Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UAEI 19

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---19

ஆஷிக்கும் தன் அம்மா கலையரசியிடம் அனைத்தும் கூறி சித்தார்த்தையும், வரலட்சுமி பாட்டியையும் வரவேற்க ஹாலில் தன் அம்மாவுடன் ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தான்.

மனதுக்குள் பரினிதா வருவாளோ என்று எதிர் பார்ப்போடு காத்திருக்கும் வேலையில் அவள் வராமல் சித்தார்த்தும் அவன் பாட்டியைய் மட்டும் பார்த்து மனதில் ஏமாற்றம் சூழ்ந்தாலும், இப்போது ஆருண்யா திருமணம் தான் மிக முக்கியம். நம் விஷயம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

நம் பேபிம்மா எங்கு போக போகிறாள் என்று நினைத்துக் கொண்டே அவர்கள் இருவரையும் வரவேற்று தன் அன்னைக்கு அறிமுகம் படுத்தினான். சித்தார்த் சிரித்த முகமாக கலையரசி பாதம் வணங்கி ஆசிர்வாதம் வாங்கிய விதத்திலேயே கலையரசி க்ளின் போல்டாகி விட்டார் என்றால்.

வரலட்சுமி பாட்டியின் தோற்றத்தை பார்த்த ஆஷிக் என்ன கம்பிரம் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.அப்படி ஒரு தேஜஸ் அவர் முகத்தில் கண்டிப்பாக அவரை பார்த்தால் உட்காந்துக் கொண்டு இருப்பவர்கள் எழுந்து அவரை வணங்குவார்கள்.

மனதுக்குள் இது தான் ஜமீன் பரம்பரை என்பதோ...ஏன் என்றால் சித்தார்த் முகத்திலும் ஒரு தனி தேஜஸ் இருக்க தான் செய்தது. அவர்கள் இருவரும் சாதரண ஒரு ட்ரஸ் போட்டு இருந்தாலும்,அவர்கள் முகமே காட்டிக் கொடுத்து விடும் அவர்கள் பெரிய வீட்டு மனிதர்கள் என்பதை அதே போல் தான் சித்தார்த்தும் வரலட்சுமி அம்மாவும் இருந்தார்கள்.

ஆனால் நம் பேபிம்மா மட்டும் ஏன் இவர்களோடு ஒட்டாமல் இருக்கிறாள் என்ற யோசனையும் வந்து சென்றது. நம் பேபிம்மா அழகு தான். ஆனால் தேஜஸ் என்பது கிடையாது என்று நினைத்துக் கொண்டே...இதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்துக் கொண்டான்.

நம் வீட்டுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறாளே...அது போதும் என்று. அவன் என்ன தான் பரினிதாவுக்காக தன் நடவடிக்கையை மாற்றிக் கொண்டாலும், அது அவளுக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டான்.

அவள் முன் நான் மண்டியிட கூட ரெடி. ஆனால் அவளை வைத்து என்றாலும் மற்றவர்கள் பரினிதாவோடு தன்னை தாழ்த்தி பேசுவதை அவன் விரும்ப வில்லை. பரினிதா ஜமீன் பரம்பரை அது தான் அவளை தான் மணந்துக் கொண்டேன் என்று மற்றவர்கள் ஒரு சொல் சொல்ல கூடாது என்று கூட நினைத்தான்.

அதனால் பரினிதாவின் இந்த தோற்றம் கூட தனக்கு சாதகமாக தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்தையும் வரலட்சுமி அம்மாவையும் அமரும் படி உபசரித்து வேலையாளிடம் குளிர் பாணம் கொண்டு வர பணித்த போது உடனே பாட்டிம்மா “நாங்கள் சம்மந்தம் பேசி முடியாமல் சாப்பிட மாட்டோம் தவறாக நினைக்க வேண்டாம்.” என்று கூறியதை கேட்ட ஆஷிக்குக்கு பரினிதாவின் நினைவு வந்தது.

