Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 15

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---15

யப்பா வேறு எங்கும் இவள் போக போவது கிடையாது என்று நிம்மதி அடைந்தான். இவள் வெகுளி தனத்துக்கு கண்டிப்பாக மற்ற ஏதாவது கம்பெனிக்கு சென்றால் தவறாக நடக்க வாய்ப்பு உள்ளது.

அவனுக்கு தெரியதா...இந்த துறையில் இருக்கும் பெண்கள் படும்பாடு. ஒரு சில மாடல்கள் அவர்களாகவே மேல் விழுந்து பேசுவார்கள். ஆனால் அனைத்து மாடல்களையும் அப்படி சொல்ல முடியாது.

அந்த மாடல்களிடம் தான் இந்த துறையில் சான்ஸ் கொடுக்கிறேன் என்று அவர்களிடம் அத்து மீற முயல்வதும். அதை அந்த பெண்கள் சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் கஷ்டப்படுவதை அவன் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.

இவளுக்கு என்ன தலை எழுத்து அவன் அண்ணன் இவள் மனது கஷ்டப்பட கூடாது என்று சொன்ன வார்த்தைகள் எல்லாம் சேர்த்து வைத்து இவள் இப்படி அர்த்தம் கொண்டால் சித்தார்த்தும் தான் என்ன செய்வான் பாவம்.

என்று சித்தார்த்துக்காக அவன் மனம் பரிதாப்பட்ட வேளையில் அவன் மனசாட்சி நாளை உனக்கும் இதே சோதனை தான் என்று எடுத்துரைத்தை புன்னையுடன் ஒத்துக் கொண்டு அவனுடைய மற்ற மனசாட்சி அது சுகமான சுமை என்று ஏற்றுக் கொண்டது.

தன் கேள்விக்கு பதில் இல்லாமல் போக ஆஷிக் கையைய் தொட்டு “என்ன எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க. என்ன உங்க அம்மா மாடலிங் செய்யும் வீட்டிலும் பெண் கொடுக்க மாட்டாங்களாம்மா…?” என்ற அவள் பேச்சில் சிரித்து விட்டு.

“ஆமாம் பரினிதா நீ சொல்வதும் சரியே..”

“என்னது இப்போ என்ன சொன்னீங்க நான் சொன்னது சரியா…? நான் என்னவோ விளையாட்டுக்கு தான் கேட்டேன். அப்போ நாங்க மட்டும் அந்த விளம்பர தொழில் நடத்தும் வீட்டில் இருந்து பெண் எடுக்க வேண்டுமா...சொல்லுங்க இது எந்த ஊர் நியாயம்.”

அவள் பேச பேச சிரித்துக் கொண்டே “சே லூசு நான் சும்மா தான் சொன்னேன். ஆனால் நீ இது மாதிரி மாடல் ஆகிறேன் என்று இன்னொறு முறை சொல்லாதே...அது உன் அண்ணனும் விரும்ப மாட்டான்.

உன் வருங்களா கணவரும் விரும்ப மாட்டார். அதுவும் இல்லாமல் அந்த தொழில் மிக பிரச்சினைகள் சமாளிக்க வேண்டியிருக்கும் அது உனக்கு செட்டகாது.” என்று பேசுபவனை பார்த்து.

“நீங்கள் உங்கள் விளம்பர கம்பெனியில் எனக்கு சான்ஸ் கொடுக்க தயங்கிறீங்க. அதை நேரிடையாக தான் சொல்லுங்களே...அதற்க்கு ஏன் இப்படி சுத்தி வளைத்து பேசிக் கொண்டு இருக்கீங்க. என் அண்ணனுக்கு பிடிக்காது என் வருங்களா கணவருக்கு பிடிக்காது என்று. என் வருங்களா கணவரை பற்றி உங்களுக்கு தெரியுமா…?” என்று கேட்டதற்க்கு .

