பெயர் அறிந்து, உங்களின் மற்ற கதைகளைப் படிக்க ஆவலாக உள்ளேன். (இதற்கு முன் படித்திருக்கேனா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் உங்களை அடையாளம் கண்டுகொள்ளாததற்கு மன்னிக்கவும்.)

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் குட் ஃபீல் கதை படிக்க விரும்பும் வாசக தோழமைகளே! இக்கதையை மிஸ் பண்ணாதீங்க.

கலைவாணர் பாங்கில் நகைச்சுவையும் நற்சிந்தனையும் நிறைந்த இத்தகைய அழகான நேர்மறையான கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

@வித்யா வெங்கடேஷ்

Wowwwwwww... எவ்ளோ பெரிய review.. ஸ்பெஷல் தேங்க்ஸ் சிஸ் 🙏 :love:💕🥰

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அலசி ஆராய்ந்து ரொம்ப அழகா விளக்கமா விமர்சித்து இருக்கிறீங்க சிஸ்.. அதுவும் இதுவரை யாரும் கூறாத கோணத்தில் பல சொல்லி இருக்கிறீங்க.. அதுவும் அவை நான் யோசித்த கோணத்திற்கு சரியாக பொருந்தியதில் மீ ஸோ ஸோ ஹப்பிபிபிபிபிபி சிஸ் 💃💃:love::love:💕💕

மிக்க மிக்க நன்றி சிஸ் 🙏:love:💕

நீங்க என் கதை படித்தது இல்லைனு தான் நினைக்கிறேன் சிஸ்.. எனது மற்ற கதைகளை படிக்கும் அளவிற்கு என் எழுத்து உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி சிஸ்.. மீ ஹப்பி அண்ணாச்சி மொமென்ட் 🥳🤩💞💞💞

ஆத்மி கிட்ட சொல்லிட்டேன் சிஸ்.. இந்நேரம் உங்க fav பூமணிக்கு நீங்கள் சொன்ன 'tag' வைத்து பூங்கொத்து சென்று இருக்கும் (y)💃

நீங்கள் ரசித்தவற்றை ரசனையாக எடுத்து கூறி பகிர்ந்ததுக்கும், உங்கள் வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி சிஸ் 💕💕💕
 
வாவ் அசத்தலான கருத்துப்பதிவு சிஸ்.எனக்கு ரொம்ப புடிச்ச ஸ்டோரி.பதிவைப் படிச்சதும் திரும்பவும் கதையை ஒரு முறை வாசிச்சமாதிரி ஒரு ஃபீல். 😍😍😍😍😍😍😍
 
😍 💕 💕 💕 💕
 
ஓம் ஸ்ரீ சாயிராம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனத்தைக் கவர்ந்த விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன் ஆத்தரே.

ஜெயதேவின் அறிமுக காட்சி படித்ததும், அருவம் படத்தின் டீசர் போல மனக்கண்ணில் தோன்றியது. ஆனால் கதையின் நகர்வில் அவரை ராங்கி பட்டாசின் ரோமியோவாக(செல்ல Chefஆக) உருமாற்றிய உங்கள் பாங்கு சூப்பர். அவருக்கு உங்கள் ஹீரோயின் எண்ணிலடங்கா செல்லப் பெயர்கள் சூட்டினாலும், கற்றாழை கண்ணாளனே படு மாஸ் ஆத்தரே. அவன் குணத்திற்கு ஏகமாகப் பொருந்தியிருந்தது.

அதைவிட பூமணிக்கு Flower Bell!!! செம்ம கற்பனை போங்க உங்களுக்கு.

சத்யாவை நீங்கள் Second Hero என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அவனும் அண்ணன் அளவிற்கு மாஸ் பர்ஃபோர்மன்ஸ் செய்தான். கண்மூடித்தனமான பாசத்தில் அவன் செய்த சேட்டைகளும், இழுத்து விட்ட வில்லங்கமும், அதற்காக அவன் பரிதவித்ததும் தான் கதையின் விறுவிறுப்பைக் கூட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆத்மி பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனிவொரு விமர்சனம் தான் எழுத வேண்டும். சுட்டிப்பெண் என்று நினைத்தால், அவள் நெத்தியடி பதில்களும், மனிதர்களின் மனத்தைப் படிக்கும் திறமையும் அற்புதத்திலும் அற்புதம். விளையாட்டுப் பெண்ணாக, விவகாரங்களைத் தட்டிக்கேட்கும் தைரியசாலியாக, வீட்டின் செல்லப் பெண்ணாக, காதல் மனைவியாக என இடத்திற்கு ஏற்ப செயல்பட்ட அவள் குணம் The Best.

கல்யாண கலாட்டாவில் ஆளாளுக்குப் பதற்றத்துடன் இருக்க, இவள் மணவாளனின் செல்லப்பெயர்களை அடுக்கி சூழ்நிலையை தளர்த்தியதும் சரி; தந்தையிடம் குழப்பங்கள் நடந்திருக்கக் கூடிய காரணங்களைப் பக்குவமாகப் பட்டியலிட்டபோதும் சரி; கொழுந்தனாரை நிற்க வைத்து கேள்வி கேட்டதும் சரி; ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அனைத்தும் கொள்ளை அழகு.

நெஞ்சம் நிறைந்தவரைத் திருமணம் செய்து கொண்டபோதிலும், குடும்ப விவகாரங்களைக் கையாண்ட இருவரின் அணுகுமுறையும் நேர்த்தியாக இருந்தது. ஜெய்தேவ் அம்மாவிடம் கோபம், பாசம் என்று போராடியதும், மாமனாரிடம் விட்டுக்கொடுத்த இடங்களும் மெய்சிலிர்க்க வைத்தது.