அவளும் இப்படி தானே சாப்பிட மாட்டோம் என்று சொன்னாள். பின் ஐஸ்க்ரீம் கைய் நினைக்க தேவையில்லை என்றதும் ஐஸ்கிரீம் ஆசையில் தன் குடும்ப பழகத்தை கைய் விட்டதை நினைத்துக் கொண்டே பாட்டிம்மாவிடம்.

“அது தான் இப்போது சம்மந்தம் முடிந்த மாதிரி தானே...ஏன் என்றால் இவர்கள் இருவரும் ஏற்கனெவே விரும்பி இருக்கிறார்கள். அதனால் இந்த சம்பிரதாயம் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.” என்ற ஆஷிக்கின் கூற்றை பாட்டிம்மாவும் ஒத்துக் கொண்டார்கள்.

“ஆம் நீங்கள் சொல்வதும் சரி தான். நாங்கள் எப்போதும் ஜாதகம் பார்த்து விட்டு தான் கல்யாணமே பேசுவோம். இவர்கள் விஷயத்தில் அதையும் பார்க்க வேண்டாம் என்ற முடிவில் தான் நானும் இருக்கிறேன்.

ஏன் என்றால் நாம் ஜாதகம் பார்த்து விட்டு அது பொருந்த வில்லை என்றால் நமக்கு மனது கஷ்டமாகவும் இருக்கும் அதனால் தான் நான் அந்த முடிவை எடுத்தேன்.” என்று கூறும் பாட்டியின் பேச்சைக் கேட்ட ஆஷிக் மனதில் இதை தான் நினைத்துக் கொண்டான்.

பாட்டிம்மா பரம்பரை பழக்கத்தையும் மறக்க வில்லை. அதே சமயம் காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளவும் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது என்று நினைத்தவன் பின் சும்மாவா அத்தனை தொழிற்சாலைகளையும் இத்தனை திறமையாக நிர்வகிக்கிறார்கள் என்றால் காலத்து ஏத்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டால் தானே முடியும் என்ற அவன் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே வரலட்சுமி பாட்டிம்மா.

ஆஷிக்கையும், கலையரசியையும் பார்த்து “முதலில் என் பேரனின் செயலுக்காக நான் உங்களிடம் அவன் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவன் உங்கள் வீட்டு பெண்ணை மறுத்ததுக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும், அவன் செய்தது தவறு தான்.

அவன் முதலிலேயே என்னிடம் இது பற்றி பேசியிருந்தால் நான் ஏதாவது சொல்லியிருப்பேன் சரி அதை எல்லாம் பேசி இனி பிரயோஜனம் இல்லை. இனி ஆக வேண்டிய இவர்களின் திருமணத்தை பார்ப்போம்.” என்று கூறிய பாட்டிம்மா.

“கலையரசியிடம் “நீங்கள் உங்கள் பெண் திருமணம் தள்ளி போவதை நினைத்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னால் உணரமுடிகிறது சம்மந்தி. அதுவும் சொந்தகாரர்கள் மத்தியில். ஆண் பிள்ளை வைத்திருக்கும் என்னிடமே என்ன இன்னும் உன் பேரனுக்கு இடம் பார்க்கவில்லையா என்று சமீபத்தில் நான் எந்த விழாவுக்கு போனாலும் இதே தான் பேச்சு என்னும் போது உங்கள் நிலை எனக்கு புரிகிறது.

அதனால் நாம் கூடியவிரைவில் மிக விமர்சையாக கேட்டவர்கள் வாய் அடைக்கும் வகையில் நாம் இந்த கல்யாணத்தை செய்ய வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீகள்.” என்று வரலட்சுமி பாட்டி ஆஷிக் கலையரசி இருவரையும் பார்த்து பொதுவாக கேட்டதற்க்கு.

கலையரசி ஆஷிக் முகத்தை பார்க்க அதை பார்த்த வரலட்சுமி பாட்டி ஒ இந்த வீட்டில் ஆஷிக் தான் அனைத்தும் போல் நினைத்துக் கொண்டே அவரும் ஆஷிக்கை பார்த்தார். ஆஷிக்கும் உடனே பாட்டிம்மா ,சித்தார்த்தை பார்த்து “உங்கள் விருப்பம் போல் செய்து விடலாம்.” என்று கூறி நிறுத்தியவனை பார்த்த வரலட்சுமி பாட்டி.