“கண்டிப்பாக உன் வருங்களா கனவரை பற்றி எனக்கு மட்டும் தான் நன்கு தெரியும். அவள் ஏதோ பேச வருவதை தடுத்து விட்டு பின் என்ன சொன்னாய். என் கம்பெனிக்காக பார்க்கிறேன் என்றா...இது வரை நான் தொழில் விசயத்தில் நான் யாரையும் நம்பியது கிடையாது. இப்போது நீ உம் என்று ஒருவார்த்தை சொல் அதை உன் பெயருக்கு எழுதி விடுகிறேன். “

என்று சொல்பவனை சந்தேகத்துடன் பார்த்தாள். அவள் பார்வையை புரிந்துக் கொண்ட ஆஷிக் “என்ன செய்யட்டுமா “ என்று கேட்டதற்க்கு அவசரமாக வேண்டாம் என்று தலையாட்டினாள்.

“எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்வாய் என்று. சரி நான் சொல்வதை கவனமாக கேள். இனி மேல் இது மாதிரி தத்து பித்துன்னு பேசக் கூடாது.

முதலில் உன் எட்டு சப்ஜெக்ட் அரியஸை முடிக்க பார். அதுவும் இல்லாமல் இன்னும் அரியஸ் விழமால் பார்த்துக்க.”

என்று அவளிடம் சொன்னவன் மனதுள் உன் வீட்டில் உன் படிப்பு அரியஸ் எல்லாம் க்ளியர் செய்தால் தான் திருமணமே செய்வேன் என்று சொன்னால் என் நிலமை என்ன ஆவாது என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே…

பரினிதாவும் அந்த அர்த்தத்தில் தான் பேசியும் வைத்தாள். “ஆம் கண்டிப்பாக நான் என் அரியஸ் எல்லாம் முடித்தாக வேண்டும். இல்லை என்றால் எனக்கு கண்டிப்பாக கல்யாணமே நடக்காது.” என்று சொல்பவளை

“ஏன் அப்படி சொல்கிறாய்..”என்று கேட்கும் போதே அய்யோ நாம் நினைத்தது தானா...என்று அவன் எண்ணமிடும் போதே…

“என் பாட்டி போன வாரம் என் அண்ணாகிட்ட பரினிதா படிப்பே அரியஸ் இல்லாமல் முடித்தவுடன் தான் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும். அதனால் நீ செய்து கொள் என்று சொன்னார்கள். அதற்க்காவது கண்டிப்பாக படிக்க வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரு மூச்சை ஒன்றை விட்டாள்.

அவள் செயலில் சிரித்துக் கொண்டே “திருமணத்திற்க்கு உனக்கு என்ன அவ்வளவு அவசரம். அதுவும் இல்லாமல் உனக்கு இப்போது தான் இருபது வயதே ஆகிறது. அதற்க்குள் உனக்கு என்ன அவ்வளவு அவசரம்.” இவள் ஏதாவது ஏடா கூடமாக சொல்லுவாள் என்று தெரிந்தே கேட்டான்.

அவன் நினைத்தது சரியே என்பது போல் “ திருமணம் செய்துக் கொண்டால் தானே குழந்தை பிறக்கும். அதனால் தான் நான் சீக்கிரம் திருமணம் செய்ய நினைக்கிறேன்.” என்று கூறினாள்.

சத்தியமாக ஆஷிக் இந்த பதிலை எதிர் பார்க்கவே இல்லை. வேறு ஏதாவது சொல்வாள் என்று நினைத்தானே தவிர இந்த பதிலை எதிர் பார்க்க வில்லை. அவள் பதில் ஒன்றும் கேட்க தோன்றாமல் அவளையே பார்த்திருந்தான்.

அவன் தன்னையே பார்த்திருப்பதை பார்த்த பரினிதா “ என்ன இப்படி பேசுகிறாளே என்று தானே பார்க்கிறீங்க. எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் என் பன்னிரண்டு வயது வரை என் அம்மா பின் தான் சுற்றுவேன்.

