Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

UncategorizedVaazhkai Vaazha Thaanae

first link VVT 2

EPISODE 2

“திருமதி. மாதங்கவதனா ராஜரத்தினம்! உங்க கணவர் திரு. ராஜரத்தினம் விவாகரத்து வேணுன்னு கேட்டுருக்கார்! உங்களுக்கு இந்த விவாகரத்துல சம்மதமா?”

 

அந்த இருபதுக்கு முப்பது அறையில் ஒரு மேசை முன்னே மூக்கில் இருந்து நழுவிக்கொண்டு இறங்கிய கண்ணாடியை சரிசெய்தபடி கேட்டார் அந்த நீதிபதி.



Advertisement

 

நிமிர்ந்து எதிரே நின்றவனை பார்த்தாள் மாதங்கவதனா. அவனை பார்த்த மாத்திரத்தில் அப்படியொரு வெறுப்பு! அவன் பார்வை ஒன்று போதும், அவள் கடுப்பை கிளற!

 

Advertisement

‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்ற ரீதியில் உடலின் ஒவ்வொரு அங்கமும் ‘தான் திமிர்ப்பிடித்தவன்’ என்று பறைசாற்ற, தெனாவட்டாய் நின்றிருந்தவனை பார்க்க பார்க்க ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.

Advertisement

 

“மிசஸ். மாதங்கவதனா! உங்களை தான் கேட்குறோம்! கோர்ட் நேரத்தை வீணடிக்க கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு?” இம்முறை நீதிபதி சற்று குரல் உயர்த்தி பேச,

 

Advertisement

“எனக்கு இந்த விவாகரத்துல விருப்பமில்லை!”

ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாய் அழுத்தம் திருத்தமாய் எதிரே இருந்தவனை எள்ளலாய் பார்த்துக்கொண்டே அவள் உதிர்த்த மறுகணம் கருவிழி அதிர்ச்சியில் நிலைகுத்த நின்றுவிட்டான் ராஜரத்தினம்.

 

அதைக்கண்ட மாதங்கவதனாவின் முகத்தில் ஒரு வெற்றி முறுவல்.

 

ராஜரத்தினத்தின் வக்கீல் திகைத்து நின்றார் என்றால், மாதங்கவதனாவின் வக்கீல் குழம்பிப்போய் இருந்தார்.

 

‘எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்!’

 

அவள் தானே அப்படி சொன்னது!

 

இப்படி கடைசி நிமிடத்தில் மாற்றி பேசுவாள் என அவளே நினைத்திருக்காதபோது அவள் வக்கீல் எங்கே நினைப்பது?!

 

நீதிபதி தன் முன்னிருந்த அறிக்கையை ஒருமுறை பார்த்தார்.

 

‘மியூசுவல் கன்சென்ட்’ என்று போடப்பட்டிருந்தது.

 

அவரே சில நொடிகள் குழம்பி பின்னே, “நீங்க என்ன சொல்றீங்க மிஸ்டர். ராஜரத்தினம்? உங்க முடிவுல மாற்றங்கள் இருக்கா?” என்று கேட்க,

 

“நோ சார்! எந்த மாற்றமும் இல்லை! எனக்கு டிவோர்ஸ் வேணும்! இவக்கூட என்னால வாழ முடியாது” என்றான் அவன் வெகு அவசரமாய்.

 

இப்போது மாதங்கவதனாவின் நமட்டு சிரிப்பை ராஜரத்தினம் மட்டுமே கண்டுக்கொள்ள, அவனால் அங்கே, அப்போது பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

 

“இரண்டு பேர்ல ஒருத்தர்க்கு விருப்பம் இல்லன்னாலும் டிவோர்ஸ் குடுக்க முடியாது! நெக்ஸ்ட் ஹியரிங் வரப்போ ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவெடுத்துட்டு வாங்க” என்ற நீதிபதி அடுத்து வரவேண்டிய நாளை குறித்துவிட்டு வேறு வழக்கை விசாரிக்க துவங்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வெளியேறினான் ராஜரத்தினம்.

 

வெளியே வந்த மாதங்கவதனாவிடம், “என்ன மேடம் நீங்க? என்கிட்ட ஒன்னு சொல்லிட்டு ஜட்ஜ் கிட்ட மாத்தி பேசுறீங்க?” என்றார் அவளது வக்கீல்.