பாரபட்சம் பார்க்காமல் உடன்பிறப்புகளின் குணங்களையும், தவறுகளையும் நிதானமாகக் கலந்தாலோசித்த காட்சியில் ஜெய் மற்றும் ஆத்மியின் புரிதல் அட்டகாசம்.

மீனும்மாவின் கலகலப்பும், பரந்த உள்ளமும் படித்தவர்கள், இப்படியொரு மாமியார் வேண்டும் என்று ஒரு நொடியாவது சிந்தித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

சிட்டுக்குருவி அன்பும் வெள்ளந்தி மனமும் கூட வெகு இயல்பாக இருந்தது. ஆனால் சீனியர் சிடிசன்ஸ் கேடகரியில் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் என்றால் பூமணி தான்.

கதையின் முதல் பாதியில் பூப்போல அமைதியாக வலம் வந்தவர், Intervalக்கு அப்புறம் பூகம்பமாய் உருமாறியது அட்டகாசம். மாப்பிள்ளை மற்றும் புகுந்த வீட்டினர் என்ன செய்தாலும் அனுசரித்துப் போகும் பெரும்பாலான சாதுவான அப்பாக்களுக்கு மத்தியில், “என் மகள்களின் வாழ்க்கை” என்று நிமிர்வாய் நின்றது அசத்தல்.

நடந்த பிரச்சனைகளுக்கு வருந்தி, மன்னிப்பு கேட்டும், தழைந்தும் போன மாப்பிள்ளைகளின் கண்ணோட்டத்தில் இருந்து பக்குவமாகச் சிந்தித்து அவர்களைப் பெருந்தன்மையுடன் ஏற்ற குணமும் Simply Wow.

World’s Best Daddyன்னு Flower Bellக்கு உங்க தோட்டத்தில் இருந்து பூங்கொத்து அனுப்புங்க ஆல்-இன்-ஆல் அழகி ஆத்மி அவர்களே!

வாண்டுகளின் பட்டாளம் என்று பெயருக்கு அவர்களை கதையில் இணைக்காமல், அவர்களுக்கும் தேவையான முக்கியத்துவம் தந்து காட்சிகள் திட்டமிட்ட உங்கள் திறமை அற்புதம். குறிப்பாக சம்யூவைக் கண்காணிக்க அவர்கள் ஆத்மிக்கு உதவிய காட்சி சூப்பர்.

எனக்கு உங்கள் கதையில் மிக மிகப் பிடித்த விஷயம், சத்யா மற்றும் சம்யூவின் தவறுகளை, சூழ்நிலை சந்தர்ப்பம் என்று கூறி நியாயப்படுத்தாமல், அவர்களின் செயல்களுக்கான பின்விளைவுகளை எடுத்துக்கூறி, அனுபவத்திலும் காட்டி நல்வழிப்படுத்தியது தான். அதீத பாசமும், குடும்பத்தினரிடம் ரகசியம் காப்பதும் எந்த அளவிற்கு ஆபத்தானது என்று விழிப்புணர்வூட்டும் வகையாக அமைந்தது.

ஆத்மி புகுந்த வீட்டிற்கு வந்ததும், மாலை நேரங்களில் நித்தியம் ஒரே Routineஆக புதுப்புது பலகாரங்கள் சமைப்பதும், அதற்கு மீனம்மா புகழாரம் பாடுவதும், சத்யா எலி ஆவதும், ஜெய் தள்ளி நிற்பதும், அவனை அவள் சீண்டுவதும் என்று பல எபிசோடுகளில் கவனித்தேன்.

ஆனால் உங்கள் தனித்துவமான கற்பனை வளத்தில், அங்கு நடந்த அலப்பறைகள் யாவும் ஒவ்வொரு விதமாக ரசனையாக இருந்தது. சிறிதும் சலிப்புத் தட்டவில்லை.

எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு ஏற்ப கதாபாத்திரங்களின் உணர்வுகளை அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து தெளிந்த நீரோடையாகக் கதை நகர்த்திய உங்கள் தனித்துவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. போட்டி முடிந்ததும், உங்கள் உண்மை பெயர் அறிந்து, உங்களின் மற்ற கதைகளைப் படிக்க ஆவலாக உள்ளேன். (இதற்கு முன் படித்திருக்கேனா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் உங்களை அடையாளம் கண்டுகொள்ளாததற்கு மன்னிக்கவும்.)

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சூப்பர் குட் ஃபீல் கதை படிக்க விரும்பும் வாசக தோழமைகளே! இக்கதையை மிஸ் பண்ணாதீங்க.

கலைவாணர் பாங்கில் நகைச்சுவையும் நற்சிந்தனையும் நிறைந்த இத்தகைய அழகான நேர்மறையான கதை தந்த நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
ஹீரோக்கள் தான் பேசி பேசி மயக்குறாங்க என்று பாத்தா இந்த வித்யா ஜி விமர்சனங்களை அள்ளி அள்ளி போட்டு மயக்குறாங்கப்பா😀💞
சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தை நம்மிடம் இல்லை 😍
 
Results வர இன்னும் மூன்று வாரங்கள் இருக்கு…அதனால இன்னும் முணு கதைகள் படிச்சு, விமர்சனம்ன்ற பேருல ஆத்தர்களுக்கு அன்புத்தொல்லை கொடுத்துடுவோம்😜😜😜
 
கொடுங்க கொடுங்க நம்மளும் திரும்ப ஒரு தடவை படித்து பாப்போம் 😀
 
Top