ஒரு நாள் திடிர் என்று என் அம்மா, அப்பா, தாத்தா, என்று பொட்டலமா கட்டிய மாதிரி ஒரு வெள்ளை துணியிலே சுத்தி காமிச்சாங்க . என்னாலே நம்பவே முடியலே...அந்த பொட்டலம் எப்படி என் அம்மாவா ,அப்பாவா, தாத்தாவா, இருக்க முடியும்.

என் அண்ணா, பாட்டிம்மா, தடுக்க தடுக்க ஒரு வெள்ளை துணியை மட்டும் ஒதுக்கி முகம் பார்த்தேன். அந்த முகம் என் அம்மாவுடையது. அந்த கோரமான விபத்துக்கு பின்பும் என் அம்மா முகம் அப்படியே தான் இருந்து தெரியுங்களா… ஆனால் என் அம்மாவுடை உடல் அருகில் வாசம் பார்த்தேன் அந்த வாசம் என் அம்மாவுடையது கிடையாது.

என் அம்மாவின் வாசம் எனக்கு நன்கு தெரியும். அது மஞ்சள், என் அம்மா உபயோகிக்கும் குட்டிகுரா பவுடர், பின் அவர்கள் உடம்பில் சுரக்கும் வியர்வை மூன்றும் கலந்த அந்த மணம் அதை சொல்ல முடியாது. நான் எபோதும் அந்த வாசத்தை சுவாசித்தே தான் உறங்குவேன்.

ஆனால் அன்று அவர்கள் உடம்பில் இருந்த அந்த வாசம் வரவில்லை. அதற்க்கு மாறாக ஏதோ ஒரு வித அதை நாத்தாம் என்று கூட சொல்லலாம். அதை என் அண்ணாவிடம் கேட்ட போது எதுவும் சொல்லாமல் அழுதபடியே என் அம்மாவின் அருகில் இருந்து என்னை நகர்த்தி என் ரூமுக்கு கூட்டிக் கொண்டு போய் இங்கயே இரு எங்கயும் போகதே என்று சொல்லி விட்டார்.

நானும் பின் என் அம்மா அருகில் செல்லவில்லை. ஏன் என்றால் நான் தனிமையிம் என் மூச்சை எழுத்து விடும் போது என் அம்மாவின் அதே நல்ல வாசனையை கண்டேன். சரி என் நினைவிலும் சரி, என் மூச்சிலும் சரி அவர்களின் அந்த நறுமணமே இருக்கட்டும் என்று நினைத்து பின் நான் யாரையும் பார்க்காமல் இறுதி சடங்கு முடியும் வரை என் ரூமை விட்டு எங்கேயும் போக வில்லை.

பின் நான் என் பெற்றவர்களின், இழப்பை உணர்வதற்க்கு முன்னே என் உடலின் மாற்றம் அதை என் அண்ணாவிடம் கூட சொல்ல முடியாமல். அவள் எதை கூறுகிறாள் என்று சித்தார்த்தின் டைரி மூலம் தெரிந்த ஆஷிக் அவள் தோள் பற்றி ஆறுதல் அளித்தான்.

அதற்க்கு பிறகு அனைத்தும் மாறி விட்டது.என் அண்ணா தாத்தாவின் கனவை நிஜமாக்க, கலெக்டர் படிப்பில் பிஸியாகி விட. என் பாட்டிம்மா அவர்கள் கணவரின் தொழிலை அழியாமல் காக்க பிஸியாகி விட .என்னை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் நான் சென்னை ஆஸ்ட்டல் வாழ்க்கைக்கு தள்ளப்பட்டேன்.

என் பன்னிரண்டு வயது வரை நான் தனிமையையே உணர்ந்தது கிடையாது. அன்று அன்று என் பள்ளிகூடத்தில் நடந்தது அனைத்தையும் நான் என் அம்மாவிடம் சொல்லி விடுவேன்.