 

அவருக்கு அவள் பதில் சொல்லும்முன்னே, “ஏய்….ஏய்…. என்னடி நினைச்சுட்டு இருக்க நீ? உன் இஷ்ட ம**க்கு எல்லாம் பண்ணுவியா? இன்னையோட தொலைச்சு தலைமுழுகிடலாம்ன்னு பார்த்தா…? சனியனே… விட்டு தொலைய மாட்டியா? (Klonopin) ”

கொஞ்சம் விட்டாலும் ‘அடித்துவிடுவேன்’ என்பதை போல எகிறிக்கொண்டு நின்றவனை தன்னோடு சேர்த்து இழுத்தபடி,

 

“விடுங்க ராஜு! லீவ் இட் ஐ சே!” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள் ஒருத்தி.

 

அவன் எகிறலையும், அவள் சிணுங்கலையும் அந்த வளாகமே வேடிக்கைப்பார்க்க, கொஞ்சம் கூட அசராமல் கையை கட்டிக்கொண்டு நின்றாள் மாதங்கவதனா.

 

“என்னடி லுக்கு விடுற? வாழ மாட்டேன்னு பொட்டியை கட்டிக்கிட்டு கிளம்புனவ தானே நீ? இப்போ என்ன ஒரு வருஷம் கழிச்சு டிவோர்ஸ் வேண்டாம்ன்னு சொல்றது?

நீ மறுபடி என் கால்’லயே வந்து விழுந்து கதறுனாலும் உன்னை சேர்த்துக்க நான் தயாரா இல்ல தெரிஞ்சுக்க!”

 

அவனோடு சேர்ந்து வாழ விருப்பம் கொண்டு அவள் விவாகரத்தை மறுத்ததாய் எண்ணிக்கொண்டு அவன் கத்த, அவளுக்கு சிரிப்பு தான் வந்தது, ‘இந்த நினைப்பு வேற உனக்கு இருக்கா?’ என்று!!!

 

“யோவ் வக்கீல்? நீதானே சொன்ன? எங்க மேடம் சீக்கிரமே விவாகரத்து கேட்குறாங்க! வாய்தா விழுகாம வந்து கையெழுத்து போட்டு முடிச்சு விடுங்கன்னு! என்னய்யா இதெல்லாம்?” என்று அவள் வக்கீலிடமும் எகிறினான் ராஜரத்தினம்.

 

“ப்ச்! ராஜ்! ப்ளீஸ் கால்ம் டவுன்! பப்ளிக்’ல இப்படி பீகேவ் பண்ணாதீங்க!” அந்த கொஞ்சல்க்காரி மறுபடியும் அவனை தன்னோடு உரசி இழுத்தபடி கெஞ்ச,

 

“இல்ல டாலு, இப்போவே இவ ஓகே சொல்லிருந்தா டிவோர்ஸ் கிடைச்சுருக்கும்! நம்ம ப்ளான் பண்ண மாதிரி நெக்ஸ்ட் வீக் நம்ம வெட்டிங் வச்சுருக்கலாம்! இப்போ இந்த சனியனால எல்லாம் சொதப்புச்சு!” ஏகத்துக்கும் வருந்தினான்.

 

அவனை பார்த்தாலே வெறுப்பு வந்து ஒட்டிக்கொள்ளும் அவள் கண்களுக்கு, இந்த பேச்சு இன்னமும் அசூயை கொடுக்க, முகத்தில் அதை அப்பட்டமாய் காட்டிக்கொண்டு நின்றாள் அவள்.

 

“நிக்குறா பாரு திமிரா? இது கோர்ட்டா மட்டும் இல்லன்னா நடக்குறதே வேற!” தன்னோடு இருப்பவளிடம் ‘பந்தா’ காட்ட வேண்டியே இன்னமும் துள்ளிக்கொண்டிருந்தவனை துளியும் மதியாத மாதங்கவதனா, அவனருகே நின்றிருந்தவளிடம் பார்வை பதித்தாள்.

 

அவள் முகத்தை திருப்பிக்கொள்வதை பார்த்ததும், அவள் முகத்தின் முன்னே இருமுறை சொடுக்கிட்டு அழைத்தவள்,

“உனக்கு வேற ‘ஆம்பளையே’ கிடைக்கலையா?” என்றவள், ராஜரத்தினத்தை அசிங்கத்தை தொட்டவள் போல, மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து,

“போயும்….போயும்…” என்று நிறுத்த, ராஜரத்தினத்தின் கொதிநிலையை கூட்ட இதுவே போதுமானதாக இருந்தது.