“என்ன தம்பி ஆருண்யாவை எப்படி சம்மதிக்க வைக்கிறது என்று யோசிக்கிறீர்களா…? வேண்டும் என்றால் சொல்லுங்கள் நம் சித்தார்த்தை ஆருண்யா காலில் சாஷ்டங்கமா விழ வைச்சிடலாம் என்ன தம்பி சொல்றீங்க.” என்னும் பாட்டியை சித்தார்த் அதிர்ச்சியுடன் பார்த்தான் என்றால். ஆஷிக் சந்தேகத்துடன் பார்த்தான். இந்தம்மா நிஜமா சொல்றாங்களா இல்லை கிண்டலா சொல்றாங்களா….என்று.

அவனின் சந்தேக பார்வையை பார்த்த பாட்டிம்மா “நான் நிஜமா தான் சொல்றேன் ஆஷிக். சித்தார்த்தை காண்பித்து இவன் தானே தப்பு செய்தான் .அதனால் இவன் தான் ஆருண்யாவிடம் பேச வேண்டும்.” என்ற பாட்டியின் பேச்சு ஆஷிக்குக்கும் நியாயமாக பட்டது.

ஆம் பாட்டிம்மா சொல்வதும் சரி தானே ...சித்தார்த் பேசி அவளை சம்மதிக்க வைத்தால் தான் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும், மேலும் அது தான் ஆருண்யாவுக்கும் பெருமை என்று நினைத்தவன்.

பாட்டிம்மாவின் புத்தி கூர்மையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. என் பார்வை வைத்து நான் என்ன யோசிக்கிறேன் என்று பிஸ்னஸ் வட்டாராத்தில் யாரும் கணிக்க முடியாது.

அப்படி இருக்கும் போது என் பார்வை வைத்தே கண்டு கொண்டதோடு அல்லாமல் நியாயமாக தன் பேரன் தான் பேச வேண்டும் என்று அவர் பேசியதை கேட்டு இது வரை அவன் பிஸ்னஸ் ஆராம்பித்த புதிதில் பணம் தேவை இருக்கும் போது கூட யாரிடமும் கூட்டு சேராமல் தனித்து தொழில் செய்தவன்.

இப்போது நாம் அடுத்து ஏதாவது தொழில் ஆராம்பித்தால் இந்த பாட்டிம்மாவை பார்டனராக சேர்த்துக் கொள்ளலாம் என்று யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

ஆஷிக் எதுவும் பேசாமல் வரலட்சுமி அம்மாவை பார்த்திருப்பதை பார்த்த கலையரசி ஆசிக்கின் கைய் தொட்டு “என்ன ஆஷிக் என்ன யோசனை “ என்று கேட்டதற்க்கு ஒன்றும் இல்லை என்ற வகையில் தலையாட்டினான்.

பின் மாலை டெல்லிக்கு ஆஷிக் ,சித்தார்த் போவதாக முடிவு செய்ய பட்டது.சித்தார்த்தும் உடனே ஒத்துக் கொண்டதும் அல்லாமல் உடனே ப்ளைட்டுக்கு டிக்கட்டும் புக் செய்து விட்டான்.

பின் பாட்டிம்மாவையும்,சித்தார்த்தையும், வற்புறுத்தி சாப்பிட வைத்தே கலையரசி அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்த சித்தார்த்திடம் பரினிதா என்ன நடந்தது என்று அனைத்துக் கேட்டு தெரிந்த பின் தான் சித்தார்த்தை அவன் ரூமுக்கு அனுப்பி வைத்தாள்.

மாலை ஆஷிக் சித்தார்த் வீட்டுக்கு சென்று அவனை பிக்கப் செய்த பின் இருவரும் ஏர்போர்ட்டுக்கு செல்வதாக முதலிலேயே பேசி வைத்திருந்ததால் ஆஷிக் ஒரு எதிர் பார்ப்போடு சித்தார்த் வீட்டுக்கு சென்றான்.