எனக்கு அனைத்துக்கும் அம்மா தான் தேவை படுவார்கள். அண்ணா எப்போதும் என் தாத்தா பின் தான் சுற்றுவார். என் அப்பாவுக்கு பிஸ்னஸ் தான் உலகம் .என் பாட்டிம்மா எப்போதும் இதே ஸ்டிட் ஆபிசர் தான்.

அப்படி என் அம்மா பின்னே இருந்த நான் அந்த தனிமை எனக்கு பிடிக்க வில்லை. சரி மற்ற பிள்ளைகள் கூட சேரலாம் என்று பார்த்தால் அவர்கள் எப்போதும் ஏதோ பையன்களை பற்றியே பேசிக் கொண்டு இருப்பார்கள்.

அது எனக்கு பிடிக்க வில்லை. அப்போது தான் நான் என் ஆஸ்டலில் இருந்து பார்த்த போது குழந்தைகள் சருக்கு மறத்தில் விளையாடுவதை பார்த்திருந்தேன். அப்போது அதில் உள்ள ஒரு குழந்தை என்னை பார்த்து விட்டு வா என்று கைய் அசைத்து கூப்பிட்டது.

அந்த குழந்தை பார்க்க எவ்வளவு அழககா இருந்து தெரியுமா… அந்த குழந்தை கூப்பிடவுடன் நான் அங்கு போன போது என்னை சுற்றி மத்த குழந்தைகளும் சூழ்ந்துக் கொண்டனர்.

பின் ஒரு ஒரு குழந்தகளுக்கும் எழும் பாரு சந்தேகம். அப்பா அப்பா அதற்க்கு நம்மால் பதில் சொல்லவே முடியாது.அன்று எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. பின் நான் அதையே பழக்கமாக்கிக் கொண்டேன்.”

அவள் பேச பேச அவள் முகத்தை மட்டுமே பார்த்துக் கேட்டுக் கொண்டு இருந்த ஆஷிக் அவள் பேசுவதை விடுத்து தன்னை பார்ப்பதை உணர்ந்து “என்னடா பார்க்குரே சொல் நீ சொல்வதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.” என்றதற்க்கு.

திடிர் என்று ஆஷிக் குரலில் இழைந்த மென்மையை கண்டு சிரித்துக் கொண்டே “என்ன என் கதையை கேட்டுட்டு ரொம்ப பீல் ஆயிட்டிங்களா….அது அப்போ தான் இப்போ எல்லாம் இல்லே…

ஏன்னா எனக்காவது என் அண்ணன் பாட்டிம்மா, அப்புறம் பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால் நான் போய் பார்த்த ஆஸ்ரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு எதுவும் இல்லாமலேயே அவர்கள் கிடைத்தை வைத்து எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் தெரியுமா…

அதனை பார்த்து தான் நானே புத்தி தெளிந்தேன். பின் நான் என்னை மாற்றிக் கொண்டேன் தான். ஆனால் சில சமயம் என் அம்மாவின் நினைவு வரும் போது மட்டும் என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியாது.

அந்த ஆஸ்ரமத்து குழந்தைகள் அன்னை அன்பையே பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அதை முழுமையாக அனுபவித்து இருக்கிறேன். பிறவி குருடன் கூட சமாளித்து விடுவான். அதே கண் பார்வை தெரிந்த ஒருவன் கண் இழப்பது எப்படி கொடுமையோ அதே தான் என் நிலமையும். என் தனிமையை போக்கியது அந்த குழந்தைகள் தான்.

சரி அப்பா அம்மா கூட நேரம் செலவிட அவர்கள் இல்லாமல் போனார்கள் வரும் கணவருடனாவது நான் நேரம் செலவளிக்கலாம் என்று நினைத்தால் அதற்க்கும் சேர்த்து ஒட்டு மொத்தமா எங்க பாட்டிம்மா ஆப்பு வைச்சிட்டாங்க.” என்று பரினிதா கூறியதை கேட்ட ஆஷிக்குக்கு மனது மிக கஷ்டமாக இருந்தது.