 

“ஏய்…ஏய்….ஏய்…” கையை ஓங்கிக்கொண்டு துள்ளியவனை மதியாதவள்,

 

“ஒரு ப்ரீ அட்வைஸ் சொல்றேன்! முடிஞ்சவரை இவன்கிட்ட இருந்து கறந்துட்டு ஓடிப்போய்டு! அதவிட்டுட்டு கல்யாணம், கமிட்மென்ட்ன்னு போன, அடுத்த கொஞ்சநாள்ல, இப்போ நான் எங்க, எப்படி நிக்குறேனோ… அதே நிலைமைல நீ நிப்ப!” நிறுத்தி,

 

இவன் நிக்க வைப்பான்!” என்றவள்,

 

“உன் நல்லதுக்கு தான் சொல்றேன்! கேட்குறதும் கேட்க்காததும் உன் விருப்பம்!” என்றுவிட்டு தன் வக்கீலிடம் திரும்பி,

 

“நெக்ஸ்ட் ஹியரிங் எப்போன்னு ரிமைன்ட் பண்ணுங்க!” என்றவள் தன் கூலர்சை எடுத்து அணிந்துக்கொண்டு அங்கிருந்து செல்ல, பின்னே ராஜரத்தினம் கத்துவதும், அவனை அந்த பெண் சமாதானம் செய்வதும் இவள் செவிகளை அடையதான் செய்தது.

“சரிடா நொன்னைங்களா… நான் கிளம்புறேன்!” அஜய் தன் பையை எடுத்து குறுக்கே மாட்டிக்கொண்டு கிளம்ப,

 

“எங்கடா போற?” என்றான் விவேக்.

 

“காதலியை பார்க்கவா கிளம்பப்போறான்? ஆளில்லாத அப்பார்ட்மென்ட்ல வாட்ச்மேன்க்கு துணையா படுத்துக்கிடக்க தான் போவான்!” குரு கமென்ட் அடிக்க,

 

“குரு, வீட்டுல இட்லி மாவு இல்ல! சுவிக்கி’ல டின்னர் ஆர்டர் பண்ணிடு!” என்றாள் ரீனா.

 

“எப்பவாது சுவிக்கி’ன்னா பரவால்ல! எப்பவுமேன்னா எப்படி? ஒழுங்கா மாவு வாங்கிட்டு போய் தோச சுட்டு திம்போம் வா!” என்றவனை முறைத்தவள்,

 

“நீ தோச மட்டுமா கேட்ப, தொட்டுக்க சட்னி வேணுன்னு சொல்லுவியே! அதை எவன் செய்யுறது?” என்றாள் ரீனா.

 

“கொஞ்சூண்டு சட்னி கூட இல்லாம எப்படி டி தோசையை திங்க முடியும்?”

 

“அதான் நானும் சொல்றேன்! நீ ஆர்டர் பண்ணிடு! ரெண்டு சட்னி, சாம்பாரோட தோசை வந்துடும்!” என்றவளை அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாது குரு முறைக்க,

 

அவன் தோளில் தட்டிய அஜய், “மச்சி, நீ வீட்டு சாப்பாடு சாப்பிட்டு குடும்பமா சந்தோஷமா இரு! நான் ரவா தோசையும், கெட்டி சட்னியும் நானே செஞ்சு சாப்பிட்டுட்டு சோலோ’வா சோகமா இருக்கேன்… என்ன?” என்றிட,

 

“ஏய்… என்ன காண்டேத்துரியா?” குரு கடுப்படிக்க,

 

“டேய், என்னடா உண்மையை தானே சொல்றேன்! என்ன இருந்தாலும் கல்யாண வாழ்க்கை தான்டா பெஸ்ட்டு!” என்ற அஜய், இதற்குமேல் நின்றால் பேச்சு அனுமார் வாலை விட பெரிதாய் நீளும் என்றறிந்து, வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்த சுவாதியின் ஸ்கூட்டியில் தொத்திக்கொண்டு எஸ்கேப் ஆனான்.    

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!