அங்கு அவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. ஆம் அவன் வீட்டுக்கு போன சமயம் பரினிதா வீட்டில் இல்லாமல் பக்கத்தில் இருக்கும் பார்க்கில் குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டாள் என்ற தகவல் தான் அவன் காதில் விழுந்தது.

ஆஷிக் ஹாலில் உள் நுழையும் போதே அவன் கண்கள் வீடு முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு தான் பாட்டிம்மாவையும், சித்தார்த்தையே பார்த்தான். அதனை பார்த்த பாட்டிம்மா சித்தார்த்திடம்

“ஆஷிக் தம்பிக்கு வீட்டை சுத்தி காட்டு.” என்ற பாட்டிம்மாவின் பேச்சில் ஆஷிக் நொந்து போய் விட்டான். வீடு நன்றாக தான் இருந்தது அதில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவன் இத்தோடு பிரமாண்டமான பங்களா எல்லாம் கட்டி கொடுத்து இருக்கிறான்.ஆமாம் எனக்கு உங்கள் வீட்டை பார்க்க தான் நானே சித்தார்த்தை பிக்கப் செய்து கொள்கிறேன் என்று சொன்னேன் பார் என்று நினைத்ததை வெளியில் சொல்லாமல் வரலட்சுமி பாட்டியிடம்.

“பரவாயில்லை பாட்டிம்மா இப்போது டைமாயிடுச்சி. இனி மேல் வந்து போய் தானே இருக்க போகிறேன். அதனால் இன்னொறு நாள் பொறுமையாக பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறியதற்க்கு.

“பரவாயில்ல தம்பி பொறுமையாவே பாருங்க.நீங்கள் பில்டராச்சே….அது தான் பார்க்க சொன்னேன். இந்த வீடு பார்க்க சிம்பிளாக தான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு அறையிலிலும் உள்ள ஜன்னல், தூண், கதவு எல்லாம் பர்மா தேக்கில் செய்தது.

அதிலும் அதில் செய்த வேலை பாடு எல்லாம் மல்யூட்டாய் இருக்கும் அதுவும் இல்லாமல் நீங்கள் வந்ததும் வீட்டையே சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தீங்களா… அதனால் தான் சொன்னேன்.”என்ற பாட்டியின் பேச்சில் தன் பார்வையை எங்கும் செலுத்தாமல் பாட்டிம்மாவையே பார்த்திருந்தான்.

வேலையாள் கொண்டு வந்து கொடுத்த காபியை கடனே என்று அருந்திக் கொண்டு இருக்கும் வேலையில் சித்தார்த்தின் வார்த்தை காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.ஆஷிக் காபி குடித்ததும் பரினிதாவை பார்க்க முடியவில்லையே என்று மனமே இல்லாமல் கிளம்பும் வேலையில் சித்தார்த் வரலட்சுமி பாட்டியிடம்.

“பாட்டிம்மா குட்டிம்மா எங்கே காணும். “ என்று கேட்டதற்க்கு.

“அவள் இந்த சமயத்தில் எங்கு இருப்பாள் என்று உனக்கு தெரியாது போல் கேட்கிறாயே…”

அதற்க்கு சித்தார்த் “நான் இப்போது டெல்லி போவது பற்றி அவளுக்கு தெரியும். அதனால் தான் இருப்பாள் என்று கேட்டேன். சரி பாட்டிம்மா நாங்கள் வருகிறோம்.” என்ற சித்தார்த்தின் பேச்சில் ஆஷிக்குக்கு ஒன்றும் புரியாமல் அவர்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இந்த சமயத்தில் பரினிதா எங்கு செல்வாள்.” அதற்க்கு பாட்டிம்மா.