இது வரை அவளை குழந்தை தனமிக்க எந்த கவலையும் இல்லாமல் இருப்பவள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் அவள் குழந்தை தனமிக்க மனதில் இவ்வளவு பாரத்தை சுமந்து இருப்பாள் என்று அவன் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை.

அவன் மனதில் இது தான் ஒடிக் கொண்டு இருந்தது. பரினிதா பணம் படைத்த வீட்டில் வளர்ந்தவள் அது தான் எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாள். இதே நம் ஆருண்யாவை பார் இது போல் விளையாட்டு தனமாக இருந்து அவன் பார்த்ததே கிடையாது.

இதற்க்கு காரணம் ஆருண்யா பதினைந்து வயது முதலே பணம் பற்றாக்குறை சூழ்நிலையில் வளர்ந்ததால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்று அவன் நினைத்தது உண்டு.

ஆனால் இப்போதோ பரினிதாவுக்கு என்ன இல்லை. ஆனால் அந்த சிறுவயதிலும் இவள் மனதில் தனிமையை தானே உணர்ந்து இருக்கிறாள் என்று யோசித்தவன் அவள் கடைசியாக சொன்ன என் கணவரிடம் நேரம் செலவிட எண்ணினேன். ஆனால் அதற்க்கும் என் பாட்டிம்மா வைத்த ஆப்பு என்ன என்று அறிய வேண்டியிருந்தது.

“ஆமான் பரினிதா அது என்ன உன் கணவரிடம் நீ நேரம் செலவிட விடாமல் உன் பாட்டி வைத்த ஆப்பு.” என்று கேட்டதற்க்கு அவள் சொன்ன பதிலில் இவ்வளவு நேரம் இவ்வளவு எமோஷனலாக பேசிக் கொண்டு இருந்தது இவளா என்ற சந்தேகமே அவனுக்கு வந்து விட்டது.

“அதுவா நான் எனக்கு வரப்போறவர் ஒரு கவர்மென்ட் வேலையோ...இல்லை ஒரு தனியார் கம்பெனியில் வேலையோ …பார்த்தால் போதும் என்று நினைத்திருந்தேன்.அவள் பேச்சை இடையிட்டு தடுத்து.

“ஏன் என்று தெரிந்துக் கொள்ளலாமா…?”

“ஆமாம் அவர்கள் தானே காலை பத்து மணிக்கு ஆபிஸ் போய் மாலை ஆறுமணிக்கே வீட்டுக்கு வந்து விடுவார்கள். அதுவும் இல்லாமல் சனி ஞாயிறு கூட வீட்டில் இருப்பார்கள் தானே அது தான் .” அவள் கூரியதை கேட்டு அவளிடம் சிரித்தாலும் உள்ளக்குள் இவள் எவ்வளவு தனிமையை உணர்ந்திருந்தால் இப்படி சொல்லுவாள் என்று வேதனைபட தான் செய்தது.

ஆனால் இன்னொறு மனமோ நமக்கே இப்படி ஆப்பு வைத்து விட்டாளே இவள் சொல்வது போல் நான் வேலை பார்க்க முடியுமா…”? நேரம் காலாம் பார்க்காமல் வேலை செய்வேன் நான். இன்று தான் நான் என் நேரம் போவது தெரியாமல் இவளிடம் பேசிக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால் அது காலம் முழுவதும் என்றால் என் தொழில் என்ன ஆவாது என்று சிந்திக்க ஆராம்பித்தான். ஆனால் முடிவில் நாம் இவளை மனந்து இவளுக்கு தன் நிலமையை புரிய வைத்து விடலாம். குழந்தை தனத்துடன் இருந்தாலும் சொல்வதை புரிந்துக் கொள்பவளாக தான் இருக்கிறாள் என்று நினைத்து அவளை பார்க்கும் போது அவளும் அவனையே தான் பார்த்திருந்தாள்.

