Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-3

கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 3. ஆலமரத்தில் அபாயசங்கு “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“ என்னும் புறநானூற்றுப் பாடல் சோழர் குலத்தின் பெருமையை பறைசாற்றும்.அத்தகைய பெருமைக்குரிய சோழகுலத்தில்….. சூரியனின் கதிரொளி போல தகதகக்கும் நிறத்தோனாகவும், செந்தாமரை கன்னங்களில் சோழக்கொடி தாங்கிய, புலியின் வாலை மீசையாக கொண்டவனும், அகன்ற மார்பில் சிறிதும் போர் புரிந்து பெற்ற விழுப்புண் இன்றி வெறுமையாக இருப்பவனும்,…. தன் பாட்டன் இளஞ்சேட் சென்னியைப் […]

Readmore

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்)

கிரேக்க மணிமகுடம் 2. பவளத் தீவில் பாய்விரித்த நாவாய் மத்திய தரைக்கடல் பகுதியில் விரிந்து பரந்திருந்த நீலக்கடல் பரப்பு…. மத்திய தரைக்கடலிலிருந்து வடக்கு நோக்கி விரிந்த ஏஜியன் கடலில் வாரியிறைத்த மரகத கற்களாக சிதறி ஜொலித்த தீவுக்கூட்டங்கள்…. எண்ணைதீவுகள் என்று கடலோடிகள் அழைத்த பேகான தீவுகள் கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு தனிரகம்…. அந்த தீவுக்கூட்டத்தின் நடுவே சிறிது பரப்பில் பெரியதும் மேடான மலைப்பகுதியில் அமைந்ததுமான பவளத்தீவு, தன்னை சுற்றிலும் ஏழு சிறு தீவுகளை அரணாக கொண்டு கம்பீரமாக […]

Readmore

கிரேக்க மணிமகுடம்

1. ஆடித் திங்கள் நள்ளிரவில் “உறந்தை குணாது நெடும் பெருங்குன்றம்” என்ற அகநானூற்று பாடலும், ” உறந்தை குணாது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்” என்ற புறநானூற்றுப் பாடலும் குறிக்கும் உறையூர். முற்கால சோழர்களின் தலைநகரம். இளஞ்சேர்ச்சென்னி துவங்கி கரிகால் பெருவளத்தான் வரை சீரோடும் சிறப்போடும் விளங்கிய அற்புதமான பெருநகரம். உறையூரை அணைத்தபடி ஆர்ப்பரித்து பொங்கி பாயும் பொன்னி நதியும், பொன்னி நதி தன் மடிமீதில் தாலாட்டி மகிழும் உறையூரின் கரையாவும், கன்னிப்பெண் தன் காதலனை மடியில் […]

Readmore

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 )

  *** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது என்பதால் மதனின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கௌதம் மட்டும் எழுந்தான்.   ‘எப்பொழுது இங்கிருந்து விடுதலை?’ என்னும் ஏக்கத்தோடு எழுந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. பல் […]

Readmore

தேடல் 21

  உன்னவன் நான் என்று உன் உணர்வே உணர்த்திடும்…😍😍 அடுத்தநாள் காலை அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. நந்தினி சூர்யாவின் திருமணத்தை எண்ணி மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளது மகிழ்வை மேலும் வரவேற்க அவளது அப்பு அவளை அழைத்துச் செல்வதற்காக ஊட்டி வந்து கொண்டிருந்தான்… நந்தினி வீட்டின் வாசலையே பார்த்துக் கொண்டு ஜானு குட்டிக்கு ஊட்ட ஜானுவும் நந்தினியை போலவே எட்டி எட்டி பார்ப்பதுமாக இருந்தாள். இதனை கண்ட உதய் அவன் தலையில் அடித்துக் கொண்டு ” இதுங்க […]

Readmore

சாரலாய் தீண்டினாய் அன்பே – 12.2

அவள் வரும் போது மணி பத்தை நெருங்கியிருக்க தற்போது சூரியன் உச்சிக்கு சென்று மொத்த வெயிலையும் தயவு தாட்சண்யமின்றி சந்தியாவின் தலைக்கவசத்தையும் தாண்டி அவள் தலையில் கொட்டிக் கொண்டிருக்க சூரியாவின் வீட்டை அடையும் போது கிட்டத்தட்ட அவள் வியர்வையில் குளித்துவிட்டாள்.   வழக்கம் போல காவலாளிக்கு வணக்கத்தைச் செலுத்திவிட்டு ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தாள். வழக்கம் போல அல்லாமல் சொற்பமான பணியாளர்கள் மட்டும் இருக்க “எனக்கு மட்டும் தான் சண்டே லீவ் இல்லாம […]

Readmore

உனக்காய் மறுகணம் என்னுள் உருகணும்

    ஞாயிற்று கிழமை என்பதால் விடிந்தும் உறங்கிக் கொண்டு இருந்த அவளின் தலை முடியை கோதி விட்டு சென்றார் அவரின் தந்தை. சிறிது நேரத்தில் எழுந்த அவள்  காலை கடன்களை முடித்து விட்டு சமையலறை சென்று அவளுக்கு ஒரு கப் டி எடுத்துக் கொண்டு வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்…     வழக்கம்போல் அன்று காலையில், அப்பா டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து பைக் சத்தம் ஒன்று கேட்க அது […]

Readmore