“அதை ஏன் கேட்கிறீங்க ஆஷிக். இனி நீங்கள் வெளி மனுஷால் இல்லை.அதனால் உங்களிடம் சொல்வதற்க்கு என்ன. என் பேத்தி அவள் வயதுக்கு எத்த மாதிரியே இருக்க மாட்டாள். எப்போ பார்த்தாலும் குழந்தைகளுடம் தான் விளையாடிட்டு இருப்பா.” என்ற பாட்டிம்மா சொல்வது ஏற்கனெவே ஆஷிக்குக் தெரியும் என்பதால் சாதரணமாக கேட்டுக் கொண்டு இருந்தான்.

ஆனால் அதற்க்கு அடுத்து பாட்டிம்மா பேசியதை கேட்ட ஆஷிக் பரினிதா படிப்பு முடியும் வரை நாம் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

“இவள் இப்படி குழந்தையுடனே விளையாடிட்டு இருந்தா...நாளை அவள் கல்யாணம் செய்யும் இடத்தில் பிரச்சினை தானே வரும்.”

“பாட்டிம்மா நீங்க பரினிதாவை பற்றி நன்கு தெரிந்தவங்களா பார்த்து கொடுக்கலாம் இல்லையா...இப்போது நாம் பழகிய இடத்தில் கொடுத்தால் பிரச்சினை இல்லை அதற்க்கு தான் சொன்னேன்.” என்று தன்னை மனதில் நினைத்து சொன்னான்.

ஆனால் வரலட்சுமி பாட்டியோ “அந்த முடிவுக்கு தான் நானும் வந்து இருக்கேன் ஆஷிக். அது தான் என் ஊரில் பரினிதாவை கேட்டதற்க்கு கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தால். சித்தார்த் யோசிக்க வேண்டும். அதனால் என் கல்யாணத்துக்கு அவங்க வீட்டையும் அழைக்கலாம் வரட்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறான்.

ஆனால் எனக்கு என்னவோ இந்த இடத்தையே முடித்து விடலாம் என்று தோன்றுகிறது.ஏன் என்றால் அந்த குடும்பத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும்.சரி பார்க்கலாம். இனி உன் சகோதரி வந்து தான் பரினிதாவை கொஞ்சம் மாற்ற வேண்டும்.” என்று கூறி சித்தார்த்தையும், ஆஷிக்கையும் வழி அனுப்பி வைத்தார்.

இப்போது ஆஷிக்குக்கு பரினிதாவை பார்க்க வில்லையே என்ற கவலை சுத்தமாக மறந்து விட்டது.கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வந்தான்.

அதனை பார்த்த சித்தார்த் “என்ன யோசனை ஆஷிக் ஆருண்யாவை எப்படி சம்மதிக்க வைப்பது என்றா ..?” என்ற கேள்வியில் முதலில் நாம் ஆருண்யா திருமணத்தை முடிப்போம் என்று நினைத்துக் கொண்டே சித்தார்த்தை பார்த்தான்.

அப்போது சித்தார்த்தும் ஆஷிக்கையே தான் பார்த்துக் கொன்டு இருந்தான். இவன் பரினிதாவை நாம் திருமணம் செய்ய சம்மதிப்பானா என்று நினைத்துக் கொண்டே

“என்ன சித்தார்த் பார்க்கிறீங்க.”

“இல்லை ஆருண்யா உங்களை பற்றி நிறைய என்னிடம் பேசி உள்ளாள். சற்று தயங்கி விட்டு தவறாக நினைக்க வேண்டாம். அப்போது அவள் சொன்னது நான் என் மாமா வீட்டில் இருக்கிறேன் என்று. அதுவும் இல்லாமல்; அவள் பேச்சிலேயே நான் புரிந்துக் கொண்டது கொஞ்சம் கஷ்டப்படுவதாக.

ஆனால் இப்போது உங்கள் வசதியைய் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் எட்டு வருடத்தில் .” என்று சொல்லி விட்டு ஆஷிக்கையே பார்த்திருந்தான்.

“சித்தார்த் நீங்கள் சொல்வது சரி தான். ஆருண்யா எங்கள் குடும்பத்தை பற்றி என்ன சொன்னாள் என்று எனக்கு தெரியாது. என் அப்பா பைனன்ஸ் நடத்தியது சொன்னாளா…?”