“இவன் என்ன “ என்று கேட்ட போது.

“நீங்கள் என் பாட்டிம்மா வைத்த ஆப்பு என்ன என்று கேட்க வில்லையே..?” என்ற்தற்க்கு இவன் மனதில் அது தான் நீ எனக்கு ஆப்பு வைத்து விட்டாயே அந்த யோசனையில் உன் ஆப்பை நான் மறந்து விட்டேன் என்ற நினைத்த ஆஷிக்.

“சரி உன் பாட்டிம்மா அப்படி என்ன ஆப்பு வைத்தார்கள் உனக்கு.”

“அப்படி கேளுங்க என் பாட்டிம்மா எனக்கு கல்யாணம் செய்து விட்டு எங்கள் தொழிலை எல்லாம் அவனிடம் கொடுத்து விட்டு இவர்கள் ஒய்வு எடுக்க போகிறார்கலாம் எப்படி இருக்கு பாருங்க கதை.” அவள் சொல்வதை கேட்ட ஆஷிக் அவள் பாட்டிம்மா சொன்னது சரி என்று தான் தோன்றியது.

அவர்களுக்கும் வயது ஆகிறது இல்லையா...அவர்களும் எவ்வளவு காலத்துக்கு தான் உழைக்க முடியும் . என்ன ஒன்று சித்தார்த் இருக்கும் போது அனைத்து பொறுப்பையும் எப்படி வரும் மாப்பிள்ளையிடம் கொடுப்பார்கள்.

என்று இவன் யோசனை செய்யும் போதே பரினிதா அதற்க்கு உண்டான காரணத்தை சொல்லி விட்டாள்.ஆனால் அவள் சொன்ன விதத்தை கேட்டு தான் ஆஷிக்குக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போய்விட்டது.

“என் பாட்டி சொன்னது நியாம என்று நீங்களே சொல்லுங்கள். அவர்கள் பேரன் ஊருக்கு உழைக்கனுமா...என் கணவர் வீட்டுக்கு உழைக்கணுமா...இது எந்த ஊரு நியாயம் நீங்களே சொல்லுங்கள்.” என்ற அவள் பேச்சில்

பரவாயில்லை பேபி எனக்கு இப்போவே புல் சப்போட்டில் இருக்கிறளே என்று நினைத்துக் கொண்டே “ஆமாம் ஆமாம் நியாயம் இல்லை தான். அப்புறம் உனக்கு குழந்தை ஏதோ சொன்னியே அது என்னமா…?” என்று கேட்டதற்க்கு.

“எப்படியோ என் பாட்டிம்மா என் விருப்பபடி கவர்மென்ட் உத்தியோகமோ...இல்லை தனியார் உத்தியோகம் பார்ப்பவனையோ திருமணன் செய்ய பார்க்க மாட்டார்கள். பிஸ்னஸ் செய்பவனை தான் பார்ப்பார்கள்.

அதுவும் இல்லாமல் எங்கள் தொழிலையும் சேர்த்து வைத்து கொடுத்து விடுவார்கள். அப்படி இருக்கும் போது என்னிடம் எப்படி நேரம் செலவிட அவனுக்கு எங்கே நேரம் இருக்க போகுது.

அவனுக்கு பணத்துக்கு பின் செல்லவே நேரம் சரியாக இருக்க போகிறது. அது தான் ஒரு ஐய்டியா வைத்திருக்கிறேன். இப்போ நான் பார்க்,ஆஸ்ரமம், அப்படி என்று வெளி குழந்தைகளுடம் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் செலவிட முடிகிறது.

அதுவே எனக்கே ஒரு ஆறு ஏழு குழந்தைகளை பிறந்ததுன்னா எப்படி அது தான் நான் சீக்கிரம் கல்யாணம் செய்துக் கொண்டு நிறைய குழந்தைகளை எனக்கே எனக்கு என்று வைத்துக் கொள்ள போகிறேன்.” என்று கூறுபவளை என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்திருந்தான்.
 
Top