“இல்லை .அவள் உங்கள் அம்மா, உங்களை பற்றி சொல்லி இருக்கிறாள். அதுவும் உங்களை பற்றி தான் நிறைய சொல்லுவாள். ஆஷிக்குக்கு நிறைய கனவு இருக்கிறது. அவன் திறமைசாலி அவன் நினைத்ததை கண்டிப்பாக முடித்து விடுவான். என்று எப்போதும் உங்களை பற்றியே தான் பேசிக் கொண்டு இருப்பாள்.

ஆனால் உங்கள் தந்தையை பற்றி சொல்லியது கிடையாது. ஏன் கேட்கிறீங்க ஏதாவது இருக்கிறதா...தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.”

“இதில் தயங்குவதற்க்கு எதுவும் இல்லை. என் அப்பா அவரை பற்றி சொல்வது என்றால் சுருக்கமாக அவர் ஒரு கோழை என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் சுயநலமிக்க கோழை. தான் மட்டும் தப்பித்தால் போதும் மனைவி குழந்தைகள் என்ன ஆனால் என்ன என்று சுயநலமாக முடிவு எடுத்து அவர் தற்கொலை செய்துக் கொண்டார்.”

சித்தார்த் அதிர்ச்சியுடன் “என்ன தற்கொலையா…”

“ஆமாம் தற்கொலை தான்.” என்று கூறிய ஆஷிக் அனைத்தையும் சொல்லி முடித்தான். அதுவும் கடைசியில் தாய் மாமானே ஆருண்யாவிடம் அப்படி கேட்டார் என்று தெரிந்த சித்தார்த்துக்கு கோபம் ஆற்றாமை ஒரு சேர வந்தது.

அந்த சமயத்தில் நாம் அவளுக்கு ஆறுதலாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் நான் மேலும் அவளுக்கு வேதனையைய் தானே கொடுத்தேன். பாட்டிம்மா சொன்னதை போல் நாம் அவளிடம் என் நிலமையைய் விளக்கி சொல்லி இருந்தால்.

அவளுக்கும் இந்த வேதனை இருந்து இருக்காது எனக்கும் நன்றாக இருந்து இருக்கும் என்று வேதனை பட்டான். அவன் நிலையை புரிந்துக் கொண்ட ஆஷிக்கும் ஒன்றும் பேசாமல் இருந்தான்.

இந்த அமைதி அவர்கள் டெல்லி சென்றடையும் வரை நீடித்தது.டெல்லி ஏர்போட்டில் ப்ளைட் நின்றதும் சித்தார்த்துக்கு ஒரு வித பதட்டம் ஏற்பட்டது. எல்லாம் நன்றாக முடியுமா...என்னை புரிந்து ஏற்றுக் கொள்வாளா...என்று நினைத்துக் கொண்டே ஆஷிக்கை பார்த்தான்.

ஆஷிக் அவனின் பதட்டம் புரிந்தவனாக “நான் அவளிடம் பேசுகிறேன் சித்தார்த்.” என்று அவனுக்கு ஆறுதல் கூறி ஆருண்யா தங்கி இருக்கும் பங்களா முன் டிரைவரிடம் காரை நிறுத்தும் படி சொல்லி இருவரும் இறங்கினர்.

 
???

ஆஷிக்கின் முதல் கவலை பர்ணி.....
சித்தார்த் கவலை ஆரண்யா......

சித்துக்கு பர்ணி மாதிரி உனக்கு ஆரண்யா ஹெல்ப் பண்ணுவா......
அப்புறம் என்ன.....

8 வருட பிரிவுக்கு ஒரு முடிவு.....
 
Last edited:
Siddharthku uruttu kattaya ila ulakkaya theriyalaye ....ennavo aarunya suthalla vida porannu thonuthu siddhuva....aashik mrg muduchu vachutale pothum pirani kuttiya sammatham solliduva ......varalakshmi paatti aalumaiyin adaiyalam than....superb and nice ....waiting for the next episode eagerly pa....
